மசாலா சாட்
மாறுதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
மாறாமல் இருப்பது கழுதைக்குதான் சாத்தியம்.
இவையெல்லாம் மாறுதலைப்பற்றிய சில பிரபலமான சொலவடைகள். மாறிக்கொண்டே இருப்பதுதான் உலக இயல்பு. ஆனால் அளவிற்கதிகமான மாற்றங்கள் குறிப்பாக வேலையிலும், இருக்குமிடத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஒன்றரை வருடத்திற்கு மூன்று வீடுகள் மாற்றுவது சுலபமா என்ன? நாங்கள் மாற்றியிருக்கிறோம் என்று கர்வமாக முஷ்டியை மடக்க முடியவில்லை, வலி பின்னுகிறது.
சென்னையிலிருந்து பெங்களூர் வந்த பொழுது எங்கள் மகன் வசித்து வந்த இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு போதாது என்பதால் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டிற்கு மாறினோம். அப்போதிலிருந்தே தீவிரமாக சொந்த வீடு பார்த்துக் கொண்டிருந்ததால் சென்னையிலிருந்து கொண்டு வந்த பெட்டிகளை பிரிக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு விட்டோம். இப்போது சொந்த வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் பிரித்து எடுத்து அடுக்குவதற்குள் உஸ்...அப்பா!
நேற்றுதான் டி.வி.இணைப்பு கிடைத்தது. இன்னும் ப்ராட்பேண்ட் இணைப்பு கிடைக்கவில்லை. கைபேசி வழியாக எல்லா பதிவுகளையும் படித்து கருத்திடுவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.
*****************************************
*****************************************
காடுகளை அழித்துக்கொண்டே வருகிறோம் என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்து. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது உலகம் அதிக பசுமை நிரம்பிய இடமாக மாறியிருப்பதாக நாஸா அறிவித்திருக்கிறதாம். இதில் பெரும் பங்கு வகிப்பது சீனாவும், இந்தியாவுமாம். இந்த இரு நாடுகளுமே கடந்த இருபது வருடங்களாக மரம் நடும் இயக்கத்தை பேரியக்கமாக செயல் படுத்தி வருவதோடு விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி வருகின்றனவாம். அதோடு மட்டுமல்ல நம் நாடு மரம் நடுவதில் உலக சாதனையை முறியடித்திருக்கிறதாம். இருபத்திநான்கு மணி நேரத்தில் எட்டு லட்சம் இந்தியர்கள் ஐந்து கோடி மரங்களை நட்டிருக்கிறார்களாம். இதுவும் நாஸா கொடுத்திருக்கும் தகவல்தான். சந்தோஷமாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
நமக்கு நாமே வழங்கிக் கொள்ளலாம் ஒரு பூங்கொத்து
இதே உத்வேகத்தோடே நீர் நிலைகளை பாதுகாப்போம்
நமக்கு நாமே வழங்கிக் கொள்ளலாம் ஒரு பூங்கொத்து
இதே உத்வேகத்தோடே நீர் நிலைகளை பாதுகாப்போம்
வீடு மாற்றிய களைப்பில் பதிவுக்கு தலைப்பு வைக்க மறந்துட்டீங்க...
ReplyDeleteசெல் ஃபோனில் டைம் பண்ணினேன். தலைப்பு கொடுத்தேன், சேவ் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். குறிப்பிட்டதற்கு நன்றி. இப்போது தலைப்பு கொடுத்து விட்டேன்.
Deleteபுதிய இல்லத்தில் சுகங்கள் யாவும் அடைய வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி.
Deleteஅடடே... நாஸாவின் அறிவிப்பு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. கலாமுக்கும், விவேக்குக்கும்கூட நன்றி சொல்லவேண்டும்!
ReplyDeleteஜக்கி வாசுதேவ் அவர்களை மறந்து விட்டீர்களே?
Deleteபுது இல்லத்தில் மங்கலம் பல்கிப் பெருகிட வேண்டுகிறேன்....
ReplyDeleteவாழ்க வளமும் நலமும்....
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி 🙏🙏
Deleteபுதிய சொந்த வீட்டுக்கும், வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபசுமைத்தகவல் ஆச்சர்யமளிக்கிறது இது உண்மையெனில் மகிழ்ச்சியே...
மாற்றம் தேவைதான் நல்ல பேண்ட்டை கிழித்து விட்டு திறிவது மாற்றமென்றால் இது அவசியமில்லாத மாற்றமே...
நன்றி ஜி!
ReplyDelete//மாற்றம் தேவைதான் நல்ல பேண்ட்டை கிழித்து விட்டு திறிவது மாற்றமென்றால் இது அவசியமில்லாத மாற்றமே...// சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.ஆனால் மாற்றங்கள் நமது ஒப்புதலை எதிர்பார்ப்பதில்லை.
நாசாவின் அறிவிப்பு மகிழ்ச்சி தந்தது.
ReplyDeleteபுதிய வீட்டில் மகிழ்ச்சி ததும்ப வாழ்த்துகள்.
மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது! ஆனாலும் மாற்றம் கொஞ்சம் தடுமாறத் தான் செய்கிறது!
நன்றி வெங்கட்.
Deleteபுதுமனை சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteபுதிய வீட்டில் இனிய அமைதியான மகிழ்ச்சியான நல்வாழ்க்கைக்கு வாழ்த்துகள், பிரார்த்தனைகள். "பெண்"களூரில் எந்தப் பகுதி? எனக்குப் பெண்களூர் வந்தால் அங்கே இருக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு ஒரு நாளைக்கு ஒருத்தர் என வைத்துக் கொண்டாலே ஒரு மாதம் பத்தாது. ஆகவே பொதுவாகப் பெண்களூர் வந்தால் ரகசியமாகத் தான் எட்டிப் பார்த்துட்டுப் போயிடுவேன். :))))) இப்போ நீங்க, தி/கீதா, நெ.த., ஏகாந்தன் ஆகியோர் புது வரவு!
ReplyDeleteகீதா சாம்பசிவம் மேடம்... ப்ராப்தம் இருந்தால் டிசம்பரில் ரெடியாயிடும் (இன்டீரியர் முடித்து). அனைவரும் ஜூனிலிருந்து சேர்ந்திருப்போம் என நினைக்கிறேன்.
Deleteஎதுவுமே நடக்கும் வரையில் நிச்சயமில்லை அல்லவா?
எனக்குத் தெரிந்தவர்களில் யார் முதலில் விருந்தினராக வந்து எங்களுக்கு கௌரவம் சேர்க்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?
பசுமை விஷயம் நானும் படிச்சேன். உண்மையில் விமானத்திலிருந்து பார்க்கையில் சென்னையின் பசுமை கண்ணைக் கவரும் ஒரு விஷயம்! இத்தனை பசுமை இருக்கேனு நினைப்பேன். மழை மட்டும் வரவே மாட்டேன்னு அடம்! இன்னும் இந்த வருஷம் கேரளாவில் கூட ஆரம்பிக்கலை! :(
ReplyDeleteஆம், சென்னையின் பசுமை என்னையும் ஆச்சர்யப்படுத்தும். இவ்வளவு மரங்களை வெட்டி கான்க்ரீட் காடுகள் முளைத்த பிறகும் இத்தனை பசுமையாக இருக்கிறதே என்று நினைத்துக் கொள்வேன்.
Deleteகேரளாவில் மழை தொடங்கி விட்டது போலிருக்கிறதே!
புது வீடு - சந்தோஷம்.
ReplyDeleteஇந்த முறை சிட்டியின் ரோட்டுல் நாவல் மரங்கள் (கொத்துக்கொத்தாய் பழங்களோடு), மாமரங்கள் கண்டு மகிழ்ச்சி
நன்றி நெ.த. பெங்களூரில் ஒரு ப்ளாகர்ஸ் மீட் என்று நானும் தி.கீதாவும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். கப்பன் பார்க் அல்லது லால் பாகில் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தேசம். பார்க்கலாம்.
Deleteவைங்க....ஆர்கனைஸ் பண்ணறவங்க எம்.டி.ஆர் லஞ்சுக்குக் கூப்பிட்டால் நான் வரமாட்டேன்..ஹாஹா
Deleteஎழுத்தை ரசிப்பதுபோல், எழுத்தாளர் மீட்டிங் நல்லாருக்குமா? தெரியலை.
நன்றி அக்கா. பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி. பேருந்தில் வந்தால் எங்கள் வீட்டிற்கு வந்து காபி குடித்து, ப்ரேக் ஃபாரஸ்ட் சாப்பிட்டு விட்டு மற்ற வீடுகளுக்குச் செல்லலாம். வரவேற்க காத்திருக்கிறோம்.
ReplyDeleteபுதியவீடு குடிபோனதற்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
ReplyDeleteபசுமை நிறைய தான் இருக்கிறது நாசா சொல்வது போல். தண்ணீர் பற்றாகுறையிலேயே இவ்வளவு பசுமை என்றால் நீர்வளம் இருந்தால் இன்னும் பசுமை அதிகமாய் இருக்கும்.
கேரளாவில் பருவமழை ஆரம்பித்து விட்டது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாய் நேற்று தொலைக்காட்சியில் சொன்னார்கள். தமிழகத்திலும் சில இடங்களில் கனமழை இருக்குமாம்.
மசாலா சாட் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
Deleteஇந்த வருடம் பருவ மழை கொஞ்சம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். நல்ல மழை பொழிய வேண்டுவோம்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களுடைய புது வீடு மாறுதலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் வீட்டிலுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகுக... வாடகை வீடு மாறி மாறி அதிலுள்ள சிரமங்கள் எனக்கும் புரியும். "எலி வலையானாலும் தனி வலை" என்பது போல், சொந்த வீட்டின் ஆரோக்கியங்கள் அனைவருக்கும் ஒரு நிம்மதிதான்.
மரம் நடுவதில் நம் நாடு உலக சாதனையை முறியடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம். நிலத்தடி நீர் வளத்தையும் நாம் புரிந்து கொண்டு, என்றும் வற்றாது பெருகிட உறுதி பூண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
நான் (சிங்கம்) நினைப்பதும் உண்மைதானே.! எனகிறதோ... மசாலா சாட் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
Deleteநேற்று தொலைகாட்சியில் திருவண்ணாமலையில் இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து அங்கு இருந்த குளங்களை தூர் வாரி, மரங்கள் நட்டு, நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுத்திருப்பதை காண்பித்தார்கள். நம்முடைய பாசிட்டிவ் செய்தியிலும் குளங்களை தூர் வாரும் செய்திகள் வருகிறது. பசுமையை உயர்த்திய மாதிரி, நீர் வளமும் உயர்ந்தால் மகிழ்ச்சி.
புதுமனை சிறக்க வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி டி.டி.
Deleteபுது மனை புகுதல் சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள் பானு மா.
ReplyDeleteஎல்லா வளங்களும் பெற்று இனிதாக வாழ்வு தொடரணும்.
மகிழ்ச்சியான செய்தி கொடுத்திருக்கிறீர்கள் பசுமை வளரட்டும்.
மழை பெய்யட்டும்.
சிங்கம் ஜோக் ஹாஹா.
நன்றி வல்லி அக்கா.
Deleteதங்களின் புதுமனை மிக மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்....
ReplyDeleteநாஸா கொடுத்திருக்கும் தகவல்...மனதிற்கு இதம் தரும் செய்தி ..
நன்றி அனு.
ReplyDelete