கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 29, 2017

ஸ்வட்ச் பாரத்?

ஸ்வட்ச் பாரத்?







அரசுடைமை ஆக்கப்பட்ட வாங்கி ஒன்றின் ATM இல் கொட்டி கிடைக்கும் குப்பைகள். ஏ.டி.எம். ஐ பயன்படுத்துபவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தான். குப்பை கூடை வைத்திருந்தும் அதில் குப்பையை போடாமல் சுற்றி எறிந்திருக்கிறார்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பட்டுக்கோட்டையாரின்(பிரபாகர் இல்லை, கல்யாண சுந்தரம் ) பிரபலமான வரிகள். மக்களுக்கே நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்?

இங்கு இன்னொரு விஷயமும் எழுதத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை பிரித்து போடச் சொல்லி கார்பரேஷனிலிருந்து பச்சையில் ஒன்று, சிவப்பில் ஒன்று என இரண்டு பிளாஸ்டிக் கன்டைனர்கள் கொடுத்தார்கள். அதை எப்படி செயல் படுத்த வேண்டும்? பிளாஸ்டிக் பையில் குப்பைகளை சேகரிக்கலாமா போன்ற கேள்விகளுக்கு விடை கொடுக்க யாரும் இல்லை.

நான் தனியாக பிரித்து கொடுத்தாலும், என் வீட்டு பணிப்பெண்,"யாரும் பிரிச்சு போடறதில்லைமா, ஒன்னாதான் போடறாங்க, நாம பிரிச்சு கொடுத்தாலும், அவங்க ஒன்னாதான் போடறாங்க.." என்றாள். ஆனால் காலனி வாசலில் என்னவோ மூன்று டஸ்ட் பின்கள் வைக்கப் பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் பெங்களூர் பரவாயில்லை என்று தோன்றுகிறது.  நான் என் மகன் வீட்டிற்கு பெங்களூர் சென்றிருந்தபொழுது என் மகன் என்னிடம், " அம்மா குப்பைகளை பிரித்து போடம்மா, ஏற்கனவே மெயின்டனன்ஸ் பார்க்கிறவர்கள், குப்பைகளை பிரித்து போடாவிட்டால் ரூ.1000/- அபராதம் கட்ட தயாராக இருங்கள் என்று எச்சரித்திருக்கிறார்கள்", என்றான். அதைப் போல அங்கு சிறிய கடை முதல் பெரிய சூப் மார்க்கெட் வரை பிளாஸ்டிக் கவரில் சாமான்கள் தருவதில்லை, பேப்பர் கவர்தான். ஏன் திருவண்ணாமலையில் கூட இதை கண்டிப்பாக கடை பிடித்தார்கள். பிளாஸ்டிக் கவர்கள் தர மாட்டார்கள்.

சென்னையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதை சீரியசாக கடை பிடிப்பதில்லை. மற்ற ஊர்களை பற்றி எனக்கு தெரியவில்லை.

இப்படி சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் அரசாங்கம், சமூக பொறுப்பில்லாத மக்கள் இவர்களை வைத்துக் கொண்டு ஸ்வாட்ச்சாவது? பாரதமாவது?







16 comments:

  1. தனது வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பலருடைய எண்ணமாக இருக்கிறது. அனைவரும் நம் தேசத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால் தான் அரசின் திட்டமும் வெற்றி பெறும்.....

    ReplyDelete
    Replies
    1. வெளி நாட்டினர் நம்மைப் பற்றி கூறும் ஒரு கருத்து, இந்தியர்கள் தம் வீட்டை கூட்டி, குப்பையை தெருவில் போடுவார்கள் என்பதாகும். நம் வீட்டை போலவே பொது இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பது எப்போது நம் மக்களுக்கு தோன்றுகிறதோ அப்போதுதான் நம் நாடு சுத்தமாக இருக்கும். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

      Delete
  2. சுய விழிப்புணர்வு இல்லாமல் இவையெல்லாம் மாறாது. குப்பைகள் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. எங்களுக்கும் இது ஒரு பிரச்சினையே.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      Delete
  3. //பிரபாகர் இல்லை, கல்யாண சுந்தரம்//
    ஹாஹாஹா மிகவும் இரசித்தேன்

    எனக்கும் இந்த மாதிரி விடயங்களை காணும் பொழுது கோபம் வரும் ஆம் இவர்கள் அனைவருமே படித்தவர்கள்தாளே...

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் சொல்லிக் கொள்கிறர்கள். வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி!

      Delete
  4. mmmmmmmmm ஸ்வச் பாரத்! இதைக் குறித்து நிறையச் சொல்லியாச்சு. சென்னை நகரமே ஒரு குப்பைக் கூடையாகத் தான் இருக்கு. நாங்க இருந்தவரை அம்பத்தூரும் குப்பைக் கூடையாகவே இருந்தது. நாங்க தான் கத்திட்டு இருப்போம். இப்போ மாநகராட்சியிலே அபராதம் விதிக்கிறதாலே யாரும் குப்பை போடறதில்லை. ஆனால் திருச்சி, ஶ்ரீரங்கம் சுத்தமாகவே இருக்கு! சுத்தமான நகரங்களில் முதல் இரண்டு இடத்துக்குள் திருச்சி இருக்கிறது. ஸ்வச் திருச்சி! Svachch Tiruchy! :)

    ReplyDelete
    Replies
    1. //சுத்தமான நகரங்களில் முதல் இரண்டு இடத்துக்குள் திருச்சி இருக்கிறது. ஸ்வச் திருச்சி! Svachch Tiruchy! :)// இது குறித்து எனக்கும் பெருமை உண்டு ஏனென்றால் பிறந்து வளர்ந்தது திருச்சியில்தானே? இருந்தாலும் ஒரு சந்தேகம், சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மூக்கை பிடித்துக் கொள்ளாமல் நிற்க முடிகிறதா?

      Delete
  5. இங்கேயும் துணிக்கடைகள், காய்கறிக் கடைகள், பூக்கடைகளில் ப்ளாஸ்டிக் பைகள் கொடுக்காமல் தான் இருந்தார்கள். இப்போது சில மாதங்களாக மீண்டும் புழக்கத்தில் வந்திருந்தது! :(

    ReplyDelete
  6. தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      Delete
  7. மோடியின் கண்களில் படவில்லையா அதற்கென செய்யும் செலவுக்கு ஏற்ற ரிசல்ட் இருக்கிறதா அக்கரைக்கு இக்கரை பச்சை நான் துபாய் சென்று வரும் போது என்னுடன் பயணித்த ஒருவர் சென்னை விமான தளத்தில் இருந்து வரும்போது அதுவரை அடக்கி வைத்திருந்தமாதிரி வெளியே வந்தவுடன் புளிச் சென்று காறித் துப்பினார் அவர் ஜென்மம் சாபல்யமடைந்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வெளி நாட்டில் இருக்கும் பொழுது ஒழுங்காக விதி முறைகளை கடை பிடிக்கும் நம்மவர்கள், நம் நாட்டில் வேறு விதமாக நடந்து கொள்வார்கள். என்ன செய்வது? கருத்திட்டதிற்கு நன்றி!

      Delete
  8. //மோடியின் கண்களில் படவில்லையா//

    ஆமாம், ஜிஎம்பி ஐயா, இந்த நாட்டில் இதற்கு முன்னர் இருந்த பிரதமர்கள் அனைவரும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் தவறையும் தனிப்பட்ட முறையில் திருத்திக் கொண்டிருந்தபோது மோதி மட்டும் அப்படிச் செய்யாதது மாபெரும் குற்றம் தான்! செலவு செய்யாமல் கழிப்பறை கட்டும் வித்தையும் தெரியாதது ஒரு குற்றம் தான்! ஊழியர்களுக்குப் பணம் கொடுக்காமலே குப்பைகளை அகற்றும் வித்தையும் தெரியாமல் போனதும் குற்றம் தான்! மக்கள் அப்படித் தான் துப்புவார்கள்! அதை மோதி மட்டுமே வந்து சுத்தம் செய்யாமல் இருப்பது அதைவிடப் பெரிய குற்றம்! :)))))))

    ReplyDelete
  9. நான் பலவருடங்களாகவே கடைகளில் ஞெகிலி பைகளை கொடுத்தாலும் வாங்குவதில்லை. உடன் இருப்பவர்களை வாங்க விடுவதுமில்லை. மாற்றம் நம்மில் இருந்து வரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. //மாற்றம் நம்மில் இருந்து வரவேண்டும்// 100% உண்மை! வருகைக்கும், கருத்திட்டதிற்கும் நன்றி!

      Delete