கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, January 20, 2024

பெஸ்டோ பாஸ்தா(Pesto Pastha)

பெஸ்டோ  பாஸ்தா(Pesto Pastha)


தேவையான பொருள்கள்:



பாஸ்தா    -  400 கிராம் 

பாலக் கீரை  - 1/2 கட்டு 

கொத்துமல்லி  - 1/4 கட்டு 

பூண்டு  - 7 பல் 

பாதாம்  - 8

முந்திரி பருப்பு - 7

ஆலிவ் ஆயில்  - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு  - 2 டீ ஸ்பூன் 

கரம் மசாலா தூள்  - 1 டீ ஸ்பூன் 

சர்க்கரை  - ஒரு சிட்டிகை 

செய்முறை:

ஒரு அகலமான வாணலியில் தண்ணீர் வைத்து, அதில் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீர் கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு வேகவைக்கவும்.

பாஸ்தா வெந்ததும், அதை வடிய வைத்து, குளிர்ந்த நீரில் அலம்பி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசிறி வைக்கவும். 


சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரை,  கொத்துமல்லி, பூண்டு, பாதாம், முந்திரி இவைகளோடு ஆலிவ் எண்ணையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளவும். 

பாஸ்தா வேகவைத்த வாணலியிலேயே கொஞ்சம் எண்ணெய்  விட்டு, *சீரகம் சேர்த்து வெடித்ததும், பாஸ்தாவை போட்டு, அதோடு அரைத்து வைத்த கீரை, பூண்டு, பருப்புகள் விழுதையும் சேர்த்து கிளறிவிடவும். அந்த கலவையில் கரம் மசாலா மற்றும் சர்க்கரை ஒரு சிட்டிகையும் சேர்த்து நன்கு கலந்து இரண்டு  அல்லது மூன்று நிமிடங்கள் சின்ன தீயில் வைத்திருந்து இறக்கி விடலாம். 

ஜெயா டி.வி.யில் பார்த்ததை நேற்று முதல் முறையாக செய்தேன். என் மகனுக்கும், மருமகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது. Quality of pudding is in eating என்பது நிரூபிக்கப்பட்டது. செய்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். டொமேட்டோ கெச்சப்புடன் நன்றாக இருந்தது. 

பெஸ்டோ பாஸ்தா -   பெஸ்டோ என்றால் கீரை, ஆலிவ் ஆயில், மற்றும் பருப்புகள் சேர்த்து செய்யும் சாஸ். இதில் வறுத்த வால்நட் கூட சேர்க்கலாம். அப்போது முந்திரியின் அளவை குறைக்க வேண்டும். பாதம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. 

* அவர்கள் செய்து காட்டியதில் கரம் மசாலா, சர்க்கரை போன்றவை சேர்க்கவில்லை. சப்பென்று இருக்கப் போகிறதே என்று நான் சேர்த்தேன். அதே போல சீரகம் தாளித்ததும் என் விருப்பம். 





     




 

10 comments:

  1. பொதுவாக பாஸ்தா பிடிப்பதில்லை. நீங்கள் சொல்லி இருக்கும் குறிப்பு நன்று. பாஸ்தா பிடிக்காது என்பதால் நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்க்கத் தோன்றவில்லை. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தாலும், பாராட்டிய பெருந்தன்மைக்கு நன்றி.

      Delete
  2. சுவைதான் என்று தெரிகிறது. பாஸ்தா ரசிகர்களுக்கு விருந்து.

    ReplyDelete
  3. பெஸ்டோ பாஸ்டா படம் இல்லையா? செய்முறை நன்றாக உள்ளது.

    பாலக் பணீர் இல் பனீருக்கு பதில் பாஸ்தா வேக வைத்து சேர்த்து விட்டீர்கள். கரம் மசாலாவுக்கு பதில் பச்சைமிளகாய் 2 சேர்த்து அரைத்திருக்கலாம். அதே போல் சீரகத்திற்கு பதில் கசூரி மேதி அல்லது வெந்தயம் சேர்த்திருக்கலாம். ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு இறக்குவதற்கு முன் பிழியலாம். இப்படி இந்த லாம் எல்லாம் சேர்த்து ஒரு முறை செய்து பாருங்களேன்.
    Jayakumar

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    தங்களது சமையல் பதிவு அருமை. பாஸ்தா இது போல செய்ததேயில்லை. வெறும் மசாலா சேர்த்து உப்புமா, நூடுல்ஸ் பாணியில் செய்திருக்கிறேன். உங்கள் குறிப்புகளை நோட் செய்து கொண்டேன். இனி இப்படி ஒரு முறை செய்து பார்க்கிறேன்.

    சென்ற பதிவுக்கு நான் தந்த கருத்து வரவில்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்து விட்டு கூறுங்கள். நன்றி

      Delete
  5. ஒரு விஷயம் தெரியுமா? இதை நான் எங்கள் ப்ளாக் திங்கற கிழமையிலும் பகிர்ந்திருந்தேன்.

    ReplyDelete
  6. அக்கா எங்கள் பிளாக் திங்க ல பார்த்தது நினைவு இருக்கு நன்றாகவே இருக்கு.

    கீதா

    ReplyDelete