மாலையில் மலர்ந்த நோய்..:((
கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு கணினியை திறந்திருக்கிறேன். மார்ச் 8 அன்று பேத்திக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் மொட்டை அடிப்பதற்காக சென்று விட்டு வந்தவள் 10ம் தேதி மதியம் உடல் வலி, தலை வலி, குளிர் என்று உடல் நல குறைவுக்கான அறிகுறிகள் தோன்ற ஒரு க்ரோஸினை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டேன். மறு நாள் உடல் நல பாதிப்பு அதிகம் இருந்ததால் மருத்துவரிடம் சென்றேன். அவர் தந்த மருந்துகளை எடுத்துக் கொண்டதில் காலையில் ஜுரம் இருக்காது. "காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்" என்ற வள்ளுவர் வாக்கினைப் போல மதியத்திலிருந்து உடல் நலம் மோசமாகும், மாலையில் அதிகமாகி விடும். ஒரு வேலை டைபாய்டு ஆக இருக்கப் போகிறது என்று பயமுறுத்தினார்கள். முதல் நாள் 102 டிகிரியைத் தோட்ட ஜுரமாணி அடுத்த நாள் 104 இல் போய் நின்றது. பிறகு என்ன? ரத்தப் பரிசோதனை, ட்ரிப்ஸ், ஆன்டிபயாட்டிக்ஸ் ஆரம்பம்..
பிளட் டெஸ்ட் ரிசல்ட் நார்மல், வைரல் பீவர்தான். ஒரு வாரம் இருக்கும். மூன்று நாட்கள்தானே ஆகின்றன? இன்னும் நாலு நாட்கள் இருக்கிறதே.. கொஞ்சம் கொஞ்சமாக ஜுரம் குறைந்து விடும். " என்றார் மருத்துவர். குறைந்தது. ஆனால் அசதியும் இருமலும், வாய் கசப்பும்... அப்பப்பா! இன்னும் முழுமையாக சரியாகவில்லை.
வாட்சாப் செய்திகள் இருநூறை தாண்டி விட்டன. அவ்வப்பொழுது. ஏதோ கொஞ்சம் வாட்சாப் மற்றும் முகநூல் மட்டும் பார்த்தேன். செல்போனில் ப்ளாக் பார்ப்பது அத்தனை சௌகரியமாக இல்லை.
இனிமேல்தான் விட்டவற்றை பிடிக்க வேண்டும்.
உடல் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். எங்கள் ஆசிரியர் ஒருவர் வீட்டிலும் மொத்தமாக எல்லோரும் படுத்து எழுந்தார்கள். மிகவும் படுத்துகிறதுதான்.
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் என் கணவருக்கும் பேத்திக்கும் கூட ஜுரம் வந்தது. நல்ல வேளையாக அவர்களை அதிகம் பாதிக்கவில்லை. இப்பொழுது நன்றாக தேறி விட்டேன்.
Deleteஉடலும் உள்ளமும் நலம் தானா என்று அடிக்கடி பரிசோதித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஐம்பது வயதுக்குப் பிறகு இதெல்லாம் மிக அவசியம். (2) வள்ளுவர் சொன்னது வேறொரு நோய் பற்றி (என்று நினைக்கிறேன்....!)
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
//வள்ளுவர் சொன்னது வேறொரு நோய் பற்றி (என்று நினைக்கிறேன்....!)// ஆமாம்! அவர் காதல் வைரசுக்கு சொன்னதை நான் வைரலுக்கு எடுத்தாண்டு கொண்டேன்.
Deleteஉடல் நலம் பேணவும். நான் சொன்னபடி சாப்பிட்டீர்களா? அதைப் பார்க்கவே இல்லையோ என நினைக்கிறேன். :)
ReplyDeleteநீங்கள் சொன்னவற்றை கடை பிடிக்கிறேன். மிக்க நன்றி! தாமதமாக நன்றி கூறுவதற்கு மன்னிக்கவும். செல் போனில் பதிலளிக்கலாம் என்றால் உங்களுடைய பழைய பதிவுகள் ஓபன் ஆகின்றன. தவறாக நினைக்க வேண்டாம். மீண்டும் ஒரு முறை நன்றி!
Deleteஉடல் நலம் முக்கியம். வலையுலகம் எங்கே போய்விடப் போகிறது... Take Care.
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteஉடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லி வரும் போதே வைரல் ஃபீவர் என்று தோன்றியது...
ReplyDeleteஇப்போது வெயிலின் தாக்கத்தினால் வருவதாகத் தெரிகிறது. ..உடல் நிலை பார்த்துக் கொள்ளூங்கள்..
கீதா
வாங்க கீதா, நன்றி!
Deleteஉடல் நலம் பேணிக்காக்கவும் வலைப்பூ பிறகு வரலாம்
ReplyDeleteவாங்க கில்லர்ஜி! எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். என் உடல் நலம் 99% தேறி விட்டது. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி!
Deleteமுதலில் உடல் நலமாகி வருகிறது என்று நம்பவேண்டும் இப்போது தேவலாமா
ReplyDeleteஉண்மைதான்! என் உடல் நலம் 99% தேறி விட்டது. அசதிதான் கொஞ்சம் இருக்கிறது. மற்றபடி ரொடீன் வேலைகள் எல்லாம் பார்க்க துவங்கி விட்டேன். நன்றி!
Deleteமுதலில் உடல்நலம்
ReplyDeleteஅடுத்து ஓய்வு
பின்னரே வலைப்பக்கமே!
உடல் நலம், ஓய்வு இரண்டும் போதுமான அளவு எடுத்துக் கொண்டு விட்டேன். வழக்கம்போல எல்லா வேலைகளையும் பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதனால்தான் இப்போது வலைப்பக்கம் வந்துள்ளேன்.உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி!
Deleteஇப்போது தேவலையா.. சென்னையில் வைரல் ஃபீவர் பரவுதுன்னு சொன்னாங்க. டேக் கேர்.
ReplyDeleteமுதல் வருகைக்கும், அக்கறையான விசாரிப்புக்கும் நன்றி! உடல் நலம் தேறி விட்டது.
Delete