கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, August 19, 2025

திரை விமர்சனம்: லவ் மேரேஜ்

 திரை விமர்சனம்: லவ் மேரேஜ் 

நடிகர்கள் - விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக் 

இயக்கம் - சண்முகபிரியன் 

33 வயதாகியும் திருமணமாகாத ராமசந்திரனுக்கு(விக்ரம் ப்ரபு) ஒரு வழியாக கோவைக்கருகில் இருக்கும் ஒரு கிராமத்து பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் குடும்பதினர் மதுரையிலிருந்து ஒரு பஸ்ஸில் கிளம்பி வருகிறார்கள்.   

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பஸ் ரிப்பேராகி விட அவர்கள் ஒரு நாள் பெண் வீட்டிலேயே தங்க நேரிடுகிறது. அடுத்த நாள் முதல் லாக் அவுட் அறிவிக்கப்பட்டுவிட அவர்கள் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை. உறவினர்கள் எல்லோரும் அங்கே இருப்பதால் திருமணத்தை அப்போதே நடத்தி விடலாம் என்று முடிவு செய்கிறார்கள். அப்போது கல்யாணப் பெண் தன் காதலனுடன் ஓடிப்போய் விடுகிறாள்(லாக் அவுட் நேரத்தில்!!) மறுபடியும் ராமச்சந்திரனின் திருமணம் நின்று விடுகிறது. ராமசந்திரனின் ராசிதான் இதற்கு காரணம் என்று அவனுடைய மாமா கேவலமாக பேசுகிறார். இதற்கிடையில் மணப்பெண்ணாக வரவிருந்த பெண்ணின் சகோதரிக்கும், ராமசந்திரனுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் திருமணம் நடந்ததா? என்பதுதான் மீதிக்கதை. 

மாமா தன் ராசியைப் பற்றி கேவலமாக பேசும்பொழுது அதற்கு ரியாக்ட் செய்யும் காட்சியில் விக்ரம் பிரபு நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகி குள்ளம், விக்ரம் பிரபு அருகில் இன்னும் குள்ளமாக தெரிகிறார். பாடல்கள் ஒரே மாதிரி இருக்கின்றன.

ரத்தம் தெறிக்கும் வன்முறை, காதை செவிடாக்கும் இரைச்சல், பிரும்மாண்டமான செட், இவையெல்லாம் இல்லாத யதார்த்தமான கதைகதைபடம் முழுவதும் ஒரு வீட்டிலேயே நகர்கிறது.

 மெலிதான நகைச்சுவை. இயல்பான நடிப்பு, இவைதான் இந்தப் படத்தின் ப்ளஸ். லாக் அவுட் சமயத்தில் ஓடிப் போகிறாளாம். ஒரு சண்டை வைக்க வேண்டும் என்பதற்காக லாக் அவுட் நேரத்தில் மார்கெட்டில் கசகசவென மக்கள் நடக்கிறார்கள். எந்த காட்சியிலும்,யாரும் மாஸ்க் அணியவில்லை. இதுபோன்ற ஓட்டைகள் இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். போரடிக்கவில்லை.

No comments:

Post a Comment