கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 18, 2025

ஹிந்து ஹெரிடேஜ் சென்டர் - கனடா

கனடாவில் மிஸிஸாகா என்னும் இடத்தில் ஹிந்து ஹெரிடேஜ் சென்டர் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் பஜனை, ராதா கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற ஹிந்துமத நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் கீழ் தளத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கிச்சனோடு கூடிய ஹாலும், முதல் தளத்தில் கோவிலும் இருக்கிறது.

என்னோடு வாருங்கள், கோவிலை தரிசனம் செய்யலாம்.

ஹிந்து ஹெரிடேஜ் சென்டரின் வாயிலில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பீடத்தின் உயரம் ஏழு அடி.





நடுவில் இருக்கும் பெரிய ஸ்படிக லிங்கத்தைப் பார்த்த ஒரு குழந்தை, "திஸ் இஸ் பிக் எக்" என்றது. ஒரு வகையில் உண்மைதானே?

பொதுவாக என்னை வட இந்திய பாணி கோவில்களும், மார்பிள் மூர்த்தங்களும் அவ்வளவாக கவராது. ஆனால் இந்த மூர்த்தங்களில் இருக்கும் முக லாவண்யமும்
கருணையும் வசீகரித்தது. 



நவ கிரகங்கள்

ரசித்தீர்களா இல்லையா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? கருத்திடுங்கள். நன்றி.



3 comments:

  1. மேகங்கள் பின்னணியில் ராமர் உருவம் அட்டகாசம்.

    ReplyDelete
  2. ஏனோ எனக்கு மூர்த்தங்கள் எனும் வார்த்தை மனதுக்கு ஒப்புவதில்லை. அது என் குறை!

    ReplyDelete
  3. படங்கள் யாவும் பிரமாதம். இன்னும் கொஞ்சம் முனைந்து சில விளக்கங்கள் எழுதி இருக்கலாம்.

    ReplyDelete