பாழாப் போன டி.வி. வந்து பாடா படுத்துதே
நான் சுகம் நீ சுகமானு நாலு வரி எழுதேன்னு
நச்சரிக்கும் அம்மாவுக்கு நாளைக்குத்தான் எழுதோனும்
(பாழாப் போன டி.வி. வந்து...)
அடுத்த வீட்டு அக்காவுக்கு அறுவை சிகிச்சை ஆச்சுதாம்
ஆதரவாய் பார்த்து பேச ஆகவில்லை இன்னோமும்
(பாழாப் போன டி.வி. வந்து...)
கையில் எடுத்த சோறு காஞ்சு போன பின்னாலும்
வாய் போய் சேரவில்லை, வாய்க்கு ருசி ஏதுமில்லை
(பாழாப் போன டி.வி. வந்து...)
வீட்டினுள் பேச்சில்லை, வீதியில் உறவில்லை
கலகலக்கும் விளையாட்டு, கைவினைகள் ஏதுமில்லை
(பாழாப் போன டி.வி. வந்து...)
செல் போன் வராத காலத்தில் நான் எழுதிய கவிதை இது. இன்றைக்கும் ஓரளவு பொருத்தமாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
அருமை. டீவி படுத்துவதைக் காட்டிலும் ஸ்மார்ட்ஃபோன் படுத்தல் இன்னும் அதிகம்!!
ReplyDeleteThank you!
Deleteஇப்போல்லாம் யார் கடிதம் எழுதறாங்க? கடிதம்னு ஒண்ணு இருந்ததே இந்தக் காலக் குழந்தைகள் அறிய மாட்டார்கள்.
ReplyDeleteஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய கல்வி முறை வருவதற்கு முன்னால் நம் நாட்டில் ஓலைச் சுவடியில்தான் எழுதுவது வழக்கம். அப்போதெல்லாம் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் எழுதவும் தெரியாதாம். ஒரு சிலருக்கே எழுதப் படிக்கத் தெரியுமாம். கணினி வந்த பிறகு அந்த நிலை மீண்டும் வந்து விடுமோ என்று கூட கல்வியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இப்போதெல்லாம் கையால் எழுதுவது குறைந்துதான் போய் விட்டது.
Deleteகையால் எழுதுவதே பலருக்கும் மறந்து போயிருக்கும் செல் போனும் டிவியும் இருந்தாலும் ரொம்பவே படுத்துகிறதுகள்
ReplyDeleteஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய கல்வி முறை வருவதற்கு முன்னால் நம் நாட்டில் ஓலைச் சுவடியில்தான் எழுதுவது வழக்கம். அப்போதெல்லாம் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் எழுதவும் தெரியாதாம். ஒரு சிலருக்கே எழுதப் படிக்கத் தெரியுமாம். கணினி வந்த பிறகு அந்த நிலை மீண்டும் வந்து விடுமோ என்று கூட கல்வியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இப்போதெல்லாம் கையால் எழுதுவது குறைந்துதான் போய் விட்டது.
Deleteji obviously true...
ReplyDeleteyou can find many persons seeing one programme on t.v and another in smartphone...simultaneously
Thank you!
Delete