மசாலா சாட் - 14
அதன் பிறகு சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் தன் 'வெண்டைக்காய் பிட்லை' பதிவில் காத்திருப்பதை பற்றி எழுதியிருந்த விஷயம் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது.
காத்திருத்தலோடு மிகவும் சம்பந்தப்பட்டது காதல். காதலைப் பற்றி பாடியவர்கள் எல்லோரும் காத்திருத்தலைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள் பாரதி உட்பட. பாலகுமாரனின்
உனக்கென்ன சாமி, பூதம்
கோவில் பூஜை
ஆயிரம் ஆயிரம்
வலப்பக்கத்து மணலை
இடப்பக்கம் இரைத்திரைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே!
நாளையேனும் மறக்காமல் வா
என்னும் புதுக்கவிதை பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று.
இந்த அவஸ்தை எல்லாம் வேண்டாம் என்று துறவறம் பூண்ட ஒருவர் உண்டு. அவர் இளைஞராக இருந்த பொழுது ஒரு நாள் தன் அம்மாவிடம்,"பசிக்கிறது அம்மா, சாதம் போடு" என்றார். அவர் அம்மா," இப்பொழுதுதான் சாதத்தை வடித்து இறக்கியிருக்கிறேன், சாதம் உலைப்புர வேண்டும்,ஒரு பத்து நிமிடம் காத்திரு" என்கிறாள். இந்த வார்த்தைகள் அவருள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. " எனக்கு இப்போது பசிக்கிறது, சாப்பிட வேண்டும், ஆனால் அம்மாவோ பத்து நிமிடம் காத்திரு என்கிறாள், நான் இந்த லோகாயுத வாழ்க்கையில் தொடர்ந்து இருந்தேன் என்றால் எத்தனை விஷயங்களுக்கு எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?" என்று நினைத்த அவர் வீட்டை துறந்து சென்று விடுகிறார். அவர்தான் சதாசிவ ப்ருமேந்திரர் ஆக பரிணமித்தார் .
நம்முடைய புராணத்தில் காத்திருப்பிற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
கடோபநிஷத் பிறந்ததே இந்த காத்திருப்பால்தானே? ஒரு ரிஷி குமாரனாக பிறந்த நசிகேதஸ் தன்னுடைய தந்தை அவர் செய்த யாகத்தில் பால் வற்றிய பசு போன்ற உபயோகம் அற்ற பொருள்களை தானம் செய்வதை பார்த்து, அவரிடம், "எதற்காக இந்த தானங்கள்?" என்று கேட்கிறான். அவர் "நாம் வேண்டியதைப் பெற" என்கிறார். என்னை யாருக்கு தானம் கொடுக்கப் போகிறீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் கேட்கிறான். எரிச்சல் அடைந்த அவர்,"உன்னை எமனுக்கு தானம் கொடுக்கிறேன்" என்று கூறி விடுகிறார். நசிகேதஸ் அவர் தந்தையை வற்புறுத்தி தன்னை எமனுக்கு தானம் கொடுக்கச் செய்கிறான். அவனுடைய தந்தை அப்படியே செய்ய, அவன் எமலோகம் சேர்ந்து விடுகிறான். அவனுடைய ஆயுள் முடியாததால், அவனை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றனர். அவனோ,தான் எமனை காணாமல் போக மாட்டேன் என்று எமனுடைய அரண்மனை வாசலிலேயே காத்திருக்கிறான். மூன்று நாட்கள் காத்திருந்த பின்னரே எமனுக்கு இந்த விஷயம் தெரிகிறது. ஒரு அந்தணச் சிறுவனை மூன்று நாட்கள் காக்க வைத்து விட்டோமே என்று பதறி ஓடி வரும் எமதர்ம ராஜா அவனுக்கு மூன்று வரங்கள் தர முன் வருகிறான். ஆனால் நசிகேதஸோ, இக லோக சுகங்களைத்தாண்டி ஆன்மா என்பது என்ன? மரணம் என்றால் என்ன? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே ஆர்வம் காட்டி அதை தெரிந்து கொள்கிறான். எமன் நசிகேதஸுக்கு செய்த உபதேசங்களே கடோபநிஷத் ஆகும்.
காத்திருந்து பயனடைந்த இரண்டு ராமாயண கதா பாத்திரங்கள் அகலிகையும், சபரியும். அகலிகையாவது தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறாள். சபரிக்கோ ராமன் யார் என்று தெரியாது, தன்னுடைய குருவின் வாக்கை நம்பி ராமன் ஒரு நாள் நிச்சயம் வருவான் என்று காத்திருந்த அவளுடைய குரு பக்தியும், அசையாத நம்பிக்கையும் காத்திருத்தல் என்பதற்கு முழுமையாக நியாயம் செய்கின்றன.
இதற்கு மாறாக தன் கணவனால் தன்னிடம் அளிக்கப்பட்ட முட்டை பொரியும் வரை காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு அதை உடைத்து விடுகிறாள் காஷ்யபரின் மனைவி வினதை. அதனால் அதிலிருந்து வெளி வந்த அருணன்(சூரிய பகவானின் தேரோட்டி) என்னும் பறவை ஊனமாக பிறக்கிறது. தன் தாயாரின் அவசர புத்தியே இதற்கு காரணம் என்று கோபம் கொண்ட அருணன் அடிமையாக போகும்படி தன் தாயை சபிக்கிறார். அதன் விளைவாகவே காஷ்யபரின் மற்றொரு மனைவியாகிய கத்ருவுக்கு அடிமையாகிறாள் வினதை.
சிவன் கோவில்களில் சிவ பெருமானுக்கு முன் அமர்ந்திருக்கும் நந்தி கூட காத்திருப்பதைத்தான் குறிக்கிறது என்பார்கள். ஜீவாத்மாவைக் குறிக்கும் நந்தி பரமாத்மாவோடு ஒன்றும் நோக்கத்தோடு ஒருமுகப்பட்ட சிந்தனையோடு காத்திருப்பதாக சொல்வதுண்டு.
நம் புராணங்களில் தவம் புரிபவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் புரிந்தார்கள் என்று வருவது கூட, ஒரு நல்ல விஷயத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறதோ?
இவை அத்தனையையும் சொல்லிவிட்டு 'THEY ALSO SERVE WHO STAND AND WAIT' என்னும் பாரடைஸ் லாஸ்டில் வரும் மில்டனின் புகழ் பெற்ற வாசகத்தை சொல்லாவிட்டால் இந்த பதிவு முடிவு பெறாது.
காத்திருந்தேன், காத்திருந்தேன், காலமெல்லாம் காத்திருந்தேன், காத்திருந்த காலமெல்லாம் கதையாய்ப் போனதம்மா! என்று ஒரு பாடல் இருக்கோ? இருக்குனு ஒரு எண்ணம். நல்லாக் காத்திருந்து இந்தப் பதிவைப் போட்டிருக்கீங்க!
ReplyDeleteநோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 14 மினிட்ஸ் எனக் காட்டிச்சுதா.. ஹீல்ஸ் ஐக் கழட்டி எறிஞ்சுபோட்டு ஓடிவந்தேன்ன்ன்:)) அதுக்குள் எப்பூடி கீசாக்கா வந்தா?:))
Deleteஅப்படி இல்லை கீசாக்கா..
Deleteகாத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதடி
பார்த்திருந்து பார்த்திருந்து பூவிழி நோகுதடி.. இப்படித்தான் பாட்டு இருக்கு.
காத்திருப்பதை வைத்து நிறைய பாடல்கள் சொல்ல முடியும்.
Deleteஆமாம், காத்திருத்தலைப் பற்றி நிறைய பாடல்கள் இருக்கின்றன. கடவுள் அருளுக்காக காத்திருப்பதை பற்றி கூட பாடல்கள் உண்டு. "எத்தனை நாள் பொறுப்பேன்?,முருகா உன் எழில் முகம் காணாமல் ஏங்கித் தவிக்கும் நான்?.."
Deleteநம்ம அப்பாதுரையைத் தெரியும் இல்லையா? அவர் இந்த நசிகேதஸுக்குக் கிடைத்த உபதேசங்களின் மொழிபெயர்ப்பை எழுதி இருக்கார். அற்புதமான பதிவுகள். எனக்குத் தெரிந்தவரை அவருடைய இந்தப்பதிவுகள் தான் மாஸ்டர் பீஸ் என்பேன்.
ReplyDeletehttp://nasivenba.blogspot.com/2010/11/blog-post_13.html
அவ்வப்போது போய்ப்பார்த்துச் சில விஷயங்களுக்குத் தெளிவு கண்டு அறிந்து கொள்வேன்.
http://nasivenba.blogspot.com/2010/11/blog-post_15.html
அப்பாதுரையா? அவர் ஸ்கெப்டிக் இல்லையா?
Delete//இதைத்தவிர வேறு என்ன லாபம்? என்று யாராவது கூறுங்களேன்.//
ReplyDeleteஇது என்ன புதுக்கதை இது? நான் மோடி அங்கிளுக்கு அம்னுக் கொடுக்கப் போறேன் இதை எல்லாம் நிறுத்தச் சொல்லி:))
அந்த கடிதத்தில் நானும் கையெழுத்து போடுகிறேன். ஆனால் நீங்கள் அனுப்ப வேண்டியது எடப்பாடி அவர்களுக்கு.
Delete//நான் இந்த லோகாயுத வாழ்க்கையில் தொடர்ந்து இருந்தேன் என்றால் எத்தனை விஷயங்களுக்கு எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?" என்று நினைத்த அவர் வீட்டை துறந்து சென்று விடுகிறார்.//
ReplyDeleteஇதெப்படி சரியாகும்? பொறுமை அவசியம் என்கின்றனர், அப்போ காத்திருப்பதென்பதும் பொறுமைதானே.. காத்திருந்தால்தானே எதையும் சாதிக்கலாம்.
காத்திருப்பு பற்றி அழகிய அலசல்...
ஆனா உண்மையில் காத்திருப்பதைப்போன்ற ஒரு கொடிய பனிஸ்மெண்ட் வேறேதும் இருக்காது ஹா ஹா ஹா.
சிலரை வீட்டுக்கு அழைச்சால்.. 3 மணிக்கு வாங்கோ என்றால்.. தட்டித்தடவி 6 மணிக்கு வந்து சேருவார்கள் ஹையோ ஹையோ.
எங்களுக்கு நேரத்தில மட்டும்... தவறுவது பிடிக்கவே பிடிக்காது.
//இதெப்படி சரியாகும்?// இது ஒரு நிலை அதிரா. நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு புரிவது கொஞ்சம் கடினம்.
Deleteகீழே கில்லர்ஜிக்கு கீதா அக்கா கொடுத்துள்ள பதிலில் இதற்கு விடை இருக்கிறது.
காத்திருத்தலை வைத்து மிக அழகான பதிவு ஒன்று தயார் செய்து விட்டீர்கள். மிகவும் ரசிக்கும்படியிருக்கிறது பதிவு. பல தளங்களிலும் யோசிப்பவர் நீங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பதிவு.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பதிவு. இந்த மசாலா சாட்டும் சுவையாக இருக்கிறது. முதல் பதிவு எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
இரண்டாவது விஷயங்களை நன்கு கிரஹித்து உள் வாங்குபடியாகவும், அதற்கு புராணங்களில் பல காத்திருத்தல் உதாரணங்களை காட்டியும் மிக அழகாகவும் எழுதியுள்ளீர்கள். இது தங்களின் எழுத்து திறமையை பறைசாற்றுகிறது. தங்களின் அழகான எழுத்தின் சிறப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். காத்திருந்த கதைகளை படித்து தெரிந்து கொண்டேன். புதுக்கவிதையும் எப்போதோ படித்ததாக நினைவு. என்னையும் பதிவில் குறிப்பிட்டமைக்கு பணிவான நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
Deleteஆக்கப் பொருத்தவர் ஆறப் பொருக்க முடியாமல் அப்படி என்னதான் சாதித்து விட்டார் இந்த சதாசிவ ப்ருமேந்திரர் ?
ReplyDeleteபிரம்மத்தை அடைந்தார். சாதாரண மனிதனாக இருந்தவர் நிர்குணபரபிரம்மம் ஆனார். மஹாராஜாவானாலும் சரி, ஆங்கிலேயக் கலெக்டரானாலும் சரி அவரைக் கண்டால் மரியாதை செய்யும்படியான நிலைக்கு உயர்ந்தார். பெரிய விஷயத்துக்காகக் காத்திருக்க வேண்டி இருக்க, இந்தச் சோற்றுக்காகக் காத்திருக்கும்படி ஆகிவிட்டதே என்று நினைத்தே வீட்டை விட்டுச் சென்றார். அவருடைய ஜீவசமாதி கரூருக்கு அருகே உள்ள நெரூர் என்னும் ஊரிலும் மானாமதுரையிலும், பாகிஸ்தானின் கராச்சியிலும் உள்ளது. இவர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு மண்ணில் எழுதிக் கொடுத்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இன்றும் புதுக்கோட்டை அரசரின் அரண்மனை பூஜை அறையில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் புவனேஸ்வரி மந்திரம் எனவும் சொல்லுகின்றனர். தஞ்சைப் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், தேனி,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரூர் கல்யாண வெங்கடேஸப் பெருமாள், திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில் மஹா கணபதி யந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்னு எவ்வளவோ சொல்லலாம்.
Deleteகில்லர்ஜியின் சந்தேகத்திற்கு எப்படி பதில் அளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மிக அழகாக பதில் அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
Deleteநல்ல விளக்கங்கள்...
ReplyDeleteகாலமறிதல் அதிகாரத்தில் உள்ள குறள்கள் ஞாபகம் வந்தது...
நன்றி டி.டி.
Deleteகாத்திருத்தல் பற்றி மிக அழகான பதிவு. சாதாரணமான விஷயங்களிலிருந்து [ காதலும் பாலகுமாரனின் கவிதையும் ] திடீரென்று உயரே போய் உயர்ந்த விஷயங்களுக்கு [ ராமயணத்து சபரியும் சிவன் கோவில் நந்தியும் ]சென்று விட்டீர்கள்.மிக அருமை!
ReplyDeleteநன்றி மனோஜி.
Deleteஅதிரா! சகோதரி கீதா சாம்பசிவம் எழுதியது எங்கள் காலப்பாட்டு. கைராசி என்ற படத்தில் சுசீலா பாடி சரோஜாதேவி நடித்திருப்பார். நீங்கள் எழுதிய பாடல் இளையராஜா இசையமைத்த ' வைதேகி காத்திருந்தாள்' படத்தில் ஜெயச்சந்திரன் பாடி விஜயகாந்த் நடிப்பது!
ReplyDeleteகாத்திருப்பு...
ReplyDeleteஎன்ன மாதிரியான சம்பவங்கள்....
ஒவ்வொன்றும் அற்புதம்... காத்திருந்தோர் வரிசையில் அனுமனையும் கொள்ளலாமா!!..
அவரும் ராமனுக்காகக் காத்திருந்தார் தானே...
வாங்க துரை சார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.
Deleteஹனுமனுக்காக ராமனும் காத்திருந்தானே, சீதையைப்பார்த்து விட்டு வரவும், பரதனை பார்த்து விட்டு வரவும், சஞ்சீவினி மூலிகை கொண்டு வரவும், ராமேஸ்வரத்தில் ப்ரதீஷ்டை செய்ய லிங்கம் கொண்டு வரவும். ஹனுமத் ஜெயந்தி அன்று உங்களால் ஹனுமனை நினைத்துக் கொண்டேன். நன்றி.
ஹாய் பானுக்கா எங்கேயோ உங்க வாழ்த்துக்களை பார்த்தேன் அது எங்கேன்னு தெரில :) ஆகவே இங்கே தாங்க்ஸ் சொல்லிக்கறேன் :)
ReplyDeleteஆனா அக்காலத்து ரிஷிஸ் முனிஸ் சும்மா கோபாக்காரங்களா இருப்பாங்களோ எல்லாத்துக்கும் சாபமா கொடுத்திட்டாங்க :)உங்க பதிவை படிச்சதும் எமதர்மராஜாமேல் ஒரு soft corner உருவாகுது எனக்கு ஹாஹாஹா :) குட்டி சிறுவனுக்காக ஓடினத்தை கற்பனையில் பார்த்தேன்
//சும்மா கோபாக்காரங்களா இருப்பாங்களோ எல்லாத்துக்கும் சாபமா கொடுத்திட்டாங்க// அப்படியெல்லாம் கிடையாது ஏஞ்சல். முனிவர்களும், ரிஷிகளும் அவர்கள் வாழ்நாளில் கோபம் கொண்டு சபித்ததை மட்டும் கதையாக சொல்லியிருப்பதால் நமக்கு அப்படி தோன்றுகிறது.
ReplyDeleteஎமனை எமதர்மராஜா என்பது வழக்கம். ஆயுள் முடிவதற்கு முன் யாருடைய உயிரையும் எடுக்க மாட்டார். நேரம் வந்து விட்டால் விட்டு வைக்கவும் மாட்டார். நேரத்தை அவரைப்போல நிர்வகிப்பவர் கிடையாது. வருகைக்கு நன்றி ஏஞ்சல்.
ReplyDeleteமிக அருமை ...
ReplyDeleteகாத்திருப்பு பற்றிய பல கதைகளின் ஊடே பல செய்திகள் ...வித்தியாச சிந்தனைகள் மா..
வியந்தேன் ..
நன்றி அனு.
Deleteபொறுமையுடன் காத்திருந்தால் பெரிய வரம் பெறலாம்.
ReplyDeleteஉண்மைதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteகாத்திருப்பு அலசலில் நல்ல செய்திகள் பல பகிர்ந்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteகாத்திருப்பு சில நேரம் சுகம், சிலநேரம் இம்சை, சில நேரம் நல்ல பரிசு.
பொறுமை, நம்பிக்கை இரண்டும் இருந்தால் எல்லாவற்றையும் அடையலாம் எங்கிறார்கள்.
காத்திருக்க பொறுமை அவசியம் அதை ஆண்டவன் கொடுப்பார் என நம்புவோம்.
அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.
ReplyDeleteசிறப்பான பதிவு. காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
ReplyDeleteஎன் பக்கத்தில் வந்த பதிவு பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி பானும்மா... சில தினங்கள் கொண்டாடப்பட்டாலும் தேவை இல்லை என்பதை நானும் ஆதரிக்கிறேன்.