கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, September 9, 2021

விநாயகரின் பதினாறு பெயர்கள்

 விநாயகரின் பதினாறு பெயர்கள் 


நாம் தொடங்கும் செயல்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டுமென்றால் நாம் வணங்க வேண்டியது விநாயக பெருமானை என்பது எல்லோருக்குமே தெரியும்.  மனித வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களான கல்வி கற்க தொடங்குவது, திருமண வாழ்க்கையை தொடங்குவது, பயணங்களை தொடங்குவது, போர் காலங்கள் போன்ற எல்லா காலங்களிலும் விநாயகரை இந்த சிறப்பான பதினாறு பெயர்களை சொல்லி வணங்கி விட்டு தொடங்கினால் அந்த செயல்கள் எல்லாவற்றிலும் எந்தவித தடங்கல்களும் வராது. 

சுமுகஸ்ச்ச ஏக தந்தஸ்ச கபிலோ கஜகர்ணக 

லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக 

தூமகேதூர் கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானந 

வக்ரதுண்ட: சூர்ப்பகர்னோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

ஷோடசைச்ச நாமானி ய: படேத் ஸ்ருணுயாதபி 

வித்யாராம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா

ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே   

  • மங்கள முகம் வாய்ந்த சுமுகர், 
  • ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தர், 
  • கபில நிறம் வாய்ந்த கபிலர், 
  • யானைக் காதுகள் உள்ள கஜ கர்ணகர், 
  • பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரர், 
  • குள்ளத் தோற்றமுள்ள விகடர்,  
  • சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்கினராஜர்,  
  • எல்லா விக்கினங்களையும் அழிக்கக்கூடிய விநாயகர் 
  • நெருப்பை போல் ஒளி வீசக்கூடிய தூமகேது, 
  • பூத கணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷர், 
  • நெற்றியில் பிறைச் சந்திரனை சூடிய பால சந்திரன், 
  • யானைத் தோற்றமுள்ள கஜானனர், 
  • வளைந்த தும்பிக்கையை கொண்ட வக்கிரதுண்டர் 
  • முறம் போன்ற அகலமான காதுகள் கொண்ட சூர்ப்பகர்ணர், 
  • தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு அருள் புரியும் ஹேரம்பர்
  • கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜர் 
  • என்னும் பதினாறு பெயர்களையும் வித்தைகளை கற்க தொடங்கும் பொழுதும்,  
  • வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் போர் காலத்திலும்      
  • யாராவது வாசித்தாலும் அல்லது செவி குளிர கேட்டாலும் அவர்களுக்கு எந்தவித விக்கினங்களும் சம்பவிக்காது. 
இதற்கான விளக்கத்தை என்னுடைய யூ டியூபில் பார்க்கலாம். சுட்டிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன 

https://studio.youtube.com/video/pIMta8SrHBk/edit

https://studio.youtube.com/video/fopb_iPlv-g/edit

https://studio.youtube.com/video/UjV0BIBJLPs/edit

https://studio.youtube.com/video/TS1Hl1RWtYs/edit

https://studio.youtube.com/video/dp9XogvkB7Y/edit




14 comments:

  1. ஆஹா.. நல்ல தகவல். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

      Delete
  2. ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி! உங்களுக்கும் அஃதே

      Delete
  3. விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் பானுக்கா!

    உங்கள் காணொளிகள் பகுதிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. பானுக்கா. சில விளக்கங்கள் புதியதாகத் தெரிந்து கொண்டேன்.

    இந்தப் பதினாறு பெயர்களையும் சேமித்துக் கொண்டேன்.

    மிக்க நன்றி பானுக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி. காணொலிகளை பார்த்ததற்கு சிறப்பான நன்றி

      Delete
  4. https://tinyurl.com/35bd96a6 இந்தச் சுட்டியில் பார்க்கவும். கூகிள் புக் ஸ்டோரிலும் கிடைக்கும். ஃப்ரீ தமிழ்ப் புத்தக வெளியீட்டிலும் கிடைக்கும். பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் என்னும் தலைப்பில் "மழலைகள்" குழுமத்திற்காக 2006 ஆம் ஆண்டிலிருந்து எழுதியவற்றின் தொகுப்பு. உங்கள் யூ ட்யூப் சுட்டிக்கும் தகவல்களுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியை திறக்க முயன்றால்,doesn't match with any documents என்று வருகிறதே..?

      Delete
  5. சிறப்பான விளக்கம். நன்றி....

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமையாக உள்ளது. தங்களின் பல பதிவுகளுக்கு என்னால் வர இயலாமல் போய் விட்டது. தங்களுக்கும் தாமதமான பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள். விநாயகரின் பதினாறு பெயர்களையும் பாடி மகிழ்ந்தேன். அவரின் பெயர்களும் அதன் விளக்கங்களும் பயனுள்ள தகவல்களாக உள்ளது. அதை விளக்கமாக எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. உங்களை கொஞ்ச நாட்களாக எ.பி.யிலும் பார்க்க முடியவில்லை. உடம்பு சாதாரணமாக இருக்கிறீர்களா? பாராட்டுக்கு நன்றி.

      Delete