மசாலா சாட் - 13
நவம்பர் 24 அன்று சென்னையில் இருந்த நான் மாம்பலத்தில்,பக்தவத்சலம் சாலையில் உள்ள மதர் சென்டருக்கு சென்றிருந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்து ஒரு சிறுவன் என்னிடம் சாக்லெட் டப்பாவை நீட்டினான். பிறந்த நாளா? என்று கேட்டதற்கு ஆமாம் என்றான். பிறந்த நாள் என்று சொல்லும் குழந்தைக்கு வெறும் வாழ்த்தை மட்டும் வழங்க மனமில்லாமல் இருபது ரூபாய் கொடுத்தேன். உடனே அருகிலிருந்த அவன் தங்கை, "எனக்கு மார்ச் 10th பிறந்த நாள் வரும் என்றது"(ராஜ பார்வை ஜோக் நினைவுக்கு வருகிறதா?) உடனே அந்த குழந்தைக்கும் பணம் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டு, "மார்ச் 10th நீங்க இங்க வாங்க" அழைப்பு விடுத்தது. பூஸாருக்கு உறவாக இருக்குமோ? இல்லையில்லை, அப்படி இருந்தால் பச்சைக் கல் அட்டிகை அல்லவா கேட்டிருக்கும்.
கைதி படத்தின் விமர்சனத்தை படித்து விட்டு என் மகன் அந்த படத்திற்கு டிக்கெட் புக் பண்ணினான். தியேட்டரில் நுழையும் பொழுது, "ரெக்லினெர் சீட், படுத்துக் கொண்டு படம் பார்க்கலாம்" என்றான். அடக் கடவுளே! என்று நினைத்துக் கொண்டேன். நான் சீட்டில் உட்கார்ந்து கொண்டு படம் பார்க்கும் பொழுதே தூங்கும் ஆசாமி, இன்னும் படுத்துக் கொண்டா..? சுத்தம்! என்று நினைத்துக் கொண்டேன்.
முதல் வரிசை மட்டும்தான் ரெக்லினெர் சீட்டுகள். விளக்குகள் அணைக்கப்படும் வரை, படுத்துக்க கொள்ள பிடிக்கவில்லை(பொது இடத்தில் எப்படி படுப்பது?) பின்னர் படுத்துக் கொண்டால், படம் எங்கேயோ தெரிவது போல் இருந்தது. சற்று நேரம் கழித்துதான் புரிந்தது, அந்த சீட்டில் படுத்துக்க கொள்ளக் கூடாது, சாய்ந்து கொள்ள வேண்டும். பின்னால் நகர்ந்து உட்கார்ந்து ஈஸி சேரில் அமர்வது போல சாய்ந்து கொண்டதும், சரியான கோணம் கிடைத்தது.
படம் எப்படி என்று கேட்கிறீர்களா? அதுதான் நீலச்சட்டை உட்பட எல்லா விமர்சகர்களும் "ஆஹா! ஓஹோ ! என்று புகழ்ந்து தள்ளி விட்டார்களே? சண்டை, சண்டை, சண்டை, சண்டையைத்தவிர வேறு எதுவும் இல்லை. லாஜிக்கில் ஏகப்பட்ட ஓட்டை, காதில் பூ அல்ல, பூக்கடையையே கவிழ்த்திருக்கிறார்கள். ஒரே மாதிரியான கார்த்தியின் நடிப்பு, என்னத்தை சொல்ல? டெக்நிக்கலி பிரமாதமாம்! அதையெல்லாம் கொண்டாட கிட்னி வேண்டுமே?
ரொம்ப நாட்களாக சிசிலர் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை சமீபத்தில் நிறைவேறியது. பிரௌனி கேக்கின் மீது கொதிக்கும் சாக்லேட் குழம்பை(சாக்லேட் சாஸ் என்பதை சரியாக மொழிபெயர்த்திருக்கிறேனா?) ஊற்றி, அதன் மீது வென்னிலா ஐஸ் க்ரீம் வைத்து ஆவி பறக்க கொண்டு தருவார்கள். அதை நான் சாப்பிடுவதைப் பார்த்த, "என் மகன் 30 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்" என்றான். கிடக்கிறான்..!
வாட்ஸாப்பில் வந்த ஒரு தகவல்:
நவம்பர் 29,
வரலாற்றில் இன்று.
பஞ்சம் போக்கிய நெல் ரகம்
IR 8 உருவான தினம் இன்று.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சத்துக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து இந்த ஐ.ஆர்.8 ரகம்.
அரிசியை வெறும் உணவு என்று மட்டும் கடந்து சென்றுவிடமுடியாது. அரிசியின் வரலாற்றில் அவல அரசியலும் சுயநலம் மிகுந்த துரோகமும் கறுப்பின அடிமைகளின் துயர் மிகுந்த வாழ்வும் ஒருங்கே இழையோடியுள்ளன.
நாகரிகம் வளர வளர எதை உண்பது என்பதை மனிதன் தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். காட்டிலும் மேட்டிலும் இயற்கையாக முளைத்ததைச் சாப்பிட்ட மனிதன், தனக்கு வேண்டியதைத் தான் வசிக்கும் இடத்திலேயே விளைவிக்கத் தொடங்கினான். உணவைச் சார்ந்து நாடோடியாகத் திரிந்த மனிதன், ஓர் இடத்தில் நிலைபெறத் தொடங்கினான். விவசாயம் அவனுக்கு வேண்டிய உணவை மட்டும் அளிக்கவில்லை,
மனிதனின் உணவில் அரிசியைத் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியது. அரிசி ஒரு புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். ஈரநிலங்களில் வளரக்கூடிய இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள்வரை வளரக்கூடிய தாவரமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இமயமலை அடிவாரத்தில் அரிசி தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஔவையார் போன்ற பல பழந்தமிழ் புலவர்களின் பாடல்களில் அரிசி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பஞ்சங்களால் கொத்துக் கொத்தாக மனித வாழ்வு உதிர்வது அன்று வாடிக்கையாக இருந்தது. 1876இல் சென்னையில்கூட ஒரு கடும் பஞ்சம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, 'உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகியது. உணவுப் பஞ்சம் பூதாகரமாக உருவெடுத்து மனிதனின் வாழ்வைப் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியின் பலனாக, 1960களில் அதிக மகசூல் தரும் நெல் இனம் உருவாக்கப்பட்டது. இந்தோனேசிய அரிசி இனத்தையும் வியட்நாம் அரிசி இனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின அரிசி அது. சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம் அதற்கு IR-8 என்று பெயரிட்டு, 1966, நவம்பர் 29 அன்று பிலிப்பைன்ஸ் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கியது. 88 கிலோ விதை நெல்லைப் பயிரிட்டு அவர்கள் 71 டன் அரிசியை மகசூல் செய்தனர். இந்த அற்புத அரிசியைப் பற்றிய பேச்சு உலகெங்கும் பரவியது.
நார்மனின் முயற்சி:
அந்தக் காலகட்டத்தில் பிஹாரில் கடுமையான பஞ்சம் நிலவியது. உணவு உற்பத்தியை அதிகரிக்க, அப்போது வேளாண் துறை அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியன் கடுமையாக முயன்றார். நோபல் பரிசு பெற்ற வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லக்கை (Norman Borlaug) இந்தியாவுக்கு அழைத்து, விவசாய உற்பத்தியைப் பெருக்க உதவுமாறு கேட்டார்.
கோதுமை உற்பத்தியில் நார்மன் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் பிரதான உணவு அரிசியாக இருந்த காரணத்தால், நார்மனின் முயற்சி இந்தியாவின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை. பாலைவனத்தில் பெய்த பெருமழை போன்று அப்போதுதான் இந்த ‘ஐ,ஆர்-8’ அரிசி இந்தியாவுக்கு வந்தது.
மறுமலர்ச்சி ஏற்படுத்திய சுப்புராவ்:
29 வயது சுப்புராவுக்குத் தான் இந்தியாவின் உணவு உற்பத்தியில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்று அப்போது தெரியாது. ஆம், இந்தியாபில் முதன் முதலில் ஐ.ஆர்.8 வகை அரிசியைப் பயிரிட்ட விவசாயி அவர்தான். 1967-ல் சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகத்திடமிருந்து ஐ.ஆர்.8 விதை அரிசியை வாங்கி, ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த தனது 2,000 ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டார்.
பாரம்பரிய நெல் விதைகள் ஹெக்டேருக்கு இரண்டு டன் மட்டுமே மகசூல் தரும். இந்த ஐ.ஆர்.8 அவருக்கு ஹெக்டேருக்கு ஏழு டன் மகசூல் அளித்தது. சுப்புராவின் இந்த அபரிமித மகசூல், மற்ற விவசாயிகளையும் ஐ.ஆர்.8 நோக்கிப் படையெடுக்க வைத்தது.
ஐ.ஆர்.8 இனத்தின் வெற்றிக்கு அதிக மகசூல் மட்டும் முக்கியக் காரணமல்ல. குறைந்த காலத்தில் அது அளித்த அதிக மகசூலும் முக்கியக் காரணம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் எனும் விவசாயி ஒரு ஹெக்டேரில் 16 டன் மகசூல் பார்த்தார்.
அந்த நன்றியின் பலனாக, தனது மகனுக்கு ‘ஐ.ஆர்.எட்டு’ என்று அவர் பெயரிட்டது மிகுந்த பேசுபொருளாக அன்று இருந்தது. ஐ.ஆர்.8-ன் வெற்றி இந்திய வேளாண் விஞ்ஞானிகளுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தது. அவர்கள் அந்தப் பாதையில் சென்று ஐ.ஆர்.20, ஐ.ஆர்.36, ஐ.ஆர்.50 போன்ற பல புது அரிசி வகைகளை உருவாக்கினர்.
பழசு மறந்து போச்சு
வாடன் சம்பா, முடு முழுங்கி, களர் சம்பா, குள்ளக்கார், நவரை, குழிவெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்டை, கருடன் சம்பா, பனங்காட்டு குடவாழை, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சிலி போன்ற நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு இன்று மறந்தேவிட்டன.
வித விதமான பூச்சி, புழுக்கள் தாக்கும் புதிய ரகங்களை அதிக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அவர்கள் விளைவித்து வருகிறார்கள். பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்கக்கூட நேரமின்றி அவர்கள் வணிகப்பிடிக்குள் சுழன்று வருகின்றனர். எது எப்படியோ பஞ்சத்தால் உணவின்றி மனிதன் மடியும் அவலத்தை நிறுத்தியதில் ஐ.ஆர்.8 ரக அரிசிக்குப் பெரும் பங்குண்டு.
ஐஸ்க்ரீம் - பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.
ReplyDeleteஐ.ஆர். 8 உருவான விதம் படிக்கப் பிடித்தது.
படுத்துக் கொண்டு படம் - ஹாஹா... நானும் சில சமயங்களில் சினிமா தியேட்டரில் தூங்கி விடுவதுண்டு!
முதல் தகவல் - :) குழந்தைமை பிடித்தது!
வருகைக்கு நன்றி வெங்கட். என் பயாலஜிக்கல் கிளாக் ரொம்ப துல்லியம். மதியம் மூன்று மணி ஆனால் கண் சுழலும். அதனாலேயே மாட்டினி ஷோக்களுக்கு போகும் பொழுது என் மகனும், மகளும் அம்மா தூங்கறயா?,முழிச்சுண்டிருக்கயா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
Deleteநான் பிலிப்பைன்ஸில் ஒரு இரு வார டிரெயினிங்குக்குப் போயிருந்தேன் (கணிணி அப்ளிகேஷன் சம்பந்தமாக). அதற்கு அந்த நாட்டு உணவுக் கழகத்திலிருந்து இரு பெண்களும் வந்திருந்தனர். பேச்சு வாக்கில் அவர்களது வேலை இவைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் ஐ.ஆர்.8 நெல் அவர்களது அலுவலகம் கண்டுபிடித்தது என்றார். அப்போது நான், எங்கள் ஊரில் ஐ.ஆர்.8 நெல் என்று சிறு வயதிலிருந்து பேசுவதையும் விளைவிப்பதையும் அறிவேன், அதன் தொடக்கம் பிலிப்பைன்ஸா என்று ஆச்சர்யப்பட்டேன். அங்க விளையும் தேங்காய் (நான் சொல்வது இளநீர் சைஸைச் சொல்லவில்லை. அதனுள்ளிருக்கும் தேங்காய் சைஸைச் சொல்கிறேன்) சைஸை நான் எந்த ஊரிலும் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட 1 லிட்டர் இளநீர் அனேகமாக எல்லா இளநிக்களும் அங்கு தரும். தேங்காய் மிகப் பெரியதாகவும் இருக்கும்.
ReplyDeleteஇன்று நீங்கள் அதனை விளக்கமாகப் போட்டிருக்கிறீர்கள்.
//இன்று நீங்கள் அதனை விளக்கமாகப் போட்டிருக்கிறீர்கள்.// இதை நீங்கள் இந்தோனேஷியாவில் கிடைக்கும் இளநீர் பற்றி எழுதிவிட்டு பின்னர் எழுதியிருப்பதால்,கொஞ்சம் குழம்பி விட்டேன். வருகைக்கு நன்றி.
Deleteமுதலில், பிறந்தநாள் குறித்து நீங்கள் எழுதியது, சிறுவர்களின் களங்கமற்ற மனநிலையைக் காண்பிக்கிறது. நான், சிறு வயதில், என் பாட்டியிடம் (அப்பாவைப் பெற்றவர்) சண்டை போட்டபோது, 'இன்னிக்கி எங்க அப்பா வாங்கிவந்த கத்திரிக்காய்ல பண்ணின கூட்டுதானே சாப்பிட்ட, அதைக் கக்கு' என்று கோபத்தில் சொல்வேனாம் (அதுவும் களங்கமில்லா மனதா? ஹா ஹா)
ReplyDelete//'இன்னிக்கி எங்க அப்பா வாங்கிவந்த கத்திரிக்காய்ல பண்ணின கூட்டுதானே சாப்பிட்ட, அதைக் கக்கு' என்று கோபத்தில் சொல்வேனாம் (அதுவும் களங்கமில்லா மனதா? ஹா ஹா) // அதை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களே, இப்போது நிச்சயம் களங்கமில்லாத மனதுதான்.
Delete//இல்லையில்லை, அப்படி இருந்தால் பச்சைக் கல் அட்டிகை அல்லவா கேட்டிருக்கும்.//
ReplyDeleteசிரித்து விட்டேன்! அந்தக் குழந்தையின் குழந்தைத்தன்மையும் புன்னகைக்க வைத்தது. அது இருக்கட்டும்... என் பிறந்த நாள் அடுத்த மாதம் வருகிறது... சொல்லி வைக்கிறேன்!
//என் பிறந்த நாள் அடுத்த மாதம் வருகிறது... சொல்லி வைக்கிறேன்! // ஹாஹா! அதென்ன ராஜ பார்வை ஜோக் என்று கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். வேறு ஒன்றுமில்லை நீங்கள் சொல்லியிருப்பதேதான். வருகைக்கு நன்றி.
Deleteஏனோ எனக்கு ஐஸ்க்ரீம் மேலே ஆசையே வருவதில்லை. எப்போதாவது சும்மா டேஸ்ட் பார்ப்பேன். அவ்வளவுதான்.
ReplyDeleteஎனக்கும் ஐஸ்க்ரீம் ஆசை அற்றுப் பொய் விட்டது. குடும்பத்தினர்கள் ஒரு முறை இந்த சிஸ்லர் ஐஸ்க்ரீம் பற்றி சொன்னதை கேட்டு சுடச்சுட ஐஸ்க்ரீமா? எப்படி இருக்கும்? என்று சுவைக்க ஆசை வந்தது.
Deleteகைதி படம் பார்க்கவேண்டும் என்று முதலில் இருந்த ஆர்வம் இப்போது போய்விட்டது. படம் பெரும்பாலும் இருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள், எப்போது பார்த்தாலும் சண்டை.... எனக்கு வேண்டாம்!
ReplyDeleteடிசம்பர் கச்சேரிகளில் சிலசமயம் சட்டென குறட்டை விட்டு தூக்கிவாரிப்போட்டு நிமிர்ந்ததுண்டு. சுகமான இசையும், ஸியும் தாலாட்டி விடும். நான் தியேட்டருக்கு சென்றே பல வருடங்கள் ஆகி விட்டன! பாஹுபலி விதிவிலக்கு!
ReplyDeleteகச்சேரியில் குறட்டையா?
Deleteதாதுவருஷப் பஞ்சம் பற்றி நிறைய சொல்வார்கள். படித்திருக்கிறேன். அரிசி பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.
ReplyDelete//அரிசி பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.// இதற்கும் மறுப்பு வந்திருக்கிறது. அதையும் பகிர்கிறேன்.
Deleteஅரிசியின் வரலாற்றை நானும் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் எழுதி இருக்கேன். காலம்பரத்தான் தேடணும்.
ReplyDeleteசூப்பர்! உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை பதிவு பண்ண முடியுமா? என்று பார்க்கிறேன்.
Deletehttps://sivamgss.blogspot.com/2015/09/blog-post_23.html
Deletehttps://sivamgss.blogspot.com/2015/10/2.html
https://sivamgss.blogspot.com/2015/10/3.html
இன்னிக்குத் தான் உட்கார்ந்து தேட நேரம் கிடைச்சது. இதைத் தொடர இன்னும் சில பதிவுகள் எழுதி வைச்சுட்டுப் போட முடியலை.
அன்பு பானு மா,
ReplyDeleteகுழந்தைகளோடு குழந்தையாகச் சந்தோஷப்பட நல்ல வாய்ப்பு. அதுவும் மதர் செண்டரில். வாழ்த்துகள்.
கைதி என்று படமா.
ரெக்ளைனிங்க் சீட் ரொம்ப சௌகர்யம். சிகாகோவில் இரண்டு படம் இப்படிப் பார்த்தேன்.
அரிசி வரலாறு சுவாரஸ்யம். தகவல்கள் அருமையாகச் சேகரித்திருக்கிறீர்கள்.
நம் ஐயா கி.ராஜ நாராயணன் எழுதியது மிக நகைச்சுவையாக இருக்கும்.
நன்றி வல்லி அக்கா.
Deleteமதர் சென்டர் என்பது எங்கே இருக்கு? பாண்டிச்சேரி அன்னையோட கோயிலோ? "கைதி" படம் பார்க்கணும்னு நினைச்சேன். முடியலை. நேரம் சரியா அமையவில்லை. கைதி படத்தைப் பார்க்கும்படி நீங்க எனக்கு சிபாரிசு செய்ததாக நினைவு.
ReplyDeleteமதர் சென்டர் என்பதை கோவில் என்று கூற முடியாது. பிரார்த்தனை கூடம் என்று வேண்டுமானால் சொல்லலாம். சென்னையில் மாம்பலம், டி.நகர், மடிப்பாக்கம், மவுண்ட் ரோடு என்று பல இடங்களில் இருக்கிறது. இதில் மவுண்ட் ரோடு சென்டரை மதரே துவக்கி வைத்தாராம். திருச்சியில் கூட சில இடங்களில் இருக்கிறது.
Delete//கைதி படத்தைப் பார்க்கும்படி நீங்க எனக்கு சிபாரிசு செய்ததாக நினைவு.// நானா? கைதி படம் பார்க்கச்சொல்லி சிபாரிசா? NOOOO!
Deleteமதர் சென்டர் மலர் அலங்காரம், குழந்தையின் அழைப்பு அருமை.
ReplyDeleteஅரிசி வரலாறு அற்புதம். அரிசி ரகங்களின் பேர்கள் எல்லாம் மாயவரம் வந்த பின் தான் எனக்கு தெரியும்.
ஒரு காலத்தில் ஜஸ்கீரீம் குழந்தைகளுடன் போட்டி போட்டு சாப்பிடுவேன், இப்போது இல்லை.
குழந்தைகளுடன் மாதம் ஒரு முறை தொயேட்டர் போய் படம் பார்ப்போம். இப்போது தியேட்டர் போய் படம் பார்ப்பேதே இல்லை.
மகனுடன் வெளி நாட்டில் தியேட்டர் போன போது நீங்கள் சொன்ன ரெக்லினெர் சீட்டில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு கார்டூன் படம் பார்த்தோம்.
வருகைக்கும், தகவல்களுக்கும் நன்றி.
Deleteஅரிசி தகவலும் அருமை...
ReplyDeleteநன்றி டி.டி
Deleteபத்து பின்னூட்டங்களைப் படித்து விட்டால் போதும்.. பதினொன்றாவது தேறும் போலிருக்கு.. பதினொன்றாவது பத்திலிருந்து விலகி வேறுபட்டு இருக்க வேண்டும் என்று ஆசை வேறு!
ReplyDeleteவயிறு நிரம்புவதில் அரிசியில் என்ன மாயம் இருக்கிறது?.. அதனால் தானோ அதனை அமுதம் என்று வைணவர்கள் அழைக்கின்றனரோ?...
//வயிறு நிரம்புவதில் அரிசியில் என்ன மாயம் இருக்கிறது?.. அதனால் தானோ அதனை அமுதம் என்று வைணவர்கள் அழைக்கின்றனரோ?...// புதிய சிந்தனை. வருகைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல சுவையான மசாலா சாட்டாக தந்துள்ளீர்கள். குழந்தைகளின் மனப்போக்கே சுவாரஷ்யமானது. ஒரு குழந்தை ஒன்றை சொன்னவுடன்/செய்தவுடன் மற்றொரு குழந்தை தானும் அதையே பிரதிபலிப்பது பார்க்க நன்றாக இருக்கும். உங்களிடம் தன் பிறந்த நாளைச் சொன்ன அந்த குழந்தைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும்.
படுத்துக் கொண்டே சினிமா பார்ப்பது என்ற செய்தி எனக்குப் புதிது. பஸ் பிரயாணத்தில் படுத்துக் கொண்டே பிரயாணம் செய்வதே எனக்கு சற்று கடினமாக இருக்கும்.
ஐஸ் கீரிம் நான் சாப்பிட வேண்டுமென நினைத்தப் போது கிடைக்கவில்லை. இப்போது சாப்பிட முடியாததால் சாப்பிடுவதில்லை. தாங்கள் அளித்த படம் கண்ணுக்கு விருந்து.
அரிசி பற்றிய செய்திகளை அறிந்து கொண்டேன். படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. நான் தாமதமாக வந்து கருத்து தருவதற்கு மன்னித்துக் கொள்ளவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
Deleteமீ இம்முறை ரொம்ப லேட்டோ?:), கடகடவென புதுப்போஸ்ட்டுகள் வந்து இப்போஸ்ட் கீழே போய் விட்டது.
ReplyDeleteஅதுசரி பேச்சை மாத்தாதீங்கோ:).. 30 கிலோ மீற்றர் நடந்தீங்களோ?:).. இல்லை எனில் இனி அடுத்த கார்த்திகை மாதம்தான் அடுட்த்ஹ ஐஸ்கிறீம் உங்களுக்கு:)) ஹா ஹா ஹா:)..
//மீ இம்முறை ரொம்ப லேட்டோ?:),// அதனால் என்ன? வருவதுதான் முக்கியம். வாங்கோ வாங்கோ. //30 கிலோ மீற்றர் நடந்தீங்களோ?:).. // அடுத்த கார்த்திகைக்குள் நடந்து விடுவேன். ஹி ஹி!
Delete//அதை வாங்கி கொண்டு, "மார்ச் 10th நீங்க இங்க வாங்க" அழைப்பு விடுத்தது. பூஸாருக்கு உறவாக இருக்குமோ? இல்லையில்லை, அப்படி இருந்தால் பச்சைக் கல் அட்டிகை அல்லவா கேட்டிருக்கும்.//
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) அந்தக் குட்டியின் இன்னொரு தங்கை என இன்னொன்று வந்து நிக்காமல் விட்டுவிட்டதே ஹா ஹா ஹா:))..
எனக்கும் வருது கிட்டடியில பானுமதி அக்கா:)).. கிஃப்ட்டுடன் வந்திடுங்கோ:))
//அந்தக் குட்டியின் இன்னொரு தங்கை என இன்னொன்று வந்து நிக்காமல் விட்டுவிட்டதே ஹா ஹா ஹா:))..// அதுதானே? என் பர்ஸ் காலி.
Delete//எனக்கும் வருது கிட்டடியில பானுமதி அக்கா:)).. கிஃப்ட்டுடன் வந்திடுங்கோ:))// விசா அனுப்பி விடுங்கள். எனக்கும் ஸ்காட்லாண்ட் பார்க்க ஆசை. அழகாக இருக்குமாமே?
எனக்கும் தியேட்டரை நினைச்சாலே நித்திரை வந்திடும். அதிலயும் சண்டைப்படமெனில், உடனேயே நித்திரையாகிடுவேன் ஹா ஹா ஹா அதனால இப்போ தியேட்டர் போய்ப் பார்க்கும் படமெனில் நன்கு அலசி ஆராய்ஞ்ச பின்னர்தான்.. கடசியாக பார்த்தது பிளக் பந்தர் என நினைக்கிறேன்ன்..இங்கிலிஸ் படம்.. நித்திரையே கொள்ளாமல் பார்த்து முடிச்சேன் தெரியுமோ:))
ReplyDeleteநான், நீங்கள், ஸ்ரீராம்,வெங்கட் எல்லோரும் சேர்ந்து சினிமா தியேட்டரில் தூங்குபவர்கள் சங்கம் ஒன்று ஆரம்பித்து விடலாம்.
ReplyDelete