கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, October 19, 2019

வாயு வேகம், மனோ வேகம்

26 comments:

  1. பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... நான் பொதுவா காணொளிகளைக் கேட்பதில்லை. அதற்கு எப்போ நேரம் வாய்க்கிறதோ அப்போதான் கேட்பேன்.

    அதனால் அவைகளுக்கு பெரும்பாலும் என் பின்னூட்டம் இருக்காது.

    இந்தக் காணொளியை நேரம் கிடைக்கும்போது கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசரமே இல்லை. நேரம் கிடைக்கும் பொழுது வாருங்கள்.

      Delete
  2. அன்பு பானுமா, உற்சாகமாக இருக்கிறது..
    எவ்வளவு நல்ல விஷயங்களைச் சொல்கிறீர்கள்.

    மிக மிக நன்றி மா.நிதானமா மூச்சு விடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
    மனோவேகத்தையும் கட்டுப் படுத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வல்லி அக்கா.

      Delete
  3. அபாரமான சிந்தனைப் பகிர்வு.
    அவசியமானது. நம் குழந்தைகளுக்கு காயத்ரி சொல்லி மாலைவணக்கம் செய்யச் சொல்வதே இதற்காகத் தானே. நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நம்முடைய பழக்கங்கள் பலவும் பொருள் பொதிந்தவை. மீள் வருகைக்கு நன்றி.

      Delete
  4. பானுமதி, இது நீங்க தானே? பின்னர் வந்து கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா நானேதான். கேட்டீர்களா?

      Delete
  5. பானுக்கா இனிய காலை வணக்கம்.

    நேற்று உங்க வீடியோ பதிவு வந்ததுமே மொபைல்ல கேட்டுவிட்டேன்.

    செம அக்கா நிஜமாவே ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. எனக்கு இதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இந்த விஷயம் தெரிந்திருந்தாலும் கூட அதை அழகாகக் கோர்வையாகச் சொல்லத் தெரிய வேண்டும் இல்லையா அதுதானே முக்கியம் எல்லோருடனும் அழகாகப் பகிர்ந்து கொள்வது என்பது. உங்களுக்கு அது கை வந்த கலை அக்கா! நிஜம்மா...அதுவும் அழகான வார்த்தைகள் பயன்படுத்தி...

    ஹைஃபைவ் உம் கூடவே சொல்லிக் கொள்கிறேன் கை கொடுங்க. போன வாரம் நானும் மகனும் பேசிக் கொண்டிருந்த போது நான் அவனுக்குச் சொன்ன ஒரு விஷயம்...நம் எண்ணங்களுக்கும் தீர்மானம் எடுப்பதற்கும் மூச்சுப் பயிற்சி அவசியம். அது சீராக இருந்தால் தான் நிதானம் இருக்கும். எதிலும். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் என் மனதிற்கு வரவில்லை ஹா ஹா ஹா...அதுதான் பானுக்கா!!!!!! தேர் யு ஆர்!

    நம் எண்ணங்கள் சிதறாமல் அதைக் கன்ட்ரோல் செய்வதற்கு இந்த மூச்சு மிக உதவுகிறது என்பது என் அனுபவமும் கூட.

    இதோ அடுத்த கருத்திற்கு வருகிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. விரிவான பாராட்டுக்கு நன்றி கீதா.

      Delete
  6. நல்ல தகவல்.

    நீங்கள் சொல்லியிருக்கும் நிதானமாகமூச்சு விஷயம் தெரியும்.  ஆனால் இந்த வார்த்தைக்கு அதுதான் பொருளென்று தெரியாது.  ஒருவருக்கு ஒரு வாழ்நாளுக்கு இவ்வளவுதான் மூச்சுக்காற்று என்று இருப்பதாகவும் சித்தர்கள் மூச்சை அடக்கும் பயிற்சி பெற்றுள்ளதால் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றும் எங்கோ படித்தேன். கோபம்,  ஆத்திரம், பொறாமை காமம்  விட்டுவிட்டால், நிதானமாக மூச்சுவிடப் பழகினால் நோய் ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழலாம்.

    ReplyDelete
    Replies
    1. //ஒருவருக்கு ஒரு வாழ்நாளுக்கு இவ்வளவுதான் மூச்சுக்காற்று என்று இருப்பதாகவும் சித்தர்கள் மூச்சை அடக்கும் பயிற்சி பெற்றுள்ளதால் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றும் எங்கோ படித்தேன்.// நானும் இதை படித்திருக்கிறேன். நன்றி ஶ்ரீராம்.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    மிகவும் அழகாக வாயு வேகம். மனோ வேகம் என்ற தலைப்பில் சீரான மூச்சுப் பயிற்சி பற்றி நன்றாக, மிக அழகாக கூறியிருக்கிறீர்கள். தங்கள் உரையை கேட்ட பின் நாம்தான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டு அளவுடன் இறைவன் தந்திருக்கும் மூச்சுக்களை நிதானமின்றி இழந்திருக்கிறோம் எனத் தோன்றுகிறது. அமைதியாக, பொறுமையாக இருந்தாலே கோபத்தினால் வரும் படபடப்புகளை தவிர்க்கலாம். படபடப்புகள்தானே சுவாச கோளாறுகளை உண்டாக்குகிறது. அது கடைசியில் நம் உடலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. நல்ல தகவல்களுடன் தந்த அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. ஆல்ஃபா நிலை தியானம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். காது பிரச்சனை இருப்பதால், காணொளிகளை காண மட்டுமே இயலும். முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. டயஃப்ரமாட்டிக் ப்ரீதிங்க் - ஆழ்ந்த மூச்சு - இது பொதுவாக நாம் ரிலாக்ஸ்டாக, இயற்கயாக வருவது. இது சரியாக இருந்தால் மனம் சரியாக இருக்கும். இதைத்தான் மன அழுத்தம் மற்றும் மனம் கொஞ்சம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயிற்சி கொடுத்தால் நல்லது என்று....

    நீங்க சொல்லிருப்பதைத்தான் நான் நீட்டி முழக்கறேன் ஹிஹிஹிஹி

    நம் மெட்டபாலிஸம் சரியா இல்லைன்னாலும் மூச்சு சீராக இருக்காது...அதனால்தான் நம்மால் அந்த சமயத்தில் சரியா யோசிக்க முடியாது என்றும் சொல்லப்படுவது. ஜீரணம் சரியாக இல்லைனா, வயிறு தொந்தரவு இருந்தால், மேல் வயிறு முட்ட சாப்பிடும் தருணங்களில், மலச்சிக்கல் இப்படி எது இருந்தாலும் மூச்சு சரியாக இருக்காது என்று எங்க ஆயுர்வேத மருத்துவர் முன்பு சொல்லுவார். என் கை நாடி பிடித்தே சொல்லிடுவார்...உடம்பில் என்ன பிரச்சனை என்று. உடனே நல்லா டீப் ப்ப்ரீத் எடுத்து விடு என்றும் சொல்லி. ஒரு நிமிடத்திற்கு உன் மூச்ஹ்கு 13 ஆக உள்ளது. அதை 7, 8 க்குக் கொண்டுவா என்பார். அதான் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி.

    இந்த டியஃப்ரமாட்டிக் ப்ரீதிங்க் பாடுவதற்கும் கூட மிக மிக அவசியம்.

    இதைச் சரிப்படுத்த மகர ஆசனா. மற்றும் நாடிசோதனை (மூச்சுபயிற்சிதான்) அது சரியாகி இருக்கானு பார்க்க சவாசனா. இது செய்தாலே மனம் சீராக இருக்கும் என்று கற்றதுண்டு அக்கா..இரத்த அழுத்தத்திற்கும் நல்லது என்றும் கற்றதுண்டு.

    நீங்கள் செய்யும் மூச்சுப்பயிற்சி (நெல்லையும் செய்கிறார்) அது மிகச் சிறந்த பயிற்சி...
    நீங்க அதை அழகா புரியும் படி எல்லாம் சொல்லிட்டீங்க அதான் கோபம் வந்தா..டென்ஷன் ஆனா...எட்சற்றா...அழகான வார்த்தைகள் அக்கா அது ரொம்ப ரசித்தேன்...வாயு வேகம் மனோவேகம்!!! பாராட்டுகள் பானுக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

      Delete
  10. அருமையான விளக்கம் அம்மா...

    ReplyDelete
  11. வாயு வேகம் மனோவேகம்...

    தாங்கள் அணுகியிருக்கும் கோணம் புதிது...
    தங்களது விளக்கம் மனதுக்கு இதம்....

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சந்தோஷம். நன்றி.

      Delete
  12. நான் கற்ற மனவள கலையில் முதல் பாடமே கண்களை மூடி மூச்சை கவனிக்க சொல்வது தான்.

    அதன் பின் தான் தியானம் எல்லாம் கற்றுக் கொடுப்போம்.
    ஆசை, கோபம், இவற்றில் மூச்சு சீராக இருக்காது , கோபத்தில் மூச்சு ஏறி இறங்குவதுதை அழகாய் செய்து காட்டினீர்கள்.

    எண்ணம் எப்படி ஓடுகிறது என்பதையும் அழகான விளக்கத்துடன் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனவளக்கலை மிக நல்ல பயிற்சி. நான் சுதர்ஷன் க்ரியா செய்கிறேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  13. காலையும், மாலையும் 10 நிமிடம் அமைதியாக உட்கார்ந்து மூச்சை கவனித்தால், 30 நாட்களில் கிடைக்கும் வெற்றி என்று சொல்வோம். தியான கற்றுக் கொள்ள வந்தவுடன் எல்லாம் கைவர பெற வேண்டும் என்று நினைப்பார்கள். விடாமுயற்சியும், விழிப்புணர்வும் தேவை. மிக எளிமையாக எடுத்து காட்டுகளுடன் அருமையாக சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //தியான கற்றுக் கொள்ள வந்தவுடன் எல்லாம் கைவர பெற வேண்டும் என்று நினைப்பார்கள். விடாமுயற்சியும், விழிப்புணர்வும் தேவை.// சமீபத்தில் கூட ஒரு பெண்மணி என்னிடம் கண்களை மூடிக்கொண்டு உட்கார முடியவில்லை என்றார். பழக்கத்தில்தான் வரும் என்றேன். நல்ல கருத்து பகிர்துள்ளீர்கள். மிகவும் நன்றி.

    ReplyDelete