சென்னை டயரி - 2
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கோரிக்கைக்காக பிராது கட்டிவிட்டு வந்தேன். அந்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கி, சுவாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வர வேண்டும் என்பது முறை. அதற்காக13.2.25 வியாழனன்று விருத்தாசலம் சென்றேன்.
என்னோடு என் பெரிய அக்காவின் பெண்ணும், கடைசி அக்காவும் வந்தார்கள். ஆறு மணிக்கு வீட்டை விட்டோம். வழியில் நல்ல மூடுபனி. சென்னை திருச்சி ஹைவேயில் Only Coffee உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். அங்கு பொங்கலும், வடையும் நன்றாக இருக்கும், of course Coffee too. சிற்றுண்டியைத் தவிர ஆர்கானிக் உணவுப் பொருட்கள், காட்டன் புடவைகள்,பெட் ஷீட்டுகள் போன்றவையும் விற்பனைக்கு இருக்கிறது. சாலையின் எதிர் புறத்தில் இதன் கிளை இருக்கிறது.
முதலில் விருத்தாசலம் பழமலைநாதர் (விருத்தகிரீஸ்வரர்) கோவிலுக்குச் சென்றோம். இங்குதான் சுந்தரர் பதிகம் பாடி பரவை நாச்சியாருக்காக பொன் பெற்று அதை இங்கிருக்கும் மணிமுத்தா நதியில் இட்டு, அதை திருவாரூரில் இருக்கும் குளத்தில் எடுத்துக் கொண்டார். அதை ஒட்டியே *'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' எனினும் பழமொழி வந்தது.
அங்கிருக்கும் ஆழத்து விநாயகர் சன்னதி தனி கோவில் போல தனியாக கொடிமரத்தோடு இருக்கிறது. விநாயகருக்கான ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. அவரைத் தொழுது விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகையையும் வணங்கி கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் சென்றோம்.
அங்கு நம் வேண்டுதல் நிறைவேறி விட்டால், பிராது வாபஸ் பெற வேண்டும். அதற்காக ரூ200/- கட்டினால் ஒரு form தருகிறார்கள். அதை கொளஞ்சி யப்பருக்கு முன்னால் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் அந்த சீட்டை முனீஸ்வரர் சன்னதிக்கு முன் இருக்கும் பிராது கட்ட வேண்டிய மரத்தின் அடியில் கிழித்து போட்டுவிடச் சொல்கிறார்கள். நான் சென்ற முறை சென்றபோது அங்கிருக்கும் சுதை சிற்பங்கள் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டுஜொலித்தன, இப்போது அந்த வண்ணங்கள் உதிர்ந்து விட்டன. அதைப்போல சென்ற முறை சென்றபோது கப்பும் கிளையுமாக செழிப்பாக இருந்த மரத்தின் கிளைகளை கழித்து விட்டிருக்கிறார்கள்.
அங்கிருந்து பாண்டிச்சேரியில் இருக்கும் அரபிந்தோ,அன்னை அஸ்ரமம் மற்றும் மணக்குள சென்று வணங்கி விட்டு வீடு திரும்பினோம். வழியில் Only Coffee ல் மசாலா பால் அருந்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம். வீடு வந்து சேரும் பொழுது இரவு 8:30.
*'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' என்னும் பழமொழிக்கான விளக்கம் குறித்த என்னுடைய யூ ட்யூப் லிங்க்
https://youtu.be/hkeTKz85fqA?si=NLysRULJro1g62e8
ரொம்ப நாட்களாக போகவேண்டும் என்று நினைத்திருக்கும் கோவில்.
ReplyDeleteகோவில் படங்கள் இன்னும் சேர்த்திருக்கலாம்.
வேண்டுதல் நிறைவேறி விட்டால் அதை திரும்பப்பெற வேண்டும் என்பது புதிய செய்தி. இது இந்தக் கோவிலுக்கு மட்டுமான விதியா?
ReplyDeleteதிருமணஞ்சேரியில் மணமானவுடன் தம்பதிகள் சென்று கோரிக்கை நிறைவேறிய செய்தி அறிவித்தல் உண்டு.
Deleteஅறியாத புதிய செய்தியை அறிந்தோம்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteஅருமை... ஒன்லி கொபி யை கடசிவரை விடவே இல்லை நீங்கள்:)
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலின் கோரிக்கை வழி முறைகளை தெரிந்து கொண்டேன். இந்த வழிமுறைகள் இக்கோவிலுக்கு மட்டுந்தானா?
பனிபடர்ந்த சாலை படங்கள் அருமை. பழமலைநாதர் கோவில் கோபுர படங்களை தரிசித்துக் கொண்டேன். சுந்தரர் வரலாறு குறித்து, சம்பந்தபட்ட கோவிலை நீங்கள் தரிசித்தது பெரும் பாக்கியம். உங்கள் மூலமாக எங்களுக்கும் கிடைத்ததற்கு நன்றி. காணொளியும் கண்டு கொண்டேன். அருமையாக உரையாற்றி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
"ஒன்லி காஃபியில்" சிற்றுண்டியும் கிடைத்தது ஆச்சரியம்...! :))
பிரயாணம் நல்லபடியாக அமைந்து கொடுத்த பிராதை திரும்பி பெற்று வந்தமைக்கு மகிழ்ச்சி.. இறைவனும் கண்டிப்பாக மகிழ்ந்திருப்பார் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வீடியோ சப் டைட்டில் என்ன சொல்லுது என்பதே புரியவில்லை. வீடியோ தரம் நன்றாக உள்ளது
ReplyDeleteJayakumar
சிறப்பான தகவல்கள். பாலாம்பா - விருத்தாம்பா என்றும் சொல்வதுண்டு. எங்கள் வீட்டு வாத்யார் (பல வருடங்கள் முன்னர்) விருத்தாச்சலத்திலிருந்து தான் நெய்வேலிக்கு வருவார். சில நிமிடங்களுக்கு ஒரு முறை “ஹே விருத்தாம்பா” என்று சொல்வார். பசுமையான நினைவுகள்...
ReplyDelete