கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 2, 2020

சுப திருஷ்டி!

சுப திருஷ்டி! 

பலத்த கை தட்டல்களை வணங்கி ஏற்றுக் கொண்டு வசுமதி  மேடையிலிருந்து இறங்கினாள். ராஜாராமன் அவள் தோளைத் தட்டி, "ஜமாய்ச்சுட்ட!" என்றதும் அவர் கால்களை தொட்டு வணங்கினாள். 

"ரொம்ப பயமாயிருந்தது மாமா.. எப்படியோ நல்லபடியா   ஒப்பேத்திட்டேன்.."  

"ஒப்பேத்தறதா? தூள் கிளப்பிட்ட.. இதோட நிறுத்திடக் கூடாது, தொடர்ந்து பாடணும்..." என்று அவர் கூறியதும், வசு சிரித்துக் கொண்டே  தலை  ஆட்டினாள்.     

ராஜாராமன் அவர் புதிதாக வீடு கட்டிக்க கொண்டு குடியேறிய புறநகர் பகுதியில் கல்சுரல் அசோசியேஷன் ஒன்றை ஆரம்பித்து அவ்வப்பொழுது 
கச்சேரி, புராண பிரவசனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதற்கான செலவுகளுக்கு ஸ்பான்சர்கள் எப்படியோ பிடித்து விடுவார். இந்த மாதம் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் அதற்கு ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு  உடல் நிலை சரி இல்லாததால் வர முடியவில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்து விட அவருக்கு மனம் இல்லை. அவருடைய நண்பரின் மகள் வசுமதி முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பது அவருக்குத் தெரியும். நன்றாகப்  பாடுவாள், ஆனால், இதுவரை எந்த மேடையிலும் ஏறி, கச்சேரி செய்ததில்லை. அவளை மேடை ஏற்றி விடலாம் என்று முடிவெடுத்தார். 

"என்ன விளையாடறயா? இவ நன்னாத்தான் பாடுவா, அதுக்காக கச்சேரி பண்ண முடியுமா?" வசுவின் அப்பாவிற்கு நம்பிக்கை இல்லை. 

"தாராளமா பண்ணலாம், எல்லோரும் ஏதோ ஒரு நாள் இப்படி ஆரம்பித்தவர்கள்தான். கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணினால் போதும்" 

நான் வயலின் வாசிக்கப் போகும் பையனையும், மிருதங்கம் வாசிக்கப் போகும் பையனையும் வரச் சொல்றேன், ரெண்டு நாள் பிராக்டீஸ் பண்ணினால் போதும்".

ராஜாராமன் சொன்னதோடு நிற்காமல், அவர்களோடு உட்கார்ந்து என்னென்ன பாடல்கள் பாட வேண்டும், என்பதற்கு உதவி, சின்ன, சின்ன திருத்தங்கள் கூறி கச்சேரியை அமைத்து கொடுத்தார். அவளும் அதை சிக்கென பிடித்துக் கொள்ள கச்சேரி சிறப்பாக அமைந்து விட்டது. 

வசுவின் கச்சேரியை கேட்ட ஒருவர், தன் மகளின்  திருமண  ரிசப்ஷனுக்கு உடனே புக் பண்ணினார்.  அதைத் தொடர்ந்து சில கோவில் கச்சேரிகள் கிடைத்தன. வெளியூருக்கு போய் பாடும் சந்தர்ப்பம் கூட வாய்த்தது. வசுமதிக்கும் சரி, அவள் பெற்றோர்களுக்கும் சரி அது சந்தோஷமளிப்பதாகவே இருந்தது. 

அவர்கள் வீட்டிற்கு  சென்றிருந்த பொழுது,"என்ன வசு, உன் கான்செர்ட்டெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?" என்றதற்கு, "ம்ம் ." என்று அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள். 

"ஆச்சு, ஆடி மாசம் வந்துண்டிருக்கு, உனக்கு நிறைய கச்சேரி கிடைக்கும்.."  அவர் மேலே பேச, அவளோ, "பார்க்கலாம்.."        என்றதும், "வொய் ஸோ டிஸ் இன்ட்ரஸ்டட்?" 

"தொண்டை சரியில்ல.."  

"நவராத்திரில பாடுன்னு சொன்னதும் பதில் சொல்ற  மாதிரி  சொல்றயே..?" சிரித்துக் கொண்டே கேட்க, 
அவள் பேசாமல் இருந்தாள். அவளுடைய அம்மா தொடர்ந்தாள், 

"கச்சேரி பண்ண ஆரம்பித்ததிலிருந்து அவளுக்கு மாத்தி மாத்தி உடம்புக்கு வந்துண்டே இருக்கு. அதுவும் தொண்டை ரொம்ப பாதிக்கிறது. போன  வாரமெல்லாம் பேசவே முடியல.."

"இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்,இதுக்காக கச்சேரி செய்வதை ஏன் நிறுத்தணும்?" 

"திருஷ்டியா இருக்குமோனு தோண்றது, அதனால இனமே கச்சேரி பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம். கச்சேரி பண்ண ஆரம்பித்த - -திலிருந்துதான் இந்த பிரச்சனை..."

ராஜாராமன் கன்னத்தில் கை வைத்தபடி அவர்களை  கூர்ந்து பார்த்தார். " கச்சேரி பண்றங்களே சௌமியா, சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, இவங்களுக்கெல்லாம் திருஷ்டி படாதா? 

"அது......."

நீங்க மோசமான திருஷ்டி பத்தி மட்டும் யோசிக்கிறீங்க, மோசமான திருஷ்டினு ஒண்ணு  இருந்தா, சுப திருஷ்டியும் இருக்கும்  இல்லையா?" என்று அவர் கேட்க, வசுவும், அவள் தாயாரும்  புரியாமல்  முழித்தார்கள்.

ராஜாராமனே தொடர்ந்தார்," நம்ம ஊரில் கல்யாணம், காது குத்தல், கிரஹப்ரவேசம்  போன்ற எல்லா விசேஷங்களுக்கும் சொந்தம், நட்பு என்று நிறைய பேரை  அழைப்போம்  ஏன் தெரியுமா? " ராஜாராமன் கேள்விக்கு பதில் வராததால் அவரே தொடர்ந்தார். 

சில பேர் பார்வைக்கு நல்ல சக்தி உண்டு, அப்படி பட்டவர்கள் பார்த்தால் நல்லது நடக்கும். சில பேர் சொன்னால் பலிக்கும், அப்படி பட்டவர்கள் வாழ்த்தினால் நல்லது. சில பேர் சங்கல்பத்திற்கு பலன் உண்டு. அப்படிப் பட்ட எல்லோருடைய ஆசிகளும் கிடைக்கணும்னுதான்.." 

நீங்க சொல்றது புரியல.." 

இப்போ உன் கச்சேரியை குறைவான பேர்கள்தான் கேட்கிறார்கள், அதில் இருக்கும் துர் திருஷ்டி உள்ளவர்களின் திருஷ்டியை காம்பன்சேட் பண்ணனும் என்றால் இன்னும் அதிகமானவர்கள் உன் கச்சேரியை கேட்கணும். அப்படி கேட்பவர்கள் அதிகமாக,அதிகமாக சுப திருஷ்டி அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அது இந்த துர் த்ரிஷ்டியின் பலனை குறைத்து விடும். ஸோ நீ இனிமேல் தான் நிறைய கச்சேரி பண்ணனும்".

வசுமதியும் அவள் அம்மாவும் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்பலாம். 

37 comments:

  1. திருஷ்டிகளில் இத்தனை விஷ'ய'ம் இருக்கிறது என்று இன்று தான் தெரியும்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டி.டி . விஷ'ய'த்தை விளக்கினால் நன்றாக இருக்கும். 

      Delete
  2. இது மாதிரி 'சுப திருஷ்டி' என்று ஒன்று கேள்விப்பட்டதே இல்லை. 'கண் வைப்பார்கள்' என்பதற்காக பூசனி போன்றவற்றைக் கட்டித் தொங்கவிடுவதைப் பார்த்திருக்கிறேன். கண்ணேறு என்பதும் தமிழ் இலக்கியத்தில் உண்டு.

    ஞானியர்களைப் பார்க்கப் போகும்போது அவர்களது பார்வை நம்மீது திரும்பினாலே அதுவே போதும் என்று சொல்வர். அதற்கும் சுபதிருஷ்டி என்ற பெயர் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. சுப திருஷ்டி என்பது நான் கொடுத்திருக்கும் பெயர். சுப திருஷ்டி என்னும் வார்த்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் சுப திருஷ்டி உண்டு. நெகட்டிவ் பலனை ஏற்படுத்தும் திருஷ்டியை துர் திருஷ்டி என்று சொல்லாமல் திருஷ்டி என்று மட்டும் கூறுவோம். தீய பலனை ஒரு பார்வை ஏற்படுத்தும் என்றால், நல்ல பலனை ஏற்படுத்தும் பார்வைகளும்  கண்டிப்பாக உண்டு அதைத்தான் நான் சுப திருஷ்டி என்கிறேன். கதை எப்படி இருந்தது என்று கூறாமல், அதில் வரும் ஒரு வார்த்தைக்கு மட்டும் ரியாக்ட் பண்ணியிருக்கிறீர்கள். வடையை எண்ணச்சொன்னால், துளையை எண்ணுவீர்கள் போலிருக்கிறது. அபுரி என்று சுஜாதா எழுதினால் ஒப்புக் கொள்கிறீர்கள், சுப திருஷ்டியை ஏற்க முடியவில்லையா? வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

      Delete
    2. அப்படீல்லாம் இல்லை. இதுவரை சுபதிருஷ்டி என்ற பெயர் பார்த்ததில்லை என்பதினால் எழுதினேன்.

      அது சரி... வடையை எண்ணுவதும் துளையை எண்ணுவதும் ஒரே வேலைதானே. ஹா ஹா

      Delete
  3. சுப திருஷ்டி.. இப்பதான் கேள்விப்படுறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி. கருத்து பிடித்ததா இல்லையா?

      Delete
  4. சுப த்ருஷ்டி... நல்லதே நடக்கட்டும். சரியான முடிவை எடுக்கட்டும் அவர்கள்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. அக்கா கதை பாசிட்டிவ்! நல்ல முடிவு எடுப்பார்கள்.

    முதலில் கச்சேரி செய்யும் போது அப்படித்தான் இருக்கும் தொடர்ந்து செய்யும் போது பெரிய பெரிய பாடகர்களுக்கே வரும். அதற்கு எல்லாம் இப்போது வோக்கல் ட்ரெய்னிங்க் எல்லாம் இருக்கிறதே. வோக்கல் கார்டுக்கும்..

    முடிவு பாசிட்டிவ்தான்!!

    நன்றாக இருக்கிறது அக்கா. கதை.

    கீதா

    ReplyDelete
  6. நல்ல கதை, நல்ல முடிவு. எல்லாவற்றையும் சரியான பார்வையில் பார்க்கணும் என்பதைச் சொல்லும் கதை. சுப திருஷ்டி எனக் கேள்விப் பட்டதில்லை. யோகியரும் ஞானியரும் பார்த்தால் நல்லது நடக்கும் எனச் சொல்லுவதுண்டு. இதைத் திரு ஜேகே பற்றிய ஒரு புத்தகத்தில் படித்திருக்கேன். நோய்வாய்ப்பட்ட ஒருவர் ஜேகேயைப் பார்க்க நினைத்துக் கேட்டப்போப் பார்க்க நேரம் ஒதுக்கலை. ஆகவே அவர் சொற்பொழிவுக்குப் போகையில் அவர் கண் பார்வை படும் இடத்தில் அவர் அமர்ந்து கொண்டாராம். தற்செயலாக ஜேகே அவரைப் பார்க்க அவருக்கு நோயின் தாக்கம் குறைந்தது எனச் சொல்லி இருக்கார். இது பரிபூரணமான யோகிகளின் பார்வைகளுக்கே அபூர்வமாய் நிகழும் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாண்டிச்சேரி அன்னையின் பார்வை பட்ட ஒரு குடிசை, ஒட்டு வீடானதாம். யோகியரின் பார்வைகளுக்கு பலன் நிச்சயமாக உண்டு. சாதாரண மனிதர்களிலும் சிலருக்கு வாக்கு பலிதம் உண்டு, சிலர் பார்வை நல்ல விளைவுகளை உண்டாக்கும். இதில் எனக்கு அனுபவம்  உண்டு. இவையெல்லாம் மிகவும் நுட்பமான விஷயங்கள். பொது வெளியில், எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள  முடியாது. திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிட்டது போல இவை நம்புகிறவர்களுக்கான விஷயங்கள். வருகைக்கு நன்றி. 

      Delete
    2. //சாதாரண மனிதர்களிலும் சிலருக்கு வாக்கு பலிதம் உண்டு,// - இது என்னுடைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது. நான் கெடுதலாகச் சொல்வது இருபதுகள்வரை பலித்துவிடும். சில சமயம் கோபத்தில் சொல்லும் சொற்கள் பலித்துவிடும் (அந்த வயதில்). பிறகு ரொம்பவுமே வருத்தப்பட்டிருக்கேன். பத்தாம் வகுப்பில் ஹாஸ்டலில், என்னுடன் படித்தவன் கணக்கில் புலி. அவன் எனக்கு கடைசி சில வாரங்கள் (தேர்வுக்கு) கணக்கு சொல்லித்தந்தான். ஏதோ ஒரு சமயத்தில் சட் என்று என் வாயில், உனக்கு செண்டம் கிடைக்காது என்று சொல்லிட்டேன். அவன் தேர்வு ரொம்ப நல்லா எழுதியிருந்ததாகவும் நூற்றுக்கு நூறு எதிர்பார்ப்பதாகவும் எல்லோரிடமும் சொல்லியிருந்தான். அவனுக்கு 97 மார்க்குகள் கிடைத்தன. நல் வாக்கு பலிதம் இருப்பவர்களைவிட, கருநாக்கு என்று சொல்லப்படும், கெடுதல் வாக்குகள் அதிகமாக பலித்துவிடுமோ?

      Delete
  7. சுபதிருஷ்டி இன்றுதான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. திருஷ்டி என்றால் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திலேயே இருப்பதால் உங்களுக்கெல்லாம் சுப திருஷ்டி என்ற இந்த வார்த்தை வித்தியாசமாக இருக்கிறது போலிருக்கிறது. (எல்லாம் நெல்லை செய்த வேலை)நல்ல விளைவுகளை   ஏற்படுத்தும் பார்வை என்ற பொருளிலேயே நான் அந்த வார்த்தையை  கையாண் டிருக்கிறேன். கதையை ஊன்றி படித்தால் புரியும். நன்றி சகோ. 

      Delete
  8. //வசுமதியும் அவள் அம்மாவும் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்பலாம். //

    நல்லமுடிவு தான் எடுப்பார்கள்.

    ராஜாராமன் அவர்கள் நல்லோர் பார்வை மூலம் சுப த்ருஷ்டி கிடைக்கும் என்று சொல்கிறார்.
    அப்படியே ஆகட்டும்.

    அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சரியான புரிதலுக்கு நன்றி. நெல்லை உங்கள் பின்னூட்டத்தை படித்தால் நன்றாக இருக்கும். 

      Delete
  9. திருச்சி குவார்டர்சில் என்மனைவி முதன் முதலில்பக்க வாத்தியங்களுடன் பாடியது நினைவுக்கு வந்தது

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு திருஷ்டி பட்டிருக்காது என்று நம்புகிறேன்.நன்றி. 

      Delete
  10. சுப திருஷ்டி நானும் இதுவரை கேள்விப்படாத ஒன்று .கிட்டத்தட்ட சைனீஸ்காரங்களோட யின் எதிர்மறை சக்தி யாங் நேர்மறை சக்தி போல இருக்கு .

    ReplyDelete
    Replies
    1. ஆம், நேர்மறை சக்திக்குத்தான் நான் சுப திருஷ்டி என்று பெயர் கொடுத்தேன். நன்றி. 

      Delete
  11. நல்ல பாஸிட்டிவான கருத்து.

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி

    கதை அருமை. சுப திருஷ்டியை விளக்கத்துடன் சொன்ன விதம் அருமை. வசுமதியும், அவள் தாயாரும் இனி நல்ல முடிவுதான் எடுப்பார்கள். விரைவில் வசுமதி சுப திருஷ்டி பலன்களை பெற்று நல்ல பாடகியாக வளரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. சொல்லியிருக்கும் கருத்தை சரியாக புரிந்து கொண்டதற்கும், தெளிவான விமர்சனத்திற்கும் நன்றி கமலா. 

    ReplyDelete
  14. சுப திருஷ்டியா...   இப்போதுதான் கேள்விப்பப்படுகிறேன்.  பாஸிட்டிவா இருக்கு.

    ReplyDelete
  15. அருமையான கதை மேடம். எல்லோருமே இப்படி நேர்மறையாக யோசித்தால் நல்ல இதயங்கள் காயப்பட வேண்டியிருக்காது.

    ReplyDelete
  16. சுபதிருஷ்டி அல்லது துர்திருஷ்டி என்பதெல்லாம் நிச்சயம் அனுபவத்தில் நாமே பார்த்துவருவதுதான்... ஸ்ரீஅரவிந்த அன்னை இதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். உதாரணமாக, உங்கள் வீட்டிற்கு யாராவது வந்து போன உடனே டியூப்லைட் பியூஸ் ஆனால், தண்ணீர்க் குழாய் ரிப்பேர் ஆனால் ... அல்லது வீட்டின் உறுப்பினர்களில் எவருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போனால், அல்லது கடிதம் மூலம் துக்கச் செய்தி வருமானால்.....அந்த ஆசாமியின் பார்வை 'துர்திருஷ்டி' என்று புரிந்துகொள்ளவேண்டும். மறுமுறை நாமாக அவரை அழைக்கக்கூடாது - என்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ... இது என்ன புது விஷயம் செல்லப்பா சார்.

      இனி யாராவது என் வீட்டிற்கு வந்தால், அடுத்து ஒருவர் வரும்வரை, நடக்கும் கெடுதல்களுக்கெல்லாம் முன்பு வந்தவர்தான் காரணம் என்று எண்ணவைத்துவிட்டீர்களே.

      தற்காலத்தில், கொரோனா கேரியர் வீட்டிற்கு வந்தால், `மறுமுறை நாமாக அவரை அழைக்கும் வாய்ப்பே கிடைப்பது துர்லபம்னா.

      Delete
    2. செல்லப்பா சார் சொல்வது உண்மைதான். அவைகளை அனுபவித்திருக்கிறேன். நன்றி செல்லப்பா சார். 

      Delete
  17. திருஷ்டியை மிகவும் நேர்மறையாகச் சொல்லிய கதை. நன்றாக யோசித்திருக்கின்றீர்கள். பாராட்டுகள் சகோதரி. ப்ளஸ் அதிகமாகும் போது மைனஸ் வீழ்ச்சியடையும்தான்.

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    ReplyDelete
  18. சுப திருஷ்டி.. ...வித்தியாசமான கதை ...

    ரொம்ப நல்லா இருந்தது ...ரசித்தேன்

    ReplyDelete