கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 29, 2021

திரை விமர்சனங்கள்

திரை விமர்சனங்கள் 

சில்லு கருப்பட்டி: 


தொலைகாட்சியில்தான் பார்த்தேன் சில்லு கருப்பட்டி என்னும் ஆந்தாலஜி படத்தை. ஹலிதா ஷமீம் என்னும் இளம் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் படம். நான்கு விதமான காதல்களை பேசுகிறது. முதல் கதையில்(Pink bag) குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கு தினமும் பிங்க் நிற பையில் குப்பைகளை போடும் ஒரு பெண் மீது ஏற்படும் லயிப்பு. சாரா அர்ஜுனும்(சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெண்) ராகுலும் நடித்திருக்கும் படம். இதில் வசனங்கள் மிகவும் குறைவு. பின்னணி இசை அற்புதம்!  அடுத்த கதை காக்கா கடியில் மீம்ஸ் கிரியேட்டரான, கான்சரில் பாதிக்கப்பட்ட  ஒரு ஐ.டி. இளைஞனுக்கும், அவனோடு காரில் பயணிக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை  சொல்கிறது  மணிகண்டனும், நிவேதிதா சதீஷும் நடித்திருக்கிறார்கள். டர்டில் என்னும் இந்தப் படம் முதியவர்களின் காதல் என்னும் கத்தியில் நடப்பது போன்ற விஷயத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஒரு முதிய பெண்மணிக்கும்(லீலா சாம்சன்), மனைவியை இழந்து, மகனோடு வாழ்ந்தாலும் தனிமையாக உணரும் ஒரு முதியவருக்கும்(க்ரவ் மேக ஸ்ரீராம்) இடையே அரும்பும் காதலை காட்டுகிறது. மிகவும் டெலிகேட்டான ஒரு  விஷயத்தை கண்ணியமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.  கடைசி கதை ஹே அம்மு. சமுத்திர கனியும், சுனைனாவும் நடித்திருக்கும் இந்தக் கதை திருமணமாகி, மூன்று குழந்தைகள் பெற்ற, குடும்ப வாழ்க்கையின் ரொடீனில் காதலித்த தொலைத்த அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த ஒரு கணவன், மனைவி இழந்த தங்கள் காதலை மீட்டெடுக்கும் கதை. மிக மிக இயல்பான இந்த படத்தை பார்க்கும் நடுத்தர வயதினர் பலர் தங்களை இதில் அடையாளம் காண முடியும்.  எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் சமுத்திர கனியும், சுனைனாவும் பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள். மிகச் சிறப்பான வெளிப்பாடு. சுனைனா இவ்வளவு நன்றாக நடிப்பாரா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சமுத்திரக்கனியின்  
இதற்கு முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய சில எக்ஸ்பிரஷன்ஸ் அபாரம்!காட்சி அமைப்புகளும், வசனங்களும் வெகு இயல்பு.  எல்லா படங்களுமே மிகவும் கண்ணியமாக, ரசிக்கும்படி எடுக்கப் பட்டிருக்கின்றன. நான்கு படங்களுக்கும் நான்கு ஒளிப்பதிவாளர்கள். இந்தப் படத்தின் மூலம் இரு விருதுகளை வென்றுள்ள ஹலிதா ஷமீம் நம்பிக்கையூட்டுகிறார். பெரிய நட்சத்திரங்கள் இவரை மசாலா உலகிற்கு இழுத்து வராமல் இருக்க வேண்டும்.  

மாறா:  

திரையரங்குகளுக்குச் செல்லாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ள படம். மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மௌலி,ஷிவ்தா முதிலியவர்கள் நடித்திருக்கும் படம். நமக்கெல்லாம் தெரிந்த ஸ்டாண்ட் அப்  காமெடியன்  அலெக்ஸ்  திருடனாக வந்து சிரிப்பூட்டுகிறார். மலையாளத்தில் வந்து விருதுகளை குவித்த சார்லி என்னும் படம்தான் ரீ மேக் ஆகியிருக்கிறது. அதனாலோ என்னவோ மலையாளம் படம் பார்க்கும் உணர்வு. அவர்களால்தான் ஒரு காதல் கதையை மிஸ்ட்ரி போல எடுக்க முடியும்.  இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா! மலை நாட்டின் அழகை சிறைப்பிடித்து நம் பார்வைக்கு விரித் திருக்கிறது. மலையாள படம் என்று சொல்லி விட்டதால் எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. மௌலியின் குறிப்பிடத்தக்க படங்களுள் இது ஒன்று. இசை ஜிப்ரான். புதுமுக இயக்குனர் திலிப் குமாருக்கு ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கலாம். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தை ரசிப்பதற்கு நமக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். 

19 comments:

  1. இரண்டு திரைப்படங்கள் குறித்த உங்கள் பார்வை நன்று. நான் பார்க்க முடியாது - தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். மாறா அமேசானில் பார்க்க முடியும்.

      Delete
  2. நல்ல விமரிசனம். முகநூலிலும் படித்தேன். பொதுவாகப் படங்கள் பார்ப்பதே குறைச்சல். முன்னெல்லாம் தூர்தர்ஷனில் ஞாயிறன்று பார்த்ததோடு சரி! சில்லுக்கருப்பட்டிப் பட விமரிசனம் பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் தேடிப் போய்ப் பார்ப்பதில்லை. இந்த மாறா! பட விமரிசனம் முகநூலில் பலரும் எழுதி இருந்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அக்கா. நான் இன்னும் படங்கள் பார்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

      Delete
    2. அம்பேரிக்கா போனால் பார்ப்பேன். இப்போத் தானே வந்திருக்கோம். மறுபடி இப்போ எங்கே போகப் போறோம். வழக்கமான விமான சேவைதான் இல்லையே! 3 விமானங்கள் மாறிப் போகணும். பயணச்சீட்டும் முன்னைவிட இப்போது 3 மடங்கு அதிக விலை.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. திரை விமர்சனங்களை அழகாக தந்துள்ளீர்கள். முதல் படம் உங்கள் விமர்சனத்தில் பார்க்கலாமென்று தோன்றுகிறது. (நெட்வொர்க் சேவை வந்த பின்.. இரண்டு நாட்களாக நம் பதிவுலக குடும்பத்தில் அனைவர் வீட்டிலும் சேவைகளை பார்த்து சேவை என்ற சொல் தானாக வந்து விட்டது. ஹா.ஹா.ஹா எனக்கும் சேவை சாப்பிடும் ஆசையும் வருகிறது.. :))

    இரண்டாவது படம் இப்போது எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்தார்கள். வழக்கப்படி நான் சிறிது அவ்வப்போது எட்டிப் பார்த்ததோடு சரி.. முழுவதுமாக பார்க்கவில்லை. தங்கள் விமர்சனத்தை முன்பே படித்திருந்தால் பார்த்திருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. நமகெல்லாம் சேவை செய்யும், சாரி, சாப்பிடும் ஆசை வந்தால் செல்ஃப் சேவைதான்(ஸர்வீஸ் என்று சொல்ல வந்தேன்)! ஹாஹா!
      அவ்வப்பொழுது எட்டிப் பார்த்தால் மாறாவை ரசிக்க முடியாது. உட்கார்ந்து பொறுமையாக பார்க்க வேண்டும்.

      Delete
  4. பேஸ்புக்கிலும் படித்தேன்.  சில்லுக்கருப்பப்பட்டி பழசு இல்லையோ?  நான் இரண்டு படங்களுமே பார்க்கவில்லை.  மாறா பார்க்கத் தொடங்கினேன்.  பொறுமை இல்லாமல் நிறுத்தி விட்டேன்.  நேற்று மாஸ்டர் படம் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மாஸ்டர்? ஆஹா! பொறுமைதான் உங்களுக்கு. நான் ஒன்றிரண்டு விஜய் படங்கள் தான் மொத்தத்துக்கும் பார்த்திருக்கேன்.

      Delete
  5. 2019 டிசம்பரில் வந்த படம் உங்களுக்கு பழசா? நான் மன்மத லீலைக்கு 2017இல் விமர்சனம் எழுதியவள். ஹி ஹி. கர்ணனுக்கு எழுதலாம் என்று ஒரு எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த விமரிசன விஷயத்தில் நான் "சந்திரலேகா" படத்துக்கெல்லாம் விமரிசனம் எழுதி இருக்கேனாக்கும்! கர்ணன் என்ன கர்ணன்? இப்போத் தான் டிஜிடலைஸ் செய்து மறு வெளியீடும் வந்ததே! அப்போக் கூட எழுதி இருக்கேனே. மாயா பஜாரும்! :))))

      Delete
    2. எதையுமே எங்களுக்கு விட்டு வைக்க மாட்டீர்களா?

      Delete
    3. ஹாஹாஹா, நான் பதிவு எழுத ஆரம்பித்த காலத்திலேயே இப்படியான சினிமா விமரிசனங்களும் எழுதி இருக்கேனே! இப்போக் கூட அம்பேரிக்காவில் இருந்தப்போப் போன வருஷம் பார்த்த திரைப்படங்களின் விமரிசனங்கள் எழுதி இருந்தேன். நெல்லைக்குக் கோபமான கோபம்! :))))

      Delete
  6. பாசமலர், படிக்காத மேதை என விமர்சனங்கள் வருமா...?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா!சிவகவி, நந்தனாரையெல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்!

      Delete
    2. எழுதுங்க பானுமதி! நான் இன்னும் பாசமலர் பார்க்கலை, பார்த்தால் பசி தீரும், பாகப்பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா(தூர்தர்ஷனில் பார்த்தேனோ?) ஆலய விளக்கு, ஆண்டவன் கட்டளை இதெல்லாம் பார்த்ததே இல்லை. வியட்நாம் வீடும்! எல்லாத்துக்கும் நீங்க விமரிசனம் எழுதலைன்னா நான் பார்த்துட்டு எழுதறாப்போல ஆயிடும். :))))

      Delete
  7. இப்படியும் ஓர் படமா ? விமர்சன விவரிப்பு அருமை.

    ReplyDelete
  8. சில்லுக்கருப்பட்டி நல்ல படம்க்கா .நானும் பாத்துட்டேன் .அந்த காகத்தை நட்பாகின சீன்லாம் சூப்பர் .சமுத்திரக்கனி மனைவியை சூப்பர்மார்கெட்டில் ஒளிஞ்சி ரசிப்பது மாதிரி படம் முழுதும் நிறைய அழகு காட்சிகள் .மாறா நானும் பார்த்துட்டேன் .சார்லி ஒரு வகை அது மேஜிக்கல் இது அதிலிருந்து அடாப்ட் செய்யப்பட்ட ஒரு அழகிய அனுபவம்   அதையும் இதையும் கம்பேர் செய்ய கூடாது ஆனால் அதைத்தான் பெரும்பாலான விமர்சகர்கள் செய்தாங்க .

    ReplyDelete