சென்னை டயரி
நீ...ண்...ட நாட்களுக்குப் பிறகு மெரீனா பீச் விஜயம். பேத்திக்கு பீச் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.
நான் மாலை நேரத்தில் கடற்கரைக்கு செல்வதைவிட, காலை நேரத்தில் செல்லவே விரும்புவேன். மாலை நேரத்தில் கும்பல், பஜ்ஜி கடைகளின் எண்ணெய் வாசம் இல்லாத கடற்கரையை அப்போதுதான் ரசிக்க முடியும்.
![]() |
எனக்கு புகைப்படத்திற்கு சிரிக்கவே வராது |
நாங்கள் பீச்சுக்கு கிளம்பிய பொழுது காலை 5:45. சூரிய உதயம் பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு என் அக்காவின் மாப்பிள்ளை,"போகும் வழியில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்" என்றார். :))
பீச்சில் ஏகப்பட்ட வண்டிகள், பார்க்கிங் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஏகப்பட்ட காக்கைகள் "பெங்களூரில் புறாக்கள்தான்" என்று நான் சொன்னதும், "சென்னையில் மட்டும் என்னவாம்?" என்றார்கள்.
காக்கை கூட்டத்தை தாண்டியதும், கூட்டமாக சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தனித் தனியாக ஒவ்வொரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்கள். புக் க்ளப்பாம். இப்படிப்பட்ட புக் கிளப்புகள் பெங்களூரிலும் உண்டு லால் பாக், கப்பன் பாக்கில் இப்படி படிப்பார்கள் என்றான் என் மகன்.
கடலுக்குச் சென்றோம். சற்று முன்பு உதயமாகியிருந்த சூரியன், பெரிய சைஸ் ஆரஞ்சு பழம் போன்றிருந்தது, அதன் கிரணங்கள் பட்ட நீர் தங்கப் பாளமாய் ஜொலித்தது.
கடலில் கால் நனைத்த பிறகு மணலில் வீடு கட்டினோம். அக்காவின் பேத்தியும், என் பேத்தியும் குதிரை சவாரி போனார்கள். பிறகு ஹோட்டலுக்கு திரும்பி, இருந்த பசியில் காம்ப்ளி மெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டை ஒரு கட்டு கட்டினோம்.
தை பூசத்திற்கு அடுத்த நாள் மாலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். அன்றைக்குத்தான் அங்கு தெப்பம் என்பது தெரிந்தது. தெப்பம் புறப்பட அதிக நேரம் ஆகும் என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.
காலையில் அக்கா பேரனின் பூணூல், அதே நாள் தோழியின் மகனுக்குத் திருமணம். மாலையில் திருமண ரிசப்ஷனுக்குச் சென்றோம். ஆனால் அங்கு நான் ஒரு சமோசா சாப்பிட்டேன், என் அக்கா அதுவும் சாப்பிடவில்லை.
ரிசப்ஷனில் DJ, முதலில் மெலடிகளை இசைக்க விட்டார்கள். கேட்க சுகமாக இருந்தது. அப்புறம் போட்டார்கள் பாருங்கள் 'டங்கர டங்கர' என்று இரைச்சல் பாடல்கள். காதை பொத்திக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டோம். இதய நோயாளிகள் யாராவது இருந்திருந்தால் அபாயம்தான்.
நடுவில் ஒரு நாள் பாண்டி பஜார் சென்றேன். அங்கு நாயுடு ஹாலில் தரை தளத்தில் வெயிட்டிங் ஏரியாவில் கேரம் போர்ட், செஸ் போன்றவை வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் நேரத்தில் விளையாடலாம் போல. Good idea! கீழே வரைந்திருப்பது ஏரோபிளேன் பாண்டியா? அதற்கு சில்லாங்காய் தருவார்களா?
நாயுடு ஹால் ஐடியாஸ் நல்லாருக்கே! சில்லாங்காய் தந்தா அங்க இடமே இருக்காதே!!
ReplyDeleteபீச் ஃபோடோஸ் சூரியனின் வரவில் கடல் தகதக! படங்கள் நன்றாக இருக்கின்றன. கோயில் படங்களும்.
கல்யாணங்களில் இப்போ எல்லாம் டம் டம் பாட்டு..... நல்லதே இல்லை காதிற்கும் ஹை டெசிபல் நல்லதில்லை இதயத்திற்கும். எதுக்காக இப்படி எல்லோருடைய ஆரோக்கியத்தையும் கெடுக்கும் விதத்தில் ஏற்பாடு செய்கிறார்களோ? உணவு ஒரு பக்கம், இப்படியான இசை ஒரு பக்கம்....
சென்னை டயரி நினைவுகள்!
கீதா
நன்றி கீதா! திருமணங்களில் முன்பு லைட் மியூசிக், இப்போது டி.ஜே. அலறல் பற்றி சுஜாதா உட்பட பலர் எழுதி விட்டார்கள். நோ யூஸ்.
Deleteகட்டுரை ரிப்போர்ட் போல் இருக்கிறது. படங்கள் நன்றாக உள்ளன. விவரங்கள் கொஞ்சம் கூடுதல் சேர்த்திருக்கலாம். சூரியன் படம் good. வியாழன் அன்று நியூஸ் ரூமில் பெயரைப் பார்க்கவேயில்லையே!
ReplyDeleteJayakumar
//கட்டுரை ரிப்போர்ட் போல் இருக்கிறது.//ரிப்போர்ட் போலத்தான் எழுத நினைத்தேன், சீக்கிரம் எழுதி முடித்து விடலாமே?
Delete//சூரியன் படம் good.// நன்றி. குட்டியாக தெரியும் படகு தெளிவாக தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சூரியனின் ஆரஞ்சு நிறம் வராதது குறைதான்.
/
பயணத்தில் இருப்பதால் நியூஸ் ரூமிற்கு பங்களிப்பு அளிக்க முடியவில்லை.
Deleteபடங்கள் அழகு. கோவில் படம், சூரியன் படம் குறிப்பாக ரொம்ப அழகு.
ReplyDeleteநன்றி. குட்டியாக தெரியும் படகு தெளிவாக தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சூரியனின் ஆரஞ்சு நிறம் வராதது குறைதான்.
Deleteஹோட்டலில் தங்கி இருந்தீர்களா? ஏன்? உங்களுக்குதான் உறவினர் இல்லங்கள் உண்டே.... காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் என்று பார்த்ததும் தெரியாதது. என்னென்ன கொடுத்தார்கள் என்கிற ரிப்போர்ட் இல்லையே...!
ReplyDeleteநான் அக்கா வீட்டில்தான் தங்கினேன். எல்லோரும் தங்க முடியாது என்பதற்காக மகனின் குடும்பம் மற்றும் சில உறவினர்களுக்கு ரூம் போட்டு கொடுத்திருந்தார்கள். நாங்கள் நேரே அங்கு போய் விட்டதால் நான் breakfast சாப்பிட தடை விதிக்கவில்லை. இப்போதெல்லாம் பெரும்பான்மையான ஹோட்டல்களில் complimentary breakfast தருகிறார்களே? ஜூஸ்,பிரெட்,பட்டர்,ஜாம், இட்லி, உப்புமா, பொங்கல், பூரி மசால், தோசை, காபி, டீ என்று இருக்கும். பழங்கள், ஒரு இனிப்பும் இருக்கும். சில இடங்களில் கார்ன் பிளேக்ஸ், முட்டை போன்றவையும் வைத்திருப்பார்கள்.நான் ஜூஸ்,பிரெட்,பட்டர், பொங்கல்,வடை, காபி சாப்பிட்டேன்.
Deleteஒரேநாளில் இத்தனை விசேஷங்களா.. பொதுவாக திருமணங்களில் ரிசப்ஷன் சாப்பாடுதான் வித்தியாசமாக, வெரைட்டியாக இருக்கும். அதைச் சுவைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம்தான்!
ReplyDeleteதுரதிர்ஷ்டமெல்லாம் இல்லை, ரெண்டு நாட்களாக ஹெவியாக சாப்பிட்டுக் கொண்டே இருந்ததால் ஒரு வேளை லங்கணம் போட வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. சென்னை டயரி சின்னதான குட்டி டயரி..! ரசித்தேன். தாங்கள் சென்றவிடங்களை விமர்சித்த முறை சிறப்பு. மெரினா கடற்கரை காலை, மாலை என எப்போதுமே அழகுதான். ஆனால், மாலையில் நீங்கள் சொல்வது போல் கூட்டம் அதிகமாக இருக்கும். காலை கடற்கரை காட்சிகள் "காலை எழுந்தவுடன் படிப்பு" என்ற பாரதியின் பாடலை நினைவூட்டுகிறது.
காலை சூரியனின் படங்கள் மிக அழகாக இருக்கிறது. கபாலி கோவில் நாங்கள் அங்கிருந்த (மயிலாப்பூர்) பதினைந்து வருடங்களை நினைவுபடுத்தி சந்தோஷமடைய வைத்தது. அந்த கோபுர தரிசனத்தில் எத்தனை பழைய நினைவுகளை மீட்டெடுத்தேன் தெரியுமா..? ஆறுமுகநயினார் சன்னதியும், தைப்பூச தெப்ப படமும் அருமையாக உள்ளது.
பாண்டி பஜார் நாய்டு ஹால் விளையாடுமிடங்களையும் பற்றியும் தெரிந்து கொண்டேன். நல்ல திட்டம். குழந்தைகளுக்கு போரடிக்காமல் இருக்கும். ஆனால், அவர்களுக்கு மொபைலை விடவா இதெல்லாம்...! என்பது ஒரு கேள்வி குறிதான். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா! எத்தனை விவரமாக ஒவ்வொன்றையும் விமர்சிக்கிறார்கள்! ரொம்ப சந்தோஷம்! நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு. இரசித்துப் படித்தேன். காலை நேரங்களில் கடற்கரை ! முன் காலங்களில் கட்டண(மில்லா)க் கழிப்பிடம் போல இருக்கும். எனக்குக் கூட்டமும் பஜ்ஜியும்தான் பிடிக்கும்!
ReplyDelete