கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 13, 2021

கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!

 கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!


உலகமே ஸ்தம்பித்திருக்கிறது. தொழில்கள் முடங்கி யிருக்கின்றன, லட்சக்கணக்கில் மரணம், காட்டுத் தீயாய்  பரவிய நோய் இப்போதுதான்  கட்டுக்குள் வந்திருக்கிறது. அதற்குள் இரண்டாவது அலை என்கிறார்கள். சில நாடுகள் மீண்டும் பொது முடக்கம் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில்  மாஸ்டர் என்று ஏதோ ஒரு சினிமாவாம் அது திரையரங்கில்தான் வெளியிடப்பட வேண்டுமாம், மக்களை பற்றியும், அவர்கள் நலனைப் பற்றியும், இதனால் சமூகமும், அரசாங்கமும் எதிர் கொள்ள வேண்டிய ஆபத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் 100% ஆகுபன்சி வேண்டும் என்று அந்த நடிகர் முதலமைச்சரை பார்த்து பேசுகிறார். அவருடை ரசிகர்கள் ஏதோ அந்த படத்தை பார்க்காவிட்டால் தங்கள் ஜென்மம் கடைத்தேறாது என்பது போல மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி என்ற பிரக்ஞை இல்லாமல் முன்பதிவுக்கு முட்டி மோதுகிறார்கள். என்ன கொடுமை இது? 

விஜய்க்கு சமூக பொறுப்பு என்பது கொஞ்சமாவது இருந்தால் தன்னுடைய  படத்தை OTTஇல் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது தன் ரசிகர்களுக்கு ஆன் லைனில் மட்டுமே பதிவு செய்து படத்தை பாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். அவர் எப்படி செய்வார்? தன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்காதவர்கள்தானே இவர்கள்.  இவர்கள் ஒரு புறம் கோக கோலா  விளம்பரத்தில் நடிப்பார்கள், இன்னொரு புறம் கார்ப்பரேட் கம்பெனிகள் நம் நீராதாரத்தை சுரண்டுகின்றன என்று குரல் கொடுப்பார்கள்.  'ஒரு விரல் புரட்சியே..' என்று இவர்கள் பாடினால் போதுமா? மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டாமா?

அரசாங்கத்தின் செயல்பாடும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.  திரை
யரங்குகளுக்கு ஆன் லைனில் மட்டுமே டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க  வேண்டும். சுற்றுலா தளங்களிலும், விமான நிலையங்களிலும், ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் கடுமையான சட்ட திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்கம் சினிமா அரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? 



20 comments:

  1. சமுக அக்கறையை நடிகர்களிடம் இருந்து எதிரபார்க்க முடியாது

    ReplyDelete
    Replies
    1. அப்படி சமூக அக்கறை இல்லாதவர்களை ஒரு நாள் இந்த சமூகம் தூக்கி எறியும்.

      Delete
  2. உண்மையாகவே பொறுப்பினமையின் உச்சக்கட்டம் இது.  மக்களுக்கும் அறிவில்லை.  சில இடங்களில் 50% என்பதை விட்டு விளக்குகளை அணைத்ததும் 100% அமர வைத்திருக்கிறார்கள் என்று செய்திகளில் கட்டியதாகச் சொன்னார்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்ன மாதிரி மனிதர்கள்! நினைக்க நினைக்க ஆறவில்லை. அதான் பொங்கிட்டேன்.

      Delete
  3. தலைப்பு நெல்லை ஜெபமணியிடமிருந்து எடுக்கப்பட்டதா?!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். முதலில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்றுதான் கொடுக்க நினைத்தேன்.

      Delete
  4. இது என்ன... கீதா சாம்பசிவம் மேடம் தளத்துக்கு வந்துவிட்டேனோ என சந்தேகப்படும்படியான இடுகை....ஹா ஹா..

    எந்த ஒரு பிஸினெஸ்மேனுக்கும் சமூக அக்கறை இருக்காது. அவரவர்களுக்கு அவரவர் சம்பாத்தியத்தைப் பற்றி மட்டும்தான் கவலை. டாஸ்மாக் ரசிகர்களைப்பற்றி நமக்கு என்ன கவலை?

    ReplyDelete
    Replies
    1. பிஸினெஸாக இருந்தாலும் எதிக்ஸ் வேண்டாமா? ரசிகனுக்கும் நடிகருக்கும் உள்ள உறவைப் பற்றி நமக்கு எந்த கவலையும் கிடையாது. அவர்களின் முட்டாள்தனம் எந்த தவறும் செய்யாதவர்களையும் பாதிக்கும் என்னும் பொழுது கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

      Delete
  5. ரசனையான ரசிகர்கள் வேறு... வெறித்தனமான வெறியர்கள் வேறு...

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது வகையினர்தான் அதிகம் போலத் தெரிகிறது.

      Delete
  6. நானும் எழுத நினைச்சிருந்தேன். சுமார் 3,000 பணம் செலவு செய்து (ஒருத்தருக்கு) டிக்கெட் வாங்கி இந்தப் படத்துக்குப் போயிருக்காங்க. படம் நன்றாக இல்லை என்பதால் விஜயின் ரசிகர்களே பலர் பாதிப்படத்தில் திரும்பி விட்டார்களாம். 3,000 ரூபாய் என்பது ஓர் அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு மாதத்துக்குச் செலவு ஆகும் தொகை! :(

    ReplyDelete
    Replies
    1. பாபா படம் வெளியான பொழுது ரஜினியின் ரசிகர் ஒருவர் மனைவியின் தாலியை விற்று அந்தப் படத்திற்கு,சென்றதாக செய்தி வந்தது. ஹீம்!

      Delete
  7. பொங்கும் மங்கலம்
    எங்கும் தங்கிடட்டும்...

    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. நன்றி துரை சார். நல்ல நாளும் அதுவுமாக வீணாய்ப் போனவர்களைப் பற்றி என்ன பேச்சு என்கிறீர்களா?ஹாஹா!

    ReplyDelete
  9. இவர்களை எத்தனை தான் சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அப்படி என்ன வெறியோ. பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இன்னும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  10. மக்களின் அறியாமையில் நடிகர்கள் குளிர் காய்கிறார்கள்.

    ReplyDelete
  11. என்னைப் பொருத்தவரை

    ஏமாற்றுபவன் அறிவாளி,
    ஏமாறுபவன் முட்டாள்.

    இப்படத்தில் இவ்வுலகில் யாருமே அறியாத கதையை சொல்லி விட்டார்களா என்ன ? அதே அரைத்த மாவுதானே ?

    திரைப்படக் கூத்தாடியும் நம்மைப் போன்ற மனிதன்தான் என்ற எண்ணம் வராதவரை இந்த சமூகம் உயர்ந்த இலக்கை அடையாது என்பது எனது தாழ்மையான கருத்து.

    விஜய் மட்டுமல்ல எந்தவொரு கூத்தாடியையும் குறை சொல்ல முடியாது அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றார்கள்.

    நல்லதொரு சமூக விழிப்புணர்வு பதிவு ஆனால் தமிழகத்தில் அறிவுக்குருடர்கள் பெரும்பகுதி இந்த எண்ணிக்கை இன்னும் உயரும்....

    ReplyDelete
  12. ஆம், நடிகர்கள் சந்தர்பவாதிகள்தான். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  13. கருத்துபக்கு நன்றி சகோ.

    ReplyDelete