கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 20, 2017

நாங்கள் நடித்த விளம்பரப்படம்

நாங்கள் நடித்த விளம்பரப்படம் 




அப்பா இன்னிக்கு பிசா சாப்பிடலாமா? என்றான் ஏன் மகன். 

ஓ! சாப்பிடலாமே, கோவிலுக்கு போய் விட்டு வரும் பொழுது 241பிசாவுக்கு போகலாம் என்றார் என் கணவர்.

மஸ்கட்டில்  டார்செய்ட்(Darseit) கிருஷ்ணன் கோவிலுக்குச் செல்லும் வழியில் டார்செய்ட் ரவுண்ட் அபௌட் அருகில் அப்போது  241 பிசா ரெஸ்டாரெண்ட் புதிதாக தொடங்கப் பட்டிருந்தது.  அதென்ன 241பிசா? என்கிறீர்களா? அந்த கடையின் டெலிபோன் நம்பர் 241 என்று முடியும். அதையே பெயராக வைத்து விட்டார்கள். போனில் ஆர்டர் செய்ய வேண்டுமென்றால் நம்பரை நினைவில் வைத்துக் கொள்வது சுலபமாக இருக்கும் என்னும் எண்ணமாக இருக்கலாம்.

நாங்கள் கோவில் போய் விட்டு 241பிசா சென்று ஸ்டார்டர் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது, சிலர் படப்பிடிப்பு உபகரணங்களோடு வந்து காமிரா, விளக்குகள் இவற்றை அங்கே செட் செய்ய ஆரம்பித்தார்கள். "என்ன நடக்கிறது? ஏதாவது ஷூட்டிங்கா?" என்று அங்கிருந்த பிலிப்பினோ பெண்ணை விசாரித்தோம், "அவள்," ஏதோ விளம்பர படம் என்று நினைக்கிறேன் என்றாள்.

அந்த படப்பிடிப்பு குழு கடையின் எல்லா பகுதிகளையும் படம் பிடித்து விட்டு, எங்களுக்கு பிசா வந்தவுடன் எங்கள் மேஜையை போகஸ் செய்ய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தானா என் மகள் என் கையில் இருந்த முள் கரண்டியை தட்டி விட வேண்டும்..? நான் சொதப்பினாலும் பிஸாவை  ருசிப்பது படமாக்கப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியிலும் ஒளி பரப்பப்பட்டது. என்ன..நாங்கள் பிராண்ட் அம்பாசிடராக இருந்து 241 பிஸாவை பிரபலப்படுத்தியதற்கு எங்களுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்படவில்லை. போகட்டும் என்று விட்டு விட்டோம். 

14 comments:

  1. இந்த சம்பவம் எப்போ நடந்தது? அடடே.. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த சம்பவம் எப்போ நடந்தது?//
      ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு என்று ஞாபகம். நன்றி!

      Delete
  2. வாவ் !! ஒளிபரப்பான அந்த படத்தை நீங்க ரெக்கார்ட் பண்ணிங்களா அக்கா ...
    சன்மானம் வழங்கலைன்னாலும் சார்ஜ் பண்ணாம விட்டிருக்கணும் நியாயப்படி pizza வுக்கு

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் VCR இருந்தாலும் ஏனோ ரெகார்ட் பண்ண வேண்டும் என்று தோன்றவில்லை. முதல் முறை ஒளி பறப்பான பொழுது நாங்கள் பார்க்கவே இல்லை. சில நண்பர்கள் போன் பண்ணி சொன்ன பிறகுதான் நாங்கள் பார்த்தோம். நன்றி ஏஞ்சலின். கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் எந்த மட்டில் இருக்கின்றன? Merry Christmas to you & your family.

      Delete
  3. ஆஹா விளம்பரப் படத்தில் வந்திருக்கிறீர்களா... மகிழ்ச்சி. சேமித்து வைத்துக் கொண்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. //ஆஹா விளம்பரப் படத்தில் வந்திருக்கிறீர்களா...// நீங்கள் சொல்வதுதான் சரி. அது நாங்கள் வந்து படம்தான். நடித்த என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன். நன்றி வெங்கட்.! டெல்லி குளிர் எப்படி இருக்கிறது?

      Delete
  4. தொடர்ந்து....
    ப்ரீத் ஈஸியில் நடிக்கவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அட? அது தொலைக்காட்சிகளிலும் வந்ததா? யூ ட்யூப் இருக்கா? குறைஞ்சது உங்க பெண்ணையோ, பையரையோ விட்டு ஒரு படமானும் எடுத்து வைச்சிருக்கலாமே! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. //யூ ட்யூப் இருக்கா? குறைஞ்சது உங்க பெண்ணையோ, பையரையோ விட்டு ஒரு படமானும் எடுத்து வைச்சிருக்கலாமே!//
      யூ டியூபில் இருக்குமா என்பது சந்தேகமே. என் மகனும் மகளும் அப்போது குழந்தைகள்.
      விளம்பரப் படம் மட்டுமல்ல, வீட்டு கடன் வாங்குவதில் NRI கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்த ஒரு டாகுமென்டரியிலும் வந்திருக்கிறேன். என்னை பேட்டி எடுத்தது நீயா நானா புகழ் கோபிநாத்! ஆனால் அது வெளிநாடுகளில்தான் (சிங்கப்பூர்,மற்றும் அமெரிக்கா) ஒளிபரப்ப படும் என்றார்கள். என்ன செய்வது நம்முடைய மகிமை அயல்நாட்டினருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது.ஹும்ம்ம்!

      Delete
  6. சில இனிமையான நினைவுகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நன்றி!

      Delete
  7. பிசா என்றதும் 'காக்கா முட்டை' திரைப்படம் நினைவுக்கு வந்தது.
    மறக்க முடியுமா, அந்த 'சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை' பிஞ்சு முகங்களை?..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி! ஆமாம் காக்கா முட்டை மறக்க முடியாத நல்ல படம்.

      Delete