கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, April 17, 2022

மாப்பிள்ளையின் சமையல்

மாப்பிள்ளையின் சமையல்

இந்த வாரம் இங்கே லாங் வீக் எண்ட். குட் ஃப்ரைடே, சனி, ஞாயிறு, ஈஸ்டர் (. சண்டே வரும் ஈஸ்டருக்கு மண்டே விடுமுறை, என்ன லாஜிக்கோ?) என்று நான்கு நாட்கள் விடுமுறை. மகளுக்கு இரண்டு நாட்கள்தான். என் மாப்பிள்ளைக்கு போர் அடித்தது போலிருக்கிறது. நேற்று லன்ச் தான் செய்யப் போவதாக் கூறினார். வெஜிடபிள் பிரியாணி‌யும், ராய்தாவும் மெனு. அவருடைய தயாரிப்பு வித்தியாசமாக இருந்ததால் அதை புகைப்படமெடுத்தேன். 

பிரியாணியில் போட வேண்டிய காய்களையும் (குடை மிளகாய், கேரட். வேண்டுமானால் உருளைக் கிழங்கும், பீன்ஸும் போடலாம்) பனீரையும் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி தயிர், காரப்பொடி,. உப்பு சேர்த்த கலவையில் 20 நிமிடங்கள் ஊற வைத்தார். 


இரண்டு ஆழாக்கு பாஸ்மதி அரிசியையும் கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வேக வைத்து அரை வேக்காடு வந்ததும் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொண்டார். 



ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, அனாசிப்பூ, சீரகம், சோம்பு இவைகளை தாளித்து,  பெரிதாக ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதில் சேர்த்து கொஞ்சம் காரப்பொடி, கரம் மசாலா பொடிகளையும், கொஞ்சம் உப்பையும் சேர்த்து வதக்கினார். 


பின்னர் ஒரு பெரிய தக்காளியையும் சேர்த்து வதக்கி, அவை நன்றாக வதங்கியதும் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து தயிரில் ஊறிய காய்கறி கலவையை சேர்த்து வதக்கி, பின்னர் அரை வேக்காட்டு அரிசியை அதில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து மூடி விட்டார். பத்து நிமிடங்களில் பிரியாணி ரெடியாகி விட்டது. அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடியோடு பிரட்டிக் கொடுத்து வெள்ளரிக்காய் ராய்தாவோடு (இதை மகள் செய்தாள்) சாப்பிட்டோம். கொஞ்சம் காரம் என்றாலும் சுவையாக இருந்தது.




19 comments:

  1. சுவையான குறிப்பு..... செய்து பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்

      Delete
  2. மாப்பிள்ளை என்றாலே கொஞ்சம் காரம் இருக்கும் தானே!

    ReplyDelete
    Replies
    1. அதில் குறைவே கிடையாது. அதி காரம் தான். நான் சமையலை சொன்னேன்.

      Delete
  3. அசத்தி விட்டார் என்று சொல்லுங்கள். கடகடவென முடித்து விட்டார் போல..

    ReplyDelete
    Replies
    1. சொல்லி விடுகிறேன். நன்றி

      Delete
  4. இதை நறுக்கிக்கொடு, அதைக் கீறிக்கொடு என்று யாரையும் ஏவாமல் தானேதான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பார், இல்லையா?!

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranApril 20, 2022 at 8:14 AM

      ஆமாம் முழுக்க முழுக்க சுயம் பாகம்

      Delete
  5. நல்ல சுவையாக இருந்திருக்கும் போல. இம்மாதிரிச் செய்து நானும் பார்த்திருக்கேன். ஆனால் நான் பண்ணினது இல்லை. குடமிளகாய் நான் பொதுவாக பிரியாணிக்குச் சேர்ப்பதில்லை. ஏதோ தனி வாசமாகத் தெரியும். அதே போல் புதினாவும். பீன்ஸ், காரட், பட்டாணி,கட்டாயம் இருக்கும். மற்றவை வீட்டில் இருப்பதைப் பொறுத்து. உ.கி.யும் போட்டதில்லை. தனியாக உ.கி. மட்டும் போட்டுப் பண்ணியது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranApril 20, 2022 at 8:15 AM

      நன்றி.

      Delete
  6. அருமையான சமையல்.

    ReplyDelete
  7. சூப்பர் குறிப்பு பானுக்கா. மாப்பிள்ளை அசத்திவிட்டார் போங்க!!! பாராட்டுகள் சொல்லிடுங்க அவருக்கு

    கீதா

    ReplyDelete
  8. கருத்து போடும் இந்த இடம் வித்தியாசமாக வருகிறதே. மாற்றியிருக்கீங்களோ பானுக்கா...இல்லை எனக்கு மட்டும்தான் இப்படியா

    கீதா

    ReplyDelete
  9. நானும் பாசுமதியை முக்கால் வேகாடு வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொண்டு பின்னர் மற்றவையுடன் சேர்ப்பதுண்டு. காய்களை மாரினேட் செஞ்சு வைத்து....இப்படி.
    ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறார். குடோஸ்! செய்முறை சொன்னதிலிருந்தே தெரிகிறது நல்ல சுவையாக இருந்திருக்கும்னு!

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranApril 20, 2022 at 8:20 AM

      நன்றி கீதா.

      Delete
  10. அடடே...! அருமை... வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி

    நலமா? உங்கள் மாப்பிள்ளையின் கைவண்ணத்தில் பிரியாணி சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளது. பாராட்டுக்களை உங்கள் மாப்பிள்ளையிடமும் கூறி விடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. வாங்க கமலா. ரொம்ப நாளாச்சு. பாராட்டுக்கு நன்றி. உங்கள் பாராட்டுகளை மாப்பிள்ளையின் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete