மகளிர் மட்டும்
(விமர்சனம்)
ஊடகத்தில் பணி புரியும், எதிர்கால மாமியாரோடு தங்கி இருக்கும் ஒரு பெண், தனக்கு மாமியாராக வரப்போகும் பெண்மணியின் கடந்த கால வாழ்க்கையை கேட்டு, அவளின் கல்லூரி தோழிகளை சந்திக்க வைத்து, அந்த மூவரையும் மூன்று நாட்கள் தங்க வைக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களும், கல்லூரி காலத்தில் டாம் பாயாக விளங்கிய அந்த பெண்களின் வாழ்வை திருமணம் எப்படி மாற்றுகிறது என்பதும்தான் கதை. மாறத் தேவை இல்லை என்கிறார்கள்.
பெண்களின் துயரங்களை காண்பிக்க வேண்டும் அதே சமயத்தில் ஆண்களை கொடுமைகாரர்களாக சித்தரிக்க கூடாது. ஒரு சீரியஸ் விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். ஜோதிகா பப்லியாக தெரிய வேண்டும், கவர்ச்சி கூடாது. என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு படத்தை எடுத்திருப்பதாலோ என்னவோ ஆழமும், அழுத்தமும் இல்லை.
படம் முழுவதும் ஜோதிகா ஆக்கிரமிக்கிறார். உடல் இளைத்து சிக்கென்று இருக்கிறார். 36 வயதினிலே போல புடவையில் வராமல் படம் முழுவதும் ஜீன்ஸில்தான் வருகிறார். என்றாலும் அந்த படத்தில் இயல்பான நடுத்தர வயது பெண்மணியை பார்த்த திருப்தி இதில் வரவில்லை. 36 வயதினிலே பட ப்ரமோவில், "இனிமேல் என்னை கதாநாயகியாக பார்க்க முடியாது, கேரக்டர் ரோல்களில் பார்க்கலாம்" என்றார். ஆனால், உள்ளுக்குள் வாய்ப்பு கிடைத்தால் "மேகம் கருக்குது டங்கு சிக்கு, டங்கு சிக்கு" என்று ஆட்டம் போடலாம் என்ற எண்ணம் இருக்கிறது போல தோன்றுகிறது.
தோழிகளாக வரும் ஊர்வசி, பானு ப்ரியா, சரண்யா மூவரில் கடைசி பெண்மணி நடிப்பில் முதலிடம் பிடிக்கிறார். ஊர்வசி தன் வழக்கமான நடிப்பால் கிச்சு கிச்சு மூட்டுகிறார், பானுப்ரியாவை பானுப்ரியா என்று அடையாளம் காண்பதே கடினமாக இருக்கிறது. தினசரி குடித்து விட்டு வரும் கணவன் மீது வரும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதாகட்டும், திட்டிக் கொண்டே இருக்கும் மாமியாருக்கு முகம் சுளிக்காமல் பணிவிடை செய்வதாகட்டும், சரண்யா சிறப்பாக செய்திருக்கிறார். சரண்யாவின் தொப்பியில் மற்றுமொரு சிறகு!
படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது கார்த்தியாம்!! நல்ல திறமை. பின்பாதியில் காட்டப்படும் காடும்,அருவியும் கண்களுக்கு விருந்து.
நாசர், மாதவன் போன்றவர்கள் வந்து போகிறார்கள். ஜோதிகாவால், ஜோதிகாவுக்காக, ஜோதிகாவின் படம். ஜோ மட்டும்.
ஜோதிகா, ஊர்வசி ஆகியோரைப் பிடிக்கும் என்பதால் படம் பார்க்கவேண்டும். இன்னும் நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை ( ஹிஹிஹிஹி ). பாடல் பாடியிருப்பது எந்த கார்த்தி? சூர்யாவின் தம்பி?
ReplyDeleteஆமாம், சூர்யாவின் தம்பிதான். உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக போடும் பொழுது பார்த்தால் போதும்.
Deleteஇதற்கு நல்லமுறையில் விமரிசனம் எழுதி இருப்பது நீங்கள் மட்டுமே. நான் படித்தவரை குறை கூறி எழுதி இருந்ததையே அதிகம் காண முடிந்தது. :) மற்றபடி இதெல்லாம் எப்போவானும் தொலைக்காட்சி சானல்களில் வந்தால் பார்ப்பேன். தியேட்டருக்கு எல்லாம் போய்ப் படங்கள் பார்ப்பதில்லை. :)
ReplyDelete//இதற்கு நல்ல முறையில் விமர்சனம் எழுதியிருப்பது நீங்கள் மட்டுமே// ஆஹா எனக்கு நாசூக்காக எழுத தெரிந்து விட்டதா?? நன்றி!நன்றி!
Deleteஇப்போல்லாம் விமர்சனத்தைப் படித்து பிறகு படம் பார்ப்போம் என்பதுபோய், விமர்சனத்தைப் பொறுத்து டவுன்லோட் என்று ஆகிவிட்டதிபோலும்.
ReplyDeleteவிமர்சனம் சுருக்கமாக தெளிவாக இருந்தது.
எனக்கென்னவோ தியேட்டரில் பார்க்கத்தான் பிடிக்கிறது. வருகைக்கு நன்றி!
Deleteவிமர்சனம் நன்றாக இருக்கிறது. படம் பார்த்துவிட்டேன் எங்கள் ஊரில் வந்திருந்தது. ஜோ, ஊர்வசி என்பதால் இருக்கலாம். படம் ஓகே தான். சரண்யாவின் நடிப்பு அபாரம்..
ReplyDeleteகீதா: பானுக்கா இந்தப் படத்தை பத்தி யாரும் உருப்படியா சொல்லலை. மொக்கைனு தான் கேள்விப்பட்டேன். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா நடிப்பு பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் வீட்டில்தான்...ஹிஹிஹிஹிஹி...
நன்றி துளசிதரன்!
Delete@கதா:மொக்கை என்று சொல்ல முடியாது. படம் அப்படியே போகிறது. முதல் பாதியை விட இரண்டாவது பாதி OK