கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 18, 2021

கலை, கைவினை கண்காட்சி - 2

 கலை, கைவினை கண்காட்சி - 2 







இந்த மாடர்ன் ஓவியம் என்ன உணர்த்துகிறது என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள். 




இந்த 3டி ஓவியம் மிகவும் பிடித்தது. பெண்ணின் தோளில் இருக்கும் பென்சில், அதில் கட்டியிருக்கும் நூல் எல்லாமே மிகவும் தத்ரூபமாக இருந்தன. ஏன் மரச்சட்டம் போல் தெரிகிறதே அது கூட ஓவியம்தான்.



எனக்கு இந்த ஓவியம் மிகவும் பிடித்தது. 


பொம்மலாட்டத்திற்கான ராமன், ராவணன், சீதை ஓவியங்கள்.






 

15 comments:

  1. மாடர்ன்  ஓவியங்கள் அவரவர் கண்களுக்கு, மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான்!

    இது போன்ற ஓவியங்களை நேரில்  இன்னும் அழகாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மாடர்ன் ஆர்ட் என்பது கர்னாடக இசை போல, எல்லோராலும் ரசிக்க முடியாது அதைப் பற்றிய ஞானம் வேண்டும், அல்லது பொறுமையாக கவனித்தால் ஏதாவது புரியலாம். கருத்துக்கு நன்றி. 

      Delete
  2. Replies
    1. புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது தெரியாததால் எடுத்த படங்கள் இவை. இன்னும் சிறப்பான படங்கள் இருந்தன. ஓவியர்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும். 

      Delete
  3. ஓவியங்கள் அனைத்துமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்குரியவர்கள் ஓவியர்கள்தானே..? 

      Delete
  4. ஜல்லிக்கட்டுக்காளைகள் ஓவியம்? அதுவும் சரி! அடுத்தது சேவல் சண்டை? அதுவும் நிறங்கள் தேர்ந்தெடுத்திருப்பது அழகு. பெண்ணின் ஓவியம் சொல்லவருவது என்ன? ஆணுக்குள் பெண் அடக்கமா? பெண்ணுக்குள் ஆண் அடக்கமா?

    ReplyDelete
    Replies
    1. நீங்க பதிலே சொல்லலை. ஆனாலும் பரவாயில்லை. கர்நாடக இசையை மாடர்ன் ஆர்ட்டுடன் ஒப்பிட்டது எனக்கு என்னமோ சரியில்லாதது போல் இருக்கு! ஃ1ப்யூஷன் இசையை வேண்டுமானால் மாடர்ன் ஆர்ட்டுடன் ஒப்பிடலாம்.

      Delete
  5. நவீன ஓவியங்கள் ஒவ்வொன்றும் அழகு தான்...

    பெண்ணுக்குள் ஆணும் ஆணுக்குள் பெண்ணும் - குறிப்பால் உணர்த்தும் ஓவியம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஓவியங்களை ரசிப்பதும் தனி மகிழ்ச்சி. நன்றி. 

      Delete
  6. ஓவியங்கள் அழகு.

    மாடர்ன் ஆர்ட்? - சின்னப் பையன் பத்திரிகையில் இரண்டு பேப்பரைக் கிழித்து பிறகு அதனை அடுக்கின மாதிரி இருக்கு.

    தேர்தல் நேரத்தில் நன்றாகவே விளம்பரம் செய்கிறீர்கள்..ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. உற்றுப் பாருங்கள் அதிலேதோ ஒளிந்திருக்கிறது. //தேர்தல் நேரத்தில் நன்றாகவே விளம்பரம் செய்கிறீர்கள்..ஹாஹா// ??? 

      Delete
  7. இந்தப் பதிவு போணியே ஆகாது என்று நினைத்தேன். வந்து கருத்துறையிட்ட எல்லோருக்கும் நன்றி. 

    ReplyDelete
  8. சில ஓவியங்கள் அர்த்தம் புரிவதில்லை ஆனால் அவைகள் பல லட்சங்கள் ஏலம் போகும். இதற்கென ஓர் ரசிகர் வட்டம் இருக்கிறார்கள்.

    ReplyDelete