கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 2, 2021

வாழ்க்கையும் கிரிக்கெட்டும்

 வாழ்க்கையும் கிரிக்கெட்டும் 


ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு  வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்தில் நான் கேட்ட யூ டியூப் ஒன்றில் சுகி சிவம் அவர்களும் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு பேசியிருந்தது சிறப்பாக இருந்தது. 


முதலில் ஒருவன் பேட்டை எடுத்துக் கொண்டு வருகிறான், அவனை அவுட் ஆக்க இன்னொருவன் பந்தை எடுத்துக் கொண்டு வருகிறான், இது ஒத்தைக்கு ஒத்தை சரி,  அவனை ஒழித்துக் கட்ட சுற்றி ஒரு பதினோரு பேர்கள்  நிற்கிறார்களே..? நாம் வெற்றி அடையக் கூடாது என்று பலபேர் முயற்சி செய்வார்கள். 

நம்மோடு சேர்ந்து ஆட வந்திருக்கும்  இன்னொரு பேட்ஸ்மேன் நம்மை அழைக்கிறானே என்று ஓடத் துவங்குவோம், அவன் ஓடி வராமல் திரும்ப போய் தன்னிடத்தை  ஸ்திரப்படுத்திக்  கொண்டு விடுவான், நாம் அவுட் ஆகி விடுவோம். நம் எதிரிகளால்தான் நமக்கு தோல்வி என்று கூறி விட முடியாது, சில சமயங்களில் நம்மைச் சேர்ந்தவனே நம்மை கவிழ்த்து விடுவான்  என்பதற்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். 

இந்த பதினோரு பேர் வந்தது இருக்கட்டும், ஒரு பத்தாயிரம் பேர்கள் வந்திருக்கிறார்களே? அவர்கள் நான்கு ரன்கள் அடித்தாலும் ஆரவாரம் செய்கிறார்கள், அவுட் ஆனாலும் ஆரவாரம் செய்கிறார்கள். 'வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும்..'  என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு. அதற்கு உதாரணம் இதுதான். நாம் என்ன செய்தாலும் கருத்து சொல்ல காத்திருப்பார்கள்.  ஆனால் அந்த பத்தாயிரம் பேர்களும் சேர்ந்து அவுட் என்று கத்தினாலும், அம்பயர் என்ற ஒற்றை ஆள் நாட் அவுட் என்று சைகை காட்டி விட்டால் அந்த பத்தாயிரம் பேர்களின் கூச்சலும் அடங்கி விடும். அசத்தியத்தின் குரல் எத்தனை வலிவுடையதாக  இருந்தாலும்,சத்தியத்தின் மெல்லிய குரல் அதை அடக்கி விடும் என்னும் அருமையான தத்துவம் இங்கே நிலை கொள்கிறது. 

18 comments:

  1. ஒப்பீடு அழகாக இருக்கிறது. நேற்று வந்த கிரிக்கெட்டை புகுத்தி எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையோடு எதை வேண்டுமானாலும் ஒப்பிடலாம். வருகைக்கு நன்றி.

      Delete
  2. நல்ல சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.  ஒவ்வொன்றுக்கும் உதாரணம் உவமை சூப்பர்.

    ReplyDelete
  3. பந்தை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்தபிறகு பத்து பேர்தான் சுற்றி நிற்பார்கள்! 

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் பன்னிரண்டு பேர்கள் இல்லையா? என் கிரிக்கெட் அறிவு இவ்வளவுதான்.

      Delete
  4. அடிபடும் அந்த பந்துக்கு உவமை இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நம்முடைய கர்மா.

      Delete
  5. அருமையான அலசல். நன்றாகச் சொல்லி இருக்கிறார். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அறத்துடன் இருந்தால், அந்த ஒற்றை ஆளை :-

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு...!

    ReplyDelete
  7. இப்பொழுதெல்லாம் அம்பயர்களே தங்கள் தீர்ப்பை நம்பாமல் தர்ட் அம்பயரைத்தானேநம்புகிறார்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல உவமானத்துடன் மனித வாழ்க்கையுடன் கிரிக்கெட் விளையாட்டையும் பொருத்தி அருமையாக சொல்லியுள்ளார். ஒவ்வொரு உவமானத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. உவமானம் ரொம்பவும் வித்தியாசமானது. அதை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு இருப்பதும் மிகவும் வித்தியாசமானது. எந்தப்பக்கமாயிருந்தாலும் சரி, அந்தப்பக்கத்தின் பதினோரு பேரும் ஒற்றுமையாக, ஒருத்தருக்கொருத்தர் கை கொடுத்தால் மட்டுமே அவர்கள் ஜெயிக்க முடியும்.
    இப்போதெல்லாம் அம்பயரும் சில சமயங்களில் தவறு செய்கிறாரே! அதனால் தான் மூன்றாவது அம்பயரும் வந்திருக்கிறார்.
    பொறுமை, புத்திசாலித்தனம், உடல் வலிமை, ஒற்றுமை என்று இதெல்லாமே வாழ்க்கைக்கும் பொருந்துவதைத்தான் அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுவார‌ஸ்யமான் பதிவு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி. எல்லா புகழும் சுகி சிவம் அவர்களுக்கே.

      Delete