கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 21, 2019

இலை அடை

இலை அடை 

தேவையான பொருள்கள்:

பச்சை அரிசி   -  1 1/2 ஆழாக்கு 
தேங்காய் துருவல் - மீடியம் சைஸ் தேங்காய் ஒன்றை 
                                       துருவியது 
வெல்லம்     -  தேங்காய் துருவல் அளவு 
ஏலக்காய் பொடி - சிறிதளவு 
நெய்                     - 1 டேபிள் ஸ்பூன் 
வாழை இலைகள்(must)

செய்முறை:

இதில் இரண்டு ப்ரிபரேஷன்கள் இருக்கின்றன. ஒன்று பேஸ் மாவு, இரண்டாவது பூரணம். பேஸ் மாவிற்கு அரிசியை ஊற வைத்து அரைக்க வேண்டும். எனவே பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரங்கள் ஊற வையுங்கள். அது ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் பூரணத்தை ரெடி பண்ணி விடலாம்.





தேங்காய் பூரணம் இரண்டு விதமாக செய்யலாம். சிலர் வெல்லத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,வெல்லம் கரைந்த பின் பின்னர் அதில் தேங்காயை சேர்த்து பூரணமாக கிளறுவார்கள். சிலர் தேங்காய், வெல்லம் இரண்டையும்  ஒன்றாக போட்டு கிளறி விடுவார்கள். நான் இரண்டாவது முறையை பின்பற்றுகிறவள்.  பூரணம் ரெடியானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய், கொஞ்சம் ஏலப்பொடி சேர்த்து கிளறி ஆற விடவும்.



அரிசி நன்றாக ஊறியதும், அதை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் கெட்டியாகவும்,நைஸாகவும் அரைத்துக் கொள்ளவும். இப்போது இங்கிரிடையேன்ட்ஸ் தயார். இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.






வாழை இலையை தண்ணீர் விட்டு துடைத்து, பின் அதில் அரைத்த அரிசி மாவை ஒரு சிறிய கரண்டி அல்லது பெரிய ஸ்பூனால் ஊற்றி, தோசை வார்ப்பது போல *வட்டமாக தேய்த்து, அதில் ஒரு ஓரத்தில் பூரணத்தை வைத்து, மறு பக்க இலையோடு சேர்த்து மடித்து மூடவும், மூடிய பக்கம் கீழே இருக்கும் வண்ணம் இட்லி தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும். ஒரு தட்டில் மூன்று அல்லது நான்கு இலை அடைகள் வைக்கலாம். நன்றாக வேக 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். சற்று சூடு ஆறியதும் இலையை உரித்தால், அழகான, சுவையான இலை அடைகள் தயார்.









* மாவை தேய்ப்பதில் கவனம் தேவை, மிகவும் மெலிதாகவும் இருக்கக்கூடாது, மிகவும் தடிமனாகவும் இருக்கக்கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். 

பின் குறிப்பு: இதில் தேங்காய் பூரணம்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. சக்கை விழுது என்னும் பலாப்பழ விழுதோடு தேங்காய் சேர்த்து அதையும் பூரணமாக வைத்து மூடலாம். ஊற வைத்த அவல், தேங்காய், வெல்லம், இவற்றோடு பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து  பூரணமாக செய்து, வைத்து மூடலாம். 

15 comments:

  1. நிறையச் சாப்பிட்டிருக்கோம். பெரும்பாலும் பலாப்பழம், தேங்காய், வெல்லம் சேர்த்த இலை அடையே சாப்பிட்டிருக்கேன். எங்களுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த/இருக்கும் பாலக்காட்டு மாமா/மாமி வீட்டுக் கல்யாணங்களில் முதல்நாள் மாலை டிஃபனில் தவறாமல் இடம் பெறும் இலை அடை. பருவ காலங்களைப் பொறுத்து உள்ளே வைக்கும் பூரணம் மாறும். பெரும்பாலும் பலாப்பழம் தான்!

    ReplyDelete
  2. எ.பியில் பார்த்தேன், அங்கே கருத்துச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் வருத்தம் தான். நல்லவேளையா இங்கே போட்டிருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அக்கா. எ.பி.க்கு வர முடியாதவர்களுக்காக இங்கே பகிர்ந்தேன்.

      Delete
  3. அருமை. இதுவரை நான் சுவைத்திராத பண்டம்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டுக்கு வரும்பொழுது உங்களுக்காக காத்திருக்கும். இப்போதைக்கு வெர்ச்சுவல் இல்லை அடை எடுத்துக் கொள்ளுங்கள்.

      Delete
  4. தலைநகரில் சில மலையாள நண்பர்கள் வீட்டில்/திருமணங்களில் சுவைத்ததுண்டு. எங்கள் பிளாக் பக்கத்திலும் படித்தேன் ரசித்தேன்.

    தொடரட்டும் பதிவுகள்....

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    இலை அடை செய்முறைகள், படங்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன. எ.பியில் பார்த்த போதே இதை செய்து சாப்பிடும் எண்ணம் வந்தது. இப்போதும் அந்த எண்ணம் வலுப்பெறுகிறது. ஆனாலும் நேரம் என்ற ஒன்று வர வேண்டுமே.! இந்த வாரத்திலேயே இரண்டாவது முறையாக இந்த சிற்றுண்டியை கண்களாலேயே சுவைக்க தந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. எங்கள் ப்ளாகில் வந்தபோதெ கருத்துஇடு இருக்கிறேன் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாகும்

    ReplyDelete
    Replies
    1. ஓ! அப்படியா? நான் பார்க்கவில்லை. எனிவே, வருகைக்கு நன்றி.

      Delete
  7. அருமை... இங்கு மலையாளி டீக்கடைகளில் விற்கிறார்கள். சில முறை சாப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  8. அருமையான குறிப்பு ,,எங்களுக்கு விருப்பமானதும்

    ReplyDelete