ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்
ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த பெண்,மாப்பிள்ளை,பேத்தி ஊருக்கு திரும்பி விட்டார்கள். அவர்களோடு நாங்களும் சென்னை, திருப்பதி, பெங்களூர், சென்னை என்று சுற்றினோம்.
பெங்களூர்-சென்னை, சென்னை-பெங்களூர் சதாப்தியில் எக்சிகியூடிவ் கிளாசில் பயணித்தோம். ஈ.சியில் இருக்கை சௌகரியமாகவும், உயரமானவர்கள் கூட காலை நீட்டி வசதியாக அமரும்படி தாராளமாகவும் இருக்கிறது. காலை சதாப்தியில் வண்டி கிளம்பியதும், வெல்கம் ட்ரிங்க்(காபி அல்லது டீ, மஃபின், வறுத்த பாதாம்) வந்தது. அதை முடித்த சிறிது நேரத்தில் கார்ன் பிளக்ஸ், ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை பிரேக்ஃபாஸ்ட் வந்து விட்டது. இதற்கு நேர்மாறக மாலை சதாப்தியில் வண்டி கிளம்பி சிறிது நேரத்திற்குப் பிறகுதான் காபி, மஃபின், விவகாரங்கள் வந்தன. பிறகு திரும்பியே பார்க்கவில்லை. எட்டு மணியை நெருங்கும் பொழுது ரொம்ப சுமாரான சூப் வந்தது. அதன் பிறகு சற்று நேரம் கழிந்து, சப்பாத்தியும், ரசம் போல ஒரு குருமாவும் தயிருடன் வந்தன. சாதாரணமாக சாப்பாடு முடிந்தவுடனேயே ஐஸ் க்ரீம் வந்து விடும். ஆனால் எங்களுக்கு ஐஸ் க்ரீம் வருவதற்குள் கே.ஆர்.புரம் வந்து விட்டது. கண்டோன்மென்டில் இறங்க வேண்டிய சிலர் அதற்குள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு படிக்கு அருகில் சென்று விட்டார்கள்.
பயணத்தின்பொழுது படிப்பதற்காக ஆனந்த விகடன், கல்கி, குங்குமம் மூன்றும் வாங்கினேன். பல வருடங்களுக்குப் பிறகு வாங்கியதாலோ என்னவோ குங்குமம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. அதில் போஸ்ட்மார்ட்டம் என்று ஒரு பகுதி. ஆதித்த கரிகாலன் கொலையில் அருண்மொழித் தேவரான ராஜ ராஜ சோழனுக்கும், அவர் சகோதரி குந்தவைக்கும் சம்பந்தம் உண்டோ? என்று கேள்வி எழுப்பி, அதற்கான காரணங்களை அலசியிருந்தது.
உத்தம சோழர் பதவி ஏற்ற பொழுது அவருக்கு ஒரு மகன் இருந்தான். தந்தைக்குப் பின் மகன்தான் பட்டம் ஏற்க வேண்டும், ஆனால், ஏன் அருண்மொழித் தேவர் அரசரானார்?
உத்தம சோழர் பதவி ஏற்ற பொழுது அவருக்கு ஒரு மகன் இருந்தான். தந்தைக்குப் பின் மகன்தான் பட்டம் ஏற்க வேண்டும், ஆனால், ஏன் அருண்மொழித் தேவர் அரசரானார்?
தன் ஆட்சியில் நடை பெற்ற எல்லா செயல்களையும் கல் வெட்டில் பொறிக்கும் வழக்கமுடைய ராஜராஜன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான காரணத்தை எந்த கல் வெட்டிலும் பொறிக்கவில்லை. எப்படி கொலைகாரர்கள் கண்டு பிடிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பாக கூட சொல்லப்படவில்லை.
ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் நிர்வாகங்களை கவனித்து வந்த உத்தமசோழரின் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொல்லப்பட்டாராம். தன் மகன் ராஜேந்திரன் பதவி ஏற்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று ராஜராஜசோழன் செய்த செயல் இது என்கிறாரகள்.
உத்தம சோழர் பட்டத்திற்கு வந்து மூன்றாண்டுகளில் ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் ராஜராஜன் பட்டத்திற்கு வந்ததும் முதல் வேலையாக பன்னிரெண்டாண்டுகள் சிறையில் இருந்த வந்தியத்தேவனை விடுவித்தாராம். அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்? அவருக்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்ததா? போன்ற விஷயங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனவாம்.
அதே போல ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் காந்தளூர் கடிகையை அழித்தது உள்நோக்கம் கொண்டது என்கிறார். காந்தளூர் கடிகையை நடத்தியவர் ஆதித்த கரிகாலனின் கொலையில் முக்கிய குற்றவாளியான ரவிதாசனின் குருவாம். அவருக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கலாம் என்பதாலேயே அந்த கடிகை அழிக்கப்பட்டது என்கிறார்.
இந்த ரவிதாசன் பிற்கால சோழ பரம்பரையை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்ய கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத்தேவரின் வம்சத்தை சேர்ந்தவனாம். கன்னரத் தேவருக்கு பட்டம் மறுக்கப்பட்டு அவருக்கு இளையவரான பராந்தகர் அரியணை ஏறினாராம். கன்னரத் தேவருக்கு ஏன் அரியணை மறுக்கப்பட்டது? என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதே போல குந்தவை, மூத்தவன் ஆதித்த கரிகாலன் இருக்கும் பொழுது, அருண்மொழித் தேவராகிய ராஜராஜன்தான் அரியணை ஏற வேண்டும் என்று விரும்ப காரணமும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்.
அரசியலும், அவிழ்க்கப்படாத புதிர்களும் இரட்டைப் பிறவிகள் போலிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தை சேர்ந்த 45 வயதாகும் திருஞானம் என்பவர் மதுரை பணிமணியிலிருந்து திருமயம், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும் அரச பேருந்தில் நடத்துனராக பணி புரிகிறார். 12 ஆண்டுகளாக நடத்துனராக இருக்கும் இவர் மதுரை, தஞ்சை வழித்தடத்தில் மூன்றாண்டுகளாக பணியாற்றுகின்றாராம். இவரின் வேலை நேரம் முதல்நாள் மதியம் இரண்டு மணி முதல் மறு நாள் மதியம் இரண்டு மணி வரை. தினசரி இருபதுக்கும் மேற்பட்ட பாட்டில்களில் சுத்தமான குடி நீரை நிரப்பிக் கொள்ளும் இவர், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து முடித்ததும் தண்ணீர் விநியோகம் செய்வாராம். தினசரி 60 லிட்டர் தண்ணீர் வரை வழங்குகிறாராம். கோடை நாளில், கடும் கோடை நேரத்தில் இவர் செய்யும் இந்த சேவை நிச்சயமாக பாராட்டுக்குரியதுதான்.
அரசியலும், அவிழ்க்கப்படாத புதிர்களும் இரட்டைப் பிறவிகள் போலிருக்கிறது.
ReplyDeleteஒன்றை ஒன்று ஒட்டியவையும் கூட. அவிழ்க்கப்படாததற்குக் காரணாமும் அரசியல் தான். அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவது என்பது ரொம்பவும் அதிசயமானது. நீங்கள் வேண்டுமானால் ஒரு லிஸ்ட் போட்டுப் பாருங்களேன்.
தண்டையை எதிர்பார்த்தோமானாலும், தண்டனையை தவிர்க்க வேண்டுமானாலும் உடனே அரசியல்வாதி ஆகி விடலாம். அல்லது இன்னொரு அரசியல்வாதியை அணுகலாம். அவர் எப்படி மீள்வது என்று வழிகாட்டுவார்.
//ஒன்றை ஒன்று ஒட்டியவையும் கூட. அவிழ்க்கப்படாததற்குக் காரணாமும் அரசியல் தான்.//
Deleteமிகவும் சரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சங்ககாரா படித்திருக்கிறீர்களா? அதைப்பற்றி எங்கள் தளத்தில் விமர்சனம் கூட செய்திருந்தோம். அதில் இன்னொரு கோணம் இருக்கும்!
ReplyDeleteபடித்ததில்லை. படிக்க வேண்டும்.
Deleteபேருந்து நடத்துனரின் மனிதாபிமானம் போற்றத்தக்கது.
ReplyDeleteஆம். கருத்துக்கு நன்றி.
Deleteஅந்தப் பதிவு!
ReplyDeleteஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?
https://engalblog.blogspot.com/2012/05/blog-post_05.html
கதாசிரியரே வந்து நன்றி சொல்லி பின்னூட்டமும் இட்டார்.
எனக்கு நினைவு இருக்கு ஸ்ரீராம்...அந்தப் பதிவு
Deleteகீதாக்காவும் கூட இது பத்தி ஒரு பதிவு போட்ட நினைவு
கீதா
ஸ்ரீராம் உங்க பதிவு படித்திருக்கேன் கீதாக்கா எழுதியதை வாசித்த பிறகு என்று தோன்றுகிறது. ஆனால் கருத்து போடவில்லை 12ல் வந்ததாலும் நான் தாமதமாக வாசித்ததாலும்....
Deleteஇந்தக் கருத்தைப் போடுவதற்குள் கணினி சொங்கிவிட்டது...
கீதா
நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் சென்று படித்தேன். சங்ககாராவை தாமதிக்காமல் வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றியது. நன்றி.
Deleteஇத்தனை புதிர்கள் இருக்கின்றதா சோழர் கதையில்...
ReplyDeleteபல வரலாறுகளிலும் அப்படித்தானே இருக்கிறது பானுக்கா. நிறைய கேள்விகள் எழுகிறதே. என்னென்ன ஓட்டைகள் இருக்குனு பார்த்து அதை கரெக்டா நிரப்பாம வரலாறு எழுதிட்டாங்க போல ஹா ஹா ஹாஹ் ஆ..
சதாப்தியில் ஈசிக்கு தனி ஃபுட் ஆ அக்கா? ஏன்னா நீங்க சொல்லிருக்கறது பார்த்தா மற்ற க்ளாஸ் ஃபுட் போல இல்லையே..
தண்ணீர் கொடுக்கும் நடத்துநர் வாழ்க!
கீதா
//சதாப்தியில் ஈசிக்கு தனி ஃபுட் ஆ அக்கா? ஏன்னா நீங்க சொல்லிருக்கறது பார்த்தா மற்ற க்ளாஸ் ஃபுட் போல இல்லையே..//
Deleteவிமான சேவைகள் மாதிரித் தான் ஷதாப்தி, ராஜ்தானி, தேஜஸ் போன்றவற்றில் எக்சிக்யூடிவ் க்ளாஸின் சேவைகள். ஆனால் பொதுவாக ஷதாப்தியின் இரண்டாம் வகுப்பின் சேவை வடமாநிலங்களில் சொல்லிக்கொள்ளும்படி நன்றாக இருக்கும். தென் மாநிலங்களில் ஷதாப்தி குறிப்பாக "பெண்"களூர் ஷதாப்தி சுமார் ரகம் தான்.
தமிழ்நாடு, ஜி.டி., குஜராத் செல்லும் நவஜீவன் போன்ற தொலைதூர ரயில்களிலும் முதல்வகுப்புக்குச் சிறப்புக் கவனிப்பு இருக்கும். உணவு முதற்கொண்டு கேட்டுக் கொண்டு போவார்கள். ஆர்டர் செய்யலாம். தமிழ்நாட்டில் மூத்த குடிமக்கள் எனில் தனியாக ஓர் ஆள் அவர்களைக் கவனிக்கிறார். இஃகி,இஃகி எல்லா அனுபவங்களும் இருக்கு! முன்பதிவு செய்யாமல் கழிப்பறை பக்கம் உட்கார்ந்துகொண்டு போனது உட்பட!
Deleteசாயந்திரம் சூப் வருவதற்கு முன்னர் அதோடு சாப்பிடுவதற்கு மட்டும் ப்ரெட் ஸ்டிக்ஸ், பொரித்த ப்ரெட் துண்டங்கள், ரஸ்க் வகையறா, கார்லிக் ப்ரெட், டோஸ்ட், சாதா ப்ரெட் வெண்ணெயுடன், வர்க்கி மாதிரியான குக்கீஸ் என வகைவகையாக முதலில் கொண்டு வந்து கொடுத்து நம்மைத் தேர்வு செய்து கொள்ளச் சொல்லுவார்கள். அதன் பின்னர் வெண்ணெய், மிளகு பொடி, உப்பு, மறுபடி நீண்ட குச்சி போன்ற ப்ரெட் ஸ்டிக்ஸ் கொடுத்த பின்னர் சூப் வரும் பெரிய கிண்ணத்தில். அதன் பின்னர் சாப்பாடு! அதிலே எந்த உணவு வேண்டும் என்பதையும் சப்ஜி வகையறாவையும் நாம் தேர்வு செய்துக்கலாம். மற்றவை பொதுவானவை. அதாவது தால், சாதம், ஊறுகாய், தயிர்/லஸ்ஸி (இரண்டும் உண்டு) ரொட்டி மட்டும் பராத்தாவா, நானா, ஃபுல்காவா, பூரியா எனத் தேர்வு செய்து கொடுக்கவேண்டும் சப்ஜியில் மலாய் சப்ஜியா இல்லைனா பனீர் சப்ஜியானு கேட்பாங்க.
Deleteஇதெல்லாம் இல்லைனாலும் இப்போ தேஜஸில் சூப் கொடுக்கும் முன்னர் ப்ரெட்ஸ்டிக்ஸ், வெண்ணெய் பாக்கெட், மிளகு, உப்பு, சர்க்கரை கொடுத்து பின்னர் பெரிய கிண்ணத்தில் தாராளமாக சூப் (உண்மையாகவே தயாரிக்கப்பட்ட சூப், தக்காளி சாஸில் வெந்நீர் விட்டு இல்லை) கொடுத்தாங்க. நன்றாகவே இருந்தது.
Delete//. சாதாரணமாக சாப்பாடு முடிந்தவுடனேயே ஐஸ் க்ரீம் வந்து விடும். ஆனால் எங்களுக்கு ஐஸ் க்ரீம் வருவதற்குள் கே.ஆர்.புரம் வந்து விட்டது. கண்டோன்மென்டில் இறங்க வேண்டிய சிலர் அதற்குள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு படிக்கு அருகில் சென்று விட்டார்கள். //
Deleteஅந்த ஐஸ்க்ரீமைக் கொடுக்காமல் தாமதம் செய்து விட்டுப் பின்னர் வேறு வண்டிகளுக்கு மாற்றப்பட்டு விலைக்கு விற்பதாக ஒருவர் சொல்லி இருக்கிறார். இது பற்றிப் புகார்கள் கூடக் கொடுத்திருக்கோம்.
கீதா அக்கா நிறைய தகவல்கள் கொடுத்திருக்காங்க. எங்ளுக்கு வரும் பொழுது கொடுக்கப்பட்ட ப்ரட் ஸ்டிக்ஸ் சவக்கு சவக்கென்றிருந்தது. நோ சாய்ஸ் அவர்கள் கொடுத்ததைதான் சாப்பிட வேண்டும்.
Deleteஎக்ஸிக்யூட்டிவ் க்ளாஸ் டிக்கெட் விலை கிட்டத்தட்ட விமான டிக்கெட் அளவு வந்து விடுகிறது. அவ்வளவு பைசா வாங்கிக்கொண்டு இது கூட தராவிட்டால் எப்படி?
எங்களோடு பயணித்த ஒரு பெண்மணியை வழியனுப்ப வந்த அவர் மகன், சீனியர் சிட்டிசன் கன்செஷன் இருப்பதால் ஓடுகிறது என்றார். ��
ஓடும் பஸ்ஸில் தண்ணீர் பந்தல்னு தலைப்பைப் பார்த்தே நான் நினைத்தது பஸ்ல கூரைல ஓட்டை போல மழை பெய்த போது தண்ணிர் பந்தலாகிடுச்சு போலனு...இன்னொன்னு என்ன தோன்றியது என்றால் கோடை வெயில் பலமா இருக்கறதால சில கல்யாணங்களில் தண்ணீர்/பன்னீர் ஸ்ப்ரே போல அடிக்குமே....அப்பப்ப குளிர்ச்சியா இருக்குமே அது போல தண்ணீர் ஸ்ப்ரே போல அரேஞ்ச்மென்ட் பண்ணிருக்காங்களோ அட பரவாயில்லயேனு நினைச்சேன் டூஊஊஊஊஊஊஊஉ மச் இல்லையா அக்கா...ஹிஹிஹி
ReplyDeleteகீதா
yessssssssssssu
Deleteநல்ல கற்பனை..!😊
Deleteநம் சமகாலத்தில், மூத்த மகன் அழகிரிக்கு பட்டம் மறுக்கப்பட்டது. இரண்டாவது மகனுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. (அதுவும் இரண்டாவது தாரத்தின் இரண்டாவது மகனுக்கு). மூத்த தாரத்தின் பட்டம் கட்டப்பட்ட இளவரசன் பிறகு குடிபோதையில் வாழ்வைத் தொலைத்தார்.
ReplyDeleteஇதைப்பற்றியும் ஏகப்பட்ட அனுமானங்கள் 200 ஆண்டுகளுக்குப் பின்பு உலவுமோ?
அட! எனக்கு இது தோன்றவேயில்லையே..?!
Deleteஇந்திரா காந்தி கூட இளைய மகனைத்தானே வாரிசாக கொண்டு வர முயன்றார்.
என்னைப் பொருத்த வரையில் குங்குமம் பத்திரிகை ஓரளவு நன்றாகவே இருக்கிறது (சில திமுக ஜால்ரா கட்டுரைகள் போன்றவற்றைத் தவிர). விகடன் ஒருசார்பு பத்திரிகையாகி பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது (அதாவது மதன் காலத்துக்குப் பிறகு). குமுதம், சில்லுண்டிகள் படிக்கும் பத்திரிகையாகிவிட்டது (திரைப்படம், கவர்ச்சிப்படம், கிசுகிசு என்று)
ReplyDeleteகுங்குமத்தின் குழுமத்திலிருந்து வரும் தோழி கூட பரவாயில்லை. ஆ.வி., குமுதம் பற்றிய உங்கள் கருத்து100% சரி. கருத்துக்கு நன்றி.
Deleteஅரசுப் பேருந்து ஊழியர்களிலும் நியாயவான்களைப் பார்க்கும் போது மனம் மகிழ்கிறது. தண்ணீர் கொடுப்பவர் வாழ்க.
ReplyDeleteமீள் வருகைக்கும், கருத்துக்ககும் நன்றி.
Deleteதிருஞானம் அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி.
Deleteஅனுபவங்கள் பல விதம்....
ReplyDeleteகாலச்சக்ரம் நரசிம்மா அவர்களின் புத்தகம் பற்றி எனது தளத்தில் கூட எழுதி இருக்கிறேன். எத்தனை எத்தனை அனுமானங்கள்.... நடந்ததை யார் அறிவார்...
பேருந்து ஊழியர் பாராட்டுக்குரியவர்.
சற்றே இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் வலையுலா. இனி தொடர்ந்து வர வேண்டும். பார்க்கலாம்!
நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல பகிர்வு. நானும், இரு வருடங்களுக்கு முன் சதாப்தியில் சென்றிருக்கிறேன். இந்த மாதிரி அப்போது ஈ.சி இல்லையோ என்னவோ? அன்றைய பொழுதில் மொத்தத்தில் கூட்டமில்லாத பிரயாணம் மிக செளகரியமாக இருந்தது.
சோழர்கள் ஆட்சி காலத்தில் நடந்ததை பற்றிய தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி. பதவி என்ற பெரியமோகம் மனிதனுக்குள் வந்து விட்டால் குற்றங்களும் மிகுந்து விடுகிறது.
தண்ணீர் சேவை செய்து வரும் திருஞானம் அவர்களுக்கு பாராட்டுக்கள். சிறப்பான தகவல்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இந்த மாதிரி அப்போது ஈ.சி இல்லையோ என்னவோ? // எப்போவுமே உண்டு. நான் ஏழு, எட்டு வருடங்கள் முன்னர் கூடச் சென்றிருக்கிறேன். இங்கே அடிக்கடி நாங்க பயணம் செய்யும் பல்லவனிலும், ராக்ஃபோர்ட்டிலும் கூட முதல் வகுப்பு உண்டு.
Deleteவருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி.
Deleteஇன்னுமா வாரப் பத்திரிக்கைகளை வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்!?....
ReplyDeleteபிரயாணங்களின் பொழுது வாங்குவதுண்டு.
Deleteஓடும் பேருந்தில் பயணிகளுக்குத் தண்ணீர் வழங்கும் திரு. திருஞானம் அவர்களின் பணி மகத்தானது...
ReplyDeleteநல்ல மனம் வாழ்க. கருத்துக்கு நன்றி.
Delete//ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்//
ReplyDeleteதலைப்பும் செய்தியும் அருமை.
கோடைக்கு ஏற்ற உதவி.
திரு. திருஞானம் சேவை தொடர வாழ்த்துக்கள்.
நன்றி.
Deleteகிட்டத்தட்ட இந்தக் கருவை வைத்துத் தானே காலச்சக்கரம் நரசிம்ம்மா எழுதி இருக்கார். நான் வாராந்தரிகள் படிப்பதை எல்லாம் நிறுத்தி சுமார் 30 வருடங்கள் ஆகப் போகின்றன. சோ இருந்தவரை "துக்ளக்" வாங்கினோம். இப்போ அதுவும் இல்லை! கடைசியாக திரு சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஆனந்த விகடனில் வந்தவரை வாங்கினோம். பின்னர் நிறுத்தியாச்சு. விகடன் மூஞ்சியெல்லாம் மாறிப் போய் எத்தனையோ காலம் ஆச்சு!
ReplyDeleteநானும் வாராந்தரிகளை நிறுத்தி பல ஆண்டுகளாகி விட்டன. எப்போதாவது பயணத்திலும், யார் வீட்டிற்காவது செல்லும் பொழுதும் படிப்பதுண்டு.
Deleteதுக்ளகை குருமூர்த்தி நன்றாகவே நடத்துகிறார்.
இத்தனை கருத்துச் சொல்லியும் ஃபாலோ அப் கொடுக்காமல் இருந்திருக்கேன்! !!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteமீள் வருகைகளுக்கு நன்றி.
ReplyDelete///ஆனால் எங்களுக்கு ஐஸ் க்ரீம் வருவதற்குள் கே.ஆர்.புரம் வந்து விட்டது. //
ReplyDeleteசே..சே.. ஜஸ்ட்டு மிஸ்சாச்சே:))
//சே..சே.. ஜஸ்ட்டு மிஸ்சாச்சே:))// இல்லையில்லை, மிஸ் பண்ணவில்லை, ஐஸ் க்ரீம் சாப்பிட்டுவிட்டுதான் இறங்கினோம் :))
Deleteநடுவில ராஜராஜ சோளன் கதை போகுதே ஏன்?..
ReplyDeleteதண்ணீர் கொடுக்கும் அந்தக் கண்டக்டர் வாழ்க.
//நடுவில ராஜராஜ சோளன் கதை போகுதே ஏன்?..//
ReplyDeleteபயணத்தில் படிப்பதற்காக வாங்கிய குங்குமத்தில் படித்த விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது, அதற்கு பனிஷ்மெண்ட், என்ன தரலாம் என்று அஞ்சுவை கேட்டு சொல்கிறேன் அது வரை பெஞ்சு மேல் ஏறி நில்லுங்கள்.
வருகைக்கு நன்றி அதிரா.
நானும் சங்கதாரா பற்றிதான் குறிப்பிட comment செய்ய வந்தேன். ஆனால் ஸ்ரீராம் முந்திக்கொண்டுவிட்டார்!
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteசோழர்களின் புராணம் படிக்க தலை சுற்றியது. ஒரு ப்ளாக் காஃபி போட்டுக்கொண்டு தொடர்கிறேன்.
ReplyDeleteதிருஞானம் அன்பானவர். இவரைப்போல் பலர் இருக்கக்கூடும். எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டியிருக்கும்.
தமிழ் வாரப்பத்திரிக்கைகள் தமிழ் சினிமாவைப்போன்றவை. The less said, the better. இருந்தும், அவ்வப்போது பார்க்கிறேன். எவ்வளவு கீழே போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள. தங்களது பத்திரிக்கையின் கௌரவம் குறைந்துவிடவில்லை எனக் காண்பிக்கவென, அவ்வப்போது ஒரு நல்ல எழுத்தாளரின் கதையைப் போட்டுவிடுவார்கள். உதாரணம்: போன மாத விகடன் ஒன்றில் எஸ்.ரா-வின் சிறுகதை ‘சிற்றிதழ்’.