கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 9, 2019

சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர்


சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர் 




சில நாட்களுக்கு  முன் என் சகோதரியின் மகளின் உடல் நிலை சரியாக பிரார்த்தனை செய்யும்படி உங்களிடம் கேட்டிருந்தேன். உங்கள் எல்லோரின் பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் அக்கா மகளின் உடல் நிலை தேறி வருகிறது. உங்கள் எல்லோருக்கும் பிரத்யேகமாக தன் நன்றிகளை என் அக்கா தெரிவிக்க சொன்னார். நன்றி! நன்றி! நன்றி!

அக்கா மகளுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது அங்கிருந்த லிஃட் ஆபரேட்டர்  எல்லோரோடும் கனிவாக பேசிக்கொண்டும், ஜோக் அடித்துக்கொண்டும் பணி புரிவதை பார்க்க முடிந்தது. அவரோடு பேச்சு கொடுத்த பொழுது தன்னைப்பற்றிய விவரங்களை சொன்னார்.

பாரதியாரின் சொந்த ஊரான எட்டையபுரம்தான் இவருக்கும் சொந்த ஊராம். எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றிய இவர் தந்தை பாரதிக்கு நண்பராம். தந்தை பொதுப்பணித்துறையில் பணி புரிந்ததால், பணி நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றல், எனவே இவரும் எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம், என்று வெவேறு ஊர்களில் படித்தாராம். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த பொழுதுதான் இவருடைய நகைச்சுவை உணர்வை கண்டுபிடித்த தமிழாசிரியர்,"உனக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது. பத்திரிகைகளுக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதிப்போடேன்" என்று உற்சாகப்படுத்தியதால் பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுத ஆரம்பித்தாராம். 

அவருடைய முதல் ஜோக் 1978 மாலை முரசில் தமாஷ் என்ற தலைப்பில் வெளியானதாம். இப்போது அவர் நகைச்சுவை துணுக்குகள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை எனலாம். "எப்போதும் என் கையில் போஸ்ட் கார்டும், பேனாவும் ரெடியாக வைத்துக் கொண்டிருப்பேன். ஜோக் மனதில் தோன்றியவுடனேயே பத்திரிகைகளுக்கு எழுதிப்போட்டு விடுவேன்". என்கிறார். இப்படி சரமாரியாக ஜோக்குகளை பொழிவதால் 'சரவெடி ஸ்ரீதர்' என்னும் பட்டப்பெயர் பெற்றுள்ளார். 


தொழில்முறையில் ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் ஆன இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, மதுரை மீனாட்சி நர்ஸிங்ஹோம், தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனை போன்ற பல இடங்களில் பணியாற்றி தற்சமயம் மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டரில் பணி  புரிகிறார்.   

பாரீஸ், லண்டன், ரோம், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கிறாராம். ஸ்விட்சர்லாந்தில் பணி புரிந்தபொழுது அங்கு இந்தியன் ஹை கமிஷன் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் இவருடைய சம்பளத்தை அந்நிய செலவாணியாக பெற்றுக்கொண்டு இவரிடம் வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டும் தந்து இவரை ஏமாற்றி விட்டாராம். 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு?'

பல்வேறு விருதுகள், பெற்றிருக்கும் இவர் திரு.பாக்கியம் ராமசாமி அணிந்துரையில் ஒரு நூலும், திரு ராணி மைந்தன் வாழ்த்துரையில் ஒன்றுமாக இரண்டு நகைச்சுவை நூல்களும், ஒரு சி.டி.யும் வெளியிட்டிருக்கிறார்.














பேசிக்கொண்டிருக்கும்பொழுதே நாம் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்து ஒரு ஜோக் சொல்லி விடுகிறார். திருமணம், போன்ற குடும்ப விழாக்களில் ஸ்டாண்டப் காமெடி செய்கிறாராம். திருமணத்தில் இரைச்சலாக லைட் மியூசிக் வைப்பதற்கு பதிலாக இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாமே.

இவர் பெற்றிருக்கும் விருதுகளும் பங்கெடுத்த நிகழ்ச்சிகளும்:


சிரிக்க தெரிந்தவன் பாக்கியவான், சிரிக்க வைப்பவன் அதைவிட பாக்கியவான் என்பார்கள். நண்பர் சரவெடி ஸ்ரீதரின் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களும் நிறைந்திருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

அவருடைய ஜோக்ஸ் புத்தகத்திலிருந்து சில:

ஆசிரியர்: மாணவர்களே, நானும் உங்களில் ஒருவன், என்னை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம் 
மாணவன்: சரிடா மச்சி! கீழே உட்காரு.

ஆசிரியர்: ப்ராகரஸ் ரிப்போர்ட்டில் உங்கப்பா கையெழுத்து மாதிரி தெரியலையே?
மாணவன்: அப்படி எல்லாம் சந்தேகப்படாதீங்க சார், வேணா இரண்டாவது வாட்டி போட்டு காட்டறேன். 

பல் டாக்டர்: என்கிட்ட எதுக்கு சார் வீடு டாக்குமெண்ட்,வங்கிப் புத்தகம் எல்லாம் காட்டுகிறீர்கள்?
பேஷண்ட்: நீங்கதானே சார் சொத்தை பார்த்த பிறகுதான் பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னீர்கள் 

டாக்டர் அறுவை சிகிச்சை முடித்த பிறகு,"எப்படி பண்ணியிருக்கேன்"னு கேட்டார், 
அதற்கு நர்ஸ்,"கொன்னுடீங்க டாக்டர்" என்றார்.

தோழி1: உன்னைப் பெண் பார்க்க திடீர்னு நாற்பது பேர் வந்தாங்களாமே? மாப்பிள்ளையின் பெயர் என்ன?
தோழி2: அலிபாபா 

ஆசிரியர்: வேர்ல்டு மேப்பை காட்டி ஜப்பான் எங்கு இருக்கிறது, ஆஸ்திரேலியா எங்கு இருக்கிறது? அமெரிக்கா எங்கு இருக்கிறது காட்டு பார்க்கலாம் 
யோகேஸ்வர் என்ற மாணவன் ஆசிரியர் கேட்ட எல்லா நாடுகளையும் காட்டினான்.
ஆசிரியர்: இந்தியா எங்கே இருக்கிறது காட்டு 
யோகேஸ்வர் தயங்கினான்.
ஆசிரியர்: தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்ல வேண்டியதுதானே?
யோகேஸ்வர்: நீங்கள் என்னை எவ்வளவுதான் மிரட்டினாலும், என் தாய் நாட்டை நான் காட்டி கொடுக்க மாட்டேன்.

பேரன்: பாட்டி, இந்தா இந்த பலூனை ஊதிக்கொடு 
பாட்டி: போடா வயசாச்சு, என்னால முடியாது 
பேரன்: அப்பாதான் சொன்னாங்க பாட்டி சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிசாக்கிடுவாங்கன்னு..

இவருடைய ஜோக் புத்தகத்தை படிக்கும் பொழுது நகைச்சுவை உலகில் ஆசிரியர்-மாணவன், டாக்டர்-நர்ஸ்-நோயாளி, கணவன்-மனைவி-மாமியார் இவை வற்றாத ஜீவ நதிகள் என்று புரிகிறது.





36 comments:

  1. மாம்பலத்தில் இருந்த காலத்தில் தெரியாமல் போச்சே! விவரமான மாறுதலான பதிவு.

    ஒரு மருத்துவமனையில் ஸ்ரீதரைப் போன்றோர் பணியாற்றுவது அங்கு வருவோரின் டென்ஷனைக் குறைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீ.வி. சார். ரொம்ப நாட்களுக்குப்பிறகு வருகை தந்துளீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய பழைய வீட்டிலிருந்து நடக்கும் தூரம்தான் மாம்பலம் ஹெல்த் சென்டர்.

      Delete
  2. தளிர் சுரேஷ் பற்றி அவரிடம் சொன்னீர்களா?..

    ReplyDelete
    Replies
    1. இல்லை, மறந்து விட்டேன். வருகைக்கு நன்றி!

      Delete
  3. வணக்கம் சகோதரி

    தங்கள் அக்கா மகளின் உடல்நிலை தேறி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முன் போல் அவர் முழுவதும் குணமாகி நல்லபடியாக நூறாண்டு காலம் திடமுடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    நீங்கள் அறிமுக படுத்திய சகோதரர் ஸ்ரீதர் அவர்களின் நகைச்சுவை உணர்வு திகைக்க வைக்கிறது. மிகவும் அருமையான மனிதர். இவையெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு. அவருடைய இயல்பான நகைச்சுவை துணுக்குகள் மிகவும் ரசிக்க வைத்தன. அவருக்கு பாராட்டுகள்.

    மிகவும் அருமையான பதிவு..பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
      என் சகோதரி மகள் உடல் தே ரியதற்கு மருத்துவத்தோடு பல நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையும் காரணம். அதற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. அதிசய அறிமுகம்.
    அவர் இருக்கும் இடத்தில் இந்தவித பாசிடிவ் எண்ணங்கள் தேவையே.
    இன்னும் பிரமாதமான எதிகாலம் அமைய என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      Delete
  5. சரவெடி ஸ்ரீதர் சாருக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி டி.டி. சார். இந்தப் பதிவை திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு அனுப்புகிறேன். எல்லோருடைய வாழ்த்துக்களையும் பார்க்கும் அவர் மகிழ்வார்.

      Delete
  6. Aahaa..romba super..wish he remains happy and makes others happy through out his life

    ReplyDelete
  7. //சரவெடி ஸ்ரீதர்//
    எங்கேயோ படிச்சிருக்கிறேன்ன்.. பார்த்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தமிழ் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் இவருடைய ஜோக் கண்ணில் பட்டிருக்கும். வருகைக்கு நன்றி அதிரா.

      Delete
  8. அக்கா மகள் உடல்நிலை தேறிவருவது நல்ல செய்தி. முற்றிலும் குணமாக எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  9. சரவெடி ஸ்ரீதர் பற்றிய அட்டகாச அறிமுகம். பாராட்டுகளும் வாழ்த்துகளும். அவருடைய ஜோக்ஸ் சிரிக்க வைக்கின்றன. அந்த காட்டிக் கொடுக்கும் ஜோக் முன்னொரு காலத்தில் வாட்ஸாப்பில் கூட எழுதியவர் பெயர் தெரியாமல் சுற்றியது. நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இதில் என் பங்கு மிகவும் குறைச்சல். நல்ல விஷயங்கள் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும்.

      Delete
  10. பணியிடத்தில் கடுகடுவென்றிருராமல் இப்படியிருப்பவர்கள் தேவையே. பாசிட்டிவ் மனிதர்.

    ReplyDelete
    Replies
    1. பாஸிட்டிவ் மனிதர் என்று சொல்லி விட்டு, அப்போதே இவரைப்பற்றி பாஸிட்டிவ் செய்திகளில் சேர்க்காமல், இப்போது சேர்த்திருக்கிறேன்!!!!

      Delete
  11. நிஜமாகவே மிகவும் பாசிட்டிவான மனிதர்.

    ReplyDelete
  12. அருமையான மனிதரின் அறிமுகத்துக்கு நன்றி. அக்கா மகள் உடல்நிலை தேறி வருவது குறித்து மகிழ்ச்சி. மேலும் தேறி உற்சாகத்தோடு வாழ்க்கை நடத்தவும் பிரார்த்தனைகள். இந்த ஜோக்குகளின் ஒன்றிரண்டு படிச்சிருக்கேன். ஆனால் இவர் பெயரெல்லாம் எனக்குப் புதிது. பல ஆண்டுகளாக வாராந்தரி புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இல்லாததால் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து அப்போது உ.ராஜாஜி, திசையன்விளை முத்து ஆகியோர் பெயர் பிரபலம்.

    ReplyDelete
    Replies
    1. ரேவதி பிரியன் என்று கூட ஒருவர் நகைச்சுவை துணுக்குகள் எழுதுவார். பிரார்த்தனைக்கு நன்றி.

      Delete
  13. பானுக்கா உங்க அக்கா பெண் உடல்நலன் தேறி வ்ருவது மிகுந்த சந்தோஷம்...

    அக்கா மகளுக்காகப் போன இடத்தில் அருமையான மனிதர் ஒருவரை சந்தித்திருக்கீங்க...

    சரவெடி ஸ்ரீதர் பெயரும் பார்த்த நினைவிருக்கு...இவரையும் பார்த்த நினைவிருக்கு. எட்டையபுரத்தில்தான் என் கசினின் அப்பா வழி பாட்டி பிறந்து வளர்ந்த ஊர். என் மற்றொரு கசினின் மாமியாரின் அப்பா அவ்வூர்....ஆனால் சரவெடி என்ற பெயர் தெரியவில்லை...முகம் ஃபெமிலியரா இருக்கு...அவர்களிடம் கேட்டுப் பார்க்கறேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவருடைய இயற் பெயர் ஸ்ரீதர்தான். சரவெடி என்பது அவருக்கு கிடைத்த பட்டப்பெயர். நன்றி கீதா.

      Delete
  14. செம ஸ்வாரஸ்யமான மனிதர் இல்லையா...ஜோக்ஸ் ரொம்ப நல்லாருக்கு...நகைச்சுவை இருந்தாலே வீடும் சரி அலுவலகமும் சரி ரொம்பவே பாஸிட்டிவாக இருக்கும். லைவ்லியா இருக்கும்...

    கீதா

    ReplyDelete
  15. காட்டிக் கொடுக்கமாட்டேன் ஜோக் செம...அலிபாபாவும்....சத்தமா சிரிச்சுட்டேன்...

    எனக்கு நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும். அதுவும் என் கஸின்ஸ் எல்லாம் சேர்ந்தால் எப்போதுமே நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. வெரி லைவ்லியா இருக்கும். என் அத்தை பசங்கள் எல்லாருமே செமையா காமெடி பண்ணுவாங்க..

    //சிரிக்க தெரிந்தவன் பாக்கியவான், சிரிக்க வைப்பவன் அதைவிட பாக்கியவான் என்பார்கள்.//

    ஆமாம் அக்கா...நான் நல்லா சிரிப்பேன்..ரெண்டாவது?!!! ஹிஹிஹி..ஆனா என்னை வைச்சு என் கஸின்ஸ் செமையா காமெடி பண்ணுவாங்க...கோல்டன் மொமென்ட்ஸ் அதெல்லாம்..

    நல்லதொரு மனிதரை அறிமுகப்படுத்தியதுக்கு ரொம்ப நன்றிக்கா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்களை வைத்து காமெடி பண்ணுவார்கள் என்று சொல்லிக்கொள்வதிலிருந்து நீங்கள் அதை மிகவும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது தெரிகிறது. நல்ல விஷயம். வாழ்க!

      Delete
  16. so super sridhar goodluck thank u bhanumathy mam wish yr sister a speedy re covery

    ReplyDelete
  17. தங்களது சகோதரியின் மகள் நலமடைந்தமை அறிந்து மகிழ்ச்சி.

    ஸ்ரீதர் ஸார் அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  18. அக்கா மகள் பூரண உடல் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

    நல்ல மனிதர் அறிமுகம்.... மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. நல்ல அறிமுகம்! நோயாளிகளிடம் இங்கிதத்தோடு பழகும் மனிதர்கள், அதிலும் நகைச்சுவை உணர்வோடு இருப்பவர்கள் மிகவும் அபூர்வம்!

    ReplyDelete
  20. எங்கள் ப்ளாகில் உங்கள் சுட்டி கண்டு வந்தேன். நல்ல மனிதர். இவரைப் போன்றவர்கள் மருத்துவமனைகளில் இருந்தால் நோயாளிகளுக்கும் அவருடன் வருபவர்களுக்கும் நல்ல இதமான அனுபவமாகத்தான் இருக்கும். இங்கு உங்கள் அறிமுகத்தில் அவரது கஷ்டங்கள் எதுவும் தெரியவில்லை. பாஸிட்டிவ் செய்திகளில் தான் அவரது யதார்த்த வாழ்வு தெரிந்தது. அவருக்கு நல்ல கருணை உள்ளம்.

    உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துகள்

    துளசிதரன்

    ReplyDelete
  21. உங்கள் அக்காள் மகளின் உடல்நலம் தேறி வருவது அறிந்து மகிழ்ச்சி.
    பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
    சரவெடி ஸ்ரீதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நல்ல அறிமுகத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete