கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 21, 2018

சில தேடல்கள்


சில தேடல்கள் 

வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே? வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது.
என்னுடைய சமீபத்திய தேடல் உங்களுக்கு சிரிப்பூட்டலம். தமிழ் பத்திரிகை ஏதாவது கிடைக்காதா? என்று அலைகிறேன்.


பெங்களூரில் நாங்கள் முன்பு வசித்த திப்பசன்த்ராவில் தினசரி செய்திதாள் போட்டவரிடம் சொன்னதும் குமுதம் சினேகிதியும், ம.மலரும் தொடர்ந்து போட்டு விட்டார்.
வீடு மாற்றியதும் இங்கு(ஹொரமாவு) செய்திதாள் போடும் பையரிடம் எனக்குத் தேவையான பத்திரிகைகளை கூறியதும்,” சரி மேடம் என்று தமிழில் மாட்லாடியவுடன் எனக்கு அஷ்டு சந்தோஷா! ஆனால் அது நீடிக்கவில்லை. நானும் தினசரி பேப்பர் வரும் பொழுது, புத்தகங்கள் வந்திருக்கிரதா? என்று பார்த்து பார்த்து ஏமாந்தேன்.

குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுமே மாதம் இரு முறை வரும். ஓன்றாம் தேதி வர வேண்டிய ம.மலர் மூன்றாம் தேதி வரும். கு.சி. 28ம் தேதியே வந்து விடும். ஆனால், ஏழு தேதி ஆகியும் வராததால் என்ன ஆச்சு என்று பேப்பர் போடும் பொழுது மடக்கி கேட்க வேண்டும் என்று காத்திருந்தேன், எப்படியோ என் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஓடி விட்டான். ஒரு நாள் பிடித்து விட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை என்றும் மே மாதத்தில் இருந்து கண்டிப்பாக போடுவதாகவும் சொன்னான்.இத்தனை நாட்கள் கிடைக்காத புத்தகங்கள் அப்போது எப்படி கிடைக்கும் என்று எனக்கு கேட்கத் தோன்றவில்லை.

அவனை நம்புவதற்கு பதிலாக நாமே புத்தக கடை இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து வாங்கிக் கொண்டு வந்து விடலாமே என்று இந்த ஏரியாவில் வெகு நாட்களாக வசிக்கும் உறவுக்கார பெண்ணிடம் விசாரித்த பொழுது ரெயில்வே கேட் தாண்டி ஹார்ட்வேர் கடைக்கு அருகில் ஒரு செய்திதாள் ஏஜென்சி இருப்பதாக கூறினாள். டூ வீலரில் சென்று பார்த்த பொழுது ஹார்ட்வேர் கடைகள்தான் கண்ணில் பட்டன.

மற்றொரு இடமாக அவள் குறிபிட்ட காந்தி சிலைக்கு அருகில் ஒரு ஹோட்டல் இருந்தது, அதன் அருகில் ஒரு சிறிய பெட்டி கடை இருந்தது அதில் சில தமிழ் செய்திதாள்களும் இருந்தன. ஆனால் ஒரு பொடி பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை.  அந்தக் குழந்தையிடம் முதலில்,”கடையில் யாரும் இல்லையா? என்றேன், அந்தக் குழந்தை தலை ஆட்டியது. சரி நான் கேட்டது புரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, நான் அறிந்த ஹிந்தியில்,”அந்தர் கோயி ஹை?” என்றேன். தூங்குகிறார்கள் என்று அபிநயம் பிடித்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி எனக்கு முதுகு காட்டியபடி ஒரு பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார்.
“தமிழ் புத்தகம் இருக்குங்களா”?
“இல்லீங்க..”
“வருமா?”
“வராது..”
அந்தப் பெண்ணிற்கு என்ன பிரச்சனையோ? திரும்பி கூட பார்க்காமல் படுத்தபடியே பதில் சொன்னார்.
என்னடா இது? ஹொரமாவுக்கு வந்த சோதனை? இப்படி ஒரு தமிழ் மறைவு ப்ரதேசமா?  மஸ்கட்டில் கூட எல்லா பதிரிகைகளும் கிடைத்ததே? அண்டை மாநிலம்.. ஹூம்ம்ம்ம்!

21 comments:

 1. பத்திரிகைக்கு சந்தா கட்டி விடுங்களேன்.... தபால் தாமதம் தவிர வேறு பிரச்னை இல்லாமல் கிடைக்குமே....

  ReplyDelete
  Replies
  1. அதைத்தான் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் கு.சிக்கு மட்டும்.

   Delete
 2. அவ்வளவு தானா?.. ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்ற உணர்வு கடைசி வரை இருந்து பொய்த்துப் போனது.
  ஒன்றுமே இல்லாத பத்திரிகைக்கு ஒரு உதாரணம் ம.மலர்.
  போட்டிகள், அதற்கான கூப்பன்கள், பரிசுகள் என்று விற்பனைக்காக ஆள் சேர்க்கும் பத்திரிகை. இதற்கு 'தோழி' எவ்வளவோ பரவாயில்லை. தயவுசெய்து எந்தப் பத்திரிகைக்கும் சந்தா எல்லாம் கட்டி தளையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். நமக்கு இஷ்டப்பத்திரிகையை அவ்வவ்போது வாங்கினால், 'அட, அதற்கு இது பரவாயில்லையே' என்று மனத் திருப்தியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
  நீங்கள் டூ வீலர் ஓட்டுவீர்கள் என்பது கிடைத்த உபரித் தகவல்.

  ReplyDelete
  Replies
  1. //ஒன்றுமே இல்லாத பத்திரிகைக்கு ஒரு உதாரணம் ம.மலர்.
   போட்டிகள், அதற்கான கூப்பன்கள், பரிசுகள் என்று விற்பனைக்காக ஆள் சேர்க்கும் பத்திரிகை// ஆமாம். அதுவும் சில சமயங்களில் வெறும் விளம்பர
   ஏஜண்டோ என்று தோன்றும். இதைப்பற்றி எனக்கு நெருங்கிய இதன் முன்னாள் ஆசிரியரிடம் கேட்ட பொழுது,தினமும் சமைக்கிறோம், எல்லா நாட்களும் நன்றாக அமைந்து விடுகிறதா?"என்றார்.

   Delete
  2. //அவ்வளவு தானா?.. ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்ற உணர்வு கடைசி வரை இருந்து பொய்த்துப் போனது.//நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எழுதுகிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

   Delete
 3. இந்தப் பத்திரிகைகளை எல்லாம் நிறுத்தி எவ்வளவோ காலம் ஆச்சு! எப்போவாவது தோன்றினால் ஐபாடில் படிப்பேன். அதுவும் இப்போ ஆறு மாசமாப் படிப்பது இல்லை. ஒரே மாதிரியாக அரைத்த மாவையே அரைக்கிறார்கள். அதுவும் மங்கையர் மலர் மஞ்சுளா ரமேஷுக்குப் பின்னர் படிக்க லாயக்கில்லாததாக மாறி விட்டது. இப்போவோ கல்கிக் குழுமமே வேறொருத்தர் கைகளில்! :( தரமே இல்லை!

  ReplyDelete
  Replies
  1. ஒரு காலத்தில் கல்கி, ஆ.வி., ஜு.வி., ம.மலர், குமுதம், சாவி,துக்ளக் போன்ற பல பத்திரிகைகள் வாங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாக குறைத்து இரண்டில் வந்து நிற்கிறேன். எப்போதாவது ஆ.வி.,கல்கி வாங்கி விட்டு நொந்து கொள்வதுண்டு.

   Delete
 4. கீதாக்கா கல்கி பற்றிச் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. நானும் சிலகாலமாக இதைச் சொல்லி வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அநேகமாக எல்லா வாராந்தரிகளும் இப்போ நிர்வாகம் மாறி விட்டது. கல்கி மட்டுமில்லை, விகடன் மாறி எத்தனையோ ஆண்டுகள். பல நடுநிலையாளர்களும் அந்தப் பத்திரிகைகளில் இப்போது இல்லை! :(

   Delete
 5. நண்பர் ஸ்ரீராம் சொல்வதுபோல் சந்தா கட்டிவிடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் செய்ய வேண்டும்.

   Delete
 6. தில்லியில் சில இடஙக்ளில் கிடைக்கிறது - ஆனால் எனக்கென்னமோ இந்தப் பத்திரிகைகளை படிக்கவே பிடிப்பதில்லை. தேவையில்லாத விளம்பரங்கள் தான் பாதிக்கு மேல் - இல்லை என்றால் சினிமா சம்பந்தமான செய்திகள்.....

  எப்போதாவது நண்பர் வீட்டில் கிடக்கும் புத்தகங்களை ஒரு திருப்பு திருப்புவதோடு சரி.

  ReplyDelete
  Replies
  1. இப்போது நடப்பது பத்திரிகைகளின் இருண்ட காலம்.சினிமா,சினிமா,சினிமா மற்றும் சார்பு அரசியல்.

   Delete
 7. பத்திரிகைகள், சஞ்சிகைகள் விளம்பரத்தில மூழ்கிவிட்டன.
  உண்மை தான்

  ReplyDelete
  Replies
  1. ஒரு பக்கம் விளம்பரம், மறு பக்கம் சார்பு அரசியல்.

   Delete
 8. யூ ஆர் நாட் லூசிங் எனிதிங் கிட்டாதாயின் வெட்டென மற அவ்வப்போது வாங்கிப் படித்தாலே போதும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எதையும் இழக்கவில்லை. ஆனாலும், கொஞ்சம் அப்டேட் செய்து கொள்ள உதவுமோ எஇ ஒரு நப்பாசை.

   Delete
 9. தமிழ்ப் பத்திரிகைகளைத் தேடிய அனுபவத்தினை சுவாரஸ்யமாக சொன்னீர்கள். சந்தா கட்டினாலும் சரியான சமயத்திற்கு வரும் என்று சொல்ல முடியாது.

  ReplyDelete
 10. சப்ஸ்க்ரிப்ஷன் கொடுத்தால் கிடைக்குமில்லையா? எங்கள் ஊரிலெல்லாம் தமிழ் இதழ்கள் கிடைப்பதில்லை. முக்கிய நகரங்களில் அதுவும் மெயின் செண்டரில், திருவனந்தபுரம், பாலக்காடு, கிடைக்கும். தமிழ்நாட்டு பார்டரில் இருக்கும் ஊர்களில் சில சமயம் கிடைக்கும். பங்களூர் செண்டர் என்றால் கிடைக்குமோ..

  இருவரின் கருத்தும்...

  கீதா: பத்திரிகைகள் வாசித்துப் பல வருஷங்கள் ஆகிவிட்டது பானுக்கா...யார் வீட்டிற்காவது போகும் போது அதுவும் நிறைய நேரம் இருக்க நேர்ந்தால் மட்டுமே சும்மா எடுத்துப் புரட்டிப் பார்பப்து இல்லை என்றால் அதுவுமில்லை...

  ReplyDelete