கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 17, 2020

அம்மன் அருள்

அம்மன் அருள் 



எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது, வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த என் கணவர் என்னிடம்,"அங்கு ஃபாமிலி விசா கிடைப்பது கொஞ்சம் கடினம். நான் உன்னை அங்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறேன், உன்னை அழைத்துச் செல்ல முடியாவிட்டால் நான் இங்கு வந்து விடுவேன்" என்றார். நான் அதற்கு ஒப்புக் கொண்டதால்  திருமணம் நடந்தது. திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் எனக்கு விசா கிடைக்காததால்  நான் பிறந்த வீட்டில்தான் இருந்தேன். 
அதற்குள் இங்கு இருப்பவர்கள்,"உனக்கு இன்னும் விசா கிடைக்கவில்லையா? நீ இன்னும் இங்குதான் இருக்கிறாயா?" என்றெல்லாம் கேட்டு நோகடித்தார்கள். 

என் இரண்டாவது அக்கா, "சமயபுரத்திக்கு ஐந்து சனிக்கிழமைகள் சென்றால், நவகிரக தோஷங்கள் நீங்கும் என்கிறார்களே, நாமும் செல்லலாம்" என்றாள். நானும் அவளும் ஒரு சனிக்கிழமை சமயபுரம் சென்றோம். சனிக்கிழமை என்பதாலும், நாங்கள் சென்றது மதிய நேரமாக இருந்ததாலும் கூட்டம் அதிகம் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக, கோவிலில் கும்பல் நிரம்பி வழிந்தது. காரணம், கார்த்திகை மாதமாக இருந்ததால் சபரிமலை சீசன் தொடங்கி விட்டதுதான். இலவச தரிசன கியூ எங்கேயோ இருந்தது. சிறப்பு கட்டண வழியில் செல்ல லாம் என்றால் கையில் போதுமான அளவு பணம் இல்லை. 
வெளியே செல்லும் பொழுது கணக்காக பணம் எடுத்துச் செல்லும் என் கெட்ட பழக்கத்தை நொந்து கொண்டு, வெளியே இருந்தபடியே அம்மனை தரிசித்து விட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்தோம். 

துவஜஸ்தம்பத்திற்கு அருகில் நின்ற வண்ணம் அம்மனை தரிசித்து விட்டு, நமஸ்கரித்து எழுந்த பொழுது வி.ஐ.பி. தரிசன வழியே ஒரு அரசியல் பிரமுகர் அம்மனை தரிசித்து விட்டு கழுத்தில் மாலையோடு ஆரவாரமாக வெளியே வந்து கொண்டிருந்தார். நாங்கள் அவருக்கு வழி விட்டு ஓரமாக ஒதுங்கி நின்றோம். அப்போது எங்களை பார்த்த அர்ச்சகர் ஒருவர், "நீங்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டீர்களா?" என்றார். நான், "வெளியிலிருந்தபடியே தரிசித்து விட்டோம் " என்றேன். என் அக்காவோ, சாமியை தரிசனம் பண்ணக்கூட பைசா தேவையாக இருக்கிறதே" என்றாள். இதைக் கேட்ட அவருக்கு என்ன தோன்றியதோ, " நீங்கள் உள்ளே செல்லுங்கள், உள்ளே இருப்பவரிடம் நான் சொல்கிறேன்" என்றார். 

"பரவாயில்ல, நாங்கள் இங்கிருந்தபடியே பார்த்து விட்டோம்"   என்று நான் மறுத்ததை பொருட்படுத்தாமல் உள்ளே இருந்த ஒரு அர்ச்சகரை அழைத்து, " இவங்க ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போய் தரிசனம் செய்து வையுங்கள்" என்றார். உடனே அவர் எங்களை வி.ஐ.பி. வரிசையில் அழைத்துச் சென்று, அம்மனுக்கு வெகு அருகில் தரிசனம் செய்வித்து, பிரசாதமாக என் கையில் ஒரு ஜவந்தி பூ மாலை, என் சகோதரிக்கு ஒரு அரளிப்பூ மாலை, குங்குமம் இவைகளைத் தந்தனர். நாங்கள் சிலிர்ப்போடும்,சந்தோஷத்தோடும், மன நிறைவோடும் வீடு திரும்பினோம்.  அடுத்த சனிக்கிழமைக்குள் எனக்கு விசா கிடைத்தது, அடுத்த மாதமே வெளிநாடு சென்று விட்டேன்.   
சமயமறிந்துதவும் சமயபுரத்தம்மன் என் வாழ்வில் நடத்திய அற்புதம் இது. 




28 comments:

  1. அன்னையவள் மனதை யாரறிவார்...
    அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் கோடி கோடி...

    ஓம் சக்தி ஓம்..

    ReplyDelete
    Replies
    1. அவள் மனது வைத்து விட்டால், பிரச்சனைகள் நொடியில் பஞ்சாக பறந்து விடும். நன்றி.

      Delete
  2. ஆச்சர்யமான நிகழ்வு.  

    அம்மன் தரிசனம் உடனே இபப்டி கிடைத்தது ஆச்சர்யம்.  அடுத்த ஒரே வாரத்தில் விசா கிடைத்துக் கிளம்பியது அதைவிட ஆச்சரியம்.  அந்த அரசியவாதிக்கு அப்படிக் கேட்கத்தோன்றியதும் உதவியதும்தான் பெரிய ஆச்சர்யம்.  அவர் நாக்கில் அம்மன் வந்து உதவி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதி அல்ல, அர்ச்சகர் கேட்டிருக்கிறார்.

      Delete
    2. ஓ...   மறுபடி படித்துத் தெளிந்தேன்.  ஓகே...  ஓகே...

      அகிலமெல்லாம் விளங்கும்"....... அம்மன் அருள்..."

         பாடிக்கொண்டே எஸ்கேப் ஆகிறேன்!

      Delete
    3. உண்மைதான் ஸ்ரீராம், அம்பிகைதான் அர்ச்சகரை கேட்கச் சொல்லியிருகிறாள். வருகைக்கு நன்றி.

      Delete
  3. சமயபுரத்து அம்மாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
    அவள் நேரில் வரும் தெய்வம்.
    உங்கள் அனுபவம் அவளது அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகக்
    கிடைக்க வழி செய்த விதம் மகா அதிசயம்.
    அந்த அர்ச்சகர் மூலம் உங்களை
    வரவழைத்து ஆசிகளையும் கொடுத்து விட்டாள்.
    தாயே சரணம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ரேவதி, இந்த சமயபுரம் மாரியம்மனின் அருளைப் பற்றியும் ஓர் பதிவு போட்டேன் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர்! இவள் தான் எங்க மாமனார் ஊரான கருவிலிக்குச் செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோயிலில் ஒவ்வொரு வைகாசி மாதமும் "ஆகாச மாரியம்மனாக" வருகிறாள். அங்கே தங்கி இருந்து அருள் பாலிப்பாள். நாங்கள் அந்த வழியாகச் செல்லும்போதெல்லாம் இவளைத் தாண்டிச் செல்லாமல் இருந்து தரிசனம் செய்து விட்டே செல்வோம்.

      Delete
    2. சமயபுரம் மாரியம்மன் வரப்பிரசாதி. நானும் கூட அவள் அருளுக்கு பாத்திரமாகியிருக்கிறேன் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. நன்றி வல்லி அக்கா.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    அற்புதமான பதிவு. படிக்கும் போதே மெய்சிலிர்க்க வைத்தது. இது போல சம்பவங்கள் சில வாழ்க்கையில் நடக்கும் போது, தெய்வங்களின் மேலிருக்கும் பக்தி. அன்பு, நம்பிக்கை, அனைத்தும் நமக்கு கூடிக்கொண்டே போகிறது. அம்மனின் அருளால் உங்களுக்கு விசா கிடைத்து, நீங்கள் வாழ்க்கையை துவக்க கட்டளை இட்டிருப்பது அவள் அருளாசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருப்பதை உணர்த்துகிறது. நீங்கள் இன்று ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனத்தையும், அவளின் அருளைப் பற்றியும், எங்களுக்கு தெரியபடுத்தியதின் மூலம், எங்கள் மீதும் அவளின் அன்பான கடைக்கண் பார்வை விழுந்ததை போன்று உணர்ந்தேன். அம்பாள் அனைவரையும் இந்த லோக கஷ்டங்களிலிருந்து காத்தருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் பரவசம் தந்த சிலிர்ப்பான அனுபவம். நீங்கள் சொல்லியிருப்பது போல அவளருளால் விரைவில் இந்த உலகத்தை பீடித்திருக்கும் துபம் நீங்கி,இயல்பு நிலை திரும்ப வேண்டும். நன்றி கமலா.

      Delete
    2. *துன்பம் நீங்கி

      Delete
  5. அம்பிகை மனது வைத்தால் எதுதான் நடக்காது? இப்போவும் அம்பிகை தான் மனது வைக்கணும். எங்களுக்கும் இம்மாதிரி நிறைய ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்தது உண்டு. இப்போக் கூட மருமகள் இங்கிருந்து திரும்பிப் போக வழியில்லாமல் இருக்கேனு மனம் நொந்து போய் எங்க ஊர் மாரியம்மனுக்கும், அங்கே உள்ள பொய்யாப் பிள்ளையாருக்கும் வேண்டிக்கொண்டு காசு எடுத்து வைத்தேன். நான்கே நாட்களில் விமானங்கள் செல்வதை அறிவிப்புச் செய்தார்கள். பையரும் உடனடியாகப் பயணச்சீட்டை வாங்கி உறுதி செய்தார். நான் காசு வைத்த அடுத்த வெள்ளியன்று மருமகள் கிளம்பி விட்டாள். இது அம்மன் அருளன்றி வேறென்ன?

    ReplyDelete
    Replies
    1. //அம்பிகை மனது வைத்தால் எதுதான் நடக்காது? இப்போவும் அம்பிகை தான் மனது வைக்கணும்.// இப்போதும் அம்பிகைதான் மனது வைத்து, நிலைமையை சீராக்க வேண்டும்.

      Delete
  6. அதிசய நிகழ்வுதான் மேடம்.

    இலவச தரிசனத்தை ஒழித்து, பணம் கட்டித்தான் இனிமேல் வணங்க முடியும் என்ற கட்டாய நிலை நாளைய சந்ததிகளுக்கு நிச்சயம் வரும் - கில்லர்ஜி

    ReplyDelete
  7. எங்களுக்கும்சமயபுர அம்மனை ஆண்டுதோறும் தரிசிக்கும் வாய்ப்பு இருந்தது என்மூத்தமகன் செவ்வாய்தோறும் எலுமிச்சம்பழ வழிபாடு செய்வான் அவன் நினைத்த எம்பிஏ கோர்ஸ் மணிபாலில் கிடைத்தது

    ReplyDelete
    Replies
    1. பலருக்கும் பலவித அனுபவங்கள். நன்றி.

      Delete
  8. எனக்கு புட்டபர்த்தி சாய்பாபாவின் துணையால்தான் மனைவிக்கு ஃபேமிலி விசா கிடைத்தது என்று நம்புகிறேன். அவர்தான் அதனைச் செய்தவர். (95ல்)

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா? சாயி பாபாவிடம் கிடைத்த அனுபவங்களும் இருக்கிறது. நன்றி நெல்லை.

      Delete
  9. வியப்பு தரும் நிகழ்வு சிறப்பு...

    ReplyDelete
  10. வியக்க வைக்கும் நிகழ்வு. சமயபுரத்து அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அம்மன் அருள் வேண்டி துதிப்போம். நன்றி வெங்கட்.

      Delete
  11. சமயபுரம் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என் சொந்த வாழ்க்கையிலும் அதை உணர்ந்திருக்கிறேன் . இன்று நான் நடப்பதற்குக் காரணமே அந்த அம்மன்தான் .அபயாஅருணா

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ பேர்கள் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியவள் நம் அன்னை. நன்றி.

      Delete
  12. "மகமாயி சமயபுரத்தாளே" என்ற பாடல் நினைவுக்கு வருது.

    அன்னை நினைத்தாள் அற்புத காட்சி கொடுத்தாள். உங்கள் அன்பான கோரிக்கையை நிறைவேற்றி விட்டாள்.

    அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. //அன்னை நினைத்தாள் அற்புத காட்சி கொடுத்தாள்.// அதேதான். அவள் நினைவில் நாம் இருப்பதற்குதான் நாம் முயற்சிக்க வேண்டும். நன்றி

      Delete