Friday, January 11, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 


ஒரு நாள் காலை தொலைக்காட்சியில் சேனலை மாற்றியபொழுது கண்ணன் பட்டாச்சார்யா என்பவர் எந்தெந்த ராசிக்காரர்கள் கடைக்குச் செல்லும் பொழுது எந்தெந்த நிற பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி ராசிக்கேற்ற பையை எடுத்துச்சென்றால் நாம் வாங்கும் சாமான்கள் நன்றாக அமையும் என்கிறார். பார்க்கலாமா?

மேஷ ராசிக்காரர்கள் - அடர்ந்த சிவப்பு, சிக்னல் சிவப்பு நிரப்பையை எடுத்துச் செல்ல வேண்டுமாம்.

ரிஷப ராசிக்காரர்கள் - வெளிர்நீல நிற பை எடுத்துக்கொண்டு போக வேண்டும் 

மிதுன ராசிக்காரர்கள் கொண்டு போக வேண்டிய பை  - இளம் பச்சை நிறத்தில் இருந்தால் நலமாம்.

கடக ராசிக்காரர்கள்  தூய வெண்மை நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இளம் சிவப்பு நிற பைகள் நல்லது செய்யுமாம்.

கன்னி ராசிக்காரர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய பை அடர்ந்த பச்சை நிறத்தில் இருப்பது நலமாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியானது அடர்ந்த நீல நிறப்பை.

விருச்சிக ராசிக்காரர்களும் அடர்ந்த சிவப்பு நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.

தனுர் ராசிக்காரர்களுக்கு கை கொடுப்பது மஞ்சப்பை.

மகர ராசிக்காரர்கள் பிரௌன் கலந்த கருப்பு நிற பையையும், கும்ப ராசிக்காரர்கள் அடர்ந்த கரு நிற பையையும் எடுத்துச் செல்வது நலமாம்.

மீன ராசிக்காரர்கள் பொன் நிற மஞ்சள் பையை தேடிப் பிடியுங்கள். 

இப்படியெல்லாம் எடுத்துக் கொண்டு சென்று வாங்கி வந்த வெண்டைக்காயில் பூச்சி இருந்தால் ஆர்கானிக் என்று சொல்லி சமாளியுங்கள். 
                                            ------------------------

தொலைக்காட்சி என்றதும் என்னைக் கவர்ந்த ஒரு சாக்லேட் விளம்பரம் நினைவிற்கு வருகிறது.

தனக்கு கொடுக்கப்பட்ட சாக்லேட் பட்டையை தின்று முடித்து விட்ட சிறுவன் கண்களை மூடி ,"காட்! எனக்கு இன்னும் ஒரே ஒரு சாக்லேட், ப்ளீஸ்" என்று வேண்டிக்கொள்வான் அதைப் பார்த்த அருகில் படித்துக் கொண்டிருக்கும் அவன் மூத்த சகோதரன்(அவனும் சிறுவன்தான்) தான் திங்காமல் வைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய சாக்லேட் பட்டையை தம்பிக்கு முன் வைத்து விடுவான். அது தெரியாத தம்பி தன்னுடைய வேண்டுதலுக்கு இரங்கி நிஜமாகவே கடவுள் கொடுத்து விட்டார் என்று நினைத்து,"ஆ!கிடைத்து விட்டது!" என்று அண்ணனிடமே காட்டுவான். அதற்கு அவனும்," எனக்கும் ஒன்று கேட்டிருக்கலாமே?" என, "நெக்ஸ்ட் டைம்" என்று கூறி விட்டு முழு சாக்லேட் பட்டையையும் எடுத்துச் சென்று விடுவான். அவன் விட்டுச்சென்ற சாக்லேட் பேப்பரை அண்ணன் எடுக்க, இதையெல்லாம் அறிந்த அவர்கள் தாய்,"சாக்லேட் பேப்பரை நான் தூக்கி போடட்டுமா?" என்று மகனின் தலையை கோதி கேட்பதோடு முடியும். பகிர்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்கள் இன்னும் இருக்கின்றன என்று கூறும் அந்த விளம்பரத்தை விரும்பி பார்ப்பேன். 
 --------------------ஒரு வழியாக காற்றின் மொழியை அமேசான் பிரைமில் பார்த்தேன். வித்யா பாலன் நடித்திருந்த 'தும்ஹாரி சுலோ' என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் வடிவம். family drama. மூலத்தை சிதைக்கவில்லை. முன்பாதி முழுவதும் ராதா மோஹனுக்கே உரிய இயல்பான நகைச்சுவையோடு நகர்கிறது. ஜோதிகா என்னவோ நன்றாகத்தான் நடித்திருக்கிறார். இருந்தாலும் வித்யா பாலன் இன்னும் கொஞ்சம் இயல்பாக செய்திருந்தாரோ என்று தோன்றுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று, ஜோதிகாவின் குறும்பு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும், வித்யா பாலனைப்பற்றி தெரியாததால் அவர் எப்படி நடித்திருந்தாலும் ஓகே. அவருடைய நடைதான்.. ஹி ஹி!

இரண்டாவது ஜோதிகா பாவம் என்ன செய்வார்? அவருடைய முட்டை கண்ணை இரண்டு சென்டி மீட்டர் விரிக்க வேண்டுமென்றாலும், அது ஐந்து சென்டி மீட்டர் விரிந்து விடுகிறதே? நமக்கு அது ஓவர் ஆக்டிங் போல தோன்றுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சோகக்காட்சிகளில் ஜமாய்த்து விட்டார்.   விதார்த் தன் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். 
ஸ்டார் வேல்யூ உள்ள வேறு நடிகரை போட்டிருந்தால், இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்குமோ? 

ஜோதிகாவின் பாஸாக வரும் நடிகை யார் என்று தெரியவில்லை. மிக நன்றாக நடித்திருக்கிறார். அந்த பேஸ் வாய்ஸ் ஒரு பிளஸ். 

எதிர்பார்த்த திருப்பங்களோடு(பிரமாத திருப்பங்கள் எதுவும் இல்லை), எதிர்பார்த்த முடிவோடு, சுத்த சைவமாக அந்தக் கால மௌலி படங்கள் போல இருக்கிறது. 
-------------------

என் அக்காவின் வீட்டில் இருந்த பொழுது, ஒரு நாள் அக்கா பேத்தி ரோஷ்ணியை எங்கே காணோம் என்று தேடினோம். ஐந்தே வயதாகும் அவளானால் செருப்பை மாட்டிக்கொண்டு எங்கேயோ சென்று விட்டு வந்தாள். எங்கே போயிருந்தாய்? என்று கேட்டதற்கு,"சும்மா ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தேன் என்றாள். எல்லோரும் அவளை இப்படியெல்லாம் தனியாக, வீட்டில் சொல்லாமல் எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லி விட்டு விட்டார்கள். நான் மட்டும் கொஞ்சம் அதிகமாக அவளிடம்," இப்படியெல்லாம் வீட்டில் சொல்லாமல் தனியாக போனால், யாராவது உன்னை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், அப்படி இப்படி என்று பயமுறுத்தினேன். நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் என்னிடம்,"வீட்டில் சொல்லிவிட்டு போனால் தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா?" என்று கேட்டாளே ஒரு கேள்வி.

இன்னொரு நாள் என்னோடு கடைக்கு வந்தாள். அங்கு நெயில் பாலீஷை அவள் கையில் எடுப்பதை பார்த்து அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். மறுநாள் அதை தன் கை, கால் விரல்களுக்கு போட்டுக்கொண்டதோடு எனக்கும் போட்டு விட வந்தாள். ஐயோ! நான் பாட்டிடா, பாட்டியெல்லாம் நெயில் பாலீஷ் போட்டுக்கொள்வார்களா? யாராவது பார்த்தால் கேலி பண்ணுவார்கள் என்றேன். உடனே,"நீ சித்திதானே, நான் உன்னை பானு சித்தி என்றுதானே கூப்பிடுகிறேன்?" என்று எனக்கு ஐஸ் வைத்து, என் கை, கால் விரல்களில் நெய்ல் பாலீஷ் போட்டு விட்டுவிட்டாள். 
இதனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் பாட்டியில்லை. ஹா ஹா ஹா! 
-----------------

31 comments:

 1. சாஸ்திரம் அழகு.. என் பையின் கலரைச் சொல்ல மாட்டேனே:).. பானுமதி அக்காவும் எனக்குப் போட்டியா படக்கதை விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டா அவ்வ்வ்வ்வ்வ்:)..

  ஆங்ங்ங்ங்.. ஜொள்ள மறந்திட்டேன்ன்.. இங்கின மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:).

  ReplyDelete
  Replies
  1. ஆ! ஆ! ஒப்புக்கவே முடியாது, நான் யுத்தம் செய் காலத்திலிருந்து விமர்சனம் எழுதுகிறேன். என்னைப்போய் எப்போதோ வந்த நூல் வேலி படத்தை யூ டியூபில் பார்த்துவிட்டு அதில் நடித்திருப்பது சரிதாவா? சரிகாவா என்று தெரியாத ஞானப்பழத்திற்கு போட்டியாக விமர்சனம் எழுதுகிறேன் என்று சொல்வதை ஒப்புக்கொள்ளவே முடியாது. கூட்டுங்கள் பஞ்சாயத்தை(சொம்பு ரெடி). டேக் இட் ஈஸி அதிரா. வருகைக்கு நன்றி!

   Delete
  2. http://www.duskyswondersite.com/wp-content/uploads/2013/08/animals-cat-in-snow.jpg

   Delete
 2. ராசிக்கேற்ற நிறத்தில் பையா? கடவுளே... அப்புறம் எந்தெந்த நிறக்காய்கள் எந்தெந்த ராசிக்காரர்கள், எந்தெந்தக் கிழமைகளில் வாங்கவேண்டும் என்றும் சொல்வார்களோ!!!!

  ReplyDelete
 3. காற்றின் மொழி அதே அமேசான் பிரைமில் நானும் பார்த்தேன். எங்கள் தளத்தில் நான் எழுத எண்ணி இருந்ததையே அபப்டியே நீங்களும் எழுதி இருப்பதால் என் விமர்சனம் கட்! ஆனால் நான் ஹிந்தி வெர்ஷன் பார்க்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //நான் எழுத எண்ணி இருந்ததையே அபப்டியே நீங்களும் எழுதி இருப்பதால் என் விமர்சனம் கட்!//
   Great people think alike! :)) வருகைக்கு நன்றி.

   Delete
 4. சாக்லேட் விளம்பரம் பார்க்கவில்லை. ஆனால் நெகிழ்த்துகிறது. இப்படிப்பட்ட விளம்பரங்களை வரவேற்போம்.

  அக்கா பேத்தியின் கேள்விகள் சுவாரஸ்யம். சித்தீஈஈ......!

  ReplyDelete
  Replies
  1. சாக்லேட் விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அது எந்த பிராண்ட் என்று குறிப்பிடாததால் சட்டென்று நினைவுக்கு வந்திருக்காது.

   Delete
 5. துலா ராசியை விட்டுட்டீங்களே? அவர் சொல்லலையா? நீங்க மறந்துட்டீங்களா? எழுத்து ரொம்பப்பொடியா இருப்பதால் கொஞ்சம் சிரமப்பட்டுப் படிக்க வேண்டி இருக்கு. :( காற்றின் மொழி நு படமா? ஜோதிகா நடிச்ச மொழி படம் தான் தெரியும். அமேசான் ப்ரைமில் எல்லாம் பணம் கட்டிப் பார்ப்பீங்களா?இதே போல் நெட்ஃப்ளிக்ஸிலும் வருது! அடிக்கடி என்னைக் கேட்கும், பார்க்கிறியானு!

  ReplyDelete
  Replies
  1. பி எஸ் என் எல் இணைப்புக்காரனான எனக்கு ஒரு வருடம் இலவச அமேசான் ப்ரைம் வாய்ப்பு!

   Delete
  2. ஓகோ, இப்படி ஒரு இலவச இணைப்பு பிஎஸ் என் எல்லில் கொடுக்கிறாங்களா? எப்போலே இருந்து? இரண்டு வருஷமாத் தனியார் இணைய இணைப்புக்கு மாறினதில் இதெல்லாம் தெரியவே இல்லை.

   Delete
  3. 750 ரூபாய்க்கு மேற்பட்ட பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு உண்டு. நீங்களும் செக் செய்து பாருங்கள். உங்களுக்கு மெசேஜாகவும், பில்லிலும் விவரம் வந்திருக்கும்.

   Delete
  4. MMMMM?? No. didn't see it. online payment for landline only. no internet connection via BSNL

   Delete
  5. ஏதோ ஒரு ராசிக்கு அடர்ந்த நீல நிறம் சொன்னாரே? என்று தோன்றியது. ஆனால் டைப் செய்ததை செக் பண்ணாமல் பப்லிஷ் பண்ணி விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி! இப்போது சேர்த்து விட்டேன்.

   Delete
  6. அமேசான் விவகாரமெல்லாம் மகனுடையது. நமக்கு என்ன? காளை மாடு கன்னு போட்டுருக்குனு சொன்னா புடிச்சு கட்டு என்று சொல்ல வேண்டியதுதானே?

   Delete
  7. ஸ்ரீராம், இந்த மாசத் தொலைபேசி பில்லோடு இந்த ஆஃபர் வந்திருக்கு. ஆனால் எங்களோட லான்ட்லைன் திட்டத்திற்கு உண்டானு பார்க்கணும். நாங்க வெறும் தொலைபேசி இணைப்பு மட்டுமே வைச்சிருக்கோம்.

   Delete
  8. ஏர் டெல் இணைப்புக்கும் ஆமேசான் ப்ரைம் ஒரு வருடம் ஃப்ரீயாம்....ஆனால் இன்னும் அதற்கு கேட்கவே இல்லை...நம்ம வீட்டுல ஜினிமானாலே ம்ம்ம்ம்ம்!! இணைப்பும் என் பெயரில் இல்லை...ஸோ இணைப்பு இல்லை...

   பானுக்கா பதிவை அன்னிக்கே வாசித்துவிட்டேன்...அப்புறம் எப்படியோ கருத்து போட மிஸ் ஆகிவிட்டது...

   கீதா

   Delete
 6. அக்கா பேத்தி சித்தி எனக் கூப்பிடுவது குறித்து சந்தோஷம், அதோடு குழந்தைகளுக்கு நம்மைக் குழந்தையாகப் பாவித்து நடத்துவதில் அலாதிப் பிரியம். அதிலும் பெண் குழந்தைகள்! ஆகவே உங்களுக்கும் ஆசையோடு நெயில் பாலிஷ் இட்டிருக்கிறாள். அவள் கேள்வி சரிதானே! சொல்லிட்டுப் போனால் மட்டும் பூச்சாண்டி பிடிக்க மாட்டானா? என்ன ஒண்ணு! அவ எங்கே இருப்பா என்பது நமக்குத் தெரிஞ்சுடும். ஆகவே முடிஞ்ச வரை தனியே விடாமல் யாரையானும் பின்னாலேயே அனுப்பி வைச்சுப் பார்த்துக்கச் சொல்லலாம்.

  ReplyDelete
 7. //என்ன ஒண்ணு! அவ எங்கே இருப்பா என்பது நமக்குத் தெரிஞ்சுடும்//

  இதைத்தான் நானும் அவளிடம் சொன்னேன்.

  ReplyDelete
 8. பாட்டிகள் நெயில் பாலிஷ் போட்டுக்கக் கூடாதா இது என்ன புது
  சட்டமா இருக்கே. நகமெல்லாம் க்ராக் விட்டுப் போகும்போது இந்தப் பாடி எப்போதாவது போட்டுக் கொள்கிறேன்.
  குழந்தை சமத்து. வெளியில் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.
  சாக்லேட் அண்ணா தான் எத்தனை நல்லவன். நன்றி பானும்மா.

  ReplyDelete
  Replies
  1. பாட்டிகள் நெயில் பாலீஷ் தாராளமாக போட்டுக்கொள்ளலாம். எனக்கு அவ்வளவாக பிடிக்காது என்பதால் அப்படி சொல்லி தப்பித்துக்கொள்ள பார்த்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

   Delete
 9. பை =மூடத்தனத்தின் உச்சம்...

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு ஸ்லாட் கிடைத்திருப்பதால் சொல்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டி.டி.

   Delete
 10. நீங்களும் சோசியம் பார்க்கலாம் போலயே...

  நீங்கள் பாட்டி இல்லை என்பதற்காக ரோஷ்னியை பகடைக்காயாக உபயோகப்படுத்துறது நன்னா இல்லை.

  ReplyDelete
 11. காய்கனி வியாபாரிகளும் அவரவர் ராசிப்படி அந்தந்த வண்ணமுடையவற்றை மட்டுமே விற்கவேண்டும் - என்று கூட கொளுத்திப் போடலாம்...

  இப்போது கூட இன்றைக்கு வணங்க வேண்டிய சாமி இது தான் என்றும் சொல்கிறார்களே...

  இன்னும் ஒருபடி மேலே போய்
  அந்தந்த நிறங்களை சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள் என்று சொல்லக் கூடிய காலமும் வரலாம்...

  ReplyDelete
  Replies
  1. //இன்னும் ஒருபடி மேலே போய்
   அந்தந்த நிறங்களை சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள் என்று சொல்லக் கூடிய காலமும் வரலாம்...// வந்தாலும் வரும், எதையும் தாங்கும் இதயம் வேண்டும். நீங்கள் வந்து கருத்து கூறியதற்கு நன்றி.

   Delete
 12. ஆஹா... அருமையான ஐடியா.

  ஏன் இன்னைக்கு ரசம் கருப்பா இருக்கு? -
  என் ராசிப்படி இன்னைக்கு அடர் நிறமா இருக்கணும். அதனால்தான்.
  அப்படியா.. இன்னைக்கு அக்காவை பெண் பார்க்க வராங்களே. கருப்பு கேசரியைப் பாத்தா பெண்ணைப் பார்க்காமலேயே போயிடுவாங்களே...
  அடப்போடா... பார்க்க வர்றவனுடைய ராசிப்படி இன்னைக்கு மஞ்சள் கலர்லதான் கேசரி.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா! எங்கேயோ போய் விட்டீர்களே

   Delete
 13. ராசி விஷயங்கள் ம்ம்ம் என்ன சொல்ல? இப்படி நிறைய விஷயங்கள் வியாபார நோக்கோடு..

  அக்கா நீங்க எப்பவுமெ யங்கோ யங்குதான்...! அதுவும் குழந்தைகளோடு குழந்தைகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம்....

  காற்றின் மொழி பற்றி நல்ல விமர்சனம் வந்துள்ளதுதான். பார்க்கவில்லை படம்...மைத்துனர் காப்பி செய்து கொடுத்தால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்...இல்லை சென்னைக்குப் போகும் போது...

  கீதா

  ReplyDelete
 14. ராசி விஷயங்கள் சுவாரஸ்யம்.

  காற்றின் மொழி பாலக்காட்டில் இருந்திருந்தால் பார்த்திருந்திருப்பேன். இங்கு ஊரில் வீட்டிற்கே வந்தாயிற்று என்பதால் பார்க்க முடியாது இங்கு இது போன்ற தமிழ்ப்படங்கள் வரவும் வராது.

  அமேசான் ப்ரைம் முயற்சி செய்ததில்லை. பி எஸ் என் எல் இணைப்பு இருந்தாலும் இன்டெர்னெட் வைத்துக் கொள்ளவில்லை.

  உங்கள் பேத்தியின் (உங்களுக்கும் பேத்திதானே?) பேச்சு மிகவும் ரசிக்க வைத்தது.

  அனைத்தும் அருமை

  துளசிதரன்

  ReplyDelete