கனடாவில் மிஸிஸாகா என்னும் இடத்தில் ஹிந்து ஹெரிடேஜ் சென்டர் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் பஜனை, ராதா கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற ஹிந்துமத நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் கீழ் தளத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கிச்சனோடு கூடிய ஹாலும், முதல் தளத்தில் கோவிலும் இருக்கிறது.
என்னோடு வாருங்கள், கோவிலை தரிசனம் செய்யலாம்.
ஹிந்து ஹெரிடேஜ் சென்டரின் வாயிலில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பீடத்தின் உயரம் ஏழு அடி.
நடுவில் இருக்கும் பெரிய ஸ்படிக லிங்கத்தைப் பார்த்த ஒரு குழந்தை, "திஸ் இஸ் பிக் எக்" என்றது. ஒரு வகையில் உண்மைதானே?
பொதுவாக என்னை வட இந்திய பாணி கோவில்களும், மார்பிள் மூர்த்தங்களும் அவ்வளவாக கவராது. ஆனால் இந்த மூர்த்தங்களில் இருக்கும் முக லாவண்யமும்
கருணையும் வசீகரித்தது.
![]() |
| நவ கிரகங்கள் ரசித்தீர்களா இல்லையா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? கருத்திடுங்கள். நன்றி. |






மேகங்கள் பின்னணியில் ராமர் உருவம் அட்டகாசம்.
ReplyDeleteஆமாம் இல்ல?
Deleteஏனோ எனக்கு மூர்த்தங்கள் எனும் வார்த்தை மனதுக்கு ஒப்புவதில்லை. அது என் குறை!
ReplyDeleteஅப்படியா? விக்கிரகங்கள் ஓகேவா?
Deleteஓகே ஓகே.
Deleteபடங்கள் யாவும் பிரமாதம். இன்னும் கொஞ்சம் முனைந்து சில விளக்கங்கள் எழுதி இருக்கலாம்.
ReplyDeleteஎன்ன மாதிரி விளக்கங்கள்? பூஜை நேரம், பிரசாதம் இப்படியா? அந்தக் கோவிலில் திவசம் கூட செய்து வைக்கிறார்கள் என்பதை குறிப்பிட நினைத்தேன், மறந்து விட்டேன்.
Deleteவட இந்திய பாணி ஆலயம். படங்கள் வழி நாங்களும் கண்டு ரசித்தோம். ஸ்ரீராம் சொல்வது போல ஆலயம் குறித்த மேல் விவரங்களையும் அளித்திருக்கலாம்.
ReplyDeleteநம் ஊர் என்றால் தல வரலாறு இருக்கும். இங்கே..??
Deleteவட இந்தியாவில் பளிங்கு உருவங்கள்தான் மூல மூர்த்திகளாக எல்லாக் கோயில்களிலும் உண்டு. அங்கு பக்தி உணர்வு வருவதில்லை (ஏதோ ஏகப்பட்ட பக்தி உணர்வு இருப்பது மாதிரி). நம் தென்னகக் கோயில்களில்தான் பயபக்தி வருகிறது.
ReplyDeleteஆனால் சிற்பங்கள் அழகு
சிற்பங்களா? அதை விட விக்கிரகங்கள் பெட்டர் இல்லையா?
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பெரிய ராமர் சிலை மேகங்களின் அழகில் அழகாக இருக்கிறது. சிலையின் 51 அடி உயரம் வியக்க வைக்கிறது. வட இந்திய பாணி பளிங்கு சிலை கடவுளார்களை தரிசித்துக் கொண்டேன். இங்கும் சில இடங்களில் இது போன்ற சிலை கடவுள்கள் உள்ள கோவில்கள் உள்ளது. வந்த புதிதில் பார்த்ததாக நினைவு. நவகிரஹ சிலைகளும் வித்தியாசமாக நன்றாக உள்ளது. எல்லாவற்றையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்ததற்கு நன்றி. நீங்கள்தான் கருத்து திலகம்.
ReplyDelete