எங்கள் ஊர்களுக்கு கிடைத்த கௌரவம் !!
நான் பிறந்து வளர்ந்த ஊரான திருச்சி மற்றும் எங்கள் சொந்த ஊரான தஞ்சை ஜில்லாவை சேர்ந்த கண்டமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இந்த வாரம் ஒரு கௌரவம் கிட்டியிருக்கிறது.
இந்தியாவின் சுத்தமான நகரங்களுள் ஆறாவது இடத்தில் திருச்சி இருக்கிறது. (சத்திரம் பேருந்து நிலையம் துர்கந்தம் இல்லாமல் இருக்கிறதா?)
எங்கள் சொந்த ஊரான கண்டமங்கலம் டிஜிட்டல் கிராமமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக குஜராத் மாநில அகோதரா கிராமத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூலம் டிஜிட்டல் கிராமமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக அந்த வங்கி இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நூறு கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 கிராமங்களில் எங்கள் ஊரான கண்டமங்கலமும் ஒன்று.
கிராம மக்கள் இரண்டாயிரத்து இரு நூறு பேர்களில் ஆயிரத்து எழுநூறு பேர்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டு ஏ.டி.எம். அட்டைகளும் வழங்கப்பட்டு விட்டதாம். கடைகளில்(எனக்கு தெரிந்து பெருமாள் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு கடை உண்டு) ஸ்வாய்ப்பிங் மெஷினும் வழங்கப் பட்டு விட்டதாம்.
அடுத்த முறை ஊருக்கு செல்லும் பொழுது கதிர்வேலு கடையில் ஒரு சோடா குடித்து விட்டு, கார்டை தேய்த்து விடலாம். முன்னோடி கிராமமாக இருப்பதில் சந்தோஷம்!!:))))
உங்க ஊர் சுத்தமான நகரமாக 6 வது இடத்தில் வந்ததற்கு சந்தோஷம் ஆனால் கடந்த வருடம் திருச்சி 3 வது இடத்தில் இருந்ததாமே ஏன் இந்த மாற்றம்
ReplyDeleteதெரியவில்லையே. இப்போது அங்கு வசிப்பவர்களிடம் பதில் இருக்கலாம். வருகைக்கு நன்றி.
Delete//அடுத்த முறை ஊருக்கு செல்லும் பொழுது கதிர்வேலு கடையில் ஒரு சோடா குடித்து விட்டு, கார்டை தேய்த்து விடலாம். முன்னோடி கிராமமாக இருப்பதில் சந்தோஷம்!!:))))//
ReplyDeleteகண்ட மங்கலத்தில், கண்டதை வாங்கிக்குடிக்காமல், ஒன்றுக்கு இரண்டாக ஜில்லுன்னு பன்னீர் சோடாவாக வாங்கிக்குடிக்கவும். சந்தோஷமாக இருக்கவும்.
இம்முறை நம் திருச்சி கொஞ்சம் பின்னுக்கு போய் உள்ளது என்பதே உண்மை.
நீங்கள் பிறந்து வளர்ந்துள்ள ஊரான திருச்சியிலேயே, நீங்கள் தொடர்ந்து இருந்திருந்தால் அது முதலிடம் பிடித்திருக்கும் என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். எங்கிருந்தாலும் வாழ்க !
//நீங்கள் பிறந்து வளர்ந்துள்ள ஊரான திருச்சியிலேயே, நீங்கள் தொடர்ந்து இருந்திருந்தால் அது முதலிடம் பிடித்திருக்கும் என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.// இதுதானே வேண்டாம் என்கிறது.. வருகைக்கு நன்றி.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎமது வாழ்த்துகளும் உரித்தாகுக...
Deleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
Deleteமகிழ்ச்சியான செய்தி
ReplyDeleteபகிர்ந்து அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
Deleteதிருச்சி முதல் மூன்று இடங்களுக்குள் இருந்து வந்தது, பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆறாம் இடத்துக்குப் போயிருக்கிறது! மற்றபடி உங்கள் ஊர் டிஜிடல் கிராமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete//திருச்சி முதல் மூன்று இடங்களுக்குள் இருந்து வந்தது,// அதற்காக சென்ற வருடம் முகநூலில் பெருமை பட்டுக் கொண்டேன்.(ஏன் ஆறாம் இடத்திற்குச் சென்றது என்று உங்களை போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்) வருகைக்கு நன்றி.
Deleteஹெஹெஹெஹெ, நாங்க ஆறு மாசமா யு.எஸ்ஸில் இருக்கோமா! அதான்! :)))))
DeleteYes we are very proud of it
ReplyDeleteThanks for coming.
Deleteதிருச்சிக்காரர்கள் பெருமைப்படட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. திருவெறும்பூர் என்ற ஊரும் திருச்சியில்தான் உள்ளதாமே! எண்பதுகளில் ஒருமுறை நண்பரின் திருமணத்திற்காகத் திருச்சி சென்று திரும்புகையில்,பஸ் பயணத்தின்போது, தலைக்குமேல் பெட்டியை வைத்துவிட்டு சற்றே கீழிறங்கி ஒருநிமிடம் நின்றேன். வந்து பார்த்தால் பெட்டி அப்படியே இருந்தது! நிம்மதியாக உட்கார்ந்தேன். சென்னை வந்ததும் எழுந்தேன். பெட்டி அப்படியே இருந்தது. எடுக்கலாம் என்பதற்குள் வேறொருவர் அதைப் பற்றிக்கொண்டார். ஆம், எனது பேட்டியின் அதே brand அதே டிசைன் பெட்டி அது. வேறு வார்த்தையில் சொல்வதானால், என்னுடையே பெட்டி, நான் பஸ்ஸில் வைத்த சில நிமிடங்களிலேயே திருவெறும்பூர் ஆட்களால் திருடப்பட்டுவிட்டது! Moral of the story: திருச்ச்சிக்காரர்களான வலைப்பதிவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒன்றிரண்டு பதிவுகளிலேயே நம்மை மிஞ்சிக்கொண்டு மேலேபோய்விடுவார்கள். ஆழமானவர்கள்! உதாரணம்: வை.கோ., பானுவெங்கட்...
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
Chellappa Yagyaswamy May 5, 2017 at 1:41 PM
Delete//திருச்சிக்காரர்கள் பெருமைப்படட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
//திருவெறும்பூர் என்ற ஊரும் திருச்சியில்தான் உள்ளதாமே! எண்பதுகளில் ஒருமுறை நண்பரின் திருமணத்திற்காகத் திருச்சி சென்று திரும்புகையில், பஸ் பயணத்தின்போது, தலைக்குமேல் பெட்டியை வைத்துவிட்டு சற்றே கீழிறங்கி ஒருநிமிடம் நின்றேன். வந்து பார்த்தால் பெட்டி அப்படியே இருந்தது! நிம்மதியாக உட்கார்ந்தேன். சென்னை வந்ததும் எழுந்தேன். பெட்டி அப்படியே இருந்தது.//
ஆஹா, இதுவரை படித்ததும் எங்கும் நியாயமான, நேர்மையான பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாத உன்னதமான + உத்தமமான மனிதர்கள் இருக்கிறார்கள் என நினைத்து எனக்குள் மிகவும் மகிழ்ந்துகொண்டேன்.
சொல்லவருவதை எப்படியொரு பீடிகை போட்டு அழகாகச் சொல்கிறீர்கள். நீங்க நீங்க தான். தங்கள் கைகளை வாங்கி என் கண்களில் ஒத்திக்கொள்ளணும் போல இருக்குது.
//எடுக்கலாம் என்பதற்குள் வேறொருவர் அதைப் பற்றிக்கொண்டார். ஆம், எனது பேட்டியின் அதே brand அதே டிசைன் பெட்டி அது. வேறு வார்த்தையில் சொல்வதானால், என்னுடையே பெட்டி, நான் பஸ்ஸில் வைத்த சில நிமிடங்களிலேயே திருவெறும்பூர் ஆட்களால் திருடப்பட்டுவிட்டது!//
இன்றும் திருவெறும்பூரில் சில சட்டவிரோதமான காரியங்கள் நடைபெற்று வருவதாக அடிக்கடி செய்தித்தாள்கள் மூலம் அறிகிறேன். எந்த ஊர்தான் ஒழுங்கு?. திருச்சி >>>>> மதுரை செல்லும் பேருந்துகள் இடையில் ஓரிடத்தில் டிபன் காஃபி சாப்பிட நிறுத்தப்படும். அந்தக் குறுகிய நேரத்தில் பல சூட்கேஸ்கள் திருடப்பட்டு, மின்னல் வேகத்தில் எதிர்திசையில் கிளம்பும் பேருந்துகள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றன. இது பல நாட்களாக நடைபெற்று வருவதாகச் சொல்லுகிறார்கள். இவ்வாறு யார் யார் எதை எதை இழந்து தினமும் தவிக்கிறார்களோ!
//Moral of the story: திருச்சிக்காரர்களான வலைப்பதிவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒன்றிரண்டு பதிவுகளிலேயே நம்மை மிஞ்சிக்கொண்டு மேலேபோய்விடுவார்கள். ஆழமானவர்கள்!//
அடடா, கடைசியில் இதுபோல ஒரே போடாகப் போட்டு விட்டீர்களே ஸ்வாமீ !
//உதாரணம்: வை.கோ., பானுவெங்கட்...//
இது வேறயா? நம்மை மிஞ்சிக்கொண்டு மேலே போய்விடும் ஆழமானவர்களில் ‘பானு வெங்கட்’ என்று தாங்கள் சொல்லியிருப்பது ஓக்கே - ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் ..... நானும் இதனை அப்படியே முன்மொழிந்து, வழிமொழிந்து, தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதல் அளிக்க ஒத்துக்கொள்கிறேன். :)
வருகைக்கு நன்றி செல்லப்பா சார்.
Delete// திருச்ச்சிக்காரர்களான வலைப்பதிவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒன்றிரண்டு பதிவுகளிலேயே நம்மை மிஞ்சிக்கொண்டு மேலேபோய்விடுவார்கள். ஆழமானவர்கள்! உதாரணம்: வை.கோ., பானுவெங்கட்...//
காலை நன்றாக பூமியில் ஊன்றிக் கொள்கிறேன்.
@வை.கோ. சார்: //நம்மை மிஞ்சிக்கொண்டு மேலே போய்விடும் ஆழமானவர்களில் ‘பானு வெங்கட்’ என்று தாங்கள் சொல்லியிருப்பது ஓக்கே - ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் ..... நானும் இதனை அப்படியே முன்மொழிந்து, வழிமொழிந்து, தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதல் அளிக்க ஒத்துக்கொள்கிறேன். :)//
இந்த விளையாட்டுக்கு நான் வரலை..
மூன்றாம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு! இருந்தாலும் மகிழ்ச்சி.
ReplyDeleteசத்திரம் பேருந்து நிலையத்தில் துர்கந்தம் இல்லை - ஏனெனில் கழிப்பறை வசதிகளே இல்லை! எதிர் புறத்தில் கடைகளோடு சேர்ந்து கட்டணக் கழிப்பிடம் உண்டு! அங்கே எப்படி நிலை என்று தெரியாது!
எங்கே தான் திருடுபவர்கள் இல்லை! இதற்கென்றே எல்லா ஊரிலும் ஆட்கள் உண்டு!
நன்றி வெங்கட்.
Deleteஅடடே... சந்தோஷமான விஷயம்தான். சென்னைதான் எங்கோ பின்னால் தள்ளப்பட்டு விட்டது!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteகண்டமங்கலம் தஞ்சை மாவட்டத்தில் எங்கிருக்கிறது?
வாருங்கள் மனோ. வருகைக்கு நன்றி. கண்டமங்கலம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு செல்லும் வழியில்
Deleteஇருக்கிறது. தஞ்சை மாவட்டம் என்றாலும் திருச்சிக்கும் மிக அருகில்தான் இருக்கிறது. (காரில் சென்றால் ஒரு மணி நேர பயணம்தான்) திருச்சியிலிருந்து கல்லணை சென்று பின்னர் வேறு பேருந்தில் செல்ல வேண்டும். புகை வண்டியில் செல்வதானால் பூதலூரில் இறங்கி பின்னர் பேருந்தில் செல்ல வேண்டும்.
வாழ்த்துக்கள் அக்கா ..
ReplyDeleteநன்றி ஏஞ்சலின்.
Deleteஅட! வாழ்த்துக்கள்! மிகவு. மகிழ்வான செய்தி....
ReplyDeleteநன்றி துளசிதரன்.
Deleteநன்றி துளசிதரன்.
Delete// நான் பிறந்து வளர்ந்த ஊரான திருச்சி மற்றும் எங்கள் சொந்த ஊரான தஞ்சை ஜில்லாவை சேர்ந்த கண்டமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இந்த வாரம் ஒரு கௌரவம் கிட்டியிருக்கிறது.//
ReplyDeleteஆஹா… வாரும் சகோதரியாரே … நானும் திருச்சிதான். ஆனால் சொந்த ஊர் என்று எடுத்துக் கொண்டால் திருமழபாடி. உங்கள் சொந்த ஊரான கண்டமங்கலமும், எங்கள் அம்மா ஊரான மேலப்புதகிரியும் திருக்காட்டுப்பள்ளிக்கு பக்கம்தான். திருச்சியில் பிறந்து வளர்ந்த உங்களது பதிவைப் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.
திருச்சிக்கு எதனை அடிப்படையாக வைத்து, சுத்தமான நகரங்கள் வரிசையில் மூன்றாவது மற்றும் ஆறாவது என்று தகுதி நிர்ணயித்தார்கள் என்று தெரியவில்லை. காரணம் எதிர்பார்த்த சுத்தம் இல்லை. உதாரணத்திற்கு மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள்.
இன்னொருமுறை நான் திருக்காட்டுப்பள்ளி பக்கம் வரும்போது கண்டமங்கலம் சென்று பார்க்கிறேன்.