கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, April 24, 2022

தமிழணங்கு

தமிழணங்கு



முக நூலில் திடீரென்று தமிழணங்கு என்று ஒரே படங்களாக வந்த பொழுது ஒன்றும் புரியவில்லை. அப்புறம்தான் நம் நாட்டிற்குள் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய பிம்பம் அது என்பது. உடனே வலதுசாரிகள் தமிழன்னை இப்படித்தானிருப்பாள் என்று சில படங்களை வெளியிட்டார்கள். 

என்னுடைய ஒரு தோழி, "ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழன்னையிடம் நேட்டிவிட்டி இருக்கிறது. ஏன் தமிழன்னை கருப்பாக இருக்கக் கூடாதா? விரிந்திருக்கும் அந்த கூந்தல் கோபத்தை காட்டுகிறது,ஹிந்தி மீது இருக்கும் கோபம்" என்றார். எல்லாவற்றுக்கும் உள்ளர்த்தம்(significance) சொல்லலாம் போலிருக்கிறது. 

சென்னை கே.கே.நகரில் இருக்கும் அம்மன் கோவிலில் தமிழன்னை சிலை உண்டு. எனக்கென்னவோ  தமிழை ஒரு மொழியாக பார்த்தால் போதும் என்று தோன்றுகிறது.
_____________________________________________

11 comments:

  1. Replies
    1. மறுக்கவில்லை, அதை மதிப்போம், கொண்டாடுவோம் மொழியாக மட்டும். உருவம் கொடுப்பதும், கன்னி, தாய் என்றெல்லாம் கூறுவதும் தேவையில்லை.


      Delete
  2. தமிழ் ஒரு மொழி அது நம் தாய்மொழியாக இருப்பதால் அதை நமக்கு உயிர் தந்த தாயை போல அதை உயிர் மொழி என சொல்லாம் கருதலாம். தமிழ் மொழியை அன்னையாகவோ கருதி வழிபாடு செய்வது எல்லாம் இந்து கலாச்சாரத்தை பின்பற்றுவதால் இருக்கலாம் என கருதுகின்றேன்


    அன்னை இப்படி இருக்கலாமா அல்லது அப்படி இருக்கலாமா என்று கேள்விக்கே இடம் இல்லை. அன்னை அவரவர்களின் பார்வைக்கு வேறுபடலாம். அன்னை கருப்பாக இருக்கலாம் சிவப்பாக இருக்கலாம் மடிசார் அணிந்து இருக்கலாம் முக்காடு போட்டு இருக்கலாம் அந்த் காலம் ம்மாதிரி ரவிக்கை போடாமல் வலம் வரலாம் அல்லது இந்த காலம் மாதிரி ஜீன்ஸ் போட்டும் வரலாம். எப்படி வந்தாலும் அன்னை அன்னைதான்..


    நான் இணையத்தில் பார்த்தவரை அன்னை கருப்பாக தலைமுடி விரித்து போட்டு வருவது அன்னை இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் ஹிந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களாகவே இருக்கிறார்கள் அதை பார்த்துதான் சிரிப்பாக இருக்கிறது


    இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் யாரும் இந்தியை வெறுக்கவில்லை எதிர்க்கவில்லை ஆனால் திணிப்பிற்கு மட்டும்தான் எதிர்க்கிறார்கள் அதை ஹிந்தி ஆதரவாளர்கள் ஏன் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பு

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்துகள். நன்றி.

      Delete
  3. ஆம்.  மொழியாக மட்டுமே பார்ப்பது நல்லது.  தமிழ் போலவே கன்னடக்காரர்களும் மொழி சம்பந்தமாக உணர்ச்சி வசப்படுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் கனடா வந்த பொழுது இமிக்ரேஷன் அதிகாரி என்னிடம்,"நீங்கள் தமிழரா?" என்று கேட்டார். "ஆம்" என்றதும் எத்தனை வருடங்களாக இங்கு இருக்கிறீர்கள்? கன்னடம் தெரியுமா?" என்று அவசியமில்லாத கேள்விகளை கேட்டார். "கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்றதும் "குட்" என்றார்.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாங்கள் சொல்வது போல் எல்லா மொழிகளையும் மதித்து அதை ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்வது சிறந்தது. உருவங்கள் தேவையில்லாததுதான். இதனால் இன்னமும் மக்களுக்குள் மனவேறுபாடுகள்தான் எழும். நீங்களும் அருமையாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. தமிழர்கள் தான் தனித்தன்மை வாய்ந்தவர்கள் ஆச்சே! ஆகவே மற்ற மாநிலங்களுக்கு மொழி பற்றிய தீவிரமான கருத்தைக் கற்றுக் கொடுத்தவர்களே தமிழர்கள் தாம். இதே மலையாளிகள் மலையாளம் எங்கள் தாய் என்றோ, அன்னை என்றோ கூறுவதில்லை. உணர்ச்சி வசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவதில்லை. மலையாளம் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதோடு கூடவே ஹிந்தியும் படிக்கணும். ஆனால் இரு மலையாளிகள் சந்தித்தால் சந்திப்பில் மூன்றாவது மனிதர் மலையாளம் அறியாத பொதுவானவராக இருந்தாலும் அவங்களுக்குள்ளாக மலையாளத்திலேயே பேசிக் கொள்வார்கள். இது தான் உண்மையான மொழிப்பற்று.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இரு மலையாளிகள் சந்தித்தால் சந்திப்பில் மூன்றாவது மனிதர் மலையாளம் அறியாத பொதுவானவராக இருந்தாலும் அவங்களுக்குள்ளாக மலையாளத்திலேயே பேசிக் கொள்வார்கள். இது தான் உண்மையான மொழிப்பற்று.//

      கீதாக்கா உண்மையான மொழிப்பற்றாக இருக்கலாம். ஆனால் அப்படிப் பேசிக் கொள்வது அந்த மூன்றாவது நபருக்குச் சில சமயம் தர்மசங்கடமான நிலை ஏற்படுவதும் உண்டு. எனக்கு மலையாளம் தெரியும். ஒரு வட இந்தியக்காரரும் இருந்தார். அவர் முன்னிலையில் அவருக்கு பாஷை புரியாது என்பதால் கேரளத்தவர் இருவர் அந்த நபரை ரொம்பவே மட்டம் தட்டி கிண்டல் செய்தார்கள் என்பது எனக்குப் புரிந்தது. எனக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே சபையில் , குழுவில் பொது மொழி அவசியம் என்று எனக்குத் தோன்றும்.

      கீதா

      Delete
  6. மொழிக்கு எந்த உருவ அடையாளமும் தேவை இல்லை.

    கீதா

    ReplyDelete
  7. தமிழை ஒரு மொழியாக பார்த்தால் போதும் என்று தோன்றுகிறது.//

    மொழியை மொழியாகவே பார்ப்பதுதான் நல்லது.

    துளசிதரன்

    ReplyDelete