செக்கச் சிவந்த வானம்(விமர்சனம்)
நிழலுலக சக்கரவர்த்தியான சேனாபதி(ப்ரகாஷ ராஜ்) யின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிக்க அவருடைய மூன்று மகன்கள் வரதராஜன்(அரவிந்த சாமி), தியாகராஜன்(அருண் விஜய்), எத்திராஜன்(சிம்பு) போட்டி போடுவதுதான் கதை. பிரகாஷ் ராஜை கொலை செய்ய முயற்சித்தவர்கள் யார் என்னும் முடிச்சோடு இடைவேளை வருகிறது.
நிழலுலகத்தின் மீது மணி ரத்தினத்திற்கு அப்படி என்ன ஈடுபாடு என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு காங்ஸ்டர் கதை. படத்தில் மருந்துக்கு கூட ஒரு நல்லவன் கிடையாது. கணவனாக ஒரு கதாநாயகனை இவர் காண்பிக்கவே மாட்டாரா?
தாதா அப்பா,அவருக்குப் பிறகு அந்த அதிகாரத்திற்கும், பணத்திற்கும் ஆசைப்படும் மகன்கள், அதில் இருவர் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கேயும் நிழல் வேலைகளில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதால் படத்தில் மானாவாரியாக துப்பாக்கி வெடிக்கிறது, படம் முடியும் பொழுது நம் மீதும் ரத்தக் கறை படிந்திருக்கிறதோ, வீட்டில் போய் குளிக்க வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு ரத்தம் தெளிக்கிறது. ஆழமாகவோ, அழுத்தமாகவோ ஒரு காட்சி கூட இல்லை.
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட மணிரத்தினத்தின் முதல் படம் என்னும் பெருமையைப் பெறுகிறது. இசை ஏ.ஆர். ரஹ்மானாம், ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. முதல் பாதியில் விஜய் சேதுபதி வரும் சில இடங்கள் சின்ன சிரிப்பை உண்டாக்குகின்றன என்பதை தவிர நகைச்சுவை பஞ்சம். சந்தோஷ் சிவனின் காமிரா அற்புதம்.
எப்படி பந்தை போட்டாலும் அடிக்கும் பிரகாஷ் ராஜ் இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். வித்தியாசமாக அரவிந்த் சாமி, அழகாக அருண் விஜய், அலட்டலில்லாமல் சிம்பு, வழக்கம் போல விஜய் சேதுபதி. க்ளைமாக்சில் எதிர்பார்த்த ஒரு திருப்பமும் எதிர்பாராத திருப்பமும் இருக்கின்றன.
மருமகள்களாக கம்பீரம் காட்டும் ஜோதிகா, இலங்கைத் தமிழ் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், தாராள கவர்ச்சி காட்டும் டயானா எரப்பா. பிரகாஷ் ராஜின் மனைவியாக ஜெய சுதா. வரதனின் பள்ளித்தோழனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி, எதற்கு என்றே தெரியாமல் அதிதி ராவ் ஹயாத்ரி. மீடியாவில் பணியாற்றும் பெண்ணாக வரும் இவர் வெளியில் அரவிந்த் சாமியிடம் கேள்வி கேட்டு விட்டு தனிமையில் அவரோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிறாராம். அடடா! என்ன புரட்சி! படத்தின் ஓட்டத்திற்கு எந்த விதத்திலும் உதவாத இவர் கதாபாத்திரம் எதற்கு? ஒரு நட்சத்திர பட்டாளம். ஆனால் பிரகாசம் குறைவு.
எழுத்தாளர் சுப்ரஜா ஸ்ரீதரன் முக நூலில் 'இந்தப் படத்துக்கு தி மு க என்று பெயர் வைத்திருக்கலாம்' என்று சொல்லி இருந்தார்!!!!
ReplyDeleteஸ்ரீராம் நான் விமர்சனம் எதிலோ வாசித்தேன் அதில் அவர்கள் டி எம் கே என்று எதுவும் சொல்லவில்லை ஆனால் எனக்கு அது கலைஞர் வீட்டு கதை போல உள்ளதே என்று தோன்றியது.
Deleteகீதா
எனக்கு இந்தப் படத்தில் "நீ......லமலைச்சாரல்.. " பாடல் பிடித்திருந்தது. ஆனால் கொஞ்சம் கஷ்டமான டியூன். அதில் 'கீச்சு கீச்சென்றது' வரிகள் ஒரு சிறு கவர்ச்சியைத் தந்தன. சமீபத்தில் ஏ ஆர் ஆர் பாடல்களில் நான் ரசித்த ஒரு பாடல்!
ReplyDeleteபாடலாக கேட்கும் பொழுது நன்றாக இருக்கலாம், படத்தில் துண்டு துண்டாக, வார்த்தைகளே புரியாமல் கேட்கும் பொழுது ரசிக்க முடியவில்லை.
Deleteஸ்ரீராம் அண்ட் பானுக்கா ஆமாம் இந்தப் பாடல் நல்லாருக்கு மற்ற பாடல்கள் கேட்கலை..
Deleteகீதா
இந்த காட்ஃபாதர் கதைதான் எத்தனை விதமாக சுற்றி வருகிறது!
ReplyDeleteமணிரத்னம் தளபதி படம் எடுத்த பொழுதே விகடனில் சரக்கு காலியோ என்று சந்தேகம் வருகிறது என்று எழுதியிருந்தார்கள்.இப்போது அது நிறூபணம் ஆகி விட்டது. மேலும் காட் ஃபாதர் செய்த உதவிகள் எதையும் இந்த படத்தின் சேனாபதியும் அவருடைய புதல்வர்களும் செய்வதாக காட்டவில்லை. அத்தனை பேரும் பச்சை அயோக்கியர்கள்.
Deleteஆனால் படம் வெற்றி என படித்தேன்.
ReplyDeleteஎப்படியும் நான் பார்க்க இங்கே வாய்ப்பில்லை.
படம் வெளியான இரண்டாம் நாளே வெற்றி நடைப் போடும் என்று விளம்வரப்படுத்துகிறார்கள்.
Delete//எப்படியும் நான் பார்க்க இங்கே வாய்ப்பில்லை.// தப்பித்தீர்கள்..:))
This comment has been removed by the author.
ReplyDeleteSeems the storyline is from The Godfather-2 & 3. If a director wants to create a different genre, you cannot expect everything in one film. However, I have not seen this film till now. I can understand from this film review.
ReplyDelete//If a director wants to create a different genre,// Many of Mani
DeleteRatnam's movies are of the same genre. Pakal Nilavu, Nayagan, Thalapathy, Ravanan and now CCV are all of same genre. He always glorifies villians and propagate extramarital relationship. A good film maker with cheap idealogy.
பாடல்கள் கேட்டேன் பிடித்து இருந்தது..
ReplyDeleteஆனால் ஏன் எதிர்மறை எண்ண படங்கள் என்று தான் புரியவில்லை இந்தகைய படங்கள் பார்க்கும் ஆவல் இல்லை..
நேர்மறை படங்கள் மட்டுமே காண பிடிக்கும்..
பாடல்கள் நான் கேட்கவில்லை. எதிர்மறை எண்ணங்கள் கொண்ட படங்கள்தான் ஓடும் என்று நினைப்பு.
Deleteஆவ்வ்வ்வ்வ் பானுமதி அக்காஅவும் விமர்சனம் எழுத வெளிக்கிட்டிருக்கிறா:).. படத்தின் பில்டப்பார்த்து நானும் நினைச்சிருந்தேன் விமர்சனம் எழுதோணும் என, ஆனா படம் பார்த்து அந்த ஆசை ஓடிடுச்சூஊஊஊஊ.. ஹா ஹா ஹா எதிர்பார்த்தளவு எனக்குப் படம் பிடிக்கவில்லை...
ReplyDeleteஹலோ பூஸார் பானுக்கா விமர்சனம் இதற்கு முன்னாடியும் எழுதியிருக்காங்க.
Deleteகீதா
அதுவும் இரண்டாவது பாதி, சுத்த மோசம்.
Deleteஎன் விமர்சனங்களை ஈ புக்காக போடலாம் என்று நினைக்கிறேன்.
நேற்று எப்படியாவது இந்தப்படத்தைப்பார்க்கப் போக நினைத்தோம். கடைசி நிமிடத்தில் ஊருக்கு [துபாய்க்கு ] போகும் வேலைகளில் ஆழ்ந்திருந்ததால் முடியாமல் போய் விட்டது. முடியாமல் போனதும் நல்லதுக்குத்தான் என்று உங்களின் விரிவான விமர்சனம் சொல்லி விட்டது! சமயத்தில் காப்பாற்றியதற்கு அன்பு நன்றி!!
ReplyDeleteஅடடா! நன்றிக்கு நன்றி!
Deleteநமக்கும் புதுப் படங்களுக்கும் வெகுதூரம்...
ReplyDeleteஆகையால்,
செக்கச் சிவந்த வானமோ
கன்னங் கருத்த பூமியோ!.. -
ஏதாகிலும் வரட்டும் போகட்டும்!...
சில புது படங்கள் மிக நன்றாக இருக்கிறது சார்.
Delete>>> படம் வெற்றி நடை போடும் என்று.. <<<
ReplyDeleteஅதாவது நீங்கள் எல்லாம் பெரிய மனது வைத்து வந்து பார்த்தால்!...
நல்லவேளையா இப்படி எல்லாம் படம் பார்ப்பதில்லை. இப்போத் தொலைக்காட்சியில் பார்ப்பதும் குறைஞ்சிருக்கு! ஏனெனில் இந்த கேபிள் டிடி போய் செட் டாப் பாக்ஸ் வந்ததில் எந்த சானல் எங்கேனு கண்டு பிடிப்பதோ அதைக் கொண்டு வருவதோ பெரும்பாடா இருக்கு! தொலைக்காட்சிப் பெட்டியைத் தொடுவதே இல்லை! :)))))
ReplyDeleteBlessing in disguise. But you will miss SVBC, Podhigai and all.
ReplyDeleteNot at all. SVBC and Sankara channels are our favourite and daily evening watching these channels. we are watching SVBC music programmes regularly sometimes Vittaldas Bajan also. In the afternoons will ask my hubby to switch on Podhigai for me before he goes for his nap. :) And he used to watch all News Channels. So am update in the news also. :)
DeleteBlessing in disguise// :D 30 வருடங்களுக்கு மேல் இருக்கும், தமிழ்நாட்டுத் தியேட்டர்களில் படம் பார்த்து. ஜாம்நகரில் இருந்தப்போ ஒரு சில தமிழ்ப்படங்கள் தியேட்டரில் பார்த்திருக்கோம் தொண்ணூறுகளில். தமிழ்நாட்டில் எண்பதுகளில் பார்த்தது தான். இப்போல்லாம் தியேட்டர்கள் எப்படி இருக்குனே தெரியாது! போகத் தோணறதே இல்லை. தொலைக்காட்சிகளில் அவ்வப்போது சில திரைப்படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போ அதுவும் 2 வருஷமா இல்லை. :)
DeleteSVBC இல் தினமும் காலை 11:00 முதல் 11:30 வரை புராண சொற்பொழிவுகள் கேட்பீர்களா? இப்போது சுதா சேஷயையனும், துஷ்யந்த் ஸ்ரீதரும் பேசுகிறார்கள்.
Deleteதேர்தல் முடிவுகள், பட்ஜெட் சமயம் என்றால் மட்டுமே காலையில் தொலைக்காட்சி. இல்லைனா மத்தியானம் ஒரு மணிக்கு மேல் சிறிது நேரம் நியூஸ் சானல்கள். அப்புறமா சாயந்திரமா ஐந்து மணிக்கு சங்கரா போட்டால் ஆறரைக்குப் பொதிகை முடிச்சுட்டு எஸ்விபிசி. :) இப்போப் புதுசா ஒர் தெலுங்கு/கன்னட சானல் வந்திருக்கு. அதிலும் நல்ல நிகழ்ச்சிகள்.
Deleteபானுக்கா விமர்சனம் க்ரிஸ்ப் வழக்கம் போல. நான் பார்த்த விமர்சனங்கள் சில ரத்னம் இஸ் பேக் என்று சொல்லி செசிவா வை ரொம்பவே உயர்வாகச் சொல்லியிருந்தன. பார்க்கணும் என்று நினைத்தேன். ஆனால் இப்ப உங்க விமர்சனம் ஸ்டெப் பேக் பண்ணிவிட்டது!!
ReplyDeleteகீதா
:)))
Deleteமுன்னெல்லாம் பட விமரிசனங்களாவது படிச்சேன். இப்போ அதுவும் இல்லை. ஃபேஸ்புக்கில் யாராவது போட்டால் படிப்பேன். :) அதிலேயே ஓரளவுக்குப் புரியும். இப்படித் தான் "கோலமாவு கோகிலா" அப்படினு ஒரு படம் வந்திருப்பதையும் அதன் கதைக்கருவையும் புரிந்து கொண்டேன். அந்த மாதிரிப் படங்கள் எல்லாம் பார்க்காமல் இருப்பதே நல்லது.
Delete