கொலைகாரன்
படம் துவங்கும் பொழுதே ஒரு கொலை. அடுத்த காட்சியில் விஜய் ஆண்டனி போலீஸ் ஸ்டேஷனில் "தான் ஒரு கொலை செய்து விட்டதாக கூறி சரணடைகிறார். விஜய் ஆண்டனி யார்?அந்த கொலையை அவர் ஏன் செய்தார்? என்பது ஸ்வாரஸ்யமாக சொல்லப்படுகிறது.
இண்டர்வெல்லுக்குப் பிறகு யூகிக்க கூடிய, யூகிக்க முடியாத ஏகப்பட்ட திருப்பங்கள். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி சைக்கோ கொலைகாரரோ என்று கூட தோன்றுகிறது.
படம் முழுவதும் இருக்கமான முகத்தோடு வருகிறார் விஜய் ஆண்டனி. ஒரு பாடல் காட்சியில் ஒரே ஒரு மி.மீட்டர் சிரித்து அட! விஜய் ஆண்டனி கூட சிரிக்கிறாரே என்று ஆச்சர்யப்படுத்துகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜீன் டெய்லர் மேட் ரோலில் கச்சிதமாக பொருந்துகிறார். நாஸர், சீதா போன்றவர்கள் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். கதாநாயகிதான் இன்னும் கொஞ்சம் இளமையாக, இன்னும் கொஞ்சம் நடிக்க கூடியவராக போட்டிருக்கலாம்.
ஒளிப்பதிவு துல்லியம். க்ரைம் திரில்லர் கதைக்கேற்ற பின்ணனி இசை. ஆனால் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்பதோடு ஸ்பீட் ப்ரேக்கர்களாக இருக்கின்றன. போலீஸ் கான்ஸ்டபிள்களை வைத்துக்கொண்டு அசட்டு பிசட்டென்று காமெடி பண்ணாதது ஒரு ஆறுதல்.
மசாலா படம்தான் ஆனாலும் மசாலாக்கள் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதால் சுவையாக இருக்கிறது.

அட இப்படிக்கூடப் படம் வந்திருக்கிறதா.
ReplyDeleteவிஜய் ஆண்டனி என்று ஒரு நடிகர்.. இவர்
இசை அமைப்பாளர் இல்லை.
சரி என் மெமரி அவ்வளவாகப் போறாது.
நல்ல அழகான விமரிசனம் பானுமா.
அர்ஜுன் இருந்தால் நல்ல நடிப்பும் இருக்கும்.
நன்றியும் வாழ்த்துகளும்.
அம்மா... இசை அமைப்பாளரும் அவரே. நடிகரும் அவரே!
Deleteநன்றி வல்லி அக்கா.
Deleteஅமேசானில் வரும்போது பார்க்கவேண்டும்.
ReplyDeleteநிச்சயம் பாருங்கள்.
Deleteபடத்தோட பெயர்தான் என்னை பயமுறுத்துகிறது.
ReplyDeleteவிஜய் ஆண்டனியின் படங்களின் பெயர்கள் எல்லாமே இப்படித்தான்.
Deleteபானுக்கா இப்படி ஒரு படமா ஆஹா. அதுவும் த்ரில்லர்ன்றீங்க கண்டிப்பா பார்த்தே ஆகணும். அது சரி பாடல்கள் கவரவில்லை நு சொல்லிருக்கீங்க ஆனால் என் தனிப்பட்டக் கருத்து த்ரில்லர் படங்களுக்குப் பாடல்களே தேவையில்லை என்பது. அப்படியே டக் டக்க்னு போணும்....
ReplyDeleteஉங்கள் விமர்சனம் கண்டிப்பாக படம் பார்ட்தே ஆகணும்னு நினைக்க வைக்கிறது...வாய்ப்பு எப்போது கிடைக்குமோ...
கீதா
//த்ரில்லர் படங்களுக்குப் பாடல்களே தேவையில்லை என்பது. அப்படியே டக் டக்க்னு போணும்...// நீங்கள் சொல்லுவதை 100% ஆமோதிக்கிறேன்.
Deleteகதைக்குத் தேவை இல்லை என்றால் கதாநாயகியும் கூட அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றும்...ஆனா படம் ஓடாதோ!! ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
நம் பட உலகின் மிகப் பெரிய ஒரு வேதனை அது என்னவோ 2.30 மணி நேரம் ஓட்ட வேண்டும் என்று என்ன கங்கணமோ....த்ரில்லரில் மசாலா சேர்ப்பது வழக்கம்...தென்னிந்திய பாரம்பரிய சமையலில் மசாலா சேர்த்தால் எப்படி சேராதோ அது போல...கீதா இதுக்கும் திங்க தானா ஹிஹிஹிஹி
ReplyDeleteகீதா
வருகைக்கும், மீள் வருகைக்களுக்கும் நன்றி.
ReplyDelete