மாற்றங்கள்
சென்ற ஞாயிரன்று சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம். பெங்களூர் வந்திருந்த என் தோழி, "நான் தனியாக இன்னோவாவில் வந்திருக்கிறேன், நீங்கள் என்னோடு வந்து விடுங்களேன்" என்று அழைத்தார். எனவே அவரோடு சென்றோம். வழியில் A2B உணவகத்தில் சாப்பிடலாம் என்று அங்கு சென்றால், அது மூடியிருந்தது, ஒருவர் பைக்கில் வந்து, அந்த உணவகம் இடம் மாற்றியிருப்பதாக கூறினார். முன்பிருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிதாக, நிறைய கார்களை பார்க் பண்ணும்படியாக புதிய வளாகம் இருந்தது. உணவின் தரம் எப்போதும் போலத்தான். அங்கிருந்து வியூ நன்றாக இருந்ததால் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன்.
சென்னையில் கூடுவாஞ்சேரி பக்கம் ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு செல்கிறேன். முன்பெல்லாம். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இடது புறம், அருண் எக்செல்லோவின் எஸ்டான்ஷியா வளாகத்தில் ஒருபெரிய நீல நிற பக்கெட்(சிலர் டம்பளர் என்பார்கள்) போன்ற ஒரு கட்டிடத்தை பார்க்க முடியும். இப்போது அந்த டம்பளரை காணவில்லை, காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டதா என்று தேடினால், அதற்கு முன்னால் ஒரு கட்டிடம் வந்து மறைத்து விட்டது. அங்கிருக்கும் zoho நிறுவனத்தின் மல்டி லெவல் கார் பார்க்கிங்காம்!!!
zoho tower அன்றும் இன்றும்
ஞாயிறன்றும், திங்களன்றும் திங்களில் அதாவது நிலாவில் சாய்பாபா உருவம் தெரிகிறது என்று ஒரே அமளி. நாம் சாய்பாபா என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் தெரிந்தார். சில சமயம் நிலாவில் எனக்கு வடை சுடும் பாட்டியும், சில சமயம் ரங்கநாதரும்,சில சமயம் மகாலட்சுமியும் தெரிவதுண்டு.
ஞாயிறன்று நான் பிடித்த நிலா |
புரட்டாசி பௌர்ணமி அன்று மயிலை கற்பகாம்பாள் கோயிலில் அம்பாள் சந்நிதியில் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள் என்பது மறந்து விட்டதால் கோவிலுக்குச் செல்வதை தவற விட்டு விட்டேன்.
மறுநாள் மயிலாப்பூர் சென்ற பொழுது, கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்த நவராத்திரி கடைகளை பார்க்க முடிந்தது. சுக்ரா ஜூவல்லரி வாசலில் பொம்மைகளை வைத்திருந்தார்கள். நான் புகைப்படம் எடுக்கச்சென்ற பொழுது, அங்கே அமர்ந்திருந்த பெண் எழுந்து வந்தார். சில பொம்மைகளின் விலை விசாரித்தேன். ரெங்கநாதர் ரூ.700/-, மாப்பிள்ளை அழைப்பு செட் ரூ.1500/-, கோவர்தனகிரி கிருஷ்ணன் ரூ.2000/- என்று கூறியவர், "நான் சொல்ற விலைதான் முடிவான விலை கிடையாது, நீங்க கேளுங்க, கட்டி வந்தால் கொடுக்கப் போறேன், வண்டிக் கூலிதான் ரொம்ப அதிகமாகி விட்டது" என்றார். ஜி.எஸ்.டி.யையும், டீ மானிடைசேஷனையும் குறை சொல்லவில்லை. அதெல்லாம் பெரிய வியாபாரிகள் செய்வார்கள். விலை கேட்டு விட்டு வாங்காமல் வந்த குற்ற உணர்ச்சியால் சரியாக படம் எடுக்க முடியவில்லை. ஆரிய கௌடா ரோடில் நவராத்திரி எக்சிபிஷன் தொடங்கிவிட்டதாம். என் அக்கா அனுப்பியிருந்த படங்கள் கீழே.
பெங்களூர் எக்ஸ்பிரஸில் திரும்பி வரும் பொழுது, மஹாளய பட்சத்தைப் பற்றி கவலைப்படாமல் சமோசா சாப்பிட்டேன். சன் NXT இல் 'குலேபகாவலி படம் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது. ரேவதி கலக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் வரும் அத்தனை பேரும் திருடர்கள். இப்போது வரும் எல்லாப் படங்களைப் போலவும், ஏமாற்றுபவர்களையும், திருடர்களையும் நாயக, நாயகியர்களாக்கி, கடைசியில் கூட அவர்கள் திருந்துவதாகவோ, மாட்டிக் கொள்வதாகவோ காட்டாத படம். இந்த நிலை மாறாதா?
A2B முன்னர் ஒருமுறை சாப்பிட்டபோது நன்றாய்தான் இருந்தது. இப்போது எப்படியோ..!
ReplyDeleteஎனக்கு ஓகே. என் மகன் நன்றாக இல்லை எங்கிறான்.
Deleteஎனக்கு நிலவில் விகடன் தாத்தா, சிவாஜி கணேசன் (சத்ரபதி சிவாஜி வேடத்தில்) எல்லாம் தெரிந்தார்கள்.
ReplyDeleteகொலு கடையை நானும் விலை விசாரித்து வாங்காமல் படம் மட்டும் எடுத்த குற்ற உணர்ச்சி எனக்கும் இருந்தது.. அதனால் அவர் காதில் விழும் வண்ணம் பக்கத்தில் பாஸிடம் "பாலாஜிக்கு இந்த படத்தை எல்லா அனுப்பு.. அப்படியே விஸ்வனாதனுக்கும் அனுப்புவோம். பள்ளி கொண்ட பெருமாள் சின்ன சைஸ்தான் இருக்காம்... "என்ன விலைங்க?" ... ம்ம்ம்... முன்னூறு ரூபாய் சொல்றாங்கன்னு அனுப்பு.. வேணும்னு சொன்னா சாயந்திரமா வருவோம்.." என்றபடி படம் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
ReplyDeleteஹா ஹா ஹா ஸ்ரீராம் ஹைஃபைவ். நானும் இப்படித்தான் முன்னாடி செஞ்சதுண்டு. ஃபோன் போட்டு கஸின்ட பேசுவது போல ....ஓ அப்படியா இப்படி வேண்டுமா? இருக்கானு தெரியலை...அப்படி இருக்கணுமா ஓகே பார்க்கறேன் என்று சொல்லி விலையும் சொல்லி...நீங்க சொல்றாப்புலதான் சமாளித்து வேறு வழி?!!! பாவம் அவர்கள். எனக்கோ வாங்குவதில்லை....சும்மா வேடிக்கை பார்க்கலாமேனு போவேன் கலர்ஃபுல் பொம்மை பார்க்க மிகவும் பிடிக்கும்.
Deleteகீதா
இந்த ஐடியா எனக்குத் தெரியவில்லை :((
Deleteஅலுவலகத்தில் ப்ரமோஷனில் செல்லும் ஒருவர் மிக்ஸர், ஸ்வீட் கொடுத்திருக்கார். மிக்ஸர் சாப்பிடவில்லை. ஸ்வீட் அடையார் ஆனந்தபவன்தானே.. பாலுக்கு தோஷமில்லை என்று சொல்லிக்கொண்டு சுவைக்கலாமா என்று ஒரு சபலம்!
ReplyDeleteசபலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
Deleteபல்சுவை விருந்து பிரமாதம் பானு.
ReplyDeleteஅதைவிட அழகு கொலு கடைகள். மனம் முழுவதும் அங்கே.
மாடவீதியுஇல் விலைபேசுவதில் பயன் உண்டு.
2000 சொல்லி 1000த்துக்கு வாங்கி இருக்கிறேன்..
அதைவிட திருவல்லிக்கேணி கங்கணா மண்டகப்படி நடக்கும் இடத்தில் கடைகளில் அருமையான பெரிய பொம்மைகள் கிடைக்கும்.,
மிக நன்றி. மனம் நிறைகிறது.
திருவல்லிக்கேணியில் பார்த்ததில்லை.
Delete//மிக நன்றி. மனம் நிறைகிறது.// ரொம்ப சந்தோஷம்! நன்றி!
படங்களை பார்த்து ரசித்துக் கொண்டேன்...!
ReplyDeleteநன்றி டி.டி. சார்.
Deleteபடங்கள் அருமை.
ReplyDeleteநிலவில் அவரு தெரியுறாரு, இவரு தெரியுறாரு என்று புரளியை கிளப்பி விடுபவர்களை பொடாவில் ஆறு மாதம் உள்ளே வைத்தால் இந்த வகையான ஆன்மீகத்தை ஒழித்து உண்மையான இறைவழியை நாடமுடியும்.
நன்றி ஜி!. நான் முதலமைச்சர் ஆனால் நீங்கள்தான் சட்டம் ஒழுங்கு அமைச்சர்.
Deleteகதம்பம் அருமை. நேத்திக்கு நானும் கொஞ்சம் பொருட்கள் வாங்க திருச்சி செல்ல நேர்ந்தது. பொம்மைகள் பார்த்தேன். வந்தேன். இருந்த பொம்மைகளையே தானம் பண்ணியாச்சு. ராமர் பரிவாரத்தையும் ஏன் தானம் செய்தேன்னு இப்போ நினைச்சுக்கறேன். இப்படிப் பார்த்தா எல்லாமும் தான்! மனித மனதில் ஆசை போகவே போகாது. நான் விலை எல்லாமும் கேட்டுக்கலை. ஏனெனில் வாங்கப் போறதில்லையே! மத்தியானம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பியது. வீட்டுக்கு வரச்சேஆறு மணி. மகாலயம் என்பதால் வெளியே காஃபி கூட நோ! :) இதுக்காகவே ஒருத்தர் பாதுஷா, மிக்சர் கொடுக்கக் கூப்பிட்டதுக்கும் போகவில்லை. ரெண்டுமே பிடிச்ச ஐடம்! :)
ReplyDeleteநன்றி அக்கா. திருச்சியில் வானபட்டறையிலும், நந்தி கோவில் அருகிலும் முன்பெல்லாம் கொலு பொம்மைகள் விற்பாற்கள். இப்போது எங்கு என்று தெரியவில்லை.
Delete//மகாலயம் என்பதால் வெளியே காஃபி கூட நோ! :) இதுக்காகவே ஒருத்தர் பாதுஷா, மிக்சர் கொடுக்கக் கூப்பிட்டதுக்கும் போகவில்லை. ரெண்டுமே பிடிச்ச ஐடம்! :)// உங்களின் மன உறுதியை பாராட்டுகிறேன்.
அம்பத்தூரில் இருந்தவரைக்கும் பொம்மைகள் வாங்கிச் சேகரிக்கும் வழக்கம் இருந்தது. எப்போ எல்லாம் மழையில் ஊறிப்போய் வீணாகப் போச்சோ அப்போலேருந்து அந்த ஆசையை விட்டுட்டேன். இங்கே மழை வரதே அபூர்வம். இப்போக்கூட இடி எல்லாம் பிரமாதமா இருக்கு. ஆனால் மழை எல்லாம் சென்னை போலப் பெய்வதில்லை.
ReplyDeleteநிலாவைக் கையிலே பிடிச்சே 2 வருடங்கள் ஆகின்றன. மொட்டைமாடிக்கு முன் போல் போவதில்லை. ஏன்னும் புரியலை. இப்போ மறுபடிக் காவிரியில் நீர் வரத்து. ஜன்னல் வழியாப் பார்க்கிறதோடு சரி. ஒருநாள் மாலை நேரத்தைப் போய்ப் படம் பிடிச்சுட்டு வரணும்.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் ...நல்லா இருக்கு..
ReplyDeleteஆமா A2B பக்கத்தில் ஒரு star பிரியாணி கூட வந்து இருக்கு..
இப்போ நிறைய கடைகள் வந்தாச்சி ..அதுவும் எல்லாம் சரவணபவன் ன்னு ஒரே பேரோட..
நன்றி அனு!. சரவண பவன் என்று பெயர் இருக்கும், உற்றுப் பார்த்தால் சிறு மாறுதல் தெரியும்.
Deleteதுளசி: நிலவில் ஏதோ தெரியுது என்று வந்ததாகச் சொன்னார்கள். ஆனால் எனக்கென்னவோ ஒன்றும் தெரியவில்லை. வழக்கம் போல் தான்.
ReplyDeleteகீதா: பானுக்கா கொலு தான் செம அட்ராக்ஷன்....பொம்மை எல்லாம் செம விலை ஆனா அழகா இருக்கு பார்க்க. பட் வாங்குவதில்லை.
நிலா இப்படித்தான் ஏதாவது ஒன்னு அனுப்பி வைக்கிறாங்க. அதுமட்டுமில்லை முன்னாடி போஸ்ட் கார்டுல வந்த பாலாஜி பத்தி இத 10 பேருக்கு அனுப்புங்கனு வரும்அப்புரம் இ மெயில் ஆச்சு இப்ப வாட்சப்ல வருது. உடனே உங்களுக்கு நல்லது நடக்கும்னு இப்படி எல்லாம் ஏன் அனுப்புறாங்கனு தெரியலை. இதை எல்லாம் நான் டெல் செய்துவிடுவேன்.
ஏ டு பி இப்ப தெரியலை. நேஷனல் ஹைவே திருச்சி..போற ரோடு ஹையோ என்ன டெவெலப்மென்ட் ரொம்பவே நிறைய மாறியிருக்கு...முன்னாடி இருந்த காடு எல்லாம் இப்ப பில்டிங்கா மாறியிருக்கு...
முன்னாடி போஸ்ட் கார்டுல வந்த பாலாஜி பத்தி இத 10 பேருக்கு அனுப்புங்கனு ////வரும்அப்புரம் இ மெயில் ஆச்சு இப்ப வாட்சப்ல வருது. உடனே உங்களுக்கு நல்லது நடக்கும்னு இப்படி எல்லாம் ஏன் அனுப்புறாங்கனு தெரியலை. இதை எல்லாம் நான் டெல் செய்துவிடுவேன்.// இந்த மாதிரி செய்திகளை நான் பொருட்படுத்தவே மாட்டேன்.
Deleteமுன்பெல்லம் திருச்சிக்கு செல்லும் பொழுது தொழுதூர் என்னும் இடத்தில் ஒரு பாடாவதி ஹோட்டலில் நிறுத்துவார்கள். டாய்லெட் வசதி இருக்காது. இப்போது நிறைய உணவகங்கள் வந்து விட்டன. நல்ல மாறுதல்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பது இதுதான் போல
ReplyDeleteதுளசிதரன்
பானுக்கா // மஹாளய பட்சத்தைப் பற்றி கவலைப்படாமல் சமோசா சாப்பிட்டேன். // ஹிஹிஹிஹி என்னையும் இந்த லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க...ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteகுலேபகாவலி/// இப்படி ஒரு படமா?! அட புதுசா இருக்கே...மீ ரொம்ப புவர்னு நினைக்கிறேன் சிகே யில்!!! இல்லேனா மறதி!!! ஹா ஹா ஹா ஹா
கீதா
குலேபகாவலி என்று எம்.ஜி.ஆர். நடித்த பழைய படம் ஒன்று உண்டு. இது புதுசு.
Deleteஅதில் தான் வி.என்.ஜானகி நடிச்சாரோ?
Deleteஅது எனக்கு தெரியாது. பள்ளிக்கூட நாட்களில் வாளைப்பிடித்தக் கொண்டு குனிந்த படி போஸ் கொடுக்கும் எம்.ஜி.ஆர் போஸ்டர் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
Deleteஓகே, நீங்க சொல்றது புது குலேபகாவலியா? நம்ம "மன்னி"யைக் கேட்டால் பிட்டுப் பிட்டு வைச்சுடுவாங்க! என்ன கவலை? :)))))
Deleteரேவதி கலக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேனே அக்கா, கவனிக்கவில்லையா?
Deleteபழைய குலேபகாவலியில் அவர் ஏது?
ஹிஹிஹி, அ.வ.சி. படிச்சேன். ஆனால் கவனிச்சுப் படிக்கலை! படிச்சதுக்கும், கவனிச்சுப் படிச்சதுக்கும் வித்தியாசம் உண்டே! இப்போத் தான் கவனிச்சேன். :))))
Deleteபுது குலேபகாவலி - நேற்று மகளிடம் பேசும்போது நானும் இப்படித்தான் கேட்டேன்! :)
ReplyDeleteகதம்பம் சிறப்பு. கடைகளில் படங்கள் மட்டும் எடுத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்.
நீங்கள்தான் படங்களே பார்ப்பதில்லையே, அதனால் குழம்புவதில் தவறில்லை. கதம்பத்தை ரசித்தமைக்கு நன்றி.
Delete