கனவு பலித்தது
கணம்தோறும் பிறக்கிறேன்
Saturday, April 15, 2023
கனவு பலித்தது
Wednesday, April 12, 2023
பிரார்த்தனை, நேர்த்திக் கடன்
பிரார்த்தனை, நேர்த்திக் கடன்
ஆனால் நாம் எப்போதும் பத்தாம் வகுப்பு மாணவியாகவே இருந்துவிட முடியுமா என்ன? வளர, வளர நாம் எதிர்கொள்ளும் தோல்விகள், நிராசைகள், சந்திக்கும் துக்கங்கள் நம்மை வேண்டிக்கொள்ளத்தான் தூண்டுகின்றன. என்னுடைய பிரார்த்தனைகள் பெரும்பாலும் கோவிலுக்கு நடந்து செல்வது, எனக்கு பிரியமான ஏதாவது ஒன்றை அந்தக் காரியம் நடக்கும்வரை விட்டுக் கொடுப்பது என்றுதான் இருக்கும்.
என் மகன் சி.ஏ. தேர்வில் இரண்டாம் முறையும் தோற்றப் பொழுது மிகவும் மனமுடைந்து போய், “இனிமேல் என்னால் பரீட்சை எழுத முடியாது, நான் வேலைக்குச் செல்கிறேன்” என்றான். என் மகன் பட்டப் படிப்பு முடித்து விட்டுதான் சி.ஏ.வில் சேர்ந்தான். லயோலாவில் அவன் கோல்ட் மெடலிஸ்ட்! அவன் பள்ளித் தோழர்களில் பலர் ப்ளஸ் டூவிற்குப் பிறகு இஞ்ஜினீயரிங்க் முடித்து வேலையிலும் அமர்ந்து விட்டது அவனுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தந்தது.
அப்போது எனக்கு, அவன் சி.ஏ.வில் தேர்ச்சி அடையும் வரை நமக்கு பிடித்த ஏதாவது ஒன்றை விடுகிறேன் என்று ஷிர்டி பாபாவிடம் வேண்டிக் கொள்ளலாம் என்று தோன்றியதால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
சாப்பாட்டு விஷயத்தில் இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது என்பது கிடையாது. சாக்லேட் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். ஆனால் எல்லாவற்றையும் விட ரொம்ப ரொம்ப பிடித்தது புத்தகங்கள் படிப்பதுதான். அதிலும் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். எனவே, என் மகன் சி.ஏ.முடிக்கும் வரை கதைகள் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். அப்போது பார்த்து பாலகுமாரன் ஃபோன் செய்து, “நான் கங்கை கொண்ட சோழன் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல். நீ நல்ல ரீடர், நன்றாக இருந்தால் நன்னா இருக்கு என்பாய், நன்றாக இல்லாவிட்டால், நன்றாக இல்லை என்று சொல்லி விடுவாய்” என்கிறார். எப்படி இருக்கும் எனக்கு? “கொஞ்ச நாள் கதைகள் படிக்க வேண்டாம் என்று இருக்கிறேன் சார்” என்றேன் கொஞ்சம் வருத்தத்தோடு.
என் மகள், “இவ்வளவு பெரிய ரைட்டர் உன்னிடம் அபிப்ராயம் கேட்பதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. நீ கண்டிப்பாக அந்த புத்தகத்தை படித்து அதைப் பற்றி அவரிடம் சொல்லத்தான் வேண்டும்” என்று கூறி எனக்கு ‘கங்கை கொண்ட சோழன்’ எல்லா பகுதிகளையும் வாங்கித் தந்தாள். என் மகனும் அந்த முறை சி.ஏ.வில் தேர்ச்சி அடைந்து விட்டான். நான் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை படித்து முடித்து, பாலகுமாரனிடம் அதைப் பற்றிய என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.
Wednesday, March 29, 2023
சேமிப்பு, சிக்கனம்
சேமிப்பு, சிக்கனம்
சென்ற வாரம் மத்யமரில் கொடுக்கப்பட்ட வாராந்திர டாபிக் சேமிப்பு, சிக்கனம்.
இந்த தலைப்பில் பெரும்பாலானோர்
பொருளாதார சிக்கனத்தைப் பற்றி மட்டும் எழுதியிருகிறார்கள். ஆனால் பொருளாதாரத்தை தாண்டி,
தண்ணீர், எரி பொருள், மின்சாரம், போன்ற விஷயங்களிலும் சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டியது
அவசியம்.
வீடுகளில் கிணறுகள் இருந்த காலத்தில் பாத்திரம் தேய்க்க, துணி தோய்க்க தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவு செய்வார்கள். எந்த அளவு தண்ணீர் செலவாகிறதோ அந்த அளவு காசு செலவாகும் என்று கூறுவார்கள். கிணற்றிலிருந்து நாம்தானே நீர் இரைக்க வேண்டும்? மோட்டார் போட்டு, தண்ணீர் இரைத்து, குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டும் என்னும் நிலை வந்த பிறகு தண்ணீர் சிக்கனம் என்பது இல்லாமல் போய் விட்டது.
குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு பல் தேய்ப்பது பலர் பழக்கம்(ரயில் பயணங்களிலும் சில பயணிகள் இப்படி நடந்து கொள்வார்கள்). 2015ல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது எங்கள் குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, தரை தளத்தை ஆக்கிரமித்து விட்டது. தரை தளத்து வீடுகளில் இருந்தவர்களில் ஒரு பெங்காலி தந்தைக்கும், மகளுக்கும் எங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தோம். Water water everywhere, not a drop to drink என்பது போன்ற நிலை. ஒவர்ஹெட் டாங்கில் தண்ணீர் இருந்ததால் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது, மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். கீழ் வீட்டுக்காரரோ குழாயை திறந்து விட்டுக் கொண்டு பல் தேய்க்கிறார். “ஐயா, தயவு செய்து குழாயை மூடுங்கள், தண்ணீர் சிக்க்னம், தேவை இக்கணம்” என்றதும் அவர், “நான் கங்கை ஓடும் பிரதேசத்திலிருந்து வருகிறேன். எங்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றார். சிக்கனம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. பழக வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சோப்பு தேய்த்துக் கொள்ளும் பொழுது கூட ஷவரை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பார்கள்.
எரி வாயு, மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த பல குறிப்புகள் வந்துகொண்டிருப்பதால் அவற்றை இங்கே விரிவாக கூறத் தேவையில்லை என நினைக்கிறேன்.
நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய இன்னொரு சிக்கனம் வார்த்தை சிக்கனம். வளவளவென்று பேசுகிறவர்களை விட சுருக்கமாக பேசுகிறவர்களுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். மிகச்சிறந்த உதாரணம் திருக்குறள். எவ்வளவு பெரிய விஷயங்களை இரண்டே அடிகளில் நச்சென்று சொல்லி விடுகிறது! நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் சிறப்பு சின்ன, சின்ன வாக்கியங்கள்.
இவ்வளவு ஏன்? மூச்சை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும் என்பதுதானே யோக சாத்திரம். வேக வேகமாக மூச்சு விடுவது மூச்சை விரயம் செய்வதற்கு ஒப்பானது. காமம், கோப வசப்படும்பொழுது மூச்சு விரயமாவதால்தான் அவற்றை கட்டுப்படுத்தச் சொல்கிறார்கள்.
இந்த கட்டுரைக்கு போஸ்ட் ஆப் தி வீக் கிடைத்தது. இதை நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது யூ டியூபில் எதையோ கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த மிகவும் பொருத்தமான ஒரு விளம்பரம்.
Monday, March 20, 2023
ஒரு விளக்கம்
ஒரு விளக்கம்:
என்னுடைய சென்ற பதிவில் முரளி என்பவரின் மர்ம மரணம் படித்தவர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது புரிந்தது, காரணம் நான் சில தகவல்களை முழுமையாகத் தரவில்லை. அதில் அவர் மனைவி முதல் நாளே பேஸஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட் பார்க்காததுதான் எனக்கு உறுத்தியது. முதலில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே பேசெஞ்சேர்ஸ் மேனிபெஸ்ட் பார்த்திருக்கிறார். அதன் பிறகு போலீஸில் புகாரும் கொடுத்திருக்கிறார். ஆனால் போலீஸ் மெத்தனமாக இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. திறமையாக செயல்பட்டிருந்தால் அடையாளம் தெரியாத உடலை இவருக்கு காட்டியிருப்பார்கள்.
ஒரு ஜோதிடர், உங்களுக்கு அவரைப் பற்றி செய்தி வரும் என்று கூறிய சில நாட்களிலேயே அவருடைய உடை மற்றும் பாஸ் போர்ட் பார்சலில் வந்திருக்கிறது. அதில் மிகவும் பயந்து போய் விட்டார் அவர் மனைவி. உடனேயே அவரைப் பற்றிய தகவல் மராட்டிய செய்தித் தாளில் வந்து, அவர் போலீசால் தகனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. எங்கேயோ, ஏதோ தவறு நடந்திருக்கிறது, அதை தோண்டப் போய் குழந்தைகள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் கேஸை வாபஸ் வாங்கி விட்டார்.
அதன் பிறகு எங்களுக்கு கிடைத்த செய்தி இறந்து போன முரளி ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடு பட்டிருந்தாராம். அது கூட துர் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம், அதை அவர் மனைவி அறிவாரா? என்பதும் தெரியாது. நமக்கு சரியாக தெரியாத விஷயங்களை எழுத வேண்டாமே என்று விட்டு விட்டேன்.
Friday, March 17, 2023
கடலைக் கடந்து - 10
கடலைக் கடந்து - 10
டிராவல்
ஏஜெண்டிடமிருந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்ட முரளி, அதை சரி பார்த்து விட்டு, மனைவிக்கு
ஃபோன் செய்து, தான் ஊருக்கு வரப்போகும் நாளை உறுதி படுத்தினான்.
வளைகுடா
நாடுகளிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் எல்லோரையும் போல் முரளியும் மனைவியிடம்,
என்ன வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று கேட்க, அவள் அப்போது(1990ன் துவக்க காலங்கள்)
இந்தியாவில் கிடைக்காத நட்டெல்லா, ஃபேளவர்ட் சீஸ், குழந்தைகளுக்கு உடைகள், தனக்கு யார்ட்லி
சோப், மாமியாருக்கு ஆக்ஸ் ஆயில், பாதாம், முந்திரி, குங்குமப்பூ என்று பட்டியலிட, எல்லாவற்றையும்
குறித்துக் கொண்ட முரளி, அவள் கேட்காத நகை ஏதாவதும் வாங்கிச் செல்ல வேண்டும் என்று
நினைத்துக் கொண்டான்.
தொடரும்
முன் முரளியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். பம்பாயில் கெமிகல் இஞ்சினீயரிங்
முடித்த முரளி அங்கேயே ஒரு கம்பெனியில் முதலில் வேலை பார்த்தான். பிறகு ஓமானில் ஒரு
பிரபலமான கம்பெனியில் வேலை கிடைத்து வந்தது
அவனுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். திருமணமாகி முதல் குழந்தைக்கு எட்டு வயதாகும்
வரை ஒமானில் குடும்பதோடு வசித்தான். மனைவி இரண்டாவது முறை கருவுற்றபோது பிறக்கப் போவது
இரட்டை குழந்தைகள் என்பது தெரிந்தது. மேலும் சில சிக்கல்களும் இருந்ததால், குடும்பத்தை
இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விட்டு, தான் மட்டும் மஸ்கட்டில் இருந்தான். பணி நிமித்தமாக
அடிக்கடி இன்டீரியர் செல்ல வேண்டி வரும். ஊருக்குச் செல்லும் முன் ஒரு வாரம் அப்படி
இன்டீரியரில் வேலை இருந்தது. அங்கு வேலையை முடித்து விட்டு புதன் கிழமை நகருக்குத்
திரும்பி வெள்ளியன்று பம்பாய்க்கு பயணப்படலாம் என்று நினைத்தான். வியாழனன்று ஷாப்பிங்
செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.
புதன்
மாலை இண்டீரியரில் வேலையை முடித்துக் கொண்டு அலுவலகத்தில் விடை பெற்றுக் கொண்டு, அலுவலக
வண்டியில் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டான்.
வெள்ளி
இரவு ஒரு மணிக்கு ஓமானிலிருந்து புறப்படும் விமானம், பம்பாயை அதிகாலை அடைந்து விடும்.
இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் போன்ற சடங்குகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து, டாக்ஸி பிடித்தால்
ஏழு மணிக்கு வீட்டை அடைந்து விடலாம்.
ஆனால்
ஏழு மணிக்கு அவன் வீட்டிற்கு வரவில்லை, எட்டு மணியானது, ஒன்பது, பத்து என்று நேரம்
ஓடியதே தவிர முரளி வரவில்லை. அவன் மனைவி லதாவுக்கு கவலை வந்தது. அவளுக்கு ஏனோ பேசஞ்செர்ஸ்
மேனிஃபெஸ்ட் வாங்கிப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. மஸ்கட்டில் கணவனின் வீட்டு
டெலிஃபோனை தொடர்பு கொண்டாள். ரிங்க் போனது, யாரும் எடுக்கவில்லை. அலுவலகத்தை தொடர்பு
கொண்டாள். அவர்கள் அவன் புதன் கிழமை கேபிடலுக்கு திரும்பி விட்டான் என்றதோடு நிற்காமல்,
விமான நிலையத்தில் விசாரித்து அவன் வெள்ளியன்று ஓமானிலிருந்து கஸ்டம்ஸ் மற்றும் இமிக்ரேஷன்
முடித்து விமானம் ஏறியதை உறுதி படுத்தினாகள். அதன் பிறகு பம்பாய் விமான நிலையத்தில்
அவன் பயணம் செய்த விமானத்தின் பேசஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட் பார்த்ததில் அதில் முரளியின்
பெயர் இருந்தது. ஓமானிலிருந்து கிளம்பியவன் பம்பாய் வந்திருக்கிறான், ஆனால் வீடு திரும்பவில்லை.
எங்கே சென்றான்? எந்த தகவலும் இல்லை. லதா பூஜைகள், ஜோசியர்கள் என்று போனாளே தவிர, போலீஸ்
கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.
பதினைந்து
நாட்கள் கழிந்து அவள் வீட்டிற்கு கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அதில்
முரளியின் ஒரு பேண்ட்,ஷர்ட்,பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட் இருந்திருக்கின்றன. அனுப்பியவர்
விவரம் எதுவும் இல்லை. முரளியின் குடும்பதினர்களுக்கு எதுவும் புரியவில்லை.
அந்த
சமயம் அவர்கள் பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் இந்த விஷயங்களை கேள்விப்பட்டு,
சில நாட்களுக்கு முன் மராட்டிய தினசரி ஒன்றில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
ஒன்றின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, உறவினர்கள் தகுந்த ஆதாரம் காட்டி அந்த உடலை பெற்றுக்
கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியானது என்று கூறியிருக்கிறார். அந்த செய்தி தாளை
வாங்கி பார்த்ததில் அது முரளிதான் என்று தெரிந்திருகிறது. உடனே போலீஸை அணுகியதில்,“இத்தனை
நாட்களாக யாரும் க்ளைம் செய்யாததால், நாங்களே எரித்து விட்டோம்” என்றார்களாம்.
என்ன
கொடுமை பாருங்கள்? முரளி எப்படி இறந்தான்? விபத்தினாலா? அல்லது கொலை செய்யப்பட்டனா?
கொலை என்றால் என்ன காரணம்? இப்படி எதுவுமே தெரியாது. அவன் மனைவி அந்த கேசை தோண்ட வேண்டாம்
என்று கூறி விட்டாள்.
எங்களுக்கு
மிகவும் அதிர்ச்சி அளித்த மரணம் இது. முரளியைத் தெரியும். நெருங்கிய நட்பு என்று கூற
முடியாவிட்டாலும் பழக்கம் உண்டு. நாங்கள் அறிந்த வரையில் நாகரீகமானவர். இந்த மாதிரி
மரணங்களில் என்னென்னவோ புரளிகள் வருமே, அது போல முரளியைப் பற்றியும் அவர் ஹவாலா பணப்பறிமாற்றம் செய்தார் என்று செய்திகள் வந்தன.
நாங்கள் அவற்றை புறம் தள்ளி விட்டோம்.
இது
இப்படி என்றால், இன்னொருவர் குடும்பம் இந்தியாவில் இருந்தது, அவர் மட்டும் தனியாக மஸ்கட்டில்
இருந்தார். காலை அலுவலகத்திற்கு சென்று விட்டு, உணவு இடைவேளையின் பொழுது வீட்டிற்கு
வந்தவர் உணவு இடைவேளைக்குப் பிறகு அலுவலகம் திரும்பவில்லை. அலுவலகத்தில் அதை பெரிதாக
நினைக்கவில்லை. மறுநாளும் அவர் அலுவலகதிற்கு வரவில்லை, எந்த தவலும் அவரிடமிருந்து இல்லை,
என்றதும் அலுவலகத்திலிருந்து அவரை ஃபோனில் அழைத்திருக்கிறார்கள், ஃபோன் எடுக்கப்படவில்லை,
மதியம் ஒரு முறை அழைத்திருக்கிறார்கள், அப்போதும் பதில் இல்லை, ஏதோ தவறாக இருக்கிறதே?
இப்படி சொல்லாமல், கொள்ளாமல் லீவு போடுகிறவர் இல்லையே? என்ற சந்தேகத்தோடு அவர் வீட்டு
கதவை உடைத்துப் பார்த்தால், சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே மரணத்திருக்கிறார்.
இப்படிபட்ட
செய்திகளை கேள்விப்படும்பொழுதெல்லாம் ‘திக்’கென்றிருக்கும். கடவுளே! நான் இந்த ஊருக்கு
பயணியாகத்தான் வந்தேன், பயணியாகவே திரும்பச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத்
தோன்றும்.
Wednesday, March 1, 2023
விந்தை உலகம்!
விந்தை உலகம்!
என் மகன், மருமகள் இருவரும் தொலைகாட்சியில் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி 'ஷார்க் டேங்க்'. இதில் சிறு தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பற்றி தெரிவித்து, அதற்கு முதலீட்டார்களை பிடிக்க வேண்டும். நடுவர்களாக வந்திருக்கும் தொழிலதிபர்கள் இவர்களிடம் நிறைய கேள்விகளை கேட்பார்கள், அவர்களுக்கு திருப்தியானால் முதலீடு செய்ய முன்வருவார்கள். பேரங்களும் நடக்கும்.
அதில் ஒரு இளம் பெண் தான் பெண்டெண்டுகள் செய்து தருவதாக கூறினார். எல்லாம் விலை உயர்ந்த பதக்கங்கள். விலை உயர்வுக்கு காரணம் அவை எக்ஸ்க்லூசிவ்! மேலும் சாதரணமாக பதக்கங்கள் என்றால் வைரம், வைடூர்யம், போன்றவைதானே நமக்குத் தெரியும்? இவர் தாய்ப்பால், ரத்தம் போன்றவைகளை உறையச் செய்து, அதில் நாம் விரும்பும் உருவங்கள், படங்கள் இவைகளை பதித்துக் கொடுப்பாராம். இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார். அது மட்டுமல்ல, ஆணின் விந்துக்களில் கூட லாகெட் செய்து தரச் சொல்லி சிலர் கேட்கிறார்களாம். இதை அவர் கூறியதும், நடுவர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அனுபம் மிட்டலின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே..!
(எங்கள் கேள்வி : சமீபத்தில் நீங்கள் பார்த்த / படித்த / கேள்விப்பட்ட வித்தியாசமான செய்தி எது?) - இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படவில்லை. இருந்தாலும் இதை பார்த்ததும் எனக்கு நினைவில் வந்ததை பகிர்ந்து கொண்டிருகிறேன்.
***************************************************************************************************************
ஸமீபத்தில் ரசித்த திரைப்படம் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'
Monday, December 26, 2022
ஆன்லைன் அலப்பறைகள்!
ஆன்லைன் அலப்பறைகள்!
எழுபதுகளின் துவக்கத்தில்தான்
திருச்சியில் முதன்முதலாக சிந்தாமணி சூபர் மார்கெட் வந்தது. அதுவரை செட்டியார் அல்லது
நாடார் கடைகளில் மளிகை சாமாங்களை வாங்கிய மக்களுக்கு பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்யபட்ட
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு எப்படி இருக்குமோ? என்ற சந்தேகம் இருந்தது.
அப்போதெல்லம்,
ஏன் எண்பதுகளில் கூட வருடாந்திர சாமான் என்று ஒரு வருடதிற்கு தேவையான பருப்பு, புளி,
மிளகாய் வற்றல், போன்றவற்றை மொத்தமாக பங்குனி, அல்லது சித்திரை மாதங்களில் வாங்கி வெய்யிலில்
காய வைத்து, பரணில் பெரிய பானைகளில் வைத்து அவ்வப்பொழுது எடுத்து பயன் படுத்துவார்கள்.
வீடுகள் சிறியதாக ஆக பரண் என்னும் சங்கதி வழக்கொழிந்து போனது. இப்போதைய லாஃப்டுகள்
பரணுக்கு அருகே வர முடியாது.
அதன் பிறகு மாதந்திர சாமான்கள் வாங்கும் வழக்கம் வந்த பொழுது, நாடார் கடைகளில் பேப்பரை கூம்பு வடிவத்தில் செய்து அதில் மடித்து தரும் து.பருப்பு, க.பருப்பு, ப.பருப்புகளை கையால் தொட்டுப் பார்த்து வாங்குவதில் கிடைக்கும் திருப்தி, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சீல் செய்யப்பட்டு விற்கப்படும் பண்டங்களை வாங்குவதில் இல்லை என்று அப்போது நினைத்தார்கள். நாளடைவில் நாடார் கடைகளிலும் நெகிழி பைகளே உபயோகத்திற்கு வந்தன.
அதைப் போலத்தான்
ஆன் லைன் வர்தகங்கள். 55+ல் இருக்கிறவர்கள் வேண்டுமானால் ஆன் லைன் வியாபாரத்தில் விருப்பம்
காட்டாமல் இருக்கலாம். இளைய தலைமுறை பெரும்பாலும் ஆன் லைன் வர்த்தகத்தைத்தான் விரும்புகிறார்கள்.
அதுவும் கொரோனா உபயத்தால் ஆன்லைனுக்கு அடிமையாகி
விட்டார்கள் என்றே சொல்லலாம். எங்கள் உறவில் ஒருவர் அமெரிக்காவில் வசிக்கிறார். சமீபத்தில் தன் மகனுக்கு திருமணத்தை அங்கேயே நடத்தினார். கல்யாண ஜவுளி, நகை எல்லாவற்றையும் ஆன் லைனிலேயே முடித்து விட்டாராம்.
எங்கள் வீட்டைப்
பொருத்தவரை இப்போதெல்லம் எல்லாம் ஆன் லைனில்தான். போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட
வேண்டாம். இரண்டு மூன்று சைட்டுகளில் விலையை ஒப்பிட்டு பார்த்து ஆர்டர் செய்கிறார்கள்.
பொருள்கள் தரமாக இருக்கின்றன. காய்கறிகள் கூட நன்றாகத்தான் இருக்கின்றன. மேலும் காய்கறிகளை
கொடுத்து விட்டு,” நன்றாக இருக்கிறதா? என்று செக் பண்ணிக் கொள்ளுங்கள், உங்களுக்கு
திருப்தியாக இல்லையென்றால் வேறு மாற்றிக் கொண்டுவந்து தருகிறோம்” என்பதோடு அவர்களின்
கைபேசி எண்ணை தந்து விட்டு, “தயவு செய்து இந்த எண்ணிற்கு போன் பண்ணுங்கள், காய்கறிகள்
சரியில்லையென்று அலுவலகத்திற்கு போன் பண்ணி விடாதீர்கள், எங்கள் வேலைக்கு பிரச்சனையாகிவிடும்”
என்று ஒருவர் கூறியபொழுது கஷ்டமாக இருந்தது.
![]() |
| மகன் வரவழைத்த ஜம்போ சைரஸ் சாம்பிராணி கூம்பும் புகை படர்ந்திருக்கும் எங்கள் வீடும் |
சமீபத்தில் என் மகன் சாம்பிராணி கூம்பு ஆன் லைனில் ஆர்டர் பண்ணிய பொழுது ஜம்போ சைஸ் என்பதை கவனிக்கவில்லை. அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு சிறிய பூ தொட்டி போல சாம்பிராணி கூம்பு! அதை ஏற்றி வைத்தால் வீடு ஏதோ பூத் பங்களா செட் போட்டது போல ஆகி விடுகிறது. வெளி நாடுகளாக இருந்தால் fire alarm அலறியிருக்கும். இப்படி சில பாதகங்கள்.
புது வருடம் பிறக்கப்
போகிறது. எனக்கு டெய்லி ஷீட் காலண்டர் அவசியம் வேண்டும். மகன், மகள் குடும்பத்திற்கு
காலண்டர் அனாவசியம். செல்ஃபோன் இருக்க காலண்டர் எதற்கு?” என்பார்கள். எனக்கு காலை எழுந்து,
பல் தேய்த்தவுடன் அந்த தேதியை கிழிக்க வேண்டும். அதில் வெறும் தேதி மட்டுமா இருக்கிறது?
நட்சதிரம், திதி, போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாமே?
அன்று இந்திராநகர்
செல்ல வேண்டியிருந்தது. அதற்கு அருகில் இருக்கும் திப்பஸந்திராவில் தமிழ் காலண்டர்கள்
கிடைக்கும் என்பதால் அங்கு சென்று காலண்டர் வாங்கி வரலாம் என்றேன். மகனும்,மருமகளும்
சிரித்து விட்டு, “ஆன்லைனிலேயே ஆர்டர் பண்ணலாம்” என்று கூறியதோடு, மருமகள் உடனே ப்ரௌஸ்
பண்ணி என்னிடம் காட்டி,”உங்களுக்கு எந்த மாதிரி வேண்டும்?” என்று கேட்டு, உடனே ஆர்டர்
செய்தாள். இரண்டு நாட்களுக்குள் வந்து விட்டது.
![]() |
| ஆன்லைனில் வந்த காலண்டர். |
அப்பா அம்மா தவிர
பாக்கி அத்தனையையும் ஆன் லைனில் வாங்கிவிடலாம். என்றாள் மறுமகள். அதையும்தான் வாங்கிவிட
முடிகிறதே.. சர்ரகேட் மதர்!!
Tuesday, December 6, 2022
தப்பிச்சேண்டா சாமி
தப்பிச்சேண்டா சாமி
Saturday, December 3, 2022
ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் ஜே.பி.நகர், பெங்களூர்
ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில்
ஜே.பி.நகர், பெங்களூர்
![]() |
| ரேவதியும் நானும் |
Monday, November 7, 2022
பேத்திகளின் அலப்பறைகள்
Monday, October 3, 2022
கொலுவின் பரிணாமம்
கொலுவின் பரிணாமம்
Sunday, September 11, 2022
விருத்தாசலம் விசிட்டும், மத்யமர் மீட்டும்
விருத்தாசலம் விசிட்டும்,
மத்யமர் மீட்டும்
![]() |
| பிராது சீட்டுகள் கட்டப்பட்டிருக்கும் மரம் |
![]() |
| திருமுதுகுன்றம் கோவில் |
![]() |
| கண்டராதித்தன் கோபுரம் என்றதும் பொ.செ.தான் நினைவுக்கு வந்தது. |
![]() |
| ஆழ்ந்து பிள்ளையார் கோவில் |
Monday, August 29, 2022
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
நான் கனடா சென்று நாலாவது மாதத்தில் என் மகன் வயிற்று பேத்திக்கு ஆண்டு நிறைவு வந்ததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. குழந்தைக்கு முடி காணிக்கை கொடுப்பதற்காவது நான் வரும் வரை காத்திருக்க சொன்னேன்.
எங்கள் குடும்பத்தில் முதல் மொட்டை ஒரு குறிப்பிட்ட கோவிலில்தான் அடிக்க வேண்டும் என்னும் பழக்கம் கிடையாது. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு திருப்பதியில் முதலில் முடியிறக்கினோம். அதனால் பேத்திக்கும் அங்கேயே முடியிரக்கலாம் என்று தோன்றியது.
என் மகன் நான் அங்கிருக்கும் பொழுதே,"நீ இங்கே வந்தவுடன் திருப்பதி சென்று வந்து விடலாம், நாள் பார்த்து சொல் நான் புக் பண்ணி விடுகிறேன்" என்றான். ஆனால் நான் பார்த்து சொன்ன நாட்கள் அவர்களுக்கு அலுவலகத்தில் பிஸியான நாட்களாக இருந்தது.
புரட்டாசியில் முதல் மொட்டை அடிக்க மாட்டார்கள். பெண் குழந்தை என்பதால் செவ்வாய், வெள்ளி நோ! சனி,ஞாயிறில் திருப்பதியில் கும்பல் அதிகம் இருக்கும். மகனுக்கும், மருமகளுக்கும் அலுவலகத்தில் விடுமுறை எடுக்க முடிய வேண்டும், மருமகளின் மாதாந்திர அசௌகரியத்தை பார்க்க. வேண்டும். 21.8.22, திங்கள் கிழமை எல்லாவற்றிர்க்கும் ஈடு கொடுத்தது.
மகன் புக் செய்த டிராவல் ஏஜெண்ட் ஞாயிறு இரவு 11:45க்கு டயோட்டா இடியாஸ் காரில் எங்களை பிக் அப் செய்தார். விடியல் காலை 4:30க்கு கீழ் திருப்பதியில் ஒரு ஹோட்டலில் எங்களை இறக்கி விட்டு எங்களுக்கு குளித்து ரெடியாக ஒரு மணி நேரம் தந்தார்.
நாங்கள் நேராக மலையேறி, குழந்தைக்கு மொட்டை அடித்து, சுவாமி தரிசனத்தையும் முடித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் முதலில் அலமேலுமங்காபுரம் சென்றோம். அங்கு அப்போது நடை அமைத்திருந்தார்கள். 7:30க்கு அஷ்ட தள பத்மார்ச்சனை சேவைக்கு ரூ.300க்கு டிக்கெட் வாங்கினால் அம்மனுக்கு முன்னால் உட்கார வைப்பார்கள் என்றதால் அந்த சேவைக்கான டிக்கெட் வாங்கி தரிசித்தோம்.
பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு மேலை சென்ற பொழுது 10:30 ஆகி விட்டது. அங்கே கும்பலான கும்பல். குழந்தைக்கு மொட்டை அடித்துக் கொண்டு வருவதற்கு 12 மணியாகி விட்டது. பின்னர் முன்னூறு ரூபாய் டிக்கெட் வரிசை துவங்கும் இடத்தில் எங்களை இறக்கி விட்டார்.
செல்ஃபோன் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியும். ஸ்மார்ட் வாட்சிற்கும் அனுமதி இல்லை என்பதை முன்னரே கூறி விட்டதால் என் மகன், மருமகள் இருவரும் தங்கள் ஸ்மார்ட் வாட்சுகளை கட்டிக்கொண்டு வரவில்லை. ஆனால் மெட்டல் ஸ்டார்ப் வாட்சுகளுக்கும் அனுமதி இல்லை என்றார்கள். அதனால் எங்கள் கை கடிகாரங்களை காரிலேயே வைத்தோம்.
அதே போல் டிரஸ் கோடும் கொடுத்திருந்தார்கள். ஆண்கள் என்றால் வேஷ்டி, சட்டை அல்லது அங்கவஸ்திரம், பெண்கள் என்றால் புடவை அல்லது துப்பட்டாவோடு சூடிதார். என் மருமகள் துப்பட்டாவை மறந்து விட்டாள். மறுபடியும் காருக்குச் சென்று எடுத்து வர வேண்டுமோ? என்று திகைத்தோம். வாயில் காப்பானாகிய பெண், "இங்கே கடையிலேயே, துப்பட்டா விற்கிறார்கள், வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள். அங்கிருந்த கடைகளில் கலர் கலராக துப்பட்டாக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒன்று வாங்கிக் கொண்டாள். நல்ல வியாபாரம்! நாங்கள் ஆளுக்கு ஒரு மாஸா குடித்து விட்டு, நடந்து, நடந்து ஒரு ஹாலை அடைந்து, அங்கு எங்கள் அடையாள அட்டை, டிக்கெட் காண்பித்து மீண்டும் நடந்துட நடந்து நடந்து 26ம் எண் கூண்டில் சென்று அமர்ந்து பொழுது மணி ஒன்று. பசி மற்றும் நெரிசலில் அழத்தொடங்கிய குழந்தைக்கு செரிலாக் கொடுக்கலாம் என்று அங்கிருந்த பொருள்களை ஸ்கேன் செய்யும் இடத்திற்கு அருகில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம், அப்போது அங்கு வந்த ஒரு அதிகாரி," இங்கு உட்காரக் கூடாது என்று விரட்டினார். வரிசையில் எங்களுக்குப் பின்னால் இருந்த பெண்மணி, இரண்டு பிஸ்கெட்டுகளைத் தந்தார். அதை சாப்பிட்ட குழந்தை உறங்கியது.
திருப்பதி சந்திரனுக்கு உரிய தலம் என்பதால் அங்கு திங்கள் கிழமை செல்வது விசேஷம், அதோடு ஏகாதசியும் சேர்ந்து கொண்டதாலோ என்னவோ கும்பல் கொஞ்சம் அதிகம்தான். எப்படியோ பெருமாளை சேவித்து வெளியே வந்த பொழுது மணி நான்கு. மலை மேல் இருந்த உணவகங்களில் சாப்பாட்டு கடை முடிந்து விட்டது. "கீழே ஹோட்டல் மயூராவிற்குச் செல்லுங்கள், டிபன் கிடைக்கும் என்றேன்". மயூராவின் டொமாடோ ஆம்லெட்டிற்கு மனம் ஏங்கியது. ஆனால் அந்த டிரைவரோ," போகும் வழியில் ஹை வேயில் நல்ல ஹோட்டலில் சாப்பிடலாம்" என்றார்.
கீழே இறங்கும் பொழுதே நான் உறங்க ஆரம்பித்து விட்டேன். ஹை வேயில் சரவணபவனில் சப்பாத்தி சாப்பிட்டு விட்டு மீண்டும் நல்ல உறக்கம். வீடு வந்து சேர்ந்த பொழுது இரவு மணி பதினொன்று. எப்போதாவது புயல் அடிக்கும் ஒரு நாள் திருப்பதி சென்றால் நல்ல தரிசனம் கிட்டலாம். முன்பெல்லாம் ஒரு முன்னூறு ரூபாய் டிக்கெட்டிற்கு இரண்டு லட்டுகள் தருவார்கள். இப்போது ஒரு டிக்கெட்டிற்கு ஒரு லட்டுதான், அதுவும் அளவும் குறைந்து விட்டது. சுவை? அது குறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதே.
சரி, தலைப்பை நியாயப்படுத்தவே இல்லையே? என்கிறீர்களா? இதோ வந்து விட்டேன்.
பெரிய பணக்காரர்கள் ஆடம்பரமாக செய்யும் பூஜையில் படைக்கப்படும் உயர் ரக உணவை ஏற்காமல் அருகில் ஒரு ஏழை படைக்கும் கூழை விரும்பி கடவுள் உண்பதாக திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம், கதைகள் படித்திருக்கிறோம். மகாபாரதத்தில் கூட துரியோதனின் அரண்மனையை தவிர்த்து விட்டு, விதுரரின் வீட்டில்தான் கிருஷ்ணர் தங்கியதாக வரும்.
எங்கள் வீட்டில் என் மருமகள் தன் குழந்தைக்கு சிறந்த உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லோரிடமும் விசாரித்து, யூ டியூபில் தேடி பார்த்து பார்த்து தயாரித்து கொடுக்கும் உணவை என் பேத்தியை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஆனால் அதை பார்த்துக் கொள்ள வரும் பெண்மணி கொண்டு வரும் உணவை, "ஐயோ இது பேடா, இது காரா.." என்று அந்தப் பெண்மணி தடுத்தாலும் எந்த பிகுவும் இல்லாமல் எடுத்து உண்கிறது.
Saturday, August 20, 2022
மறக்க முடியாத வசனங்கள்.
மறக்க முடியாத வசனங்கள்.
முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா,பாட்டி, சின்ன தாத்தா, சின்ன பாட்டி, அத்தை பாட்டி, அத்தை என்று நிறைய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் பேசும் பொழுது நிறைய பழமொழிகளை கூறுவார்கள். அவற்றை வசனங்கள் என்பார்கள். அதாவது இப்போதய பஞ்ச் டயலாக் போல. பேச்சு வழக்கில் போகிற போக்கில் இந்த வசனங்கள் தெறித்து வரும். பல வசனங்கள் அர்த்தத்தோடும், நகைச்சுவையோடும், சில அடல்ட் ஜோக் வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கும்.
Friday, July 29, 2022
பிரமிக்க வைத்த நயாகரா
பிரமிக்க வைத்த நயாகரா
நயாகரா பெண்ணைப்போல, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு! என்றார் என் மாப்பிள்ளையின் தோழர். உண்மைதான். குளிர் காலத்தில் இரண்டு முறை அங்கு சென்றேன். கிருஸ்துமஸ் சமயத்தில் அங்கு செய்யப்பட்டிருக்கும் விளக்கொளி அலங்காரங்களையும், வாண வேடிக்கைகளையும் பார்ப்பதற்காக இரவில் ஒரு முறை சென்றோம். பகலில்தான் அருவியின் அழகு தெரியும் என்றாள் என் மகள். அதை ரசிப்பதற்காக பகலில் ஒரு முறை சென்றோம்.
வாண வேடிக்கைகள் பிரமாதம் என்று கூற முடியாது. தீபாவளியின் பொழுது நாம் வெடிக்கும் ஃபேன்ஸி வெடிகள் மாதிரிதான். அதே போல் அருவியும் பெரிதாக என்னை வசீகரிக்கவில்லை. அருவி தொடங்கும் இடத்திலிருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம்.
நீர்வீழ்ச்சி என்றால் மலையிலிருந்து தொபேலென்று கீழே விழ வேண்டும், ஹோவென்ற ஓசை எழுப்ப வேண்டும். நீர்த்திவலைகள் சாரலாக நம்மை நனைக்க வேண்டும். இந்த அனுபவங்களைத் தராத அருவியில் என்னதான் வினாடிக்கு 2800க்யூபிக் மீட்டர் நீர் கொட்டினாலும் அது மலையிலிருந்து நீர் வழிவதாகத்தான் தோன்றுகிறதே ஒழிய குற்றாலமோ, பாபநாசமோ தந்த சந்தோஷத்தை தரவில்லை என்று நான் கூறி விட்டதில் என் மகளுக்கு சற்று வருத்தம்தான்.
மேலே நான் சொன்ன அனுபவங்கள் கிடைக்காததற்கு குளிர் காலத்தில் நயாகராவுக்கு சென்றது ஒரு காரணமாக இருக்கலாம். "குளிருக்கு அடக்கமாக லேயர்கள் அணிந்து கொண்டு அதன் மீது ஓவர் கோட், தலைக்கு குல்லாய், கால்களில் கம்பூட்ஸ், காதுகளையும் மூடிக்கொண்டு, இத்தனையும்
போதாதென்று கொரோனாவிற்காக மாஸ்க்...இத்தனையையும் மீறி சாரல் அடிக்கவில்லை, சத்தம்
கேட்கவில்லை என்றெல்லாம் சொல்வது நியாயம் கிடையாது. சம்மர் வரட்டும் அப்போது நயாகராவுக்குச் செல்லலாம்" என்றாள் மகள்.
சனி, ஞாயிறு என்றால் மிகவும் கும்பலாக இருக்கும் என்பதால் வெள்ளியன்று கிளம்பினோம். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நயாகராவிற்கு இரண்டு மணி நேர பயணம். காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி விட்டோம். அதற்கு முன்னாலேயே பார்க்கிங் உட்பட போட்டிங், ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ், வொயிட் வாட்டர் வாக், ஃப்ளவர் ஷோ, பட்டர் ஃப்ளை சாங்சுரி என்ற எல்லாவற்றிர்க்கும் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியாகி விட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் வரிசைதான் நீளமாக இருந்தது. நேரிடையாக வந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் காத்திருக்க தேவையிருக்கவில்லை.
![]() |
| Rainbow bridge |
நயாகரா நீர்வீழ்ச்சியை கனடா, அமெரிக்கா என்ற இரண்டு நாடுகளிலிருந்தும் கண்டு ரசிக்கலாம். உண்மையில் நயாகரா அருவி என்பது நோ மேன்ஸ் ஏரியா எனப்படுகிறது. இந்த இரு நாடுகளையும் ரெயின்போ ப்ரிட்ஜ் என்னும் பாலம் இணைக்கிறது. அமெரிக்காவில் இருப்பது பிரைடல் ஃபால்ஸ் என்னும் அளவில் கொஞ்சம் சிறிய அருவி. கனடாவில்தான் ஹார்ஸ் ஷு என்னும் குதிரை லாடத்தைப்போல
வளைந்திருக்கும் பெரிய பகுதி. இதற்கு அருகாமை வரை சிறிய கப்பலில் செல்ல முடியும்.
அந்த கப்பலில் பயணிக்கும் பொழுது அருவியிலிருந்து அடிக்கும் சாரலில் நாம் நனைந்து விடாதிருக்க சிவப்பு நிறத்தில் மெல்லிய ரெயின் கோட் தருகிறார்கள். கனடாவிற்கு நேர் எதிர் பகுதியில் அமெரிக்காவிலிருந்தும் சிறிய கப்பல்களில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அங்கிருந்து வருபவர்கள் நீல நிற ரெயின்கோட் அணிந்திருக்கிறார்கள். படகு பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கவே இப்படி வித்தியாசமான நிறங்களில் ரெயின் கோட் வழங்கும் ஏற்பாடாம்.
கப்பல் நகரத் தொடங்கி சிறிது நேரத்தில் ஹோவென்ற பேரிரைச்சலோடு தண்ணீர் நம்மீது தெளிக்கிறது, இல்லையில்லை பலத்த மழை போல நம்மை தொப்பலாக நனைக்கிறது. படகில் இருக்கும் அத்தனை பேரும் மகிழ்ச்சியில் உற்சாகமாக ஆரவாரம் செய்கிறார்கள். நடுவில் வானவில் வேறு தெரிய அதை படமெடுக்க போட்டி.
ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ் என்பதும் ஒரு அற்புதமான அனுபவம். நுழைவிடத்திலிருந்து நம்மை மின்தூக்கியில் 125 அடி கீழே அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து ஒரு நீண்ட குகையில் நடந்து சென்றால் நயாகரா பூமியில் விழுவதை அருவிக்கு பின்புறமிருந்து பார்க்கலாம்.
அந்த குகையில் கொஞ்சம் நடந்தால் வலதுபுறம் ஒரு பிரிவு செல்கிறது. அங்கு நயாகரா பற்றிய விவரங்கள், நயாகராவில் சாகஸ முயற்சிகள் செய்தவர்களின் விவரங்கள், அங்கு விஜயம் செய்த பிரபலங்கள் யார் யார் என்ற தகவல்கள் புகைப்படங்களோடு காணக்கிடைக்கின்றன. அங்கு இரண்டு சாளரங்கள் வழியே அருவியை அருகில் பார்க்க முடியும். கையை நீட்டி மழை போல கொட்டும் அருவியின் சாரலை அனுபவிக்க முடியும். அங்கிருந்து மீண்டும் டன்னலில் நடந்து அருவி பூமியைத் தொடும் இடத்திற்கு வந்தால் பார்வையாளர்களுக்கு தனியாக இடம் இருக்கிறது. இங்கேயும் சாரலிலிருந்து நம்மை காக்க ரெயின் கோட் தருகிறார்கள்.அங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த அருவியின் பிரும்மாண்டம் தெரிகிறது.
அருவி தந்த அந்த பரவச அனுபவத்திலிருந்து மீண்டு வொயிட் வாட்டர் வாக்ஸ் சென்றோம். ஈரி ஏரியிலிருந்து ஒண்டோரியோ ஏரிக்கு செல்லும் நீர்த்தடத்தை ஒட்டிய மரப்பாலத்தில் .07 மைல் தொலைவு நடப்பதைத்தான் வொயிட் வாட்டர் வாக்ஸ் என்கிறார்கள். இதிலும் நாம் லிஃப்டில் கீழே அழைத்துச் செல்லப்படுகிறோம். அந்த மரப்பாலத்தில் இரண்டு இடங்களில் சற்று கீழே இறங்கி நதியோட்டத்தை மிக அருகில் பார்க்க முடியும். அந்த நதியோட்டத்தில் எழும் அலைகள் நதியின் வேகத்தால் எழுபவை. ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் கங்கை நதியில் இப்படிப்பட்ட அலைகளை பார்க்க முடியும்.
வேர்ல்பூல் ஏரோ கார் என்பதில் 250 அடி உயரத்தில் கேபிள் காரில் பயணித்து ஒரு குறுகலான இடத்தில் சடாரென திரும்பும் பொழுது நதியில் உண்டாகும் சுழல் களை ரசிப்பது. இந்த பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கனடாவிலிருந்து பாஸ்போர்ட் இல்லாமலேயே அமெரிக்காவின் எல்லைக்குள் சென்று திரும்பலாம்.
மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவம்.
"இப்போது என்ன சொல்கிறாய்?" என்றாள் மகள். என்ன சொல்வது அருவியின் பிரும்மாண்டம், அழகு, என் வாயை அடைத்து விட்டதே..!!
Wednesday, July 20, 2022
வாஷி (மலையாள திரைப்படம்)
வாஷி
(மலையாள திரைப்படம்)
Saturday, July 9, 2022
கெட்ட சொப்பனம்..
கெட்ட சொப்பனம்..
பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ரிலீசாகி விட்டது. திரையரங்குகளில் ஒரே கும்பல். முதல் காட்சியை என் மகள் என் சகோதரி குடும்பத்தோடு பார்த்து விட்டாள். "என்னை விட்டு விட்டு நீ மட்டும் பார்த்து விட்டாய்" என்று அவளிடம் கூறி விட்டு நான் வரிசையில் நிற்கச் செல்கிறேன். என்னோடு பாம்பே ஜெயஶ்ரீ இணைந்து கொள்கிறார். தியேட்டரில் உள்ளே வருபவர்களுக்கெல்லாம் வாழை மட்டை தட்டில் பொங்கல் தருகிறார்கள். இந்த நேரத்தில் பாம்பே ஜெயஶ்ரீ எங்கேயோ சென்று விடுகிறார்.
நான் படம் பார்த்து விட்டு Awesome என்ற ஒரே வார்த்தையை பெரிதாக என் பிளாகில் விமர்சனமாக எழுதுகிறேன். அதற்கு பின்னூட்டத்தில் ஸ்ரீராம், "அதற்குள் பார்த்து விட்டீர்களா? ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவா?" என்று கேட்கிறார். கீதா அக்கா,"நிஜமாக வா..? நன்றாக இருக்கிறதா?" என்கிறார். எனக்கு திடீரென நாம் நிஜமாகவே படத்தை பார்த்தோமா? பாதியில் தூங்கி விட்டோம் போலிருக்கிறதே..? இதில் விமர்சனம் வேறு எழுதி விட்டோம் என்று சந்தேகம் வருகிறது. புரண்டு படுத்து முழித்துக் கொண்டு விட்டேன்.
நேற்று பொன்னியின் செல்வன் -1 டீசர் பார்த்தேன். அதற்கு இப்படி ஒரு விளைவா? சின்ன வயதில் ராத்திரி நேரத்தில் பேய்க்கதைகளை படிக்க க் கூடாது கெட்ட சொப்பனம் வரும் என்பார்கள்.
Wednesday, July 6, 2022
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
Wednesday, June 29, 2022
மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.அ
மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.
சமீபத்தில் மத்யமரில் Post of the week வாங்கிய என்னுடைய பதிவு இது. சிலவற்றை எழுதும் பொழுதே மனதிற்கு ஒரு திருப்தி வரும். அப்படிப்பட்ட பதிவு என்பதால் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
லௌகீக வாழ்க்கையில் (material life) வெற்றி பெற்றவர்களைத்தான் திறமைசாலிகள் என்று கருதுகிறோம். அப்படி வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாதவர்களை அசடு என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் அசோகமித்திரன் ஒரு கதையில் (கதை பெயர் மறந்து விட்டது) என்ன சொல்கிறார் தெரியுமா?
"கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true!
இதே வெற்றி, தோல்வி பற்றி ஜெயகாந்தனுடைய கருத்தையும் மறக்க முடியாது. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்தில் வரும் "நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்..." என்ற பாடலில்
"நன்மை என்பதும், தீமை என்பதும்
நாமணிந்திடும் வேடமே இதில்
வெல்வதென்னடி, தோல்வி என்னடி
மேடையில் ஒர் விளையாடலில் நாம்
மேடையில் விளையாடலில்"
என்னும் வரிகளை மறக்கவே
முடியாது.
ஜெயிக்கறதாவது? தோற்கறதாவது? All crap, just live the life என்று அனாயாசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
லா.ச.ரா. அவருடைய பாற்கடல் அல்லது சிந்தாநதி இந்த இரண்டு நூல்களுள் ஏதோ ஒன்றில்
"சிறு வயதில் கஷ்டப்படுவது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் அந்த வாடை போகாது" என்று எழுதியிருந்ததையும்.
அவருடைய 'தரிசனம்' சிறுகதையில் கன்யாகுமரியை
'அபிஷேக சுந்தரியாய் அவளின் அந்த சகிக்க முடியாத சௌந்தர்யம்!" என்று வர்ணித்ததையும்... அடடா! எப்படி மறக்க முடியும்?
சுஜாதாவின் 'சிவந்த கைகள்' கதையில்
"பொய் சொல்லுவதற்கு அசோக்கின் இரண்டு விதிகள்
பொய் சொல்லாதே
பொய் சொன்னால் அதை உண்மையாக்கிவிடு"
எனக்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை நினைத்துக் கொள்வேன். பொய் சொல்ல மாட்டேன்.
தி.ஜானகிராமன் மோகமுள் கதையை
"இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிதில்லை"
என்னும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகளோடு முடித்திருந்ததை மறக்க முடியுமா?
அவரே 'அன்பே ஆரமுதே' நாவலில்
'இல்லறத் துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதம் துறவில்லறமும்'
என்று எழுதியிருந்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட வரிகள்.
சமீபத்தில் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலில் காது கேட்காத ஒருவன்தான் கதாநாயகன். அதில் அவன் ,"குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காது" என்று சொல்வதாக வரும் வரிகள் என்னை அதிர வைத்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.
எவ்வளவு முயற்சி செய்தும் நாம் விரும்பும் சில விஷயங்கள் நடக்காத பொழுது 'முத்து' படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும்
"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்னும் வசனம்தான் ஆறுதல்.
மற்றொரு மறக்க முடியாத வசனம் விருமாண்டி படத்தில் கமல் கூறும்,
"பெரும்பாலும் நாம் சந்தோஷமா இருக்கும் பொழுது நமக்கு அது தெரிவதில்லை "
எவ்வளவு அர்த்தமுள்ள வசனம்!
கண்ணதாசனின் இந்த வரிகளை கூறாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது.
பிறந்த பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
படைத்தவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்


































.jpeg)
.jpeg)

