கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, July 1, 2018

நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் 




புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது  கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . 

நான் 'வாஷிங்டனில் திருமணம்' தவிர சாவியின் எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை. அது கூட மிகவும் சிறு வயதில் படித்தது. அவருடைய விசிறி வாழையை நிறைய பேர் சிலாகித்து கேட்டிருக்கிறேன். சமீபத்தில் பசுபதிவுகளில் 'பெங்களூர் மெயில்' படித்து வியந்தேன். கல்கி பாணியில் அருமையான நகைச்சுவை சிறு கதை. 

கனவுப் பாலம் க்ரைம் த்ரில்லர். சாவியின் அபிமான தேசமான ஜப்பானில் நிகழ்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.  காதலும், க்ரைமும் கலந்த கதையில் நகைச்சுவைக்கு இடம் இல்லை. சம்பவங்களும் அத்தனை த்ரில்லாக இல்லாதது ஒரு குறைதான். நடையில் ஆங்காங்கே சுஜாதாவின் சாயல் தெரிவது ஒரு ஆச்சர்யம்.



கேரக்டரோ கேரக்டர் கடுகு என்னும் அகஸ்தியன் 
அவருக்கே உரிய நகைச்சுவை எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகிறது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் பாட்ஸ்மானைப் போல முன்னுரையிலேயே விளாசித்தள்ளுகிறார்.

 "இந்தப் புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள், புத்தகம் அபாரம் போங்கள்"

"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டேயிருந்த என் வீட்டு மேஜையின் கீழ் உங்கள் புத்தகத்தை வைத்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது"   

கடுகு சாரின் நகைச்சுவை போட்டு உடைக்கும் ரகமோ, அல்லது மற்றவர்கள் மனதை காயப்படுத்தும் ரகமோ இல்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற நாசூக்கான நகைச்சுவை. 

ராவ் பகதூர் ராமேசம் பற்றி, இவர் மாத்ருபூதத்திடம் பேசுவதும் ஒன்றுதான், தன கருத்துக்களை தன்னிடமே உரக்க பேசிக் கொள்வதும் ஒன்றுதான். மாத்ருபூதத்தின் பங்கு 5% என்றால்,மீதி 95% இவருடையதுதான்!

மாணிக்கம் என்னும் கொல்லத்துக்காரர் பற்றி பாவம் மாணிக்கம், நாலடி உயரத்துக்கு இவர் மேடை கட்டினால் அது அரை அடி சாய்ந்து இருக்கும்.அதைச் சரி செய்ய வேறு ஒரு கொல்லத்துக்காரர் தேவைப்படுவார். 

ஜெயம் என்னும் கேரக்டரைப் பற்றி, "ரைட்டர் லட்சுமி வந்திருக்காங்க,பை தி பை அவர் கவிதை எழுதுகிறவரா? நான் எங்கப்பா மேகசீன் படிக்கிறேன்?" என்பது மாதிரி பலரைப் பற்றி பல சமயங்களில் கேட்பார். சீர்காழியிடம், "ஓரம் போ பாட்டு பாடினது நீங்கள்தானே?" என்று கேட்பார். ஏன் சிவாஜியிடமே, 'என்ன சார் ஒரு அம்பது படத்திலாவது நடித்திருப்பீங்களா?' என்று கேட்டிருக்கிறார்.

கனகாம்பரம் என்னும் கேரக்டரைப் பற்றி எழுதும் பொழுது, இவரது நகைச்சுவை உணர்வு கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.  எப்படியாவது ஒரு பிரபல எழுத்தாளராகிவிட வேண்டும் என்ற துடிப்பில் கனகாம்பரம் செய்யம் காரியங்களை எப்படி விவரிக்கிறார் பாருங்கள். "அந்த இலக்கிய பத்திரிகையில் வரும் அர்த்தமற்ற வாக்கியங்களை படித்து ரசிப்பார். (இந்த உத்வேகத்தின் எழுச்சியின் பரிணாம ஆழத்தில் உள்ள யதார்த்த வேகத்தில் உள்ள தளை பிரதிபலிப்பாக எழும் பாசிடிவிசமே இடை நிலவரத்தின் கருத்தாகும்.) சந்தடி சாக்கில் ஸோ கால்டு இலக்கிய பத்திரிகைகளுக்கும் ஒரு குத்து. 

பத்திரிகை ஜோக்குகளில் எழுத்தாளரை ஜில்பா, ஜிப்பா ஆசாமியாக யாரோ ஒரு ஆர்ட்டிஸ்ட் போட்டாலும் போட்டார், கனகாம்பரம் அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு எழுத்தாளராகி விட்டார். 

ஒரு கட்டுரை எழுதி விட்டால், அது பிரசுரமானால் ஒழிய அடுத்த கட்டுரை எழுத மாட்டார். இதனால் ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே இரண்டு,மூன்று வருட இடைவெளி கூட ஏற்பட்டு விடும். அடிக்கடியா கல்கத்தாவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் வருகிறார்கள்?

அஞ்சாம் பிளாக் மாமியைப் பற்றி எழுதும் போது, மாமிக்கு தலைவலி, மாமி சினிமா போறேன், மாமி இன்று உபவாசம் என்ற ரீதியில்தான் பேசுவாள். ஏன் சொந்தக் கணவனிடம் பேசும் போது கூட," உங்களை கல்யாணம் பண்ணிக்க கொண்டதில் என்ன லாபம்? மாமிக்கு ஒரு நகை நட்டு உண்டா? இல்லை சினிமாதான் உண்டா?" என்பாள்.

இவர் சித்தரித்திரிக்கும் கேரக்டர்களை பற்றி படிக்கும் பொழுது,  ஒரு வருத்தம் படருகிறது. அப்போதெல்லாம் இப்படி விதை விதமான, தனித்தன்மை கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்தது. அவர்கள் இயல்பாகவே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள், இப்போது குறிப்பாக நகரங்களில் நெருங்கி பழகினாலே ஒழிய மற்றவர்களின் சுய ரூபம் தெரிவதில்லை. எல்லோரும் ஒரு முகமூடியோடுதான் திரிகிறார்கள். 

அதிலும் " உன் தலையில் இடி விழ, நீ காலரா வந்து போய் விட" என்று திட்டிக் கொண்டேதான் உதவி செய்யும் பட்டம்மா என்னும் 
கேரக்டரையும், ராமசேஷு என்னும் காரெக்டரையும், தபால்காரர்  அல்லா பக்ஷ் ஐயும் பற்றி படிக்கும் பொழுது இப்படிப்பட்ட கேரக்டர்களை நாம் இனிமேல் பார்க்கவே முடியாதோ என்றுதான் தோன்றுகிறது.  தீபாவளி, பொங்கல் என்றால் அல்ல பக்ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து,பத்து என்று கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் பண்டிகை கொண்டாடிய திருப்தியே அவர்களுக்கு இருக்காது. என்று அவர் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது, எப்படியிருந்த தேசத்தில் இன்று பிரிவினை தோன்றி விட்டதே என்னும் வருத்தம் மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. 

கடைசியில் தன்னையும் ஒரு கேரக்டராக அவர் வர்ணித்திருக்கும் சிறப்பை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவருடைய வர்ணனைக்கு தன் ஓவியத்தில் உயிர் கொடுத்திருக்கிறார் கோட்டோவிய மன்னன் கோபுலு.

நம் சேமிப்பில் இருக்க வேண்டிய புத்தகம்.     

41 comments:

  1. கனவுப் பாலம் எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கு.. இதுக்கு முதல் எங்கோ பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்... அருமையாக இருக்கு விமர்சனம்... எங்கள் மேசையும் ஆடுது ஒரு புத்தகம் கிடைக்குமோ?:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா. இது மின்னூல் ஆகவே மேஜைக்கு முட்டு கொடுக்க முடியாது.

      Delete
  2. அந்தக் காலத்து விகடனில் தொடர்ந்து வந்தது "காரக்டர்". ரசிக்கும்படி இருக்கும். அநேகமாய்ச் சாவி எழுதிய முத்திரைக்கதைகள், அவரும் மணியனும் மாற்றி மாற்றி எழுதிய திருக்குறள் கதைகள் எல்லாமே படித்திருக்கேன். ஜெயகாந்தனை விகடனுக்குக் கொண்டு வந்ததில் சாவிக்கு முக்கியப் பங்கு உண்டு. விசிறி வாழையும் அப்போது விகடனில் வந்த தொடர் தான்.

    ReplyDelete
    Replies
    1. மணியனோடு ஒப்பிடுகையில் சாவி far better.

      Delete
  3. "காரக்டர்" கடுகு சார் எழுதினது சாவியிலோ தினமணி கதிரிலோ வந்தது. அதைச் சொல்லி இருந்தேன். காப்பி, பேஸ்ட் பண்ணும்போது விடுபட்டு விட்டது. :(

    ReplyDelete
    Replies
    1. கடுகு அவர்கள் எழதிய காரக்டர் தி.ம.கதிரில்தான் வந்தது. அனுராதா ரமணன்தான் சாவியில் எழுதினார்.

      Delete
  4. //அந்தக் காலத்து விகடனில்//அந்தக் காலத்து விகடனில் அநேகமாய்ச் சாவி எழுதிய முத்திரைக்கதைகள், //என வந்திருக்கணும்.மாற்றிப் போட்டிருக்கேன். கடுகு சார் விகடனில் அதிகம் எழுதிப் பார்க்கவில்லை. குமுதம், தினமணி கதிர், சாவி ஆகிய புத்தகங்களில் தான் பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  5. /எடுத்துக் காட்டும் குறிப்புகளை மஞ்சள் பின்னணியில் அழகாகக் காட்டி இருக்கிறீர்கள். அவை படிக்க சுவாரஸ்யமாக இருந்தன.

    ReplyDelete
  6. சாவியின் விசிறி வாழை எப்பவோ படித்திருக்கிறேன். எங்கள் வீட்டு பைண்டிங் கலெக்ஷனில் இருக்கு அந்தப் புத்தகம். சாவி எழுதிய கேர்கடர்கள் சிலவும், வா.தி யம் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விசிறி வாழை படிக்க வேண்டும்.

      Delete
  7. கடுகு ஸாரின் எழுத்துகளை கல்கியில் படித்திருக்கிறேன். தினமணி கதிரில் எழுதினாரா தெரியாது. தொத்சு போன்ற கேரக்டர்கள் வரும் தொடர் நகைச்சுவை எழுதி படித்திருக்கிறேன். கமலா என்றொரு கேர்கடற் அந்தத் தொடரில் உண்டு என்று ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. என்ன இன்னிக்கு இவ்வளவு கவனக்குறைவு ச்ரீராம்? அதிகமாய் எ.பி. :( ரொம்பவே டல்லா இருக்கீங்க போல. உடம்பு சரியில்லையா? எழுத்திலேயே ஒரு அலுப்புத் தெரியுதே!

      Delete
    2. தின்மணி கதிர் இப்போக் கல்கி வரதை விடக் கொஞ்சம் பெரிய அளவிலே வந்து கொண்டிருந்தது. அதன் பக்கங்களில் எதிர் எதிராகக் காரக்டருக்குப் படங்கள் வரைந்திருப்பார் கோபுலு அவர்கள். ஶ்ரீவேணுகோபாலன் அதிகம் எழுதியதும் தினமணி கதிரிலே தான். நீ, நான், நிலா, உருகி உருகிப் படிச்சிருக்கேன், மாமாக்களோடு கதையை விவாதித்து முடிவு எப்படி இருக்கும்னு எல்லாம் பேசிப்போம்.

      Delete
    3. // என்ன இன்னிக்கு இவ்வளவு கவனக்குறைவு ச்ரீராம்?//

      எப்பவாவதுதானே கீதாக்கா... உடம்புல்லாம் ஓகே... எழுத்தில் அலுப்பு தெரியுதா? அட முருகா... எதை வச்சு சொல்றீங்க?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. //நீ, நான், நிலா, உருகி உருகிப் படிச்சிருக்கேன் //

      நானும் படித்திருக்கிறேன். நிஜமாகவே நன்றாயிருக்கும். அவரின் காதல் கதைகளில் அது மாஸ்டர் பீஸ் என்று நினைக்கிறேன். நான் ராணி முத்துவில் படித்ததாய் நினைவு.

      Delete
    6. கடுகு சார் கதிரிலும் நிறைய எழுதியிருக்கிறார்.

      Delete
    7. நீ,நான்,நிலா ஶ்ரீ.வே. எழுதியதா? நான் படித்ததில்லை. ஶ்ரீ.வே. கதிரில் எழுதிய சிவப்பு விளக்கு கதைகள், என் பெயர் கமலா போன்றவற்றை புரியாமலே படித்து பயந்து போயிருக்கிறேன். அவருடைய மாஸ்டர் பீஸ் திருவரங்கன் உலா.

      Delete
    8. @ஸ்ரீராம், ராணி முத்துவில் முழுக்கதையும் எங்கே வரும்? சுருக்கித் தான் போடுவார்கள். ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலும் ஶ்ரீ எழுதியது தான் என நினைக்கிறேன்.

      Delete
    9. அதற்கு என்ன செய்ய அக்கா? ராணி முத்துவில்தான் எனக்குக் கிடைத்தது. அப்போ எல்லாம் ரொம்பச் சுருக்க மாட்டார்கள்.

      Delete
    10. நீ நான்நிலா ஶ்ரீவேணுகோபாலன் எனும் புஷ்பா தங்கதுரையின் நாவலை இங்கே கனடாவிற்கு வந்தும் தேடிக்கொண்டிருக்கிறேன்!

      Delete
  8. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete
  9. விமரிசனம் - தங்கள் பாணியில் - அழகு...

    சாவி அவர்களுடைய படைப்புகளை சின்ன வயதில் படித்தது...
    வாஷிங்டனி திருமணம் - தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன்..
    அவ்வப்போது படிப்பதுண்டு...

    ReplyDelete
  10. எல்லோரும் ஒரு முகமூடியோடு தான் திரிகிறார்கள் - உண்மை.

    நல்லதோர் அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  11. சாவியை இளம் வயதில் படித்துள்ளேன். தற்போது அந்நாள் நினைவுகள் வந்துவிட்டன.

    ReplyDelete
    Replies
    1. நிஜமாகவே சாவி நல்ல எழுத்தாளர். தன்னை முன்னிருத்திக்கொள்ளாமல் பலரை உயரத்தி விட்டவர்.

      Delete
  12. அருமையான விமர்சனம் .வாஷிங்க்டனில் திருமணம் எத்தனை முறை படிச்சிருப்பேன் :) மிஸ்டர் காட்டன் :)
    /வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற நாசூக்கான நகைச்சுவை. //அதே அதே அது தான் நல்ல நகைசுவை

    எனக்கு ஒரு புளிய மரத்தின் கதையும் ,தி ,ஜாவின் எல்லா சிறுகதை தொகுப்புக்கு கிடைச்சிருக்கு :) படிக்கணும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சல். தி.ஜ.ராவின் சிறுகதை தொகுப்பு கிடைத்திருக்கிறதா? சூப்பர்! என்ஜாய். ஆனால் ஒரு கஷ்டம் தி.ஜ.ரா., கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைப் படித்து விட்டோம் என்றால் தற்கால எழுத்துக்களை படிக்க முடியாது.

      Delete
  13. விமர்சனம் அருமை.
    படிக்க தூண்டும் விமர்சனம்.

    .வாஷிங்க்டனில் திருமணம் எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது.
    சாவியின் எழுத்தும், கோபுலூ அவர்களின் ஓவியமும் மிக அருமை யாக இருக்கும்.

    நிறைய விஷயங்கள் பின்னூட்டங்க்களில் சொல்லி இருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  14. கனவு பாலம் படிக்க வேண்டும். எனக்கு புஸ்தாகவில் படிக்க முடியவில்லை.

    ReplyDelete
  15. //கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . //

    நன்றாக இருக்கிறது. அந்தக் கால மனித நேயம் மீண்டும் வர வேண்டும். வரும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  16. வாங்க கோமதி அக்கா. நன்றி.
    //அந்தக் கால மனித நேயம் மீண்டும் வர வேண்டும். வரும் என்று நம்புவோம்.//
    நம்பிக்கை தான் விளக்கு.

    ReplyDelete
  17. துளசி: நல்ல விமர்சனம். சாவி எழுத்துகள் ஒரு சில சிறு வ்யதில் வாசித்ததுண்டு அதன் பின் இல்லை.

    கீதா: அக்கா நானும் வாஷிங்டனில் திருமணம் வாசித்து ஹயோ சிரித்து மாளாது. அது தவிர வாசித்ததில்லை. அதுவுமே திருட்டுத்த்னமா வாசிச்சதுதான் ஹா ஹா ஹா

    நீங்கள் சொல்லியிருக்கும் விமர்சனம் வாசிக்க வேண்டும் என்று சொல்லுகிறது எனக்கு நகைச்சுவை மிகவும் பிடிக்கும்...கண்டிப்பாக வாசிக்கனும்...இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. குறித்து வைத்துக் கொண்டேன்.
    நிறைய புத்தகங்கள் லிஸ்ட் இபுக்ஸ் இற்க்கி வைச்சுருக்கென்...வாசிக்கணும்



    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசி. நன்றி கீதா.

      Delete
  18. விமர்சனம் அருமை. எனக்கும் அகஸ்தியன் கமலா தொச்சு பிடிக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக என் பதிவிற்கு பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள். நன்றி, மீண்டும் வருக.

      Delete
  19. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete