கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 12, 2017

அருந்தச் சொல்வது மாங்கனி சாறு (மேங்கோ ரஸ்)

அருந்தச் சொல்வது மாங்கனி சாறு
(மேங்கோ ரஸ்)

தேவையான பொருள்கள்:
மாம்பழம் -  2 அல்லது 3
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் 
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப் 



























முதலில் மாம்பழங்களை நன்கு கழுவி தோல் சீவி செதில் செதிலாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர். அந்த துண்டுகளை மிக்சியில் அல்லது whipper மூலம் கூழாக்கிக் கொள்ளவும். அதில் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து லேசாக சூடாக்கவும். கொதிக்க கூடாது. சூடான மாம்பழக் கூழ் ஆறியதும், பால் சேர்த்து குளிர் சாதன பெட்டியில் வைத்து ஜில்லென்று அருந்தலாம். கோடை காலத்திற்கேற்ற சுவையான பானம். 


பால் சேர்ப்பதற்கு முன் 
பால் சேர்த்த பிறகு 
























சர்க்கரை சேர்க்க காரணம் எல்லா பழங்களும் ஒரே சுவையில் இருக்காதல்லவா? சர்க்கரை அதை சமன் செய்யும்.  

நார் மாம்பழம், புளிப்பு மாம்பழம் போன்ற எல்லா வகை மாம்பழங்களிலும்  மேங்கோ ரஸ் செய்யலாம். நார் பழமாக இருந்தால், மிக்சியில் சற்று அதிக நேரம் அடிக்க வேண்டும். புளிப்பான பழங்களுக்கு சர்க்கரை கொஞ்சம் அதிகம் சேர்க்க வேண்டும்.     

இந்த மேங்கோ ரசை சப்பாத்திக்கு சைட் டிஷாக பயன் படுத்துபவர்கள் உண்டு. 


24 comments:

  1. ஸூப்பர் ஐயிட்டம் இப்பொழுதெல்லாம் மாம்பழத்தை நம்பி வாங்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ!

      Delete
  2. இதையெல்லாம் பொறுமையாகச் செய்து யாராவது எனக்கு அருந்தக் கொடுத்தால் அருமையாகத்தான் இருக்கும்.

    கடைசியில் காட்டியுள்ள பாத்திரத்தின் அளவைப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன். வேறு என்ன செய்ய?


    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. தலைப்பைத் தாண்டி வரமுடியவில்லை. சென்ற தலைமுறை சினிமாக் கவிஞர்கள் என்னமாய் விஷயங்களைக் கையாண்டிருக்கிறார்கள் என்று வியப்பாகத் தான் இருக்கிறது.

    அருந்துவதை விட்டுத் தள்ளுங்கள். இப்பொழுது எழுதச் சொல்வது 'புஸ்தகா'மின் நூலகமாகத் தான் இருக்கிறது! :))

    ReplyDelete
    Replies
    1. //தலைப்பைத் தாண்டி வரமுடியவில்லை. சென்ற தலைமுறை சினிமாக் கவிஞர்கள் என்னமாய் விஷயங்களைக் கையாண்டிருக்கிறார்கள் என்று வியப்பாகத் தான் இருக்கிறது.//

      உண்மைதான். நான் முதலில் இந்த பதிவுக்கு 'மேங்கோ ரஸ்' என்றுதான் தலைப்பு கொடுப்பதாக இருந்தேன். இன்று காலை தொலைகாட்சியில் ஏதோ ஒரு சேனலில் 'அங்கே மாலை மயக்கம் யாருக்காக..' என்னும் பாடலை ஒளி பரப்பினார்கள். அதில் வந்த அருந்தச் சொல்வது மாங்கனி சாறு என்னும் வரிகளை நான் கையாண்டேன், கண்ணதாசனுக்கு நன்றி!

      முதல் வரவுக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி!

      Delete
  4. ரசமாக்கி சாப்பிடுவதைவிட கனியாகவே கடித்து சாப்பிடுவது தான் சின்னவயதில் இருந்தே எனக்குப் பழக்கம்....ஆனால் வைகோ சொன்னமாதிரி, நமக்கு வேலை வைக்காமல் யாராவது கொடுத்தால் இரண்டு தம்ளர் அருந்துவதில்ஆட்சேபமில்லை!

    ReplyDelete
    Replies
    1. //ரசமாக்கி சாப்பிடுவதைவிட கனியாகவே கடித்து சாப்பிடுவது தான் சின்னவயதில் இருந்தே எனக்குப் பழக்கம்....//
      அதுதான் சிறந்ததும் கூட. பழங்கள் சாப்பிடாத என் மகனைப் போன்றவர்களுக்குத்தான் பழச்சாறு எல்லாம்.

      Delete
  5. எந்தப் பழச் சாறுக்கும் சர்க்கரை சேர்ப்பதில்லை! அதன் உண்மையான சுவை போய்விடும் எனத் தோன்றும். :) மற்றபடி பால் உண்டு. பாலுக்குக் கூட நான் சர்க்கரை போடாமல் தான் குடிப்பேன். :)))) பாலின் சுவை அப்போது தான் தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. நானும் பெரும்பாலும் பழச் சாறுகளுக்கு சர்க்கரை சேர்க்க மாட்டேன்.

      Delete
  6. மாங்கோ லஸ்ஸி சாப்பிட்டிருக்கிறீர்களா? க்ரீம் நிறையப் போடுவாங்க! அதான் பயம்! ஏற்கெனவே ஆனை நான் கிட்டே வந்தால் பயப்படுது! :))))

    ReplyDelete
    Replies
    1. மேங்கோ லஸ்ஸி கேள்விப் பட்டிருக்கிறேன், ருசித்ததில்லை. அது சரி, நீங்கள் மதுரையை சேர்ந்தவர்தானே? மதுரை ஜிகிர்தண்டா ரெசிப்பி தெரிந்தால் எழுதுங்களேன்.

      Delete
    2. நீங்க வேறே! மதுரையிலே இருந்தவரைக்கும் ஜிகிர்தண்டா ஒரு கனவு! :) அப்புறம் சாப்பிட்டப்போப் பேத்தி பிறந்தாச்சு! அதனால் அதைப் பத்திச் சொல்லும்படி ஒண்ணும் தெரியாது. கிட்டத்தட்ட ஃபலூடா மாதிரினு நினைக்கிறேன். :)

      Delete
    3. ஏனெனில் சௌராஷ்ட்ரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விளக்குத் தூணில் ஒரு கடையில் மட்டும் முன்னால் விற்றுக் கொண்டிருந்தனர். சௌராஷ்டிரர்கள் குஜராத்திலிருந்து வந்ததால் அங்கே பிரபலமான ஃபலூடாவைக் கொஞ்சம் மாற்றி ஜிகிர்தண்டா என்ற பெயரில் அறிமுகம் செய்திருப்பார்களோ! :)))

      Delete
  7. சில மாம்பழங்களை நறுக்கித்தான் சாப்பிட முடியும். சில மாம்பழங்களை முழுசாக அப்படியே நுனியில் பல்லால் ஓட்டை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி சாப்பிட முடியும். இரண்டாவது எனக்குப் பிடித்தமானது.

    ReplyDelete
    Replies
    1. //சில மாம்பழங்களை முழுசாக அப்படியே நுனியில் பல்லால் ஓட்டை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி சாப்பிட முடியும்.// என் கணவர் கூட இப்படித்தான் சாப்பிடுவார். எனக்குத்தான் இந்த டெக்னிக் புரிபடவேயில்லை:(

      Delete
  8. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை - நறுக்கி சாப்பிடுவதில் ஒரு ருசி. பழத்தை நன்கு அமுக்கி, நுனியில் சிறிய துளை செய்து கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி சாப்பிட அது இன்னுமொரு ருசி! இப்படி பால் சேர்த்து Mango Shake ஆக சாப்பிடுவது ஒரு ருசி! எல்லா விதத்திலும் சாப்பிட்டாலும் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எப்படி சாப்பிட்டாலும் ருசிப்பதால்தானே முக்கனிகளில் முதன்மையானதாக போற்றப்படுகிறது.

      Delete
  9. பச்சை மாங்காயில் ஜூஸ் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் உடலுக்கு குளிர்ச்சி என்பூவையின் எண்ணங்களில் செய்முறை விளக்கி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மாங்காயில் செய்யும் ஜூஸ் குடித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். டெல்லியில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். பூவையின் எண்ணங்களில் பார்க்கவில்லை. படித்துவிட்டு முயற்சிக்கிறேன். நன்றி!

      Delete
  10. எங்கள் வீட்ரு மாம்பழங்கள் நார் இருந்தாலும் நல்ல இனிப்பு எனவே சர்க்கரை வேண்டாம் ஆனால் வீட்டில் இது போன்று செய்வது கிடையாது. அப்படியே பழமாகத்தான் சாப்பிடுவது வழக்கம்...செய்து பழக்கமில்லாததால்..

    கீதா: மாம்பஸ் ரஸ் ஆகா வீட்டில் செய்து வைத்தாயிற்று. எங்கள் வீட்டு மாம்பழம் அதி சுவை....இனிப்பும் கூடுதல் எனவே சர்க்கரை சேர்க்காமலேயே...வேண்டும் போது பால் சேர்த்து சாப்பிடுகிறோம்....மாங்கோ பன்னா என்று வட இந்தியாவில் செய்வதும் செய்து வைத்திருக்கிறோம் அதுவும் மிகவும் சுவையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இருவரும் சொல்லியிருப்பதை படிக்கும் பொழுதே நாக்கில் நீர் ஊறுகிறது. கீதா மாம்பழ சீசன் முடிவதற்குள் உங்கள் வீட்டிற்கு ஒரு விசிட் அடிக்க வேண்டியதுதான். வருகைக்கு நன்றி!

      Delete
  11. செய்முறை எளிதாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன். (உங்களுடைய மற்ற பதிவுகஊக்கு இனிமேல்தான் கருத்துரை தர வேண்டும்)

    ReplyDelete
  12. உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடைய பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன். நன்றி!

    ReplyDelete