எண்ணச்சிதறல்
கல்வி சிறந்த தமிழ் நாடு என்பது பாரதியின் வாக்கு. பங்களூர் வந்த பிறகு அது உண்மைதானோ என்று தோன்றுகிறது. இங்கே புத்தகங்கள் தொங்கும் பொட்டி கடைகள் கண்களில் படவே இல்லை. இந்த ஊர்காரர்கள் புத்தகமே படிக்க மாட்டார்களா? பஸ் ஸ்டாண்டில் கூட புத்தகக் கடை இல்லை.
நம் ஊரில் இப்படியா இருக்கும்? எத்தனை பொட்டி கடைகள்? அவற்றில் எத்தனை புத்தகங்கள்? ஒரு திருமண ரிசப்ஷனில் பஞ்சு மிட்டாய், பாப்கார்ன்
இவைகளோடு பொட்டி கடையும் வைத்திருந்தார்கள். அதில் கூட பேப்பர், நக்கீரன், ஜுனியர் விகடன் போன்றவைகளை தொங்க விட்டிருந்தார்கள்.
பெங்களூர் வந்த புதிதில் புத்தகங்களை தேடி நான் அலைந்ததை ஒரு பதிவாக போட்டிருந்தேன். பிறகு புத்தக கடையை கண்டு பிடித்தேன் அதற்குள் வீட்டிலேயே ம.மலரும், குமுதம் சினேகிதியும் கொண்டு வந்து போட ஆள் கிடைத்தார். புது வீட்டில் பேப்பர் போடுகிறவர் தமிழ் புத்தகங்கள் கிடையாது என்று கூறி விட்டார். மீண்டும் தேடல். சப்ஸ்கிரிப்ஷன் கட்டி விடலாம் என்று தோன்றுகிறது.
புது வீடு வந்து ஒரு மாதமாகி விட்டது. சின்ன சின்னதாய் ஏதேதோ வேலைகள். இப்போதுதான் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தன. அதனாலோ என்னவோ, எதையும் கோர்வையாக சிந்திக்கக்கூட இயலவில்லை. எண்ணங்கள் சிதறுகின்றன(அப்பாடா டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணி விட்டேன்).
சென்ற வெள்ளியன்று இரவு அமசான் பிரைமில் எஸ்.ஜே. சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' படம் பார்த்தேன். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கும், வள்ளலாரின் தீவிர பக்தரான, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும், திருமணத்திற்கு பெண் தேடி எதுவும் தகையாத எஸ்.ஜெ.சூர்யா வாடகை வீட்டில் தண்ணீர் கஷ்டத்திலும் தவிக்கிறார். சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட்டால் வீட்டு ஓனரின் தொந்தரவிலிருந்தும் தப்பிக்கலாம், பெண் கிடைத்தாலும் கிடைக்கும் என்று நண்பன் கருணாகரன் ஆலோசனை கூற ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி, கொஞ்ச காலம் சந்தோஷமாக இருக்கிறார். அழையா விருந்தாளியாக அங்கு குடியேறும் ஒரு எலி அவரை ஆட்டி வைப்பதுதான் கதை.
சும்மா சொல்லக்கூடாது எஸ்.ஜே. சூர்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவர் நண்பனாக வரும் கருணாகரன், கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவருமே தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். பிரியா பவானி சங்கரை சீரியலிலும், ஒரு சில விளம்பரங்களிலும் பார்த்திருக்கலாம். அழகான, திறமையான நடிகை. ஆனால் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிப்பாரா என்று தெரியவில்லை. படம் முழுவதும் புடவையும், சூடிதாரும் மட்டுமே அணிந்து வருகிறார். நோ கவர்ச்சி. எஸ்.ஜே.சூர்யாவோடு நடித்தும், கடைசி காட்சியில் கையை கோர்த்துக் கொள்வதைத் தவிர தொடாமல் நடித்திருக்கிறார்!!. இவையெல்லாம் போணி ஆகுமா? இப்போதைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக கதைகளை யோசிப்பதும் அதை திறம்பட எடுப்பதும் சந்தோஷமான விஷயம்.
சாய் சங்கரா மேட்ரிமோனியல் சர்வீஸுக்கான விளம்பரத்தில் ரிஜிஸ்டர் செய்யும் மணமகனின் குறைந்த பட்ச வருமானம் ரூ.30000/- என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் தன் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டார். இதுவரை இப்படிப்பட்ட ஒரு வீராவேசமான பட்ஜெட் உரையை கேட்டதில்லை. பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை நிபுணர்கள் அலசட்டும். நான் விடை பெறுகிறேன். பிறகு சந்திக்கலாம்.
அருமையான எண்ணச் சிதறல்கள். சினிமாப் பார்க்கவும் நேரம் வேண்டுமே! நேரத்தை உங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கட்டுப்படுத்தி இருக்கீங்க போல! அமேசான் பிரைமில் எல்லாம் திரைப்படம் பார்க்கப் பணம் கட்ட வேண்டாமா? இது பற்றிய அறிவு எனக்குக் கிடையாது! அங்கெல்லாம் போனதே இல்லை! :)))))
ReplyDeleteநேரத்தை கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளவில்லை, வீக் எண்டில் இரவில் படம் பார்த்து விட்டு காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்து கொள்வேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteகீதாமா அமேசான் ப்ரைம் ,பணம் கட்டிவிட்டால் நிறைய படங்கள் நம் டிவியில் பார்க்கலாம்.
ReplyDeleteஅன்பு பானுமா, நானும் பெங்களூரில் இருந்த போது, சிரமப்பட்டிருக்கிறேன்.
பிறகு தமிழ்க்கடை ஒன்று கமர்ஷியல் ஸ்ட்ரீடில் கண்டு பிடித்தேன்.
இப்பவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
எல்லாம் செட்டிலாகிவிடும் என்று நம்புகிறேன்.
//எல்லாம் செட்டிலாகிவிடும் என்று நம்புகிறேன்.//உங்கள் வார்த்தை தெம்பூட்டுகிறது. நன்றி.
Delete//புது வீடு வந்து ஒரு மாதமாகி விட்டது. சின்ன சின்னதாய் ஏதேதோ வேலைகள். இப்போதுதான் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தன.//
ReplyDelete..... என்று நினைக்கிறீர்களா? அது ஒரு தொடர்கதை!
அது என்னவோ உண்மைதான்.
Deleteமான்ஸ்டர் நன்றாய் இருக்கிறது என்று நீங்கள் சொல்லியிருப்பது ஆச்சர்யம். என்னால் பொறுமையாகப் பார்க்க முடியவில்லை! வெள்ளைப்பூக்கள் கூட தேவலாம்.அயோக்கியாவும் அப்படியே. ஒரே ஒரு காட்சிமட்டும் அயோக்யாவில் ரசித்தேன். ஈஸ்ட் ஆர் வெஸ்ட் ப்ரெண்ட்ஷிப் இஸ் பெஸ்ட் என்று எஸ் எம் எஸ் அனுப்பும் தொடர்க்கட்சிகள்!
ReplyDeleteமான்ஸ்டர் வீட்டில் பார்க்கலாம்.
Deleteநான் MEG MI ராம்பேஜ் பிளைட் 192 மாயவன் போன்ற படங்கள் பரவாயில்லை.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களை பார்க்க முயற்ச்சிக்கிறேன். வருகைக்கு நன்றி.
Deleteநேற்றும் இன்றும் லூசிஃபர் பார்த்தேன். நன்றாக இருந்தது.
Deleteலூசிஃபெர் நல்ல மூவி ஸ்ரீராம் நீங்க சொன்ன போதே எனக்குப் புகை...இதுவும் மச்சினரிடம் சொல்லி வைத்துவிட்டேன் ஹிஹிஹி...ஹையோ அடுத்து எப்ப சென்னை ட்ரிப்னு தெரியலையே வைரவா!! நிறைய படங்கள் புக் செஞ்சு வைச்சுருக்கேன் அங்கு!!!
Deleteகீதா
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்.. - என்றாகட்டும்..
ReplyDeleteமுருகன் திருவருள்
முன்னின்று காக்க!..
நன்றி.
Deleteநக்கீரன், ஜூனியர் வி.... விற்பனைக்கு நம்ம வீட்டு விசேஷமா!?...
ReplyDeleteஇப்போது திருமணங்களில் நடக்கும் கூத்துகளில் இதுவும் ஒன்று.
Deleteகூடிய சீக்கிரமே
ReplyDeleteவேறொன்றுக்கும் அரங்கம் போட்டு விடும் சூழ்நிலை வரப்போகிறது...
அதையும் நியாயப்படுத்துவார்கள்..
அதேதான். எதுவும் நடக்கும்.
Deleteபுது வீடு என்ன பெங்களூரிலா?..
ReplyDeleteநக்கீரன், ஜூனியர் விகடன் என்று ஆரம்பித்ததும் ஏதோ பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தால், கடைசியில் சினிமா சமாச்சாரமா?.. நமக்கும் அதற்கும் காத தூரம். அதனால் ஜூட்.
ஆம், பெங்களூரில்தான். நக்கீரன், ஜூ.வி. இவையெல்லாம் படித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. வருகைக்கு நன்றி.
Deleteஎண்ணச்சிதறல்கள் அருமை!
ReplyDeleteநன்றி மனோ அக்கா.
ReplyDeleteமான்ஸ்டர் - தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும்...!
ReplyDeleteபாருங்கள், ஒரு வித்தியாசமான முயற்சி.
Deleteஎன் பின்னூட்டம் காணலையே...
ReplyDeleteஅங்கு ஜெயநகர் 4ம் பிளாக், 9ம் பிளாக் போன்ற இடங்களில் பத்திரிகைக் கடைகளைப் பார்த்திருக்கிறேன், வாங்கியிருக்கிறேனே
நக்கீரன், ஜூவி படிக்காததால் நீங்கள் எதையும் இழந்துவிடவில்லை... பொய்களை சுவாரசியமா உண்மை என்று நினைத்துப் படிக்கும் உணர்வைத் தவிர
ஜெயநகர் எங்கே? எலக்ட்ரானிக் சிட்டி எஙகே? ஆங்காங்கே இருக்கின்றன. நம் ஊர் அளவுக்கு இல்லை.
Deleteப்ரைம் வீடியோவில் நான் முதன் முதலில் 2.0 (ரஜினி நடித்ததுதான்..எந்திரன் பார்ட் 2), பார்த்து (over a period of 4 days, each time 15-30 minutes) பார்த்து நொந்துவிட்டேன். அதன் பிறகு படமே பார்க்கலை...ஹாஹா
ReplyDeleteஎனக்கென்னவோ திரைப்படங்களை ஒரே ஸ்டெர்ச்சில் பார்க்கத்தான் பிடிக்கும். அதனால்தான் பெரும்பாலும் இரவில் பார்ப்பேன். பெங்களூர் டேஸ் படத்தை இண்டர்வெல் வரை மலையாளத்தில் பார்த்தேன். மறுநாள் பார்க்கலாம் என்றால் கூகுள் அதற்கான காலம் முடிந்து விட்டது என்றது. வேறு வழியில்லாமல் மிச்ச படத்தை தமிழில் பார்த்து தொலைத்தேன்.
Deleteவருகைக்கு நன்றி நெ.த.
Deleteஅமேசானில் படங்களை நிறுத்திய இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் தொடர்ந்து பார்க்க முடிகிறது. விட்ட இடத்திலிருந்து சரியாகத் தொடங்கும். 2.0 searching, டார்ஜான், பொசஷன் ஆப் ஹானா கிரேஸ் ஈக்வலைசர் போன்ற பாடங்கள் ஆரம்பித்து தொடர போர் அடித்து நிறுத்திய படங்கள்!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஎண்ணச் சிதறல்கள் அருமை. கல்யாண வீடுகளில் பஞ்சு மிட்டாய் ஆச்சரியம் அளித்தது. இப்போது புத்தகம் கடை வேறா? அன்று ஒருநாள்தான் உறவுகள் கூடி நேரடியாக பார்த்து பழையன,புதியனவென மனம் விட்டு பேசிக் கொள்ள முடியும். பாக்கி நாட்களெல்லாம் வாட்ச்அப், ஸ்கைப் என கைக்குள் வைத்துப் பார்த்து அகன்று விடுகிறார்கள். கல்யாண சாப்பாடு சாப்பிட்டு விட்டால் கை துடைத்துக் கொள்வது அவரவர் வீட்டில் என்றாகி விட்ட இன்றைய காலத்தில், அன்றும் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் மனித புத்தகங்களை, அவர்கள் வாழ்வின் பக்கங்களை எப்படி புரட்டுவது?
படம் நன்றாக உள்ளதா? பார்த்து ரசித்தமைக்கு மகிழ்ச்சி. படமெல்லாம் மகன்கள் பார்க்கும் சமயம் சிறிது எட்டிப் பார்ப்பேன். முழுதாக அமர்ந்து பார்த்ததில்லை இங்கு அனைவரும் குறிப்பிட்டிருக்கும் சினிமா பெயர்களே நான் கேள்விப்படாததாக உள்ளது.
மணமகனின் குணாதியசத்தை விட சம்பளம் கண்ணுக்கு நிறைவாய் இருக்கத்தான் ரொம்ப காலமாய் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
திருமண வீட்டில் பொட்டி கடை ஒரு செட் அப்தான். வெகு சிலர் வாங்கிய பேப்பரையும், புத்தகத்தையும் ஃபங்ஷன் முடிந்த பிறகும் அறைக்கு எடுத்துச்சென்று படித்தனர்.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteபானுக்கா வீட்டைக் கட்டிப்பார் என்பதை விட அதற்குள் நுழைந்து சாமான் வைத்து நிமிரும் போது ஏதேனும் ஒரு இண்டு இடுக்கு என்னைக் கவனி என்று நம்மப் பார்த்துக் கெஞ்சும். என் அனுபவம் வயரிங்க், டாய்லெட் பைப்புகள்...ஏதேனும் கதவுகள்...என்று சின்ன சின்னதாய் வேலை வைத்துக் கொண்டே இருக்கும்...ஹிஹிஹி
ReplyDeleteஎப்படியோ கொஞ்சம் நேரம் கிடைத்து ஒரு பதிவு தேத்திட்டீங்களே!! சூப்பர்.
படம் நல்லாருக்கும் போல...மீக்கு எப்போது வாய்ப்பு கிடைக்குமோ அடுத்து சென்னை ட்ரிப் போறப்ப தான்...மச்சினரிடம் இப்பவே இப்படம் பற்றிச் சொல்லி இடம் போட்டுக் கொள்ள வேண்டும் ஹா ஹா ஹா...
கீதா
//வயரிங்க், டாய்லெட் பைப்புகள்...ஏதேனும் கதவுகள்...என்று சின்ன சின்னதாய் வேலை வைத்துக் கொண்டே இருக்கும்// உண்மைதான். புது சிம்னி அதற்குள் ஏதோ கோளாறு. வருகைக்கு நன்றி கீதா.
Deleteபானுக்கா எலக்ட்ரானிக் சிட்டில நிறைய நம்மூர் மக்கள் இருப்பாங்களே கண்டிப்பா தமிழ்ப் பத்திரிகைகள் கிடைக்கும்.
ReplyDeleteஎல்லாம் நல்லதே நடக்கும்!!
கீதா
நல்ல வார்த்தை கூறியதற்கு நன்றி கீதா.
ReplyDelete