கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 31, 2020

கடலைக் கடந்து - 6

கடலைக்  கடந்து - 8

நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பணி ஒய்வு பெற்று சென்ற ஒருவருக்கு விடையளிக்கும் வைபவம் நடந்தது. எங்கள் அலுவலகத்தின் டைரக்டர், மற்றும் பல்வேறு டிபார்மென்டுகளின் தலைவர்கள் ஒரு அறையில்  குழுமியிருக்க, எல்லோருக்கும் கேக், சமோசா, மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன. முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த நான் குளிர் பான டின்னை சற்று வேகமாக திறந்து விட புஸ்ஸென்ற சீறலோடு வெளிப்பட்ட அது எதிரே அமர்ந்திருந்த ஒரு தலைமை அதிகாரியின் உடையில் தெறித்தது. ஒரு பக்கம் அவமானம், ஒரு பக்கம் பயத்தோடு நான் மன்னிப்பு கோர, அந்த ஓமானிய அதிகாரி,"நோ ப்ராப்லம், மூர்த்தி இஸ் மை பிரதர், யூ ஆர் ஹிஸ் ஒய்ஃப்" என்று மிகவும் பெருந்தன்மையோடு  கூறி விட்டார்.    நல்லவேளை நான் மிராண்டாவோ, பெப்ஸியோ எடுத்துக் கொள்ளாமல் ஸ்ப்ரைட் எடுத்துக் கொண்டிருந்தேன். அவருடைய வெள்ளைவெளேர் திக்தாஷா தப்பித்தது. 

எங்கள் அலுவலகத்தில் ஓத்மான் என்றொரு ஜான்சிபாரி மருத்துவர் இருந்தார். அவர் இடைவிடாமல் சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பார். ஒருமுறை என்னிடம் டைப் செய்ய கொடுத்து விட்டு, அதைப் பற்றி புகையும் சிகரெட்டோடு அவர் விளக்க, அப்போது கர்ப்பிணியாக இருந்த எனக்கு குமட்டியது. அவரிடம், "டாக்டர், ஐ காண்ட் பேர் திஸ் ஸ்மெல், கேன் யூ புட்  ஆஃப் யுவர் சிகெரெட்?" என்றதும், "டெஃபனெட்லி" என்று சிகெரெட்டை அணைத்தார். என் அதிகப் பிரசங்கித்தனத்தை அவர் தவறாக நினைக்கவில்லை. அவருக்கு நம் ஹிந்தி படங்கள் மிகவும் பிடிக்குமாம். அதுவும் அதில் பறந்து  பறந்து கதாநாயகன் போடும் சண்டையை மிகவும் ரசிப்பதாக சொல்வார். 

எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு எகிப்திய பெண்மணி ஒரு நாள் என்னிடம், தனக்கு ஒரு ஹிந்தி நடிகையை மிகவும் பிடிக்கும் என்றும், அவள் பெயர் என்ன என்றும் கேட்டாள். இப்படி சொன்னால் எப்படி? அவள் எப்படி இருப்பாள்? என்று நான் கேட்டதும், " ஷி இஸ் டால், ஷி ஐஸ் பியூட்டிஃபுல், ஷி ஹாஸ் பிக் ஐஸ்." என்றெல்லாம் சொன்னதும்,   நான், ரேகா?, ஸ்ரீதேவி? என்றெல்லாம் பெயர்களை அடுக்கினேன். அவளோ, "நோ நோ ..ஷி அக்டேட் இந்த பிலிம் சிங்கம்" என்றதும் எனக்கு பொறி தட்டியது, "யூ மீன் சங்கம்..?" என்றதும்  "எஸ்! எஸ்!" என்று ஆமோதித்தாள். கடவுளே! இன்னும் எத்தனை காலம் வைஜயந்தி மாலாவையே கொண்டாடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டேன். 

பஸ்ஸுக்காக காத்திருக்கும் பொழுது இன்னொரு எகிப்திய பெண்மணி," எனக்கு இந்திய பெண்களை மிகவும் பிடிக்கும். இந்தியப் பெண்கள் கருமையான கூந்தலும், கருமை நிறக் கண்களும் கொண்டவர்கள். அது மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்திற்காகவும், கணவனுக்காகவும் எத்தனை தியாகங்கள் செய்கிறார்கள்? கணவன் அடித்தால் கூட பொறுத்துக்க கொள்கிறார்கள், நான் இந்தியப் படங்களில் பார்க்கிறேனே.." என்பார். வடிவேலுவை கோவை சரளா டின் கட்டும் படங்களை அவர் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.          

  


19 comments:

  1. வணக்கம் சகோதரி

    ஸ்வாரஸ்யமான தகவல்கள். உலகத்தில் பொறுமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பெரிய பதவியில் இருந்தாலும், அந்த அலுவலக சூழலில், பெருந்தன்மையாக சிறு விஷயத்தை பெரிதாக்காமல் விட்டுத் தந்த அந்த அதிகாரியை பாராட்ட வேண்டும்.

    வைஜெயந்தி மாலாவை மறக்க முடியுமா? அவர் அழகு தனிதான். என்றும் நினைவில் நிற்பது. அவருக்குப் பின் ஹேமமாலினி.. அதற்குப் பின்தான் ரேகா, ஸ்ரீ தேவி..

    /வடிவேலுவை கோவை சரளா டின் கட்டும் படங்களை அவர் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்./

    ஹா.ஹா.ஹா. பார்த்திருந்தால் இந்திய கலாச்சாரத்தை அவர்களே மாற்றியிருப்பார்கள். அப்போது கணவனுக்காக பொறுமை காத்த பெண்மணிகளின் கதைகள் ஏதும் எடுபடாது... நன்றாக உள்ளது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி. 

      Delete
  2. நல்ல பகிர்வு. ஒவ்வொருவரின் மாறுபட்ட குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வடிவேலு நகைச்சுவைக்காட்சிகளைப் பார்த்திருந்தாலும் இம்மாதிரிக் காட்சிகளை நான் பார்ப்பதில்லை. வெறுப்பாக வரும். மிகையாகவும் தோன்றும். பொதுவாக இப்போது திரைப்படங்களில் இம்மாதிரி அடிப்பது, நிறத்தையும் உருவத்தையும் கேலி செய்வது போன்றவைகளே பெரிய நகைச்சுவையாகக் கொண்டாடப் படுகின்றன. இவற்றை ரசிக்கப் பெரிய மனது வேண்டும். என்னிடம் அது இல்லை. :))))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா. வடிவேலுவின் டைமிங் பிரமாதம். 

      Delete
  3. நல் ஆதரவு காட்டிய பெரிய அதிகாரிக்கு வாழ்த்துகள்.
    நீங்கள் வேலை செய்தபோது வைஜயந்தி மாலா
    படத்தைப் பார்த்தாரோ என்னவோ.
    அவர் என்றும் அழகிதான். முழுமையான
    அழகு.
    அவருக்குப் பின்தான் மற்றவர்கள்.

    வடிவேலு காமெடிகளை எங்க பசங்களும் விரும்பிப்
    பார்ப்பார்கள்.

    எனக்குப் பார்த்திபன் வடிவேலு காட்சிகள் பிடிக்கும்.
    நல்ல அனுபவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி அக்கா. நன்றாக காமெடி பண்ணிக்கொண்டிருந்த வடிவேலு கதாநாயகனாக மாற ஆசைப்பட்டு மார்க்கெட் இழந்தார்.  

      Delete
    2. பேராசை பெரு நஷ்டம்! :( பார்த்திபனோடு அவர் அடிக்கும் லூட்டிகள் மறக்க முடியாதவை.

      Delete
  4. ஒரு மருத்துவர் என்று அவரையும், உங்களது வேண்டுகோளை ஏற்று புகைப்பதை நிறுத்திய அவரை உயர்வாக நினைத்திருந்தேன்.... ஆனால் ???

    //அவருக்கு நம் ஹிந்தி படங்கள் மிகவும் பிடிக்குமாம். அதுவும் அதில் பறந்து பறந்து கசா'நாயகன் போடும் சண்டையை மிகவும் ரசிப்பதாக சொல்வார்//

    முடியலை...

    ReplyDelete
    Replies
    1. //எகிப்திய பெண்மணி "எனக்கு இந்திய பெண்களை மிகவும் பிடிக்கும். இந்தியப் பெண்கள் கருமையான கூந்தலும், கருமை நிறக் கண்களும் கொண்டவர்கள். அது மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்திற்காகவும், கணவனுக்காகவும் எத்தனை தியாகங்கள் செய்கிறார்கள் ? கணவன் அடித்தால் கூட பொறுத்துக்க கொள்கிறார்கள்//

      இதுவும் திரைப்படம்தான்... ஸூப்பர்

      Delete
    2. ஒன்று அவர் பண்பு, மற்றது அவர் ரசனை. இரண்டையும் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும்? நன்றி ஜி. 

      Delete
  5. இந்தியப் பெண்களின் பெருமையே பெருமை...

    ReplyDelete
  6. அனுபவங்கள் நன்று.

    இந்திய சினிமா பற்றிய வெளி நாட்டவர்களின் கண்ணோட்டம்! :)

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் சத்யஜித்ரே போன்றவர்கள் இந்தியாவின் ஏழ்மையை வெளிச்சம் போட்டதை சிலர் கண்டித்திருக்கின்றனர் போலிருக்கிறது. நன்றி. 

      Delete
    2. நம்ம திரைப்படத்தின் டூயட் காட்சிகளைப் பற்றி ஒரு முறை சிவசங்கரியோ யாரோ எழுதினது நினைவில் வந்தது. டூயட் காட்சிகளைப் பார்த்து அதிசயித்தவரிடம் சிநேகிதர் அந்த ஆண் அந்தப் பெண்ணின் காதலை வேண்டுகிறான். அதுக்காகப் பாடி, ஆடி அவள் மனதை ஜெயிக்க நினைக்கிறான் என்று சொல்ல இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு காதலி சம்பாதிக்கணுமா? எனக்கு இந்தியப் பெண்களே வேண்டாம்னு அவர் சொன்னாராம்! இஃகி,இஃகி,இஃகி! எல்லாமே மிகை!

      Delete
  7. விடையளிக்கும் வைபவம் அனுபவம், ஜான்சிபாரி மருத்துவர் அவர்களின் பெரும்தன்மை
    எகிப்திய பெண்மணிக்கு பிடித்த நடிகை, அவரின் இந்திய சினிமா பற்றி கணிப்பு அத்தனை பகிர்வும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமான, தெளிவான விமர்சனத்திற்கு நன்றி.  

      Delete
  8. நகைச்சுவை அனுபவங்களைப் படித்தேன்.. ரசித்தேன்... இங்கும் அப்படியானவை நிறையவே உள்ளன...

    இருந்தாலும் முன்னை மாதிரி இல்லை..

    ReplyDelete