கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, October 20, 2017

தயிர் வடை மஹாத்மியம்

தயிர் வடை மஹாத்மியம்"தயிர் வடை ஒரு பிளேட்" என்று நான் ஆர்டர் கொடுத்தவுடன், என் கணவர் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டதும் நான்," என்ன சிரிப்பு?" என்றேன்.

இல்ல..நேத்துதான் ஏதோ தயிர் வடை சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையும்னு ஏதோ கதையெல்லாம் சொன்ன, இன்னிக்கு தயிர் வடைன்னு ஆர்டர் குடுக்கற.." என்றார்.

என்னது.. தயிர் வடை சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா? என்றான் என் மகன்.

ஆமாம்டா..

என்ன கதை? சொல்லு சொல்லு, எப்படியும் தயிர் வடை வர நேரமாகும். 

ஹர்ஷவர்தனர் தெரியுமா?

ஹர்ஷவர்தனர்..ஹர்ஷவர்தனர்  ? நார்த் இந்தியா முழுவதையும் ஆண்டவர், நாளாந்த யூனிவர்சிட்டி அவர் காலத்துலதானே இருந்தது...??

அவரேதான். அவர் சிறந்த வீரர் மட்டுமில்லை, நல்ல படிப்பாளியும் கூட. பெரிய ஸ்காலர். ஆனால் அவருக்கு தனக்கு நண்பர்கள் இல்லையேன்னு ஒரு மனக்குறை.

ஆமாம் அறிவுஜீவிகளோடு நட்பு பாராட்டுவது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்ப டீடைலா பேசி போரடிப்பார்கள், இல்லைனா மற்றவர்கள் சொல்லும் விஷயங்களில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.."

"ம்ம்.. இருக்கலாம்.. ஹர்ஷர் தன்னோட குருவிடம் சென்று நண்பர்கள் கிடைக்கனுன்னா நான் என்ன பண்ணனும்? என்று கேட்டார். அவரோட குரு நீ சொன்னதைத்தான் சொன்னார்."

அதாவது நீ நிறைய படிச்சிருக்க, அதனால் உன்னோட பேசவே எல்லோரும் பயப்படுகிறார்கள். நீ படித்ததை எல்லாம் கொஞ்சம் மறந்தால் உனக்கு நண்பர்கள் கிடைக்கலாம்.." என்றாராம்.

எப்படி மறப்பது என்று ஹர்ஷர் கேட்க, உளுந்தை தயிரில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிடு, மறதி வரும். என்றாராம்.

ஹர்ஷரும் அதன்படி 48 நாட்கள் உளுந்தை தயிரில் ஊற வைத்து சாப்பிட்டு விட்டு குருவை சென்று சந்தித்திருக்கிறார். அவர் இவருக்கு ஒரு பரீட்சை வைத்தாராம். அதில் ஹர்ஷர் வழக்கம்போல முதல் மார்க் வாங்கி விட, அவருடைய குரு," உனக்கு விமோசனமே கிடையாது. 48 நாட்கள் தயிரில் ஊறவைத்த உளுந்தை சாப்பிட்டும்  கூட உனக்கு மறதி வரவில்லை. நட்பு வட்டம் என்னும் ஆசையை மறந்து விடு என்றாராம்.

அடக்கடவுளே! இது தெரிஞ்சும் நீ ஏன் தயிர் வடை சாப்பிடுகிறாய்?

என் மகன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தயிர் வடை வந்து விட்டது. அதன் மேல் காரா பூந்தி தூவ வேண்டாம் என்று சொல்ல மறந்து விட்டேன். எனக்கு என்னவோ மிருதுவாக இருக்கும் தயிர் வடை மேல், காரா காரா கர கரப்பான காரா பூந்தி தூவினால் பிடிக்காது. சில சமயம் அந்த காரா பூந்தி சிக்கு வாடை வேறு அடிக்கும். காரட் துருவல் ஓகே.!

நான் ஹர்ஷ வர்தனரைப் போல அறிவு ஜீவியும் அல்ல, தவிர 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடப் போவதில்லையே.. சர்வர் கொண்டு வைத்த தயிர் வடையை ஸ்பூனால் விண்டு வாய்க்குள் தள்ளினேன்.

படம்: நன்றி கூகிள்!

35 comments:

 1. ஹர்ஷவர்த்தனர் அறியா தகவல் ..உளுந்துக்கு பின்னே இவ்ளோ விஷயம் இருக்கா !! எனக்கு எப்பவுமே சாம்பார் வடைதான் பிடிக்கும் :)
  இங்கே கிடைக்காது லண்டன் போனா சரவணபவனில் சாப்பிடலாம் /ஒரு சாம்பார் வடைக்கு 3 hours டிராவல் செய்யணும் :)
  எனக்கு ஒரு டவுட் சாம்பார் சூட இருக்கும்போதே போற்றத்தால் வடை ஊறி உப்பிடும்
  ஆனா தயிரில் எப்படி ஊறும் ? எல்லா தயிரும் absorb ஆகுமா சாம்பார் போல்

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, ஏஞ்சலின், தயிரிலே வடையை ஊறப்போடும் ரகசியத்தை இங்கே சொல்லலாமா? இல்லைனா எங்கள் ப்ளாக் "திங்க"ற கிழமைக்கு வைச்சுக்கலாமானு யோசிக்கிறேன். எங்க வீட்டில் அடிக்கடி தயிர்வடை உண்டு. ரச வடையும் உண்டு. மோர்க்குழம்பு வடையும் உண்டு. சாம்பார் வடை ஏதேனும் ஹோட்டலில் சாப்பிட்டால் தான்! :) நாங்க பெரியகுளம் போயிருக்கும்போது அங்கிருந்த உடுப்பி ஹோட்டலில் சாப்பிட்டது தான் சாம்பார் வடை. அடுத்து மதுரை கோபு ஐயங்கார் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

   Delete
  2. ஏஞ்சல் உளுந்து சாப்பிட்டா காது கேட்கும் திறன் குறையும்னு எங்க மாமியார் வீட்டுல அடிக்கடி சொல்லுவாங்க....ஏன்னா என் காது கேட்கும் திறன் குறைவு. மூன்றாவது செவியில் தான் வண்டி ஓடுகிறது ஹாஹாஹாஹா...எங்க வீட்டுல இட்லி தோசை, அப்புறம் அப்பளம் யூஸ் பண்ணுவாங்க ஃப்ரீக்வென்டா இல்ல ஆனாலும்...ஸோ அதனாலதான் உனக்குக் காது கேக்காம போயிருச்சுனு சொல்லுவாங்க...ஆயுர்வேதத்துலயும் சொல்லிருக்காம். நான் இன்னும் கன்ஃபர்ம் பண்ணனும்....அதுக்காக இப்ப இட்லி தோசை வடை எல்லாம் சாப்பிடாதனா அதெல்லாம் முடியாது...தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு ஹாஹாஹா

   கீதா

   Delete
  3. ஏஞ்சல், பானுக்கா எங்கள் வீட்டிலும் அடிக்கடித் தயிர் வடை செய்வதுண்டு. ஊறப்போடுவது ஈசி. மோர்க்குழம்பு வடை, ரச வடை, சாம்பார் வடை எல்லாம் உண்டு எதுல எல்லாம் போட முடியுமோ எல்லாத்துலயும்....அதெ போல தயிர் இட்லி சூப்பரா இருக்கும்...

   ஏஞ்சல் தயிர் வடை நல்லா க்ரைண்டர்ல புஸு புஸுனு அரைச்சு பொரித்து எங்க வீட்டுல எல்லாம் அப்படியே பொரிச்சதும் தயிர் முதல்ல கடைந்து அதுக்கு அரைச்சு விடறத விட்டு தயாரா வைச்சுட்டு பொரிச்ச உடனே போட்டீங்கனா நல்லா ஊறிடும். அப்புறம் வேணும்னா இன்னும் கொஞ்சம் நல்ல கெட்டித் தயிரதண்ணி விடாம கடைஞ்சு செர்வ் பண்ணும் போது விட்டு கொடுக்கலாம். இது கிண்ணத்துல தனியா கொடுக்கறதா இருட்நா. இல்லைனா இலைல போடறதுனா ஊறினது மட்டும் தான். வித் டெக்கரேஷன்...

   அப்புறம் ஹோட்டல்ல மற்றும் சிலர் செய்யறது போல சுடு தண்ணில போட்டுட்டு தயிர்ல போடுறது இல்லை. அப்படிப் போட்டா டேஸ்ட் மாறுதுனு எங்க வீட்டுல சொல்லுவாங்க. எங்க வீட்டு தயிர் அடை செம ஸாஃப்டா இருக்கும். வடை அரைப்பதில் இருக்கு. மிக்ஸில அரைச்சா அவ்வலவு சரியா வரது இல்லை. க்ரைண்டர்ல நல்லா புஸ் புஸ்னு...

   கீதா

   Delete
  4. பானுக்கா திங்க ல போடுங்க...உங்க ரெசிப்பிய

   கீதா

   Delete
  5. கீதாக்கா நீங்க எங்கள் பிளாக்கிலேயே போடுங்க :) அங்கே கும்மி அடிக்கலாம் தனியா :)

   Delete
  6. @ கீதா இப்படி தயிர் வடை பற்றி சொல்லி வாயூர வச்சிட்டீங்க நன் எங்கே போவேன் இப்போ இதெல்லாம் சாப்பிட

   Delete
  7. @கீதா ஒருவேளை உளுந்து அதிக குளுமை என்பதால் சொல்றாங்களோ காத அடைக்கும் சைனஸ் வந்தா

   Delete
  8. ஏஞ்சலின், என்னுடைய பதிவை விட உங்கள் பின்னூட்டத்திற்கு அதிக பின்னூட்டங்கள் வந்திருக்கிறதே..;)
   தயிர் வடையை ஊறப்போடும் சூக்சுமத்தை கீதா அக்கா சோள போவதாக சொல்லி விட்டதால், நான் சொல்லவில்லை. வருகைக்கு நன்றி.
   தில்லையகத்து கீதா: தயிர் வடைக்கு என்ன ரெசிபி? வடை செய்து தயிரில் ஊறப்போட வேண்டியதுதான். வடைக்கு அரைக்கும் பொழுது நன்றாக மிருதுவாக அரைக்க வேண்டும்.

   Delete
 2. ஹர்ஷ வர்த்தனருக்கு ஒரு தங்கை - ராஜ்யஸ்ரீ என்று!..

  ஹர்ஷர் ராஜாவின் மகன்..
  48 நாட்களுக்கு தயிர் உளுந்து சாப்பிட்டதில் பெரிதாக பிரச்னை ஒன்றும் இல்லை..

  அப்போதெல்லாம் வீட்டில் இட்லிக்கு மாவாட்டும் போது சிறு பிள்ளைகள் ஊற வைத்த அரிசியையும் உளுந்தையும் அள்ளித் தின்பதுண்டு.. நானும் தின்றிருக்கின்றேன்..

  அந்த சமயத்தில் பெரியவர்கள் சொல்வார்கள் -
  உளுந்தைத் தின்றால் காது செவிடாகி விடும் என்று..

  ஆனால், அதன் உண்மையான அர்த்தம் வேறு..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ ஸார்...ஆமாம்.. ராஜ்யஸ்ரீ என்று நானும் படித்த ஞாபகம் வருகிறது. அப்புறம் என்ன? மறந்து போச்சே!!

   Delete
  2. வாங்க சார். ஹர்ஷரை மட்டுமல்லாமல் அவர் தங்கையையும் நினைவில் வைத்திருக்கிறீர்களே...
   //பெரியவர்கள் சொல்வார்கள் -
   உளுந்தைத் தின்றால் காது செவிடாகி விடும் என்று..
   ஆனால், அதன் உண்மையான அர்த்தம் வேறு..//
   உண்மையான அர்த்தம் என்னவென்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறோம்.

   Delete
  3. @Sriram: ஹர்ஷவர்தனரின் சகோதரி ராஜ்யஸ்ரீதான் அவர் புத்த மதத்தை தழுவுவதற்கு காரணம்.

   Delete
  4. பள்ளியில் வரலாற்றுப் பாடத்தில் சுருக்கமாகப் படித்தது.. ஹர்ஷரை மிகவும் பிடிக்கும்.. ராஜ்யஸ்ரீயின் கணவனை வங்கதேசத்து எதிரிகள் கொன்று விட அவள் காட்டுக்குள் ஓடி தப்பிப் பிழைக்கின்றாள்.. மூத்த சகோதரனான ராஜ்ய வர்த்தனன் தங்கையை மீட்க வரும்போது அவனும் கொல்லப்படுகின்றான்.. பட்டமேற்ற ஹர்ஷர் உடனடியாகத் தங்கையைத் தேடிக் கண்டு பிடித்து காப்பாற்றுகின்றார்.. எதிரிகளை அழித்து ஒழிக்கின்றார்.. இவரது காலத்தில் தான் யுவான் சுவாங் வருகை நிகழ்ந்தது.. நாளந்தா பல்கலைக் கழகத்தை சிறப்புடன் நிர்வகித்தவர் ஹர்ஷ வர்த்தனர்..

   Delete
 3. தலைப்பைப் பார்த்துட்டு ஓடோடி வந்துட்டேன். நேத்துத் தான் தயிர்வடை சாப்பிட்டேன். வட மாநிலப் பாணியில் பச்சைச் சட்னி, புளிச் சட்னியோடு! பதிவை இனிமேப் படிக்கணும். படிச்சுட்டு மத்தது! :)

  ReplyDelete
  Replies
  1. அடடா... தயிர் வடையை எப்படி மோசமாகச் சாப்பிடறது என்பதே வட மானிலப் பாணியில் ஒரு முறை சாப்பிட்டபின் தெரிந்தது.

   ஹோட்டல்கள்ல ( நம்ம ஊர்ல), பெரும்பாலும் தயிர்வடை ரொம்ப சுமாரா போடறாங்க. வெறும்ன தயிர் மாதிரி ஒரு வஸ்துல வடையை முழுகடித்து மேலே காரா பூந்தியைத் தூவினா தயிர் வடை வந்துடுமா?

   Delete
  2. வன்மையாகக் கண்டிக்கிறேன். வட மாநிலப் பாணியை மோசம் என்று சொன்னதுக்கு! :))))) ஒரு முறை எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க! ஹோட்டல்களில் தயிர்வடை நன்றாக இருப்பதில்லை என்றாலும் அம்பாசமுத்திரம் கௌரிசங்கர் ஹோட்டலிலும், குன்னூரில் லக்ஷ்மி விலாஸ் ஹோட்டலிலும் தயிர் வடை நன்றாக இருக்கும். அதே போல் முன்னெல்லாம் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ஐ.ஆர்.ஆர். கடைகளில் சாம்பார் வடை அம்சம்! அந்த மணமே ஊரைத் தூக்கும்! இப்போல்லாம் அது மாதிரி எங்கே! :(

   Delete
  3. தயிர் வடைக்கு முக்கியம் தயிர்! புளிப்பு இருக்கக் கூடாது! அதோடு பச்சைமிளகாய்+தேங்காய்+கொத்துமல்லியோடு துளி இஞ்சியும் உப்போடு சேர்த்து வைத்து நன்கு அரைத்துத் தயிரில் கலக்கணும். சில சமயம் நான் இதைச் சட்னியாக அரைத்து வைத்துக் கொண்டு தயிரில் உப்பைப் போட்டுக் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொண்டு வடைகளை ஊற வைத்துப் பின்னர் சாப்பிடும்போது இந்தச் சட்னியை மேலே ஊற்றிக் கொடுப்பதுண்டு. பொடியான ஓமப்பொடி இருந்தால் மேலே தூவலாம்!பச்சைக் கொத்துமல்லியும்.

   Delete
 4. ஆஹா, கடைசியில் தயிர்வடை சாப்பிட்டாச்சு இல்லையா? அப்பாடி! ஒரு தரம் ரச வடையும் சாப்பிட்டுப் பாருங்க. ஜீரக ரசம், மிளகு ரசம் நல்லா இருக்கும்னாலும் மாறுதலுக்குப் பருப்பு ரசத்திலேயும் போட்டுக்கலாம். எலுமிச்சை ரசம் செய்து அதைச் சூடான அடையின் மேலே நெய்யோடு சேர்த்து விட்டுக் கொண்டு சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில்! :)

  ReplyDelete
  Replies
  1. ஓடோடி வந்த உங்களை நான் ஏமாற்றவில்லையே? நான் ரச வடை,
   சாப்பிட்டிருக்கிறேன், அவ்வளவாக பிடிக்காது. சாம்பார் வடை பிடிக்கும்.

   Delete
  2. ரச வடை உளுந்தில் செய்து சாப்பிட்டால் ருசி ஒரு மாதிரி! அதையே ஆமவடையாகத் தட்டி மொறுமொறுவென இருக்கையிலேயே ரசத்தில் போட்டுச் சாப்பிட்டுப்பாருங்கள்! அதுவும் அந்த மொறு மொறு பாகம்! ஆஹா! :) இப்போ அதிகம் வடை பண்ணுவதில்லை! மாசம் இரண்டு நாள் உளுந்து வடை ஆயிடுதே! :)

   Delete
 5. /அறிவுஜீவிகளோடு நட்பு பாராட்டுவது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்ப டீடைலா பேசி போரடிப்பார்கள், இல்லைனா மற்றவர்கள் சொல்லும் விஷயங்களில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.."//


  ஹா..... ஹா.... ஹா.. உண்மை., உண்மை!

  எனக்கு தவ, ரவ,சா வ எதுவுமே பிடிக்காது. மொறுமொறுன்னு வடையை அப்படியே சாப்பிடணும்.தேவைப்பட்டால் சட்னியோ, சாம்பாரோ லேசா அவ்வப்போது தொட்டுக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. வெறும் வடை என்றால் சூடாக இருக்க வேண்டாமா?

   Delete
 6. தயிர் வடை மிகவும்பிடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. தயிர் வடை ஒரு டேஸ்ட்டியான உணவுதான். வருகைக்கு நன்றி.

   Delete
 7. Replies
  1. ஒல்லியாக இருக்கும் அவருக்குப் போய் எப்படி தயிர் வடை தேசிகன் என்று பெயர் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. முதல் முறையாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறன். வருக! வருக!

   Delete
 8. துளசி: எனக்கு வடை அப்படியே சாப்பிட ரொம்பப் பிடிக்கும். மற்றபடி ஊற வைத்து என்பதெல்லாம் எங்கள் வீட்டிலும் செய்வதில்லை. வடை கூட செய்யும் பழக்கம் இல்லை. எனவே செகன்ட்ரிதான்.

  கீதா: ஆமாம் அறிவுஜீவிகளோடு நட்பு பாராட்டுவது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்ப டீடைலா பேசி போரடிப்பார்கள், இல்லைனா மற்றவர்கள் சொல்லும் விஷயங்களில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.."//

  ஹாஹாஹாஹாஹா உண்மை உண்மை உண்மை!!! 100 அல்ல அதற்கு மேல் பெர்செண்டேஜ் சொல்லலாம் என்றால் எல்லை உண்டென்றால் அந்த எல்லையை எடுத்துக் கொள்ளுங்கள். இன்ஃபைனிட் கூட எடுத்துக் கொள்ளலாம். இவர்களைத் திருப்திப்படுத்தவே முடியாது. பேசிப் பயனும் இல்லை. செவி சாயாது...

  தயிர்வடை மிகவும் பிடிக்கும்....எல்லா வடைகளும் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் தயிர்வடை ரொம்பப் பிடிக்கும். அக்கா நானெல்லாம் அறிவு ஜீவி இல்லை இனிமெ என்னத்த அறிவு வளரப் போகுது..ரெண்டாவது...மறதியும் ஜாஸ்தியாயிடுச்சு..இன்னமும் அறிவு மழுங்கினாலும் மழுங்கட்டும்...அதுக்காக தயிர்வடையெல்லாம் விட முடியுமா சொல்லுங்க... ஸோ எஞ்சாய் தயிர்வடை தான்!! மீ..ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. //இனிமெ என்னத்த அறிவு வளரப் போகுது..ரெண்டாவது...மறதியும் ஜாஸ்தியாயிடுச்சு..இன்னமும் அறிவு மழுங்கினாலும் மழுங்கட்டும்...அதுக்காக தயிர்வடையெல்லாம் விட முடியுமா சொல்லுங்க... ஸோ எஞ்சாய் தயிர்வடை//
   ரொம்ப கரெக்ட்!

   Delete
  2. @துளசிதரன்: ஸ்ரீராமிடம் கேட்ட அதே கேள்விதான். வெறும் வடை என்றல் சூடாக இருக்க வேண்டாமா?

   Delete
 9. தில்லியில் ஒரு தெனிந்திய ஓட்டலில் கேட்டது நினைவுக்கு வருகிறது “எலேய் நேற்றுப் போட்ட வடை ஊசிபோகும் முன் தயிவடை செய்து விடு “

  ReplyDelete
  Replies
  1. யக்! எந்த ஹோட்டல் என்று சொன்னால் அங்கே தயிர் வடை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

   Delete
 10. பெரும்பாலான ஹோட்டல்களில் மிஞ்சின வடையைத்தான் தயிர் வடை என்ற பேரில் போடுவாங்க. வடை பொரித்தவுடன், வென்னீரில் போட்டு, உடனே எடுத்து தயிர்/பச்சை மிளகாய்/தேங்காய் அரைத்துவிட்டதில் ஊறப்போடணும். Serve பண்ணும்போது, எடுத்து அதன்மேல் காராபூந்தியோ அல்லது அழகுக்கு ரெண்டு மூணு கேரட் துருவலையோ சேர்க்கணும்.

  சூடான உளுந்து வடை சாப்பிட கஷ்டம். துளி ஆறினபின்பு தேங்காய் சட்னியுடன் நல்லா இருக்கும். பலர் (எங்க வீட்டுலயும்தான், என்னைத் தவிர) டிஷ்யூ பேப்பர் வைத்து எண்ணெயைப் பிழிந்தபிறகு வடையைச் சாப்பிடுவார்கள். அதுக்கு வடையை சாப்பிடாமலேயே இருக்கலாம்.

  ReplyDelete
 11. சூடாக என்றால் கொதிக்க கொதிக்க என்றா பொருள்? கை பொறுக்கும், வாய் பொறுக்கும் சூடு. வடையை தயிரில் ஊறப்போடுவது நீங்கள் சொல்லியிருக்கும் அதே முறையில்தான் நானும் செய்வேன். கீதா அக்காவின் டெக்னிக் என்னவென்று பார்க்கலாம்.
  அதே போல, வடை, பஜ்ஜி போன்றவைகளை சாப்பிடும் முன், டிஷ்யூ பேப்பரில் ஒற்றி எடுத்து விட்டுதான் (எண்ணையை பிழிந்து அல்ல)சாப்பிடுவேன். வருகைக்கு நன்றி!

  ReplyDelete