உனக்கும் எனக்கும்
*இந்த படத்திற்கு பொருத்தமான கதை எழுதும்படி மத்யமரில் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய கதை கீழே:
திவாகர் அன்று அலுவலகத்திலிருந்து வரும் பொழுது கையில் சுருட்டி எடுத்து வந்த ஒரு சுருளை ஹாலில் இருந்த டீபாயில் போட்டான்.
"என்னது?" ஜனனி கேட்டதற்கு ,"பிரிச்சு பாரேன்.." என்று அவன் சொன்னதும் பிரித்தாள். ஒரு வால் போஸ்டர். அதில் ஒரு இளம் ஆணும், பெண்ணும் உரக்க சண்டை போட்டு கத்துவது போன்ற படம்.
"எதுக்கு இது"
"நல்ல கேள்வி. வால் போஸ்டர் எதுக்கு வாங்குவாங்க? வீட்டில் மாட்டதான்"
"ஏன் இப்படி ஒரு படம்?"
"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்? நல்லா இல்லையா?"
"அப்படி சொல்ல முடியாது,பட்... " என்று தயக்கத்தோடு ஆரம்பித்தவள் சண்டை போட்ற படத்தை ஏன் வீட்டில் மாட்டனும்?"
"சம்திங் டிஃபரெண்ட் .. நான் தான் உன்னோடு சண்டை போடுவதில்லை, நீ என்ன சொன்னாலும் அதுக்கு சரினு சொல்லிடறேன். படத்திலாவது ஒருத்தன் தைரியமா மனைவியை எதிர்த்து சண்டை போடறானே.." குறும்பாக சிரித்துக் கொண்டே அவன் கூற,
"எப்படி? எப்படி? ரிபீட்.." என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பொய் கோபத்தோடு ஜனனி கேட்டதும் , சிரித்துக் கொண்டே அவளை தன்னருகே இழுக்க, அவனிடமிருந்து விலகி காபி கலக்க உள்ளே சென்றாள்.
"காஃபியை உரிஞ்சிக்கொண்டே இதை எங்கே மாட்டலாம்? சொல்லேன்.."
"ஹாலில் நன்றாக இருக்காது, டைனிங் ரூம்..?"
"நோ "..
"யெஸ், பெட் ரூம்தான் ரைட் பிளேஸ்.." என்று முடிவு செய்து அதை அவர்கள் கட்டிலுக்கு எதிரே, இரண்டு பக்கங்களிலும் ஒட்டக்கூடிய செல்லோ டேப் கொண்டு ஒட்டி விட்டு, ஹௌ இஸ் இட்?" என்றான்.
ஜனனிக்கு இப்படி ஒரு படத்தை தங்கள் படுக்கை அறையில் அதுவும் கண்களில் படும்படி மாட்டுவதில் விருப்பமில்லை. இருந்தாலும் அதைச் சொல்லி அவனை வருத்தப் படுத்த அவள் விரும்பவில்லை. அதுதான் அவள் சுபாவம். யாரோடும் விவாதங்களில் இறங்க மாட்டாள். தனக்கு ஒரு கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் மௌனமாகி விடுவாள். சமயம் பார்த்துதான் சொல்வாள். திவாகருக்கு இதில் மிகவும் சந்தோஷம். அவ்வப்பொழுது அவளை சீண்டுவான், அவளும் பதில் கொடுப்பாள், இப்படி விளையாட்டு சண்டை, சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்திருக்கிறதே ஒழிய பெரிய சண்டை அவர்களுக்குள் வந்ததில்லை.
அவர்கள் கண்ணே பட்டு விட்டதோ என்னும்படி கொஞ்ச நாட்களாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் வர ஆரம்பித்தன. திவாகர் சிடுசிடுப்பதும், சாதாரணமாக பொறுமையாக இருக்கும் ஜனனி பதிலுக்கு பதில் சொல்லி சண்டையை வளர்ப்பதும் அதிகமாயிற்று. .
அன்று காலை டிஃபன் சாப்பிட திவாகர் உட்கார்ந்தான். ரவை உப்புமாவை கொண்டு ஜனனி வைத்ததும், "ஓ! மை காட்! இன்னிக்கும் உப்புமாவா?"
"என்ன இன்னிக்கும்? இந்த மாசத்தில் இது செகண்ட் டைம்தான், தவிர உப்புமாவுக்கு என்ன குறைச்சல்?"
"தொட்டுக்க ஒன்னும் இல்லாததுதான் குறைச்சல்."
"எலுமிச்சங்காய் ஊறுகாய் இருக்கு, சர்க்கரை இருக்கு.."
"சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிட நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல, நீயே சாப்பிட்டுக் கொள் உன் உப்புமாவை" விருட்டென்று திவாகர் எழுந்து செல்ல, ஜனனிக்கு அழுகை வந்தது. இதற்கு முன் சில சமயங்களில் வெறும் ஊறுகாயோடு உப்புமாவை சாப்பிட்டிருக்கிறான். இன்று என்ன வந்தது? இப்போதெல்லாம் அவனுக்கு அதிகம் கோபம் வருகிறது. என் மேலும் தப்பு. அன்னிக்கு இப்படித்தான், தோய்த்த துணிகள் சோஃபாவில் குப்பலாக இருப்பதைப் பார்த்து, துணியை மடித்து வைக்கவில்லையா? என்று சாதாரணமாகத்தான் கேட்டான், ஆனால் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது, "தெரியறது தானே? நீ மடிச்சு வெச்சா என்ன?" என்று அவள் பதிலுக்கு கேட்க, அவன் ஏதோ சொல்ல, வாய்ச்சண்டை வலுத்தது. ஏன் இப்படி ஆனது? என்று யோசித்தவள் கண்களில் பட்டது அந்த ஆணும் பெண்ணும் சண்டை போடும் படம். இதைப் பார்த்து பார்த்து அதன் பாதிப்பில் நமக்குள்ளும் சண்டை வருகிறதோ? ஜனனி அந்தப் படத்தை ஜாக்கிரதையாக பிய்த்து எடுத்தாள். அந்த இடத்தில் காதல் புறாக்கள் படம் ஒன்றை ஒட்டினாள். இனி அவர்களுக்குகள் பிணக்குகள் வராது .
ஹா... ஹா... ஹா... காலை எழுந்ததும் கண்ணில் படும் படத்தில் இருக்குது சூட்சுமம்!
ReplyDeleteதிவாக்கும், ஜனனிக்கும் இது மாதிரி சண்டை நாம் போட்டுக்கொள்ளக் கூடாது என்று ஏன் அந்தப் படத்தைப் பார்த்துத் தோன்றவில்லை?
ReplyDeleteஅதுதானே ஏன் தோன்றவில்லை?ஹாஹா? நன்றி ஶ்ரீராம்.
Deleteநல்ல கதை.. ஆனாலும் இது கதை மட்டுமல்ல.. உண்மையும் கூட..
ReplyDeleteசம்பந்தமில்லாத ஆண் பெண் படங்களை வீட்டுக்குள் ஒட்டி வைத்து அதனால் அமைதி இழந்த நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்.
30/40 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்படியான கலாச்சாரம் கிடையாது...
புறாக்களின் படம் கூட வீட்டுக்குள் ஒட்டுவதற்கு உகந்ததல்ல...
ஓ அப்படியா? புறாக்களின் படம் வீட்டில் ஒட்டக் கூடாதா? தகவலுக்கும், வருகைக்கும் நன்றி.
Deleteமத்யமரிலும் படிச்சேன். நல்ல கருத்துத்தான். பொதுவாக எங்க வீடுகளில் ஸ்வாமி படங்கள் தவிர்த்த ஒரு சில இயற்கைக்காட்சிகள் எப்போதேனும் இடம் பெறலாம். மற்ற படங்களை மாட்டுவதில்லை. காலண்டர்களில் இப்படியான படங்கள் வந்தால் அந்தக் காலண்டரையே தூக்கிப் போட்டுடுவோம். படுக்கை அறைகளில் கட்டாயமாய் ஸ்வாமி படங்கள் தான், காலை எழுந்ததும் பார்க்க வசதியாய்.
ReplyDeleteஆமாம் கீதாக்கா கிட்டத்தட்ட இதே தான் எனதும்
Deleteகீதா
கடவுளின் படங்கள் கூட செளமியமாக இருக்கும் படங்கள்தான் வைக்க வேண்டும் என்பார்கள்.
Deleteவலப்பக்கம் அடிக்கும் தம்பட்டத்தை இன்னிக்குத் தான் பார்க்கிறேனோ? முன்னால் இருந்ததாய் நினைவில் இல்லை. நல்ல அழகான படம்.
ReplyDeleteஅட, இன்றுதான் என் கண்ணிலும் அது பட்டது. நான்தான் இத்தனை நாட்களாய் கவனிக்கவில்லை என்று நினைத்தேன்!!
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by the author.
Deleteவலப்பக்கம் அடிக்கும் தம்பட்டம் படம் சேர்த்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. ஆனால் அது எங்கெயோ இடித்துப்பிடித்து நிற்கிறது.
Deleteஇண்டி ப்ளாகர் கொடுக்கும் மதிப்பெண்ணை நீக்கினேன். அந்த இடத்தில் வைக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.
கவனித்து பாராட்டிய கீதா அக்கா, கீதா ரங்கன், ஶ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.
@கீதா ரங்கன்: என்னுடைய பதிலை நீக்குவதற்கு பதிலாக, உங்களுடைய பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். மன்னித்துக் கொள்ளவும்.
Deleteநல்லதொரு கதை. மனதுக்கு இதமான காட்சிகளாக இருந்தால் பரவாயில்லை! இப்படி சண்டை போடும் படம் வீட்டில் எதற்கு?
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteகதை அருமையான கதை. உண்மையில் நடப்பதும் கூடத்தான். நல்ல படங்கள் மாட்டலாம்.
ReplyDeleteதுளசிதரன்
நன்றி துளசிதரன்.
Deleteபானுக்கா படம் பார்த்ததும் ஜனனிக்கு முதலில் ஏன் இந்தப் படம் என்று கொஞ்சம் வாக்கு வாதம் செய்யத் தொடங்கிய போதே ஒரு வேளை இப்படத்தைப் பார்த்து அவர்கள் நோ வாக்குவாதம் என்று நினைத்திருப்பார்களோ என்று நினைத்தேன்.
ReplyDeleteஇப்படியான படங்கள் எதிர்மறைச் சக்தியை வளர்க்குமோ? அதனால்தான் வீட்டில் காலையில் எழுந்ததும் பார்க்கும் படமாகத் தெய்வப் படங்கள், அல்லது இயற்கைக் காட்சிகளுடன் ஆன நல்ல வாசகம் அடங்கியப் படங்கள் என்று இருக்கலாம் என்றும் தோன்றும். முன்பெல்லாம் தெய்வப்படனள்தானே வீட்டில் எல்லா இடங்களிலும் இருக்கும். காலண்டன் வாங்கினால் கூட தெய்வப்படம் அதுவும் தங்களுக்கு இஷ்ட தெய்வம் இருப்பதான காலண்டர்களைத்தான் வாங்குவாங்க. அல்லது நம் அம்மா அப்பா படங்கள் என்று இருக்கும். நம் மனமும் காரணம். எதிர்மறையைப் பார்த்து நாம் பாசிட்டிவ் எண்ணங்களை விதைத்துக் கொள்ளலாம் தான்.
கதை அருமை பானுக்கா. ரசித்தேன்.
கீதா
காலண்டர் என்று வந்திருக்க வேண்டும். காலண்டன் என்று வந்துவிட்டது.
Deleteகீதா
நான் மஸ்கட்டில் இருந்தபொழுது என் அண்ணா, "வாழ்க வளமுடன்" என்னும் வாசக ஸ்டிக்கரை வாசல் கதவின் உள்புறத்தில் ஒட்டி வைத்தார். வீட்டிற்கு வருபவர்கள் விடை பெற்றுச் செல்லும் பொழுது அதை படிப்பார்கள். அதுவே ஒரு வாழ்த்து போல இருக்கும்.
Deleteஹை ட்ரம் அடிக்குது!! பொருத்தம். இப்பத்தான் சேர்த்தீங்களோ பானுக்கா? இப்ப கமென்ட் போக சுத்தி சுத்தி மெதுவாஸ்க்ரோல் ஆகி வரப்ப பார்த்தேன். என்னடா ட்ரம் அப்புறம்தான் உங்கள் வலைக்கான பொருள் ஹா ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
நன்றி.
Deleteபடத்தைப் பார்த்து கதைசொல் நன்றாகத்தான் பொருந்துகிறது.
ReplyDeleteநன்றி ஜி.
Deleteஎனக்கு என்னவோ படத்தில் இருப்பவர்கள் சண்டை போடுவது போல தோன்றவில்லை. பெரிய ஜோக் ஒன்றைச் சொல்லி வாய் கொள்ளாமல் சிரிப்பது போல தோன்றுகிறது!
ReplyDeleteபேசினாலே பக்கத்திலே நிக்க முடியாலே, எங்கே நல்லா கத்துங்க பார்ப்போம்...
Deleteஆஆஆ... ஆஆஆ...
ஐயோஓஓஓஓ... மூணு சொத்தை பல் இருக்குஊஊஊ...
@ஶ்ரீராம்:போஸ்தான், ஆண் பரவாயில்லை, பெண்ணிற்கு சிரிப்பு வந்து விட்டது போல..:)))
Delete@டி.டி.: :)))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடத்திற்கேற்ற கதை அருமை. எல்லாவற்றிக்கும் மனசுதான் காரணம். படத்தை வாங்கி வரும் போதே திவாகர் "இந்த மாதிரி உன்னுடன் இதுவரை சண்டையிட்டதேயில்லை" எனச் சொல்லும் போதே அதன் தாக்கம் அவன் மனதில் சென்றமர்ந்து விட்டதென நினைக்கிறேன். நல்லவிதமாக புரிந்து அந்தப்படத்தை அகற்றிய ஜனனியின் செயல் பாராட்டுக்குரியது. சிறப்பாக ஒரு சிறுகதையை தந்தமைக்கு நன்றிகள்.
நண்பர்கள் சொன்னவுடன் நானும் சென்று அந்தப் படத்தைப் பார்த்தேன். அழகாக இடைவிடாது தன் செயலை தம்பட்டமாக்கிக் கொண்டிருக்கும் தம்பட்டம் படம் அழகுக்கு அழகு சேர்க்கிறது. வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான பாராட்டிற்கு நன்றி.
Deleteதம்படட்ம் இப்போதுதான் பார்த்தீர்களா? நன்றி.
எந்தளவு ஊடல் (சிறு சிறு சண்டை) நடக்கிறதோ, அந்தளவு மகிழ்ச்சி மட்டுமல்ல புரிதலும் மேம்படும்...
ReplyDeleteமற்றபடி இந்த பட நம்பிக்கை எல்லாம், 1.1.2020 அன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் : "இந்த ஆண்டு அமோகமாக இருக்கும்..." என்பதைப் போல...!
ஊடல் உப்பு போல என்று நம் தாத்தா சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
Deleteமற்றபடி அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
படத்திற்கு கதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி கோமதி அக்கா.
Delete