எங்கெங்கு காணினும் ஆப்படா..!
எங்கள் வீட்டில் முன்பு நந்தினி பால் ஒருவர் வினியோகித்து வந்தார். சென்ற வாரத்தில் அவருடன் ஒரு இளைஞர் வந்து, இனிமேல் தான்தான் பால் வினியோகம் செய்யப் போவதாகவும், அதையும் டெய்லி நிஞ்சா என்னும் ஆப் மூலம் செய்வதாகவும் கூறி, அந்த ஆப்பை(செயலி) என் கணவரின் செல் ஃபோனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டினார். அதன் வழியே எப்படி ஆர்டர் கொடுப்பது என்றும் சொல்லிக் கொடுத்தார்.
இனிமேல் பால் டோக்கன் போட
வேண்டிய வேலை இல்லை. நம் தேவைக்கேற்ப ஆர்டரின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். வேண்டாத நாட்களுக்கு பாஸ் போட்டு விடலாம். ஆனால் முதல் நாளே செய்து விட வேண்டும்.
பால் மட்டும் அல்ல, பழங்கள், காய்கறிகளையும் இதன் வழியே ஆர்டர் பண்ணலாமாம். என்ன..? "உனக்கு பிடிக்குமேனு மிதி பாவக்கா எடுத்து வெச்சிருக்கேன், வாழத்தண்டு இளசா இருக்கு, எடுத்துக்கோ.." என்றெல்லாம் நம்மை பிரத்யேகமாக கவனிக்கும் பெண்ணின் கரிசனம் கிடைக்காது.
இன்னும் சில காலத்தில் நம் விருப்பங்களை நாம் ரிஜிஸ்டர் பண்ணி வைத்து விட்டால், அந்த செயலி தெரிவிக்குமோ என்னமோ?
*********************************************************************************
ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் மகள், மாப்பிள்ளை, பேத்தியோடு திருப்பதி சென்றிருந்தோம். பேத்திக்கு அங்கு மொட்டை போடும் பிரார்த்தனை. மே மாதம், கும்பல் அதிகம் இருக்குமே எனறு ஒரு கவலை. போதும் போதாததற்கு மருந்து சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என்று எச்சரிக்கப்பட்டவன் கதையாக, திருப்பதி சென்றும் பெருமாளை தரிசிக்காமல் வந்த ஶ்ரீராமின் அனுபவம் வேறு அவ்வப்போது நினைவுக்கு வந்து மிரட்டியது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, அத்தனை கும்பல் இல்லை. நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. அவரிடம் எப்போதும் எதிர்பாராததைத்தான் எதிர்பார்க்க வேண்டும். பெருமாளை தரிசித்து விட்டு வரும் பொழுது புளியோதரை பிரசாதம் கிடைக்கும் என்று நினைத்தேன். லட்டுதான் கிடைத்தது.
திருமலையில் நிறைய மாறுதல்கள். மாறிக்கொண்டேதான் இருக்கிறது. யாத்ரீகர்களுக்கு நிறைய வசதிகள். 300ம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே நுழையும் ஹாலில் இலவசமாக காபி,டீ,பால் முதலியவைகள் வழங்குகிறார்கள். எங்களுக்குத்தான் பருக நேரம் இல்லை. எல்லாம் சரி தரிசனம் முடித்து வெளியில் வந்து கார் பார்க்கிங்கிற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நல்ல வேளையாக சென்ற மாதம் திருப்பதி சென்று வந்த என் அக்கா, "காலுக்கு போட்டுக்கொள்ள சாக்ஸ் எடுத்துச் செல்லுங்கள், இல்லாவிட்டால் வெயிலில் நடப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும்" என்று கூறியிருந்ததை கடைபிடித்தோம், தப்பித்தோம். பாட்டரி கார் வசதிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கலாம்.
மலை மீது ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் ஏ.சி. போட முடியாததால் வீசிய அனல் காற்றால் தலைவலி. பீமாஸ் உணவகத்தில் கா...ர...மா..ன.. உணவு. திருவள்ளூரில் மழை, சென்னையில் எப்போதும் போல் புழுக்கம். அதிலிருந்து விடுதலை தருவது மேற்கத்திய உச்சரிப்பில் பேத்தி பாடும் சாயி பஜன், "ரௌடி பேபி..", மற்றும் "மரணம் மாஸு மரணம்.." பாடல்களை கேட்பது. அவளை தமிழில் பேசு, தமிழில் பேசு என்று கூறி அது நடக்காமல் நாங்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டோம். என்.ஆர்.ஐ. குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கவே தனி ஆப் இருக்கிறதாமே..??!!
கத்தரியில் வெய்யில்
கொளுத்துமாம்
கதைக்கிறார்கள் எல்லோரும்
தென்றலல்லவோ என்னைத்
தழுவிக் கொண்டிருக்கிறது!
எல்லாவற்றுக்கும் ஆப் என்பது வசதிதான். ஆனால் நீங்கள் சொல்வதுபோல சில வசதிகளை இழக்கிறோம். கேஜிஜி ஏற்கெனவே இல்லப் பணியாளருக்குக் கொடுக்கும் சம்பளம் மட்டும்தான் பணமாகக் கொடுப்பதாக எழுதி இருந்தார். மற்ற எல்லாமே ஆன்லைன்தான்.
ReplyDeleteவளர்ச்சி என்று வந்து விட்டால், இதோடு போதும் என்று சொல்லும் வாய்ப்பு நமக்கு கிடையாது.
Deleteமருந்து சாப்பிடும்போது குரங்கை நினைத்ததால்தான் உங்களுக்கு புளியோதரை கிடைக்காமல் லட்டு கிடைத்தது!!!!! ஹா... ஹா... ஹா...
ReplyDeleteபெருமாளை பார்க்காமல் வந்ததில் என் தவறு இருக்கிறது. இதுபோன்ற தவறுகளுக்கு மாற்றுவழி காணாத அவர்களும் காரணம். பெருமாள் யாரையும் 'நீ என்னைப் பார்க்காதே' என்று சொல்லமாட்டார்!!!
வரிசையில் செல்லக்கும் பொழுது பசி, தாகம், கையில் வைத்திருந்த பிஸ்கெட்டுகளை எல்லோருக்கும் கொடுத்து நானும் சாப்பிட்டேன். பழச்சாறும் அவ்விதமே.(இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், மற்றவர்களுக்கு கொடுக்காமல் நீங்கள் மட்டும் சாப்பிட்டீர்களா? என்று தேம்ஸ் நதிதீரக்காரரோ, நெல்லையாரோ வந்து விடுவார்கள். ஏன் வம்பு?)நாக்கிற்கு கரமாக ஏதாவது தேவைப்பட்டது. அதனால்தான் புளியோதரைக்கு ஆசைப்பட்டேன்.
Delete//என்.ஆர்.ஐ. குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கவே தனி ஆப் இருக்கிறதாமே..??!!//
ReplyDeleteஹா... ஹா... ஹா... இருக்கும் இருக்கும்.
எப்படியோ குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
Deleteபேத்திக்கான கவிதை அருமை.
ReplyDeleteதூக்கிக்கொண்டால்
தோள்களும் கைகளும் வலிக்கின்றன...
இறக்கி விட்டால்
மனசு வலிக்கிறது
என்று யாரோ எழுதிய ஒரு பழைய கவிதை உண்டு.
பாலகுமாரனுடையதா? அல்லது சுப்பிரமணிய ராஜு.
Delete//கத்தரியில் வெய்யில்
ReplyDeleteகொளுத்துமாம்
கதைக்கிறார்கள் எல்லோரும்
தென்றலல்லவோ என்னைத்
தழுவிக் கொண்டிருக்கிறது!//
நீங்கள் எத்தனையோ எழுதி இருக்கிறீர்கள் ஆனால் இது தான் என் மனதை கவர்ந்தது.
நானும் பாட்டி என்பதால் .
ஸ்ரீராம் பகிர்ந்து கொண்ட கவிதையும் சூப்பர்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
அது உண்மையில் இன்னும் சுருக்கமாக
Deleteதூக்கிக்கொண்டால்
கைவலிக்கிறது
இறக்கிவிட்ட்டால்
மனசு வலிக்கிறது
என்றிருக்க வேண்டும்!
நீங்கள் எத்தனையோ எழுதி இருக்கிறீர்கள் ஆனால் இது தான் என் மனதை கவர்ந்தது.
Deleteஇது ஷொட்டா ? குட்டா? எப்படியோ நன்றி.
உங்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
@ஸ்ரீராம்:உங்கள் கவிதை சூப்பர். மீள் வகைகளுக்கு நன்றி.
Deleteநீங்கள் மேலே எழுதியதை படித்தாலும் கீழே உள்ள அந்த கவிதை மனதை கவர்ந்தது அது பாராட்டுதான்.
Deleteஅதற்கு காரணம் வேறு சொல்லி இருக்கிறேன் நானும் பாட்டி என்று அப்புறமும் ஷொட்டா? குட்டா என்று கேட்கலாமோ?
Deleteஷொட்டுதான்.
😁😁
Deleteஎங்கெங்கு காணினும் ஆப்படா..!
ReplyDeleteதலைப்பும் விளக்கமும் அருமை.
மிக்க நன்றி!
Deleteஇந்தமாதிரி அப்புகள் செயல் இழந்து விட்டாலோ குறை வைத்தாலோ அதை சரி செய்வதும் பிரச்சனைதான்
ReplyDeleteநமக்குத்தான் அவையெல்லாம் கஷ்டம். இந்தக் கால குழந்தைகளிடம் கொடுங்கள், நிமிடத்தில் சரியாக்கி விடுவார்கள். வருகைக்கு நன்றி.
Deleteசமீபத்தில் தமிழுக்கு "ஆப்பு" என்று கேள்விப்பட்டேன்...!
ReplyDeleteஆமாம், நானும் அந்த தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ReplyDeleteபதிவில்படத்தை பார்த்ததும் எழுந்த ஒரு நினைவு ஒர் பையனைத் தன் தோள் மேலேற்றி கடவுளைக் காட்டினாராம் ஒருதந்தை பிற்காலத்தில் அதை நினைத்த பையன் கடவுளின் தோள் மேலேறி கடவுளை பார்த்தது போல் இருந்தது என்று நினைத்தாராம்
ReplyDeleteஅருமை
Deleteஆனா, அந்த அப்ளிகேஷனில், முந்தைய தினம் காலை 8 மணிக்குள் நமக்குத் தேவையானவற்றைப் பதிந்துவிடணும்னு நினைக்கிறேன். இதுபோல, டன்சோ அப்ளிகேஷன் நமக்குத் தேவையானவற்றை டெலிவர் செய்வதற்கானது. மிகவும் குறைந்த கட்டணம் (20 ரூபாய் போன்று). நான் அதன் மூலமாக, எனக்குத் தேவையான கடையிலிருந்து தில்பஸந்த் 2 வாங்கிக்கொண்டுவரச் சொல்லுவேன். இல்லைனா ஆட்டோவில் 30+30=60 ரூபாய் செலவழிக்கணும்.
ReplyDeleteஆமாம், முதல் நாள் காலை 8 மணிக்குள் பதிந்து விட வேண்டும்.
Deleteஇது எத்தனை மனிதர்களின் வேலைக்கு "ஆப்பு" வைத்து விட்டது.
ReplyDeleteகாலத்தின் கட்டாயம் ஜி. வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅக்கா இந்த ஆப் இன்னும் சில வருடங்களில் மனிதருக்கிடையே சம்பாஷணைக்கே ஆப்பு வைத்துவிடும் என்ற கவலை தொற்றிக் கொள்கிறது.
ReplyDeleteமிகவும் பிடித்தது உங்களின் கவிதை!! அக்கா நீங்க கவிதாயினியும் ஆஹா ஆஅஹா!! பன்முகத் திறமைதான்...உங்கள் பாஷையில் சொல்வதென்றால் உங்களின் அதிபதி சந்திரனோ?!! ஹா ஹா ஹா இப்படித்தான் உடான்ஸ் விடனும் ஹிஹிஹி
பேத்தியோடு செம டைம் போல!! யெஸ் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் குழந்தைகளோஉ இருப்பது..
திருப்பதி பெருமாள் கண்ணே லட்டு திங்க ஆசையானு லட்டு கொடுத்துவிட்டாரா....இதுக்குத்தான் உங்க லைனையே எடுத்துப் போடுகிறேன்...// அவரிடம் எப்போதும் எதிர்பாராததைத்தான் எதிர்பார்க்க வேண்டும்.// லட்டுவ நினைச்சிருந்தீங்கனா புளியோதரை கொடுத்திருப்பார்!! ஹா ஹா ஹா
கீதா
நான் சர்க்கரைப் பொங்கல் இல்லைனா லட்டு எதிர்பார்ப்பேன். எனக்கு, சாத்துமுறை சேவையில் 'கதம்ப சாதம்' (வாழ்க்கையில் முதல் முறையா) கிடைத்தது (இரண்டு முறை தருவார்கள்). எனக்குப் பிடிக்கலை. தெலுங்கு மசாலாவையும் ஒழுகும் நெய்யையும் நான் ரசிக்கலை.
Delete/இந்த ஆப் இன்னும் சில வருடங்களில் மனிதருக்கிடையே சம்பாஷணைக்கே ஆப்பு வைத்துவிடும் என்ற கவலை தொற்றிக் கொள்கிறது.//
Deleteயார் கண்டார்கள்? இன்னும் கொஞ்ச நாளில் அதற்கும் கூட ஒரு ஆப் வந்தாலும் வந்து விடும். வருகைக்கு நன்றி கீதா.
@Nellai Tamizhan: /சாத்துமுறை சேவையில் 'கதம்ப சாதம்' (வாழ்க்கையில் முதல் முறையா) கிடைத்தது// கதம்ப சாதமா??? முதல் முறையாக கேள்விப்படுகிறேன். ம்ம்ம். இதற்கெல்லாம் ஜாதகத்தில் எழுதியிருக்க வேண்டுமோ?
Deleteகதம்ப சாதம் - சாம்பார் சாதம். தெலுங்கு மசாலாவில், ஏகப்பட்ட நெய்யுடன். போதாக் குறைக்கு, 3 இஞ்ச் சைஸுல ஒரு கேரட் நன்கு வெந்து இரண்டாக மடிந்து வந்தது...
Deleteநான் உபயோகிப்பது doodhwala app. முதல் நாள் மாலை ஆறு மணிக்குள் நம் தேவையைப் பதிந்துவிட்டால் போதும். மறுநாள் காலை ஆறுமணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துசேர்ந்துவிடுகிறது. சமீபத்தில் milk basket என்ற ஆப் மக்கள் இந்த அபார்ட்மெண்ட் வந்து, அவர்களின் சேவை பற்றிக் கூறினார்கள். இந்த milk basket ஆப் ஜுலை முதல் சென்னையிலும் செயல்படும் என்று கூறியுள்ளனர். பார்ப்போம். ஆப் முன்னேற்றங்கள் வயதானவர்களுக்கு சௌகரியம்; இளைஞர்களுக்கு சோம்பேறித்தனத்தை வளர்க்கிறதோ என்று ஓர் ஐயம்!
ReplyDeleteவயதானவர்களுக்கு மட்டும் இல்லை, கடுமையான வேலைப்பளு உள்ளவர்களுக்கும் மிகவும் உதவிகரமானது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஅடடா எல்லாவற்றுக்கும் ஆப் ஆ. தேவலையே. நெல்லைத்தமிழன் சொன்னது
ReplyDeleteபோல ஆட்டோ செலவு மிச்சம்.
உங்களது திருப்பதி ட்ரிப் விவரிப்பு அருமை.
கவிதையும் அருமை சேர்க்கிறது.
பேத்தியின் அன்பில் மகிழ்ந்திருங்கள்.
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
கருத்துக்கு நன்றி வள்ளி அக்கா. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Deleteஇங்கேயும் காய்களுக்கு என வந்தார்கள். ஆனால் அவங்க காட்சிக்கு வைத்திருந்ததே பிடிக்கலை. அதோடு நேரில் பார்த்து வாங்குவது போல் எதுவும் இருக்காது என என் கருத்து. முடியாதவங்க வேணாச் சொல்லலாம்.
ReplyDelete//நேரில் பார்த்து வாங்குவது போல் எதுவும் இருக்காது என என் கருத்து.// என் மருமகளுக்கும் இதே கருத்துதான். ஆனால் நாங்கள் சென்ற வாரம் பிக் பாஸ்கெட்டில் கறிகாய்கள் ஆர்டர் செய்தோம். வெண்டைக்காய் உள்பட எல்லா காய்களுமே மிக நன்றாக இருந்தன.
Deleteபேத்தியைச் சுமக்கும் கஷ்டமே தெரியாது! பேத்தியுடன் இனிமையாகப் பொழுது கழியப் பிரார்த்தனைகள், வாழ்த்துகள். நீங்க "பெண்"களூரில் இருப்பதால் அவங்க வெயிலில் கஷ்டப்படவும் வேண்டாம். சென்னை என்றால் தாங்க முடியாமல் போயிருக்கும்.
ReplyDeleteஇனிமையான கவிதை! பாராட்டுகள். ஸ்ரீராமின் கவிதையும் நன்றாக இருக்கிறது.
கீதாக்கா... அது என் கவிதை அல்ல. நான் எங்கோ படித்த கவிதை.
Deleteமீள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
ஆப் பார்த்து வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்வது இப்போது நிறைய பெருகி வருகிறது. இந்த செளகரியங்கள் இப்போது வந்தவைதான். எதுவுமே நம் மனதிற்கு உடன்பாடென்றால் பிரச்சனை ஏதும் இருக்காது. சிலசமயம் நாம் எதிர்பார்த்த மாதிரி அமையாத போது வரும் வருத்தம், வேறு சில பயன்பாடுகளை கண்டதும் விலகிப் போகும்.
தங்கள் பேத்தியை பற்றிய கவிதை அருமை. மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன்.பேத்திக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//சிலசமயம் நாம் எதிர்பார்த்த மாதிரி அமையாத போது வரும் வருத்தம், வேறு சில பயன்பாடுகளை கண்டதும் விலகிப் போகும்//
Deleteசரியாக சொல்லியிருக்கிறீர்கள். பல விஷயங்கள் நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
வாழ்த்துக்கு நன்றி.
பதிவு அருமை..
ReplyDeleteகவிதை இனிமை...
நன்றி, நன்றி.
Deleteமுதலில் போட்டுக்கொண்டது யார்? உங்களைப் பார்த்து பேத்தியா? பேத்தியைப் பார்த்து நீங்களா? Goggles-ஐச் சொல்கிறேன்..!
ReplyDeleteபேத்தியைப் பார்த்து நான். வருகைக்கு நன்றி.
ReplyDelete//..ஶ்ரீராமின் அனுபவம் வேறு அவ்வப்போது நினைவுக்கு வந்து..//
ReplyDeleteஇதுதான் இனி நடக்கப்போகிறது. திருப்பதிக்குப் போகும் எபி-க்காரர்கள் முதலில் ஸ்ரீராமை நினைப்பார்கள்.. பின் வெங்கடேஷை தரிசிப்பார்கள்! அவன் செயலே எல்லாம்..