சாதாரணமாக நமக்கு நம் நாட்டையும், அரசையும் குறை சொல்வதென்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தியன் ரயில்வே போன்ற அரசு அமைப்புகள் எவ்வளவுதான் முன்னேறினாலும், நமக்கு நல்ல சேவையை தர முன்வந்தாலும் நாம் பாராட்ட மாட்டோம். ஆனால் சமீபத்திய இந்திய ரயில்வேயின் சேவையை கேட்டால் பாராட்டாமல் இருக்க முடியாது.
நடு இரவில் ஓடும் ரயிலில் எதிர்பாராமல் மாத விலக்கான ஒரு பெண்ணுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கி உதவியிருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
பெங்களூர்-பெல்லாரி-ஹோஸ்பெட் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்த ஆர்க்கிடெக்ட் மாணவி ஒருவருக்கு அந்த ரயில் பெங்களூரை விட்டு கிளம்பிய சிறிது நேரத்தில் பீரியட்ஸ் வந்து விட்டது. அப்போது மணி இரவு 11. அதற்கான முன்னேற் பாடுகளோடு வராத அவர், அதே வண்டியில் பயணித்த தன் நண்பருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ட்ரைனி இன்ஜினீயரான அந்த நண்பர் இந்தியன் ரயில்வே சேவாவுக்கு உதவி கேட்டு ட்வீட் செய்திருக்கிறார். 11.06க்கு சம்பந்தப்பட்ட அதிகாரி அந்தப் பெண்ணோடு பேசி அவரின் தேவையை கேட்டறிந்து,இரவு 2 மணிக்கு அரசிகெரெ என்னும் இடத்தை வண்டி அடைந்த பொழுது, அந்தப் பெண்ணிற்கு தேவையான சானிட்டரி பேட், மற்றும் மாத்திரைகளை ரயில்வே நிர்வாகம் வழங்கியிருக்கிறது. வாழ்க!
சரி, இப்போது கொஞ்சம் புதிர்:
1.ஒரு ஒற்றை இலக்க எண்ணை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தி
அதிக பட்ச மதிப்புள்ள எண்ணை பெற வேண்டுமென்றால் அந்த எண்ணை எப்படி பயன் படுத்துவீர்கள்?அவைகளுக்கு இடையில் எந்த குறியீடுகளையும் பயன்படுத்த கூடாது.
2. Though having 85 keys, cannot open any lock, who am I?
1.ஒரு ஒற்றை இலக்க எண்ணை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தி
அதிக பட்ச மதிப்புள்ள எண்ணை பெற வேண்டுமென்றால் அந்த எண்ணை எப்படி பயன் படுத்துவீர்கள்?அவைகளுக்கு இடையில் எந்த குறியீடுகளையும் பயன்படுத்த கூடாது.
2. Though having 85 keys, cannot open any lock, who am I?
கீழ் கண்ட நடிகர்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது, அது என்ன?


ஒரு ஜோக்கோடு முடிக்கலாம்:
ஆபரேஷன் டேபிளில் படுத்துக்கொண்டிருக்கும் நோயாளி, டாக்டரிடம், "டாக்டர், இந்த ஆபரேஷனுக்குப் பிறகு, நான் எல்லா செயல்களும் செய்ய முடியுமா?"
டாக்டர்: அதில் என்ன சந்தேகம்? நீங்கள் விரும்பும் எல்லா செயல்களும் செய்ய முடியும்.
நோயாளி: வயலின் வாசிக்க முடியுமா?
டாக்டர்: தாராளமா வாசிக்கலாமே..
நோயாளி: அப்படியா? ஆச்சர்யமா இருக்கே?
டாக்டர்: இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு?
நோயாளி: எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாதே..
இந்தியன் இரயில்வே நிர்வாகத்தை பாராட்டுவோம்.
ReplyDeleteஇந்த ஆறு நபர்களும் நடிகர்கள்.
விடைகள்
Delete1.அதர்வா
2.சிவாஜி
3.விக்ரம்
ஹாஹாஹா! வாங்க சகோ, உங்கள் கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை.
Deleteஇரண்டாவது கேள்விக்கு பதில் கீ போர்டு! மற்றபடி நடிகர்களுக்குள் உள்ள ஒற்றுமை எதுவும் தெரியலை. அதுவும் உலக்(கை)நாயகரோடு போட்டிருப்பவர் யார்னே தெரியலை! என்னமோ மத்தவங்க யார்னு தெரிஞ்சாப்போல! :))))) முதல் கேள்விக்குப் பதில் யோசிக்கணும். இப்போ யோசிக்க நேரமில்லை.
ReplyDelete//அதுவும் உலக்(கை)நாயகரோடு போட்டிருப்பவர் யார்னே தெரியலை! //
Deleteஎன்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? ஒரு காலத்தில் ரஜினி சகாப்தம் முடிந்து விட்டது, இவர்தன் நம்பர் ஒன் என்று கொண்டாடப்பட்டவர்.
ஹாஹா, நம்ம ரங்க்ஸின் உதவியோடு கண்டு பிடிச்சேன். ரஜினி, ஜிவாஜி இரண்டு பேரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிச்சிருக்காங்க. அடுத்து ஆர்யாவாமே அவரும் சிவ கார்த்திகேயனாம்! இன்னொன்று உலக்கை நாயகரோட விக்ரம் என்றார். ஒற்றுமை, வேற்றுமை எல்லாம் தெரியலை.
ReplyDeleteஹெஹெஹெ, ஜிவாஜி படத்திலே ரஜினி ஜிவாஜியாவும் ஜிவாஜி ஒரு படத்திலே ரஜினியாவும் நடிச்சிருப்பாராமே! எல்லாம் நம்ம வீட்டு சினிமா ரசிகர் சொல்றது தான்! அநேகமா கௌரவம் படமோ? அது பார்த்தேன். ஆனால்?????
Deleteரயில்வே நிர்வாகத்தின் உதவியை பாராட்டவேண்டும்.
ReplyDeleteபுதிரில் முதல் புதிர் கணிதம். நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது!
விஷ்ணு விஷால் ஜீவா எண்டொரு படத்தில் நடித்திருக்கிறார்.
ரஜினி சிவாஜி என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.
கமல் விக்ரம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்!
ஜோக்கையும் ரசித்தேன்.
ஹை ஸ்ரீராம் நீங்களும் என்னைப் போலவா கணக்குல ஹிஹிஹிஹி
Deleteகீதா
அது விஷாலா? இவங்கல்லாம் ஒரே மாதிரி முகத்தை வைச்சுட்டு இருக்காங்களே! எப்படிக் கண்டு பிடிக்கிறது?
Deleteஇது கணக்கு புதிர்தான், கொஞ்சம் மாற்றி யோசித்தால் விடை கிடைத்து விடும்.
Deleteசொல்லியிருக்கும் விடைகள் எல்லாம் சரி.
//இவங்கல்லாம் ஒரே மாதிரி முகத்தை வைச்சுட்டு இருக்காங்களே!//
Deleteஹாஹாஹா!எனக்கு சின்ன வயதில் சினிமா பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றும்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇந்திய ரயில்வே நிர்வாகத்தினர் செய்கையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
புதிர்கள் யோசிக்கிறேன்.
ஒவ்வொரு நடிகரும், மற்றவருடைய பெயருடைய படங்களில் நடித்துள்ளார்கள்.
ஜோக் நன்றாக இருந்தது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொடுத்திருக்கும் விடைகள் சரி. ஸ்ரீராம், விளக்கமாக எழுதியிருக்கிறார்.
Deleteபானுக்கா மசாலா சாட் ஆறிப்போச்சு...ஸாரிக்கா...நேற்றே பார்த்தேன் ராத்திரி ஆனால் அப்படியே கண் சொக்கி அப்புறம் இன்று மறந்தே போனேன் இப்பத்தான் நினைவு ஹிஹிஹிஹி...
ReplyDeleteஅது சரி மசாலா சாட்னு சொல்லிட்டு அத எஞ்சாய் பண்ண விடாம அதுல என்ன போட்டுருக்கீங்கனு ஆராயச் சொன்னா எப்பூடீயீயீயீயீயீயீ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஹா ஹா ஹா வேற ஒன்னுமில்ல கணக்கு மீக்கு டெரர்..அதான்
அடுத்த கமென்டுக்கு வரேன்
கீதா
அப்ப ரயில்வே தொடர்பு கொள்றதுக்காகவாவது ட்விட்டர்ல இருக்கனுமோ? வாட்சப் இருக்கா அது இருந்தா நல்லதாச்சேனு டிவிட்டர் அக்கவுன்ட் எல்லாம் இல்லையே அதான்...
ReplyDeleteரயில்வே வாழ்க!!!
கீதா
ட்விட்டர் எல்லாம் தேவையே இல்லை தி/கீதா. உங்கள் பயணச்சீட்டிலேயே கேடரிங் புகார் எண் மற்ற விஷயங்களுக்கான புகார் எண் எனக் கொடுத்திருப்பாங்க. அந்த எண்ணில் தொடர்பு கொண்டும் பேசலாம். எஸ்.எம்.எஸ். அல்லது வாட்சப் வசதி அந்த எண்ணுக்கு இருந்தால் அதன் மூலமும் சொல்லலாம்.
Deleteசில சமயம் டிடிஈ கிட்டேச் சொன்னால் கூட அவங்க சொல்லிச் செய்யச் சொல்லுவாங்க. நாங்க கல்கத்தாவில் இருந்து வரச்சே தண்ணீர் இல்லாமல் இப்படித் தான் டிடிஈ கிட்டேச் சொன்னதும் அடுத்து வந்த ஸ்டேஷன் நிற்கக் கூடாது என்றாலும் நிறுத்தித் தண்ணீர் நிரப்பிக் கொண்டு கிளப்பினார்கள்.
Deleteஒற்றை இலக்கம்....இரு முறை....எந்தக் குறியீடும் பயன்படுத்தக் கூடாதுனா ...99 தானெ வரும் சரியா...
ReplyDeleteகீ போர்ட்
நடிகர்கள்...ம்ம்ம்ம்ம் யோசிக்கிறேன்
ஜோக் ரசித்தேன்
கீதா
99 இல்லநு நினைக்கிறேன் வேற ஏதோ இருக்கு இதுல யோசிக்கறேன்....
ReplyDeleteநடிகர்களுக்கான விடை ஸ்ரீராம் சொல்லிட்டார் போல...எனக்கு ஆனால் அது தோனவும் இல்லை டக்குனு...
கீதா
ஹை, 99 தான் இருக்கும் அநேகமா!
Deleteசூட்சுமத்தை பிடித்து விட்டீர்கள்... யோசியுங்கள்.
Deleteபியானோ என்பது சரி, கீ போர்டும் ஓகே.
ReplyDelete