கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, September 27, 2020

இயல்பு நிலை திரும்புகிறதா?

இயல்பு நிலை திரும்புகிறதா? 

கடந்த ஒரு மாதத்தில் மூன்று  சனிக்கிழமைகளில் வெளியே செல்ல நேர்ந்தது. முதல் முறை சென்ற பொழுது சாலையில் அத்தனை வாகனங்கள் இல்லை. சென்ற வாரம் ஓரளவு நார்மல் போக்குவரத்து காணப்பட்டது. நேற்று கொஞ்சம் பர்சேஸ் செய்ய  வேண்டியிருந்ததால் ஜெயநகர் சென்றோம். வழக்கமான நெரிசல் தொடங்கி விட்டது என்றே தோன்றியது. உணவகங்கள் திறந்து விட்டாலும் கும்பல் குறைவாகவே இருக்கிறது.

ஆகஸ்ட் 15 அன்று மாலை எம்.ஜி.ரோட்


மேலே இருக்கும் படத்தில் இருப்பது செலஃபோன் கடை ஒன்றில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக வரையப்பட்டிருந்த கட்டங்கள். ஆனால் அதை மதிக்காமல் கும்பலாக நின்றபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.  

கொஞ்சம் ஜவுளி எடுக்க வேண்டியிருந்தது எனவே ஜெயநகரில் இருந்த வரமஹாலக்ஷ்மி கடைக்குச் சென்றோம். உள்ளே நுழையும் முன் நம் காலணிகளை ஒரு பையில் சேகரித்து டோக்கன் தந்தார்கள். எல்லா கடைகளையும் போல் ஹாண்ட் சானிடைசரை கையில் பூசிக்கொண்டு உள்ளே நுழைந்தால் நடுவில் பிரதானமாக பெரிய மஹாலக்ஷ்மி சிலை. தரையில் பாய்கள் விரிக்கப்பட்டு அதன் மீது வெள்ளைத் துணியை விரித்து புடவைகளை காட்டுகிறார்கள். நாம் தரையில் உட்கார்ந்து பார்க்கலாம், கீழே அமர முடியாதவர்கள் நாற்காலியிலோ அல்லது குட்டை ஸ்டூலிலோ அமர்ந்து கொள்ளலாம். விற்பனை சிப்பந்திகள் பொறுமையாக, சலிக்காமல் புடவைகளை காண்பித்தார்கள். ஆனாலும் சென்னையில் ஜவுளிக் கடலில் ஷாப்பிங் செய்து விட்டு இங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது குற்றாலீஸ்வரனை நம்முடைய வளாகத்தில் இருக்கும் சிறு நீச்சல் குளத்தில் நீந்தச் சொன்னது போல் இருக்கிறது. பில்லை கட்டியதும் துணிகளை பையில் போட்டு அங்கிருக்கும் ஐயர் ஒருவர் அவைகளை மஹாலக்ஷ்மி உருவச்சிலை முன் வைத்து, தீபாராதனை காட்டி நம்மிடம் தந்தது வித்தியாசமாக இருந்தது. 

கும்பலில்லாத சென்ட்ரல் மாலில் அனாவசிய எக்ஸ்பிரஸ் பில்லிங் கவுண்டர் 

வீட்டிற்கு வந்ததும் முறையாக ஆவி பிடித்தோம். அதென்ன முறையாக என்கிறீர்களா? ஆவி பிடிக்கும் பொழுது முதல் ஐந்து முறைகள் மூக்கினால் ஆவியை இழுத்து, வாயினால் வெளி விட வேண்டும். பிறகு ஐந்து முறைகள் வாயினால் இழுத்து மூக்கினால் சுவாசத்தை விட வேண்டும். பின்னர் உப்பு நீரில் வாயைக் கொப்பளித்தோம். 


செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 03 வரை ஸ்டீமிங் வாரமாம். எல்லோரும் தினசரி   ஆவி பிடித்து அந்த பெயர் சொல்லாத கிருமி பரவாமல் தடுக்க வேண்டுமாம். செய்யலாம். 

14 comments:

  1. நான் இங்கே படிதாண்டாப் பத்தினியாட்டமா ரங்கநாயகித் தாயாருக்குப் போட்டியா வீட்டிலேயே உட்கார்ந்திருக்கேன். :))))) போகணும் கடைகளுக்கு. ஆனால் பயம்!

    ReplyDelete
    Replies
    1. Take your own time. நம் மக்களுக்கு இன்னும் சமூக பொறுப்பு வரவில்லை. வெளியே சென்று விட்டு வரும் பொழுதெல்லாம் மிகவும் பயமாக இருக்கிறது. மாஸ்க் இல்லாமல் நடப்பவர்கள், சாலையில் எச்சில் துப்புகிறவர்கள்... என்னத்த செய்வது..?

      Delete
    2. திங்கட்கிழமை ரொம்ப அவசிய, அவசரத்துக்காகக் கடை ஒன்றிற்குச் சென்றுவிட்டுப் போதும் போதும்னு ஆகி விட்டது. இத்தனைக்கும் கூட்டம் இல்லாத நேரமாய் இருக்கணும்னு மத்தியானமா 2 மணிக்குப் போனோம். அப்போவும் எல்லோரும் நம்மைப் போல் நினைப்பவங்க போல! அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். வீட்டுக்கு வரும் வரை திக் திக் தான்! வந்ததும் துணியை எல்லாம் நனைச்சுக் குளிச்சுட்டு வந்ததும் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் இரண்டு நாட்களும் தும்மினால் கூடப் பயமா இருந்தது என்னவோ நிஜம்!

      Delete
  2. //குற்றாலீஸ்வரனை நம்முடைய வளாகத்தில் இருக்கும் சிறு நீச்சல் குளத்தில் நீந்தச் சொன்னது போல் இருக்கிறது//

    ஹா.. ஹா.. உவமை ஸூப்பர்.

    //அங்கிருக்கும் ஐயர் ஒருவர் அவைகளை மஹாலக்ஷ்மி உருவச்சிலை முன் வைத்து, தீபாராதனை காட்டி நம்மிடம் தந்தது வித்தியாசமாக இருந்தது//

    இதெல்லாம் வியாபாரத் தந்திரம். இதே வேலையை தீபாவளிக்கு பட்டாசு வாங்கினால் செய்வார்களா ?

    புதுமை என்ற எந்த காரணத்தை இந்த சமூகம் காட்டினாலும் அது மக்களின் மூளையை சலவை செய்து அவர்கள் பிழைப்பதற்கே...

    நமது மதி மயக்கம் பணம் இழப்பே...

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி.. உங்க சந்தேகம்லாம் ஏடா கூடமா இருக்கு. புத்தகம், புதுத் துணி போன்றவைக்கு இந்த செண்டிமெண்ட். வெடிகளுக்குத்தான் மஹாலக்‌ஷ்மி வெடி அப்படி இப்படீன்னு செண்டிமெண்ட் பெயர் கொடுக்கறாங்களே.

      Delete
    2. புடவை எடுப்பவர்கள் பெரும்பான்மையோர் திருமணம், போன்ற விசேஷங்களுக்காகவும் பண்டிகைகளை கொண்டாடவும் தான்  எடுப்பார்கள். அப்போது, அவற்றை கடவுளுக்கு முன்  வைத்து, பிரசாதம் போல கொடுப்பதில் என்ன தவறு?  நல்ல ஒரு உணர்வைத் தரலாம். வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி. 

      Delete
  3. துணிகளுக்கு அர்ச்சனையா? எப்படீல்லாம் சிந்திச்சு செண்டிமெண்ட் தூண்டில் போடறாங்க இந்த வியாபாரிகள்.

    நான் பதின்ம வயதில் இருந்த போது, திருவள்ளுவர் பஸ்ஸில் நெடுந்தூரம் பயணித்தால் அவங்க நிறுத்தும் ஹோட்டலில், பிராமண பாஷையில் இட்லி, பொங்கல் சூடா இருக்கு வாங்கோ என்று சொல்லுவார். எல்லாமே வியாபார தந்திரங்கள்தாம்.

    ReplyDelete
    Replies
    1. துணிகளுக்கு அர்ச்சனை இல்லை. வாங்கப்பட்ட  துணிகளை  அம்பாள்/தாயார்  சிலைக்கு முன் வைத்து தாயாருக்கு தீபம் காண்பித்து தருகிறார்கள். நன்றி நெல்லை. 

      Delete
  4. ஹூஊஊஉம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
    கடையா அது எப்படி இருக்கும் பானுமா:)
    நல்ல சுவாரஸ்யமான அவுட்டிங்க்.

    என்ன இருந்தாலும் சென்னை மாதிரி வராது.

    இங்கே எல்லாமே ஆன்லைன் தான். இரவு உடை உள்பட.

    பரவாயில்லை. மற்றவர்கள் சுகம், நம் பாதுகாப்பு முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க முடியும்? ஆனால் மக்களுக்கு பொறுப்பு வேண்டும். நன்றி வல்லி அக்கா. 

      Delete
  5. ஊரடங்கு எனும் தொற்று - இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது தான்...!

    ReplyDelete
    Replies
    1. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் டி.டி. நன்றி. 

      Delete
  6. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - என இன்று அறிவிப்பு வந்திருக்கிறது!

    இயல்பு நிலை திரும்புவதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  7. கடவுளே! பள்ளிகளை திறக்கலாமா என்று ஆலோசிக்கிறார்கள் என்று செய்தி வந்ததே. கருத்துக்கு நன்றி வெங்கட். 

    ReplyDelete