கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 7, 2017

மழைக்கு உணக்கையாய் மிளகு குழம்பு

மழைக்கு உணக்கையாய் மிளகு குழம்பு 


மழை பெய்து கொண்டே இருப்பதால் காற்றில் ஒரு ஜிலீர்தனம். இப்போது மிளகு குழம்பு செய்து சாப்பிட்டுப் பாருங்கள், வாய்க்கு ருசி, உடம்புக்கும் நல்லது. 

தேவையான பொருள்கள்:



புளி(பழைய புளியாக இருந்தால் நன்று) - ஒரு பெரிய எலுமிச்சம் பழம்  அளவு. புதுப் புளியாக  இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் ஊற வைக்கவும்.

வறுத்து அரைக்க:

துவரம் பருப்பு  -  1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி விரை(தனியா)  -  3 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 1 1/2  டீ ஸ்பூன்
சீரகம்  - 1 டி ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
உப்பு - 2 டீ ஸ்பூன் 
நல்லெண்ணெய் - இரண்டு கரண்டி 
பெருங்காயம் -  1 சிறு துண்டு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை  
கடுகு(தாளிக்க) - 1/2 டி ஸ்பூன் 





செய்முறை: 

 ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அது கொதித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாணலியில் மிகக் குறைவாக எண்ணை ஊற்றி முதலில் துவரம் பருப்பு, பெருங்காயம்,  இவைகளைப் போட்டு வறுக்கவும். து.பருப்பு சிவக்க ஆரம்பிக்கும் பொழுது தனியாவையும், மிளகு வற்றலையும் சேர்த்து சிவக்க வறுக்கவும். இறுதியாக சீரகத்தையும், கொஞ்சம்  கறி- வேப்பிலையையும் போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.  இவைகள் ஆறியதும் மிக்சியில் அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலோடு சேர்த்து கொதிக்க விடவும்.  நல்லெண்ணையை அவ்வப்பொழுது சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி விடவும். எண்ணெய் தனியே பிரிய துவங்கும் பொழுது நிறுத்தி விடலாம். கடைசியில் கடுகோடு கறிவேப்பிலையும் தாளித்து இறக்கினால் மிளகு குழம்பு ரெடி.

சூடான சாதத்தோடு கொஞ்சம் நெய் சேர்த்துக் கொண்டு, மிளகு குழம்பை பிசைந்து கொண்டு, உளுந்து அப்பளம் அல்லது டாங்கர் பச்சிடி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ஆஹா.! 

27 comments:

  1. மிகவும் சுவையானது. இந்தக் காலநிலைக்கு ஏற்றது. எனக்கும் மிகவும் பிடிக்கும். நேற்றுதான் 'திங்கற'கிழமை பின்னூட்டத்தில் கூடச் சொல்லி இருந்தேன். நாங்கள் தனியா, சீரகம் போடமாட்டோம். பூண்டு சேர்த்தும் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. பிரசவித்த பெண்களுக்கு பத்திய சாப்பாடு சமையில்தான் பூண்டு சேர்ப்போம். வருகைக்கு நன்றி!

      Delete
  2. வெளியில் மழை.. (எங்க ஊர்ல இல்லை.. சென்னைல). குக்கரிலிருந்து எடுத்த ஆவி பறக்கும் சாதம், நல்லெண்ணெய் (அல்லது நெய்), கட்டியான மிளகு குழம்பு.... தொட்டுக்க காய்ச்சின அப்பளாமே போதும்.

    நினைத்தாலே நல்லா இருக்கு. அதுலயும் கல்சட்டில செய்திருக்கிறீர்கள். வாவ்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை இப்படிச் சொல்லி மீண்டும் குழம்பு செய்ய வைத்துவிட்டீர்க்ள்...ஹாஹாஹா..மழை ஆரம்பித்த அன்று செய்தேன்...

      Delete
    2. நன்றி நெல்லை தமிழன்.!

      Delete
  3. வாவ் !! பார்க்கவே ஆசையா இருக்கு ..இங்கே மழையில்லை ஆனா குளிர்ர்ர்ர்ர்ர் :) இன்னிக்கு 4 டிகிரி
    எனக்கு பிடித்த மிளகு குழம்பு ரெசிப்பிக்கு நன்றி .
    இப்போதான் புரியுது எல்லா குழம்புக்கும் இவ்ளோநாளா வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து அதொட ஒரிஜினல் சுவையை கெடுதிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின்! செய்து பாருங்கள், சுவைத்து விட்டு சொல்லுங்கள்.

      Delete
  4. அருமை குறிப்புடன்

    ReplyDelete
  5. ஶ்ரீராம் சொன்னதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். ஒரு மாசம் முன்னாடி செய்த மிளகு குழம்பு இன்னமும் இருக்கு! பூண்டு, சின்ன வெங்காயம் பிரசவித்தவர்களுக்குக் கொடுக்கும் மிளகு குழம்பில் போடுவோம். சில சமயங்களில் சி.வெ. மட்டும் போட்டும் மிளகு குழம்பு செய்வதுண்டு. ஆனால் அதை நீண்ட நாட்கள் வைச்சுக்க முடியாது! இது என்னோட கல்சட்டி இல்லையோ? ஹிஹிஹி! நானும் கல்சட்டியில் தான் மி.கு. பு.கா. வ.கு. கீ.ம. எல்லாம் பண்ணுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ பாவம்... யார் யார் எல்லாம் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்களோ.
      மி.கு - மிளகு குழம்பு
      பு.கா - புளிக் காய்ச்சல்
      வ.கு - வத்தல் குழம்பு
      கீ.ம - கீரை மசியல்
      பு.மி - புளி மிளகாய்.... இப்படி ஒரு டிக்ஷனரியே தயார் செய்து ஒரு இடுகையாகப் போடுங்கள். அதுக்கு நிறைய பேர் வருவாங்க.

      Delete
    2. நான் குவைத்தில் சந்தித்த ஒரு பெரிய பதவியில் இருப்பவர் சொன்னார் (இந்தியர்). அவர் குழந்தைகள் கனடாவில் படிக்கின்றன (வீடு எடுத்து). மனைவி 6 மாதங்களுக்கோ அல்லது 10 மாதங்களுக்கோ ஒரு முறை சென்று, 15 டிரே நிறைய ஒவ்வொரு சமையல் (மட்டர் பனீர், குருமா, சாம்பார் போன்று) செய்து டீப் ஃப்ரீசரில் வைத்துவிட்டு வந்துவிடுவாராம். பசங்க அப்போ அப்போ ஒவ்வொரு கரண்டி எடுத்து அவன்ல சூடு செய்து சாப்பிட்டுக்கொள்வார்களாம். எனக்கு கேட்கும்போதே ஒரு மாதிரியாக இருந்தது.

      Delete
    3. hehehehehehe! :) you are too smart! :D

      Delete
    4. @நெல்லைத்தமிழன் இந்த ப்ரீசரில் போட்டு சூடு படுத்தும் விஷயம் வெளிநாடுகளில் நோர்மல் :)
      ஆனா நான் எப்பவும் செஞ்சதில்லை செய்யவும் மாட்டேன் :) மைக்ரோவேவ் எங்க வீட்டு அழகுசாதனம் :)
      எனக்கு தெரிந்த குடும்பத்தினர் கத்திரிக்காய் சீப்பா கிடைக்கும் காலத்தில் வாங்கி பொரித்து வைத்துருவாங்க ப்ரீசரில் .வேண்டியனேரம் எடுத்து thaw செஞ்சு கூட்டாக குழம்பாக செய்வார்களாம் .பல இந்தியர் அசைவம் சைவம் கறிகளை குட்டிபெட்டிகளில் போட்டு ப்ரீஸ் செய்தெ உண்கிறார்கள் .ஆங்கிலேயர் ப்ரெட் அப்படி செய்றாங்க ..

      Delete
    5. //என்னோட கல்சட்டி இல்லையோ?// கேட்டிர்களே ஒரு கேள்வி..! நான் மஸ்கட்டில் இருந்த பொழுது கூட கல் சட்டியில்தான் சமைத்துக் கொண்டிருந்தேன்.

      Delete
  6. மிளகுக் குழம்பு - எனக்கும் பிடித்தது. வீட்டில் சாப்பிடுவதுண்டு. இங்கே செய்வதில்லை. இந்த ஞாயிறு செய்து சாப்பிட வேண்டும் என ஆசை வந்துவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. Good good, enjoy..!BTW how is the pollution in your area.Take care.

      Delete
  7. ஹை! பானுக்கா!!! மிளகு குழம்பு சூப்பர் ரொம்பப் பிடிக்கும். தனியா ஜீரகம் சேர்ப்பதில்லை. து பருப்பு, மிளகு மிளகாய் வத்தல், அல்லது உ பருப்பு, மிளகு, மிளகாய் வத்தல் வறுத்து செய்வதுண்டு அதே போல் பூண்டும் சேர்த்துச் செய்வதுண்டு சேர்க்காமலும் செய்வதுண்டு. கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்து அரைத்தால் மணம் தூக்கும்...சுவையும் நன்றாக இருக்கும்...நானும் செய்தேன் மழைக்காகத்தான்...மிளகு காரம் நாவில் விர் விர்!!! அதே போல மிளகு ரசமும் செய்தேன்..இந்த இரண்டிற்குமே பருப்புத் தொகையல் நல்ல கோம்போ..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்து அரைத்தால் மணம் தூக்கும்...சுவையும் நன்றாக இருக்கும்...//
      ஆமாம், நானும் அப்படி செய்வதுண்டு.

      Delete
  8. நானும் கல்சட்டியிலதான் செய்கிறேன்..

    கீதா

    ReplyDelete
  9. கீதாக்கா சொல்லுவது போல் வெ போடாமல் மிளகுக் குழம்பு செய்தால் நிறைய நாள் இருக்கும். என் மகனுக்கும் நான் மிளகுக் குழம்பு, கறிவேப்பிலை குழம்பு, வத்தக் குழம்பு எல்லாம் தொக்கு போல் செய்து கொடுத்துவிடுவேன். பூண்டு வெங்காயக் குழம்பும் கூட தொக்கு போல்...ஆனால் இது மட்டும் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே அதில் பெயர் எழுதி சீக்கிரம் செலவாக்கணும் என்று எழுதியும் ஒட்டிவிடுவேன். அந்த பெட் ஜாரில்.

    கீதா

    ReplyDelete
  10. உடல் ஜுரம் வந்தால் செய்வார்கள் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. ஜுரம் வந்தால் செய்வது மிளகு ரசம்.

      Delete
  11. நான் இதுவரை மிளகு ரசமோ.. குளம்போ செய்தது கிடையாது.. இன்றுகூட மிளகு ரசம் செய்ய நினைச்சேன்ன்.. இப்போ இக்குறிப்பு கண்ணில் பட்டது.. இனி இதைச் செய்ய முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. All the best! உங்களுக்கு மிளகு குழம்பு நன்றாக வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள் என்னை அடையாற்றில் தாய் விட்டு விடுவீர்கள். ;)

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete