கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 15, 2017

R.K. Laxman, The uncommon man!

R.K. Laxman, The uncommon man!

வீட்டை ஒழித்த பொழுது, என் மகனுக்கு திருமண பரிசாக வந்த, 'R.K. Laxman, The uncommon man' என்னும் புத்தகம் கண்ணில் பட்டது. புரட்டினேன், அடடா! என்ன ஒரு கலைஞன்! அவருடைய கார்ட்டூன்கள் பலதும் இன்றைக்கும் அப்படியே பொருந்துவது சோகம்தான். அவற்றில் நான் ரசித்த எள்ளல், கிண்டல், வருத்தம்,கோபம் என எல்லாவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
















50 Glorious years என்பதற்கு பதிலாக 70 glorious years என்று மாற்றிக் கொள்ளலாம் 



இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு 





மோடிக்கு மோதிரக் கையால் குட்டு 


Indian in Europe & European in India




அவருடைய கேரிகேட்ச்சர்களை(cariacture) பார்க்கலாமா?
இவர் யார் தெரிகிறதா?




இவர்? 








இதில் இருவரைத் தவிர மற்றவர்களை கண்டு பிடித்து விடலாம். 

அக்டோபர் 24, R.K. லக்ஷ்மண் அவர்களின் பிறந்த நாள் என்பது இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் முன் வரை எனக்குத் தெரியாது. சந்தோஷ ஆச்சர்யம்!













16 comments:

  1. நிறைய படங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். ரசித்தேன்.

    இவர் யார் தெரிகிறதா?

    1.ரேகா.

    2. ஷாரூக் கான்?

    3. கஜோல்?

    4. கமல்?

    5. ரஜினி?

    6. அமிதாப்

    7. இம்ரான்கான்

    8. கபில்தேவ்

    10 கோபி அனான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம். ரேகாவையும், கமல் ஹாசனையும் கண்டு பிடித்த பிடித்த நீங்கள் நெல்சன் மன்டேலாவை தவற விட்டு விட்டீர்களே..?
      போடுங்க தோப்புக்கரணம் ஒன், டூ...

      Delete
    2. //போடுங்க தோப்புக்கரணம் ஒன், டூ... //

      அவ்வ்வ்வ்... நான், கீதா யாருமே அந்த கேள்வியை அட்டென்ட் செய்யவில்லை. செய்த எனக்கு தண்டனை! நெல்சன் மண்டேலா சொல்லாதது குத்தமா? நீங்களும் கீதாக்கா மாதிரி ஆரம்பிச்சுட்டீங்களே.... அவ்வ்வ்....

      Delete
  2. கருத்துப்படங்களில் அவர் கூறியுள்ள பல கருத்துகள் இன்றும் பொருந்துவனவாக உள்ளன. காமராஜரைப் பற்றி ஒரு முறை படிக்கும்போது பின்வரும் சொற்றொடரைப் படித்த நினைவு : A common man's man with uncommon common sense. அது இவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. 1980 க்கு முன்பாக என்று நினைக்கின்றேன் - குமுதம் வார இதழின் இலவச இணைப்பாக இவரது கார்ட்டூன்களைத் தொகுத்து வழங்கியிருந்தார்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா? எனக்கு நினைவில் இல்லை. இருந்தாலும் எங்கள் வீட்டில் குமுதம் வாங்க மாட்டார்கள். அக்கம் பக்கத்தில் இரவல் வாங்கித்தான் படிக்க வேண்டும், ஓசியில் படிக்கும் பொழுது இலவச இணைப்பெல்லாம் கிடைக்கும் என்று கூற முடியாதே. வருகைக்கு நன்றி.

      Delete
  4. ஆர் கேயின் பல கார்ட்டூன்கள் இன்றுவரை பொருந்தும்...ஆர் கே என் பார்லிமென்டில் குழந்தைகள் புத்தகச் சுமை முதுகில் சுமப்பதற்குக் குரல் கொடுத்த போது ஆர்கே கார்ட்டூன் ஒன்று போட்டிருந்த நினைவு...

    எனக்குத் தெரிந்த படங்களைச் சொல்லுகிறேன்...

    கமல், ரஜனி, அமிதாப், இம்ரான், கபில், ஷாருக், நெல்சன் மண்டேலா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஆர் கேயின் பல கார்ட்டூன்கள் இன்றுவரை பொருந்தும்...// இந்த நிலைமை கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
      குழந்தைகளின் புத்தக சுமை பற்றி லக்ஷ்மண் பார்லிமென்டில் பேசிய பிறகு, எல்லா பத்திரிகைகளிலும் அதைப்பற்றி விவாதங்கள் கொஞ்ச நாள் ஓடியது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி கிடையாதே..
      ரேகா, காஜோல், நிக்சன். விட்டு விட்டீர்கள்.

      Delete
  5. இந்தக் காலத்தில் என்றால் பாஜகவினர் வழௌக்குப் போடுவார்கள் கார்டூனிஸ்டுகளை மதிக்கத்தெரிந்த காலமது

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்கிறீர்கள்? இந்திரா காந்தியை,கருணாநிதி இவர்களை விடவா மோசம்?

      Delete
  6. @தில்லையகத்து/கீதா, ஆர்.கே. நாராயண் தான் குழந்தைகள் புத்தகச் சுமை பற்றிக் குரல் கொடுத்தவர் இல்லையா? ஆர்.கே. லக்ஷ்மண் மால்குடி டேஸ் தொடருக்கும், சுவாமியும் நண்பர்களும் தொடருக்கும் வரைந்த/செய்த ஆச்சரியங்கள் எளிமை, புதுமை, இனிமை! அவருடைய சாதாரண மனிதனை நினைவூட்டும் வகையில் வந்த தொடர் "வாக்லே கி துனியா" சிரிப்பின் எல்லைக்கே நம்மைக் கொண்டு போய்விடும்.

    ReplyDelete
  7. அருமையான சேகரங்கள்!

    ReplyDelete