பாகுபலிகோவிலும், ஹளபேடு சிற்பங்களும்
பொங்கல் விடுமுறையில் பாகுபலியை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். பாகுபலி என்றதும் அனுஷ்கா நடித்த பாகுபலி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் சென்றது பெங்களூரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜைனர்களின் புனிதத்தலமான கோமதீஸ்வரர் பாகுபலி கோவில்.
ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்த கோவிலை அடைய 620 படிகள் என்று சிலரும், 720 படிகள் என்று சிலரும் கூறுகிறார்கள். மூச்சு முட்ட முட்ட படிகள் ஏறி அதுவும் கடைசி 20 படிகள் ஏறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு ஏறி 58 அடி உயர நிர்வாண சிலை... நான் ஒரு ஜெயின் ஆக இருந்திருந்தால் ஈர்த்திருக்கலாம்.
அந்த சிலைக்கு அருகே கீழ் பக்கத்தில் காணப்படும் புற்றிலிருந்து வெளிவரும் பாம்புகள் சிற்றின்ப வேட்கையையும், அவர் பாதத்திலிருந்து மேலெழும்பும் கொடி ஆன்மீக முன்னேற்றத்தையும் குறிக்கிறதாம்.
பாகுபலி சிலைக்கு எதிரே உள்ள விதானத்தில் காணப்படும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி சிலைகள், பாகுபலியை தரிசிப்பதற்காகச் செல்லும் முன் காணப்படும் குபேரன் சந்நிதி அதற்கு இரண்டு புறங்களிலும் இருக்கும் துவாரபாலகர்கள் போன்றவை இது ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட ஹிந்து கோவிலாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன. அங்கு கையில் கின்னாரத்தோடு இருக்கும் பெண்ணின் சிலையின் நுட்பம் கவர்கிறது.
தஞ்சை பெரிய கோவிலில் கூட எனக்கு இதே விதமாகத்தான் தோன்றும். காளஹஸ்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற தலங்களில் இருக்கும் தெய்வீக சாநித்யம் தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்காது. அங்கு வருபவர்களின் மனோபாவமும் கூட வழிபாடு என்பதை விட, கோவிலின் சிற்ப சிறப்பை ரசிப்பதாகத்தான் இருக்கிறது.
ஹலபிடுவிற்கு அருகில் இருக்கும் பேலூருக்கு செல்லவில்லை. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்கிறோமே, நேரில் பின்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம்.
![]() |
மலையின் மீதிருந்து தோற்றம் |
![]() |
குபேரன் சிலை |
![]() |
பாறாங்கல்லால் ஆன கொப்பரை |
அந்த கோயிலுக்குள்ளேயே இரண்டு சிவன் சன்னிதிகள் இருக்கின்றன. ஒன்று ராஜ கட்டியதாம், மற்றொன்று ராணி ஸ்தாபிதம் செய்ததாம். இருந்தாலும், அங்கு செல்பவர்கள் யாரும் பெரிதாக வழிபடுவதில்லை. சிற்பக்கலையை ரசிக்கத்தான் செல்கிறார்கள். கோவில் ஒரு மியூசியம் போலத்தான் இருக்கிறது.
![]() |
வாலி வதம் |
![]() |
போர் காட்சி. சரமாக பாயும் அம்பு |
![]() |
கோவர்த்தன கிரியை தூக்கி ஆனிரைகளை காக்கும் கண்ணன் |
![]() |
உமா மகேஸ்வரர் |
![]() |
பாற்கடல் கடையப்படும் சிற்பம் சிதைக்கப்பட்டிருக்கும் சோகம் |
ஹலபிடுவிற்கு அருகில் இருக்கும் பேலூருக்கு செல்லவில்லை. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்கிறோமே, நேரில் பின்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம்.
அருங்காட்சியகம் பார்க்கும் உணர்வு என்பது உண்மை....
ReplyDeleteகர்நாடக மாநிலத்தின் மைசூர் மற்றும் பெங்களூர் தவிர வேறு எங்கும் சென்றது இல்லை.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteகோமதீஸ்வரர்--- பெயர்க் காரணம் யோசிக்கவில்லையா?
ReplyDeleteநீங்கள் சொன்ன பிறகு யோசித்ததில் சிவன் கோவிலோ என்று தோன்றியது.
Deleteஅண்மையில் பாகுபலி உள்ள சரவணபெலகோலா மற்றும் பேலூர், ஹலேபேட், சோம்நாத்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுவந்தோம். சரவணபெலகோலா பற்றி என் வலைப்பூவில் எழுதியுள்ளேன். விரைவில் பிற இடங்களைப் பற்றி எழுத எண்ணியுள்ளேன். அருமையான இடங்கள்.
ReplyDeleteஅவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்தான்.
Deleteஅனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மேடம்.
ReplyDeleteநன்றிக்கு ஒரு நன்றி.
Deleteரொம்ப வருஷங்களாக இந்த இடங்களுக்குப் போக ஆசை! ஆனால் என்னமோ வாய்க்கவில்லை. சிரவணபெலகொலா கோமதீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பார்கள். அங்கே நடக்கும் வழிபாடுகளும் பிரசித்தம். பொதுவாக ஜெயினர் கோயிலாக இருந்தாலும் அங்கேயும் பிள்ளையார், மஹாலக்ஷ்மி ஆகியோர் இருப்பார்கள். கொஞ்சம் இந்து மதம்+பழக்கவழக்கங்கள் மட்டும் கட்டுப்பாடுடன் கூடியது தான் ஜைன மதம். அதிலே சந்நியாசியாக ஆகவும் நிறையச் சட்டதிட்டங்கள் உண்டு. அப்படியும் பல இளைஞர்கள், இளம்பெண்கள் அந்த வாழ்க்கையை விரும்பி ஏற்கின்றனர். ஜைனர்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியே செய்து வைத்திருந்தேன். எல்லாம் பழைய கணினியில் இருக்கு/இருந்தது.
ReplyDeleteஇப்போது கூட செல்லலாம். பாகுபலி கோவிலுக்கு மேலே ஏறிச்செல்ல டோலி வசதி இருக்கிறது.
Delete//ஜைனர்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியே செய்து வைத்திருந்தேன். எல்லாம் பழைய கணினியில் இருக்கு/இருந்தது// தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது, பகிருங்கள்.
Delete>>> காளஹஸ்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற தலங்களில் இருக்கும் தெய்வீக சாநித்யம் தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்காது... <<<
ReplyDeleteதாங்கள் இப்படிச் சொல்லியிருப்பது வருத்தமாக இருக்கின்றது...
வலையுலகில் இன்னொரு பதிவரும் இப்படித்தான் சொல்கிறார்...
இது பற்றி நான் உடையார் நாவலை எழுதிய எழுத்தாளர் பாலகுமாரனிடம் கூறினேன். அவரும் அதை ஒப்பக்கொண்டதோடு, "அந்த கோவிலோடு சம்பந்தப்பட்ட பலரின் சூட்சும உடல் இன்னும் அங்கே தான் இருக்கிறது அதுதான் காரணம்" என்றார்.
Deleteஅதைத்தவிர அங்கு செல்பவர்களுக்கு கடவுளை வழிபட வேண்டும் என்னும் எண்ணத்தை விட அந்த கட்டிட கலையை ரசிக்க வேண்டும் என்னும் எண்ணம் தான் பிரதானமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கோமதீஸ்வரர் பற்றி பள்ளியில் படித்திருந்தாலும் தங்கள் பதிவின் மூலமாக நிறைய தெரிந்து கொண்டேன்..
ReplyDeleteநிறைய விஷயங்களைப் பதிவு செய்திருக்கின்றீர்கள்...
நன்றியும் வணக்கமும்.
Deleteகோவில் போன்ற உணர்வு வரவில்லை என்று நீங்கள் சொல்லி இருக்கும் உணர்வு எனக்கும் உண்டு. அதில் இன்னும் சில இடங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்கள்..
ReplyDeleteபடங்களும் தகவல்களும் சிறப்பு. இந்த இடம் சென்றதில்லை.
ReplyDeleteதுளசிதரன்
பானுக்கா செம இடம்! சிற்ப வேலைப்பாடுகள் ரொம்ப அழகா நுனுக்கமா இருக்கு.
ReplyDeleteபேளூர் இன்னும் நல்லாருக்கும்ல?
உங்க படங்கள் ரொம்ப அழகா இருக்கு. குளம் ப்ளஸ் அந்த சிற்ப படங்கள்....
போனா எனக்கு நிறைய வேலை இருக்கு போலருக்கே அங்கு!!!!! கிளிக்கிங்க்தான் ஹிஹிஹிஹி...
கீதா