கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 18, 2019

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும்

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும் 


வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் தலைப்பில் திரு. சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை  யூ டியூபில் கேட்டேன். அதில் அவர் அவருடைய தாயாரைப் பற்றி கூறும் பொழுது, ஆறு பேர்கள் இருந்த அவருடைய வீட்டில் ஒருவருக்கு தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த சட்டினியும், ஒருவருக்கு வெங்காய சட்டினியும், ஒருவருக்கு மிளகாய்ப் பொடியும்,  ஒருவருக்கு சாம்பாரும் இருந்தால்தான் இட்லி சாப்பிடுவார்களாம். அவருடைய தாயாரும் அவரவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள் என்று கூறியவர், அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "இப்போதெல்லாம் சில வீடுகளில் என்ன இலையில் விழுகிறதோ அதை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இலையில் விழுவதை சாப்பிடும் இடத்திற்கு மிலிட்டரி என்று பெயர். நாம் என்ன மிலிட்டிரியா நடத்துகிறோம்? குடித்தனம் நடத்துகிறோம். என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைக்கும் இடம்தான் வீடு" என்கிறார். இதையெல்லாம் மேடையில் கை தட்டல் வாங்குவதற்காக பேச நன்றாக இருக்கும்.  ஆனால், குழந்தை வளர்ப்பில் இது ஒரு மோசமான முறை. வீடு என்பது குழந்தைகளுக்கு விரும்பியதையெல்லாம், அல்லது விரும்பியதை மட்டும் சமைத்து கொடுத்துக்கொண்டே இருக்கும் இடம் மட்டும்தானா? எல்லாவற்றையும் சாப்பிடுவதற்கும், எல்லோருடனும் அனுசரித்து போவதற்கும் கற்றுக் கொடுக்கும் இடமும் அல்லவா? இப்படி பிடித்ததைத்தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் பின்னாளில் அந்த சாப்பாட்டு பழக்கத்தாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பார்கள்.  

ஒரே நாளில் ஆறு பேருக்கு ஆறு விதமான சட்னி, செய்து கொடுக்கும் அம்மாவை விட, "நேற்று உனக்கு பிடித்த தேங்காய் சட்னி செய்து கொடுத்தேன், அதை அப்பா,அண்ணன்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள், இன்று அண்ணனுக்கு பிடித்த வெங்காயச் சட்டினியை நீ சாப்பிடு" என்று சொல்லும் அம்மாதான் நல்ல அம்மாவாக இருக்க முடியும். வாழ்க்கை முழுவதும் நமக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள பழக்க சாப்பாட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். 

ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இல்லை என்பதற்காக கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவனையும், நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்று வெளியூர் செல்ல மறுத்த இளைஞனையும், "நாற்பது வருடங்களாக சமைத்துப் போடுகிறேன், ஒரு நாள் கூட குறை சொல்லாமல் சாப்பிட்டதில்லை" என்று புழுங்கும் மனைவிகளையும் நான் அறிவேன். ஏன் இன்றைக்கு பல விவகாரத்துகளுக்கு அனுசரித்து போக முடியாத, விட்டு கொடுக்க முடியாத மனப்பாங்குதான் காரணம். அனுசரித்துப் போகும் குணமும், அனுசரித்து போவதும், வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கு எளிய வழி பிடித்ததை மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறாமல், இலையில் விழுவதை சாப்பிட குழந்தைகளை பழக்குவதுதான். 

தவிர காலம் இருக்கும் இருப்பில் இப்போதைய பெண்கள் வீட்டில் இட்டிலிக்கு மாவு அரைத்து, வார்ப்பதே பெரிய விஷயம். அதில் இருக்கும் நான்கு பேருக்கு, அல்லது மூன்று பேருக்கு விதம் விதமாக சட்டினி அரை என்றால் முதலுக்கே மோசமாகி விடாதா?

இவருக்கு நேர் மாறான கருத்தை வழக்கறிஞர் சுமதி கூறியிருக்கிறார்.
இந்த சுட்டியை சொடுக்கி கேளுங்கள்.
https://youtu.be/8tjkIYlXW50










27 comments:

  1. ஒவ்வொரு வீட்டில் இட்லி மாவிலேயே தோசை ஒருத்தருக்கு, ஊத்தப்பம் ஒருத்தருக்கு, இட்லி சிலருக்கு எனப் பண்ண வேண்டி இருக்கு. அதைத் தவிரவும் பூரி, கிழங்கு வேறே வைச்சிருப்பாங்க. எதுக்கு இவ்வளவு எனக் கேட்டதற்கு அவரவர் விருப்பம் போல் சாப்பிடலாமே என்று பதில் வந்தது. வீட்டுப் பெண்டிரை சமையல்காரியாகக் கருதுவார்கள் போல. சமையல்காரங்க கூட இப்போல்லாம் இம்மாதிரி 2,3 பண்ணிப் போடுவதில்லை.

    ReplyDelete
  2. ஆனால் எங்க வீட்டில் தக்காளித் தொக்கோ, கொத்துமல்லித் தொக்கோ எப்போவும் கைவசம் இருக்கும். சில சமயங்களில் சப்பாத்திக்குத் தொட்டுக்க சப்ஜி பண்ணாமல் இதைத் தொட்டுப்போம். அதுவும் ஆலு, மூலி, மேதி பராத்தா வகைகளுக்கு இவை இருந்தால் போதும். மிளகாய்ப் பொடியும் தயார் நிலையில் இருக்கும். இட்லி, தோசை பண்ணும் அன்று சாம்பார் வரும்படி பார்த்துப்பேன். அப்படி இல்லைனால் தான் மேற்கண்டவை. அல்லது தேங்காய் மூடி இருந்தால் மட்டும் தேங்காய்ச் சட்னி. இல்லைனா மிளகாய்ப் பொடியைத் தொட்டுக்கொண்டே சாப்பிட்டு விடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. //இட்லி, தோசை பண்ணும் அன்று சாம்பார் வரும்படி பார்த்துப்பேன்.//எங்கள் வீட்டிலும் இதே பழக்கம்தான். கொஞ்ச நாளாக என் வலைப்பக்கம் உங்களை காண முடியவில்லை. நலம்தானே?

      Delete
    2. உங்க வீடியோப் பதிவு ஒண்ணே ஒண்ணு தான் பார்க்கலைனு நினைக்கிறேன். மற்றபடி எல்லாப் பதிவுகளுக்கும் வந்திருக்கேனே!

      Delete
  3. //எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள பழக்க சாப்பாட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.//

    Well said akkaa.

    ReplyDelete
  4. கைதட்ட ஆட்கள் கிடைத்துவிட்டால் என்னவானாலும் பேசுவார்கள் இந்த மாதிரி பேச்சாளர்கள்

    ReplyDelete
    Replies
    1. சன் டி.வி.யில் பேசிக் கொண்டிருந்த பொழுது முதல் வாரம் தாயாரை பேண வேண்டியது பிள்ளைகளின் கடமை என்றும், அடுத்த வாரம் அம்மாதான் முக்கியம் என்றால் உனக்கு திருமணம் எதற்கு என்றும் பேசியவர்தான் இவர். நன்றி ட்ரூத்.

      Delete
  5. நாங்கல்லாம் எது சமைக்கிறாங்களோ அதை சாப்பிட்டு வளர்ந்தவங்க .என் கணவர் சொல்வார் அவங்கம்மா இப்படி 5/6 வகை சட்னி செய்வாங்கன்னு :) அது பெருமைக்குரிய விஷயமுமில்லை என்று   நான் முறைச்சேன் . .எங்க வீட்ல அம்மா எல்லாருக்கும் ஒரே கூட்டு பொரியல் வகைகளை செய்துதான் தருவாங்க .நானும் அப்படித்தான் இங்கே மகளை பழக்கியிருக்கேன் .எது கிடைத்தாலும்  கொடுத்தாலும் சாப்பிட பழகுவது நல்லது .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அம்மா உங்களை சரியாக வளர்த்திருக்கிறார். நீங்களும் அப்படியே.

      Delete
  6. கைத்தட்டலுக்காக பேசப்படும் பீச்களை மண்டபத்தை விட்டு வெளியே வரும்போதே  நன்று!  அதிலுக் சுசி இப்போதெல்லாம் ரொம்பவே மாற்றி மாற்றி பேசுகிறார்!  

    ReplyDelete
  7. சுசி தனது தாயாரின் மறைவின்போது கல்கியில் எழுதியிருந்த கட்டுரை  ஒன்றை எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தேன்.  நல்ல கட்டுரை அது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் படித்த ஞாபகம் இருக்கிறது.

      Delete
  8. சிறுவயதில் எங்கள் வீட்டில் அவ்வப்போது ஒரு சட்னிதான்!  பெரும்பாலும் சாதத்துக்கு பிசைந்து கொள்ளும் குழம்பையே தொட்டுக்கொள்வோம்!

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான வீடுகளில் அப்போதெல்லாம் அப்படித்தான். நன்றி ஶ்ரீராம்.

      Delete
  9. காலை வணக்கம் சகோதரி

    நல்ல கருத்துகளை தெளிவாக்கி கூறியுள்ளீர்கள். அனுசரித்துப் போகாததால்தான் நிறைய பிரிவுகள் இப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலேயும் வருகின்றன. இட்லிக்கு சட்னி இல்லாமல் போனாலும், வெறும் மிளகாய் பொடியை தொட்டுக் கூட சாப்பிடலாம். தவறில்லை .! அனைத்துக்கும் நம் மனம்தான் காரணம். நல்ல செய்தி.. பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. நல்ல கருத்து.

    சுகி சிவம் பேச்சை விட்டுவிடுங்கள். பெரும்பாலும் பேச்சாளர்கள் கைதட்டலுக்காகப் பேசுவார்கள். அவர்தான் சொல்கிறாரே... புத்தகம் என்பது ஒரே கருத்தை எல்லோருக்கும் சொல்லும். மேடைப் பேச்சு என்பது, வந்திருக்கும் ஆடியன்ஸுக்குத் தகுந்தவாறு நாக்கைப் புரட்டிப் புரட்டிப் பேசும். இப்படித்தானே அவர் 'சட்னி பேச்சை' அர்த்தம் கொள்ளமுடியும்?

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் என்பது ஒரே கருத்தை எல்லோருக்கும் சொல்லும். மேடைப் பேச்சு என்பது, வந்திருக்கும் ஆடியன்ஸுக்குத் தகுந்தவாறு நாக்கைப் புரட்டிப் புரட்டிப் பேசும்.//இப்படி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்து விட்டாரா? பிறகு என்ன சொல்ல முடியும்? நன்றி நெல்லை.

      Delete
  11. பதிவில் சொல்லிய விஷயங்கள் அருமை.

    வழக்கறிஞர் சுமதி பேசியதையும் கேட்டேன்.

    ReplyDelete
  12. நாதாரி சங்கிகள் பலர், அவர்களுக்கு எதிராக ஒருவர் பேசி விட்டால் போதும்... நான் அவரின் பேச்சை கேட்பதே இல்லை என்பார்கள்... தறுதலை ஜந்துக்கள்... பேச்சின் அர்த்தம் புரியா அறியாமை பிறவிகள்...

    இன்றைய க____ல் எத்தனை சங்கிகள் உள்ளார்கள் என்பது உங்களையே தெரியும் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. *உங்களுக்கே

      இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மா... நன்றி...

      Delete
    2. எனக்கு புரியவில்லை. வருகைக்கு நன்றி டி.டி.

      Delete
  13. >>> வாழ்க்கை முழுவதும் நமக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள பழக்க சாப்பாட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.. <<<

    அருமை...

    ReplyDelete