கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 17, 2019

ஹியர் இஸ் கிரேசி(மோகன்)

ஹியர் இஸ் கிரேசி(மோகன்)

பிரபலமான மனிதர்கள் சிலரை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவோம். ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் மிகவும் ஏமாற்றமாக இருக்கும். ஏனென்றால் தன் எழுந்தாலும், பேச்சாலும் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் இமேஜுக்கும் நேரில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கும் சம்பந்தமே இருக்காது. க்ரேஸி மோகனோ தன் நாடகங்களில் எப்படி எளிமையாக, நகைச்சுவை உணர்ச்சி மிக்கவராக வந்தாரோ அதே எளிமையோடும், நகைச்சுவை உணர்ச்சியோடும் நிஜத்திலும் இருந்தார்.

நான் மஸ்கட்டில் இருந்த பொழுது மஸ்கட் தமிழ்ச்சங்கம் நடத்தி வந்த சங்க நாதம் என்னும் கையெழுத்து பத்திரிகையின் எடிட்டோரியல் போர்டில் இருந்தேன். அதற்காக  மகளிர் மட்டும் படப்பிடிப்பில் இருந்த கிரேஸி மோகன் அவர்களை சந்தமாமா பில்டிங்கில் சந்தித்து பேட்டி கண்டேன். சகஜமாக உரையாடினார். அந்த பேட்டியின் காபி தற்சமயம் என்னிடம் இல்லை. நினைவில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.


கிரேசி மோகன், சீனு மோகன் மற்றும் அவர் உதவியாளர்
நான்: ஏன் உங்களின் எல்லா நாடக பாத்திரங்களுக்கும் மாது, சீனு, மைதிலி, ஜானகி என்றே பெயர் கொடுக்கிறீர்கள்? 

மோகன்: அது எனக்கு சௌகரியமாக இருக்கிறது. மாது இப்படித்தான், சீனு இப்படித்தான் என்று தெரிந்து விடுவதால் கேரக்டரைசேஷனுக்காக மெனக்கெட வேண்டாம். கணேஷ், வசந்த், அப்புசாமி, சீதா பாட்டியெல்லாம் இல்லையா?

நான்: நாடகம் போடுவதற்கு உங்களுக்கு யார் முன்னோடி?

மோகன்: மௌலிதான். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது அவர் கல்லூரியில் நாடக போட்டிக்காக போட்ட ட்ராமா வை பார்த்து விட்டுதான் எனக்கும் ட்ராமா எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. ஹி இஸ் எ க்ரேட் ரைட்டர்.

நான்: உங்கள் நாடகங்களில் பிராமண பாஷைதானே பேசுகிறார்கள்?

மோகன்: அது ஆரம்பத்தில்.  நான் ஒரு பிராமினாக இருப்பதால் அந்த பாஷையில் எழுதுவது எனக்கு சுலபமாக இருந்தது. இப்போது குறைத்து விட்டோம்.

நான்: நகைச்சுவை நாடகங்களில் நடிப்பவர்களுக்கு நகைச்சவை உணர்வு இருக்க வேண்டியது அவசியமா?

மோகன்: இருந்தால் நன்றாக இருக்கும். நடிக்க நடிக்க அது வந்து விடும்.

நான்: உங்கள் செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா?

மோகன்: நிச்சயமாக இல்லை. வீட்டில் இருக்கும் பொழுது என் பையன்களை ஸ்கூலில் கொண்டு விடுவது, அழைத்துக் கொண்டு வருவது போன்றவற்றை செய்வேன். குடும்பத்தோடு நேரம் செலவழிப்பேன்.

நான்: மக்கள் சோகத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு  நகைச்சுவையை நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்று ஒரு பெண் எழுத்தாளர் கூறியிருக்கிறாரே?

மோகன்: அது அவரது தனிப்பட்ட கருத்து. நாம் இன்று வரை காதலிக்க நேரமில்லையை ஞாபகம் வைத்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

உண்மைதானே, கிரேஸி மோகனின் ஹியூமர் மறக்கக்கூடியதா என்ன? பல திரைப்படங்களில் அவருடைய நகைச்சுவை வசனங்களை ரசித்திருந்தாலும் நான் மிகவும் ரசித்தது தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'ஹியர் இஸ் கிரேஸி' என்னும் சீரியலைத்தான்.

அதில் இரண்டு மாது இரண்டு சீனு வருவார்கள். ஒரு சீனு மொட்டைத் தலையோடு இருப்பார். ஒரு காட்சியில் மாதுவிற்கும், மொட்டை சீனுவிற்கும் கிரேஸி மோகன் தியரி ஆஃப் ப்ராபபிலிடி பாடம் நடத்துவார்.

கிரேசி மோகன்: ப்ராபபிலிட்டி என்பதற்கு தமிழில் சான்ஸ், ஐயையோ, சந்தர்ப்பம். உதாரணமா, என்கிட்ட இருக்கும் இந்த எட்டணாவை சுண்டி விட்டால், பூவும் விழும், தலையும் விழும், சோ ப்ராபபிலிட்டி ரெண்டு

மொட்டை சீனு:  சார் ஒரு சந்தேகம்,

கிரேசி: சந்தேகமா, அடடா! அதுக்குள்ளயா? என்ன? கேளு

மொட்டை சீனு: இந்த ப்ராபபிலிட்டி உங்களோட அந்த எட்டணாவில்  மட்டும்தானா? எல்லா எட்டணா, நாலணா, பத்து பைசா, அஞ்சு பைசாவுக்கும் உண்டா?

கிரேசி: டேய் மொட்ட, உனக்கு போய் சந்தர்ப்பத்தை பற்றி பாடம் நடத்த வந்தேனே, என்னோட அசந்தர்ப்பம்டா.

இதைப்போன்ற வார்த்தை விளையாட்டு அவருக்கு கை வந்த கலை. பஞ்ச தந்திரத்தில் வரும் முன்னாடி பின்னாடி காமெடியை மறக்க முடியுமா?

அவர் நாடக எழுத்தாளர், நடிகர் மட்டுமல்ல. ஓவியம், வெண்பா எழுதுவதிலும் வல்லவராக இருந்திருக்கிறார். பாண்டிச்சேரி அன்னையிடமும் , சாய்பாபாவிடமும், பெருமாளிடமும் பக்தி பூண்டவர்.

ஹியர் இஸ் கிரேசி நாடகத்தில் இரண்டு மாது, இரண்டு சீனு என்று இரண்டிரண்டு கதா பாத்திரங்கள் வருவார்கள். அதை எழுதிக் கொண்டே போனவர் கடைசியில் அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பி விட்டாராம். எப்படி முடிப்பது என்று தெரியாமல் சுந்தரம் பஜனுக்கு சென்று விட்டு எழுத உட்கார்ந்தாராம். அந்த முடிவை நான் எழுதவே இல்லை, சாய் பாபாதான் எழுதினார் என்று அவர் கூறியதாக அவருடைய நண்பர் சீனு மோகன் கூறினார்.

திறமை வாய்ந்த ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.




















    .    

18 comments:

  1. // திறமை வாய்ந்த நல்ல மனிதர்.. //

    உண்மை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. பஞ்ச தந்திரத்தின் வெற்றிக்கு இவரது பங்கு முக்கியமானது.
    நல்ல மனிதரும்கூட...

    ReplyDelete
    Replies
    1. மைக்கேல் மதன காமராஜன் கூட. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. பாண்டிச்சேரி மாதரிடமும், சாய்பாபாவிடமும், பெருமாளிடமும் பக்தி பூண்டவர். அன்னை என்று சரி செய்துவிடுங்கள்

    ReplyDelete
  4. திருத்தி விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  5. ஹியர் இஸ் கிரேசி ஞாபகப்படுத்தி விட்டீர்கள். பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  6. அவரை நீங்கள் பேட்டி கண்டிருக்கிறீர்கள் என்பது சுவாரஸ்யம்.​ புகைப்படத்திலிருப்பது நீங்களா?

    ReplyDelete
    Replies
    1. பேட்டி சுவாரஸ்யமா? அதைச் சொல்லுங்கள். வருகைக்கு நன்றி.

      Delete
    2. //புகைப்படத்திலிருப்பது நீங்களா?//நான்தான், நானேதான். பின்னே, மண்டபத்தில் இருக்கும் யாரைவது அனுப்பி விட்டேன் என்று நினைத்தீர்களா? ஹாஹா

      Delete
  7. வணக்கம் சகோதரி

    வாஸ்தவந்தான்.. நல்ல மனிதரை இழந்து விட்டோம். நகைச்சுவைக்கென்றே பேர் போனவர். தாங்களும் அவருடனான சுவாரஸ்யமான பேட்டி குறித்து சொல்லியுள்ளீர்கள்.அவருடைய இயல்பான பேச்சிலேயே நகைச்சுவை மிளிர்கிறது. படத்திலிருந்து தாங்களா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. படத்திலிருப்பது நான்தான்.(உங்களுக்குமா அந்த சந்தேகம்?). கருத்துக்கு நன்றி.

      Delete
  8. நல்லதொரு மனிதரை இழந்து விட்டோம்.... இரண்டு மூன்று நாட்களாக அவரது நாடகங்களை பார்த்து/கேத்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  9. பானுக்கா நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!!! ஹையோ ஒவ்வொரு முறையும் நீங்க ஒரு ஆச்சரியத்தை வெளியிடறீங்க. பல பிரபலங்களை நீங்க சந்தித்திருக்கீங்க தொடர்பிலும் இருந்திருக்கீங்க...கிரேஸியை பேட்டி எடுத்தது வாவ்...செம அக்கா

    அதுல இருக்கறது நீங்கதானே...

    எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவையாளர். அழகான நகைச்சுவை அடித்து அடித்து பட் பட்டென விழும். ஒன்றைக் கேட்டு ரசித்து சிரிப்பதற்குள் அடுத்து வந்து விழும். எனக்கு நகைச்சுவைதான் மிகவும் பிடிக்குமா சிரித்துக் கொண்டே இருப்பேன். நேற்று கூட என் கஸின் பேசிய பொழுது க்ரேஸியின் வசனங்கள் பலதையும் சொல்லிசொல்லி நாங்கள் சிரித்தோம்...

    நிஜமாவே இட்ஸ் அ ஷாக்...எதிர்பாராதது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

      Delete
  10. ஆர் எஸ் மனோஹர் திருச்சி கொதிகலன் தொழிற்சாலைக்காக நாடகம்போட வந்திருந்தபோது அவரை பேட்டி கண்டது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  11. வாங்க, நீண்ட நாட்கள் கழித்து வருகை தருகிறீர்கள். நன்றி.

    ReplyDelete