சென்னையில் ஒரு மழைக் காலம்:(((
சென்னையில் ஒரு மழைக் காலம்:(((
முன் குறிப்பு:இதை படிக்கும் முன் கிரி படத்தில் வரும்
வடிவேலு,ஆர்த்தி காமெடி சீனை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். நான் மாமா வீட்டிற்கு சென்ற பொழுது மாமா கை, கால், மண்டை என்று பல இடங்களில் காயத்தோடும் அதில் கட்டோடும் காணப்பட்டார்.
என்ன மாமா என்ன ஆச்சு?
ஒண்ணுமில்லேப்பா, மழையில கொஞ்சம் வெளில போக வேண்டி வந்தது.
அப்படி என்ன மாமா முக்கியம்? மழை நின்ன பொறவு போக வேண்டியதுதானே?
இல்லப்பா, ரொம்ப தோஸ்து, ஆஸ்பத்ரில சீரிஸா இருகார்னாங்க போகாம இருக்க முடியுமா..?
சரி பஸுல போக வேண்டியதுதானே?
அது எங்கப்பா வருது..? அவசரத்துக்கு ஆகுமா?
ஆட்டோ புடிக்க வேண்டியதுதானே..?
சரிதான் மழைல ஆட்டோவா? என்னோட ஒரு மாச சம்பளம் முழுசையும் ஆட்டோவுக்கு கொடுத்துட்டு நான் என்ன பண்ணறது? சரி நமக்கு தெரிஞ்ச
ரோடுதானே? எங்க பள்ளம் எங்க குழி எல்லாம் தெரியும் என்கர தைரியத்தில் டூ வீலரில் கிளம்பினேன்..
மெயின் ரோடுல போனா அங்க ட்ராபிக் ஜாம்... சரி
பரவாயில்லன்னு குறுக்கு ரோடுல நொழஞ்சேன்.. மொதல்ல நல்லாத்தான் இருந்துச்சு.. திடீர்னு ஒரு பள்ளம்... அவ்வளவு பெரிய பள்ளமா இருக்கும்னு எதிர் பார்கல... வண்டியோட விழுந்துட்டேன்.. கைல அடி..
அய்யய்யோ!
சமாளிச்சு எழுந்து மெதுவா ஒட்டிகிட்டே வந்து மெயின் ரோடு நல்லாத்தான் இருக்கும்னு ந...ம்...ம்...பி திரும்பிட்டேன், அங்க லைட்டே எரியல, வண்டி கீழ விழுந்ததுல ஹெட் லைட்டும் எரியல, ரோடுல கிடந்த ஒரு கல்லுல மோதி மறுபடியும் கீழ விழுந்தேன்
காலுல,தலைல அடி,
அடடா! நீங்க சொல்றதப் பார்த்தா நம்ம கவுன்சலர் வீடு வழியாத்தான்
வந்துருக்கீங்க... அப்படியே அவரப் போய் பார்த்து ரோடைப்பத்தி கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியதுதானே...?
போய் சொன்னேனே...அவரு என்னைப் பார்த்து ஒரு
வார்த்தை சொல்லிட்டார் ...
அப்படி என்ன சொன்னார்?
இவன் ரொ...ம்ம் ...ப.. நல்லவன்டா... ரோடு எவ்ளோ மோசமா இருந்தாலும் ஓட்டறான் ன்னு சொல்லிட்டாரே...!
ஓஓஒ!
பி.கு. : இது என்னுடைய ஒரு பழைய பதிவு. சென்னையில் கொஞ்சம் மழை பெய்கிறது. எங்கள் பகுதியில் நன்றாக இருந்த சாலைகளையெல்லாம் மெட்ரோ வாட்டர் இணைப்பிற்காக தோண்டி, குத்தி, கிளறி போட்டிருக்கிறார்கள். நாங்கள் படும் அவஸ்தையை உங்களுக்கு உணர்த்த இதை பகிர்கிறேன்.
நிறையப் பட்டாச்சு! சென்னை மழையில்! பதிவு பதிவா எழுதியாச்சு! இப்போத் தான் ஐந்து வருடங்களாகப் பிரச்னை இல்லை! ஊர் திரும்பியாச்சா? :)
ReplyDeleteதிரும்பியாச்சு. நன்றாக இருந்த சாலைகளை 2015இல் வெள்ளம் வந்து ஒரு கை பார்த்தது. செப்பனிட்டார்கள், இப்போது மெட்ரோ வாட்டருக்காக மீண்டும் கந்தர கோளம் ஆக்கியிருக்கிறார்கள். ஹூம்!
Deleteஅன்னிக்கே கேட்கணும்னு! கிரி னு ஒரு படம்? ஆர்த்தினு ஒரு நடிகை? யாரு அது? வடிவேலு மட்டும் தெரியுது!
Delete//கிரி னு ஒரு படம்? ஆர்த்தினு ஒரு நடிகை? யாரு அது?//
Deleteஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஒரு மொக்கை படம் கிரி. அர்ஜுன் யார் என்று கேட்டால்... முதல்வனில் நடித்தாரே அவர் .
இந்த ஜோக் ரொம்ப famous ஆச்சே? பார்த்ததில்லையா?
ஆர்த்தி யார் என்று கேட்டால் எப்படி சொல்வது? பிக் பாஸில் வந்தார், ஜூலியோடு சண்டை போட்டார். குண்டாக இருப்பார். இதற்கு மேல் விவரம் வேண்டுமென்றால் நெ.த.வைதான் கூப்பிட வேண்டும்.
முதல்வன் எல்லாம் பார்த்ததில்லைன்னாலும் அர்ஜுன் என்றால் ஒரு மாதிரியாப் புரிஞ்சுடுத்து! ஆனால் ஆர்த்தி! பிக் பாஸ்? ம்ஹூம்! அதெல்லாம் பார்க்கலை!யாராலே ராத்திரி உட்கார முடியும். ஞாயிறன்று மட்டும் பேத்தி கொஞ்சம் லேட்டா வருவா ஸ்கைபில்! அதுக்காக ஒன்பது மணி வரை உட்காருவேன்! நீங்க சொல்லும் ஜோக் என்னனு புரியலை! :)
Deleteவடிவேலு காமெடின்னால் எனக்கு பார்த்திபனோடு அவர் சொல்லும் விவேகானந்தர் குறுக்குச் சந்து மட்டும் தான் தெரியும்! அதே போல் கவுண்டமணி, செந்தில்னா வாழைப்பழக் காமெடி. இரண்டு படங்களும் பார்த்திருக்கேன்! அதான்! :)
Deleteசென்னயப் போலவே இப்போ எல்லா ஊரும் மாறியிருக்குறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு!..
ReplyDeleteஆமாம், நாங்களெல்லாம் கஷடப்படும் பொழுது, மற்றவர்கள் சொகுசாக இருக்கலாமா? யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!!
Deleteடெங்கு பயத்தில் சென்னை கொஞ்சம் சீராகிக் கொண்டிருக்கிறது.
ReplyDeleteஅப்படியா சொல்கிறீர்கள்??? ம்ம்ம்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் அங்கு வந்தால் வட கிழக்குப் பருவ மழை முன்னாலேயே வரலாம்
ReplyDeleteஹா ஹா.. வருக வருக ரிஷ்ய ஸ்ருங்கரே!
Deleteஎங்கள் ஏரியாவில் பப்ளிக் ஹெல்த் என்பதே ரொம்பவே பெரிய கேள்விக் குறி....சாலைகளும் தான்...
ReplyDeleteகீதா