கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, May 31, 2020

சில கோவிட்-19 கற்பனைகள்

சில கோவிட்-19 கற்பனைகள் 

இந்த வருடம் நாம் பண்டிகைகளை எப்படி கொண்டாடப் போகிறோம் என்று தெரியவில்லை. கோகுலாஷ்டமி அன்று குட்டி கண்ணனை வரவேற்க முறுக்கு,சீடை, அப்பம், என்று பட்சணங்கள் செய்து வைத்து விட்டு கூடவே சானிடைசரும் வைக்க வேண்டுமோ? 

நவராத்திரியின் பொழுது தினமுமே வீட்டிற்கு வருகிறவர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுக்கும் பழக்கம் மாறி, வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ அழைப்பு அனுப்பி வெற்றிலை பாக்கு தரும் வழக்கம் வந்து விட்டது. இந்த வருடம் அதிலும் சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் செய்வதற்காக நேரமும் குறிப்பிடப்படுமோ? அதிலும் நவராத்திரி கிஃப்ட்டை ஒரு பையில் போட்டு ஒரு கழியில் மாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்வார்களோ?

தீபாவளிக்கு டிரஸ் வாங்கும் பொழுது கண்டிப்பாக மேட்சிங்காக மாஸ்க்கும் வாங்கப்படும். 

மார்கழியில் கோலம் போடும்பொழுது சிலர் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வார்கள். அதோடு சேர்ந்து மாஸ்க்கும் அணிந்து கொண்டால் கொஞ்சம் பயமுறுத்துவது போலத்தான் இருக்கும். 

போகி அன்று கொரோனாவை கொளுத்தி விட்டு, புத்தாண்டை புது மலர்ச்சியோடு வரவேற்கலாம். 

*கொரோனவை கொளுத்தி விட்டு என்றதும் வட கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் நடந்திருக்கும் ஒரு வினோதமான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எப்போதெல்லாம் ஊரில் உயிர்கொல்லி வியாதிகள் பரவுகிறதோ அப்போதெல்லாம் அந்த வியாதியையே ஒரு பெண் தெய்வமாக பாவித்து, வேப்பிலைகளால் அலங்கரித்து, பூஜித்து, இனிப்புகள் படைத்து எங்கள் ஊரை விட்டு வெளியேறு என்று வேண்டி, ஊரின் எல்லையில் கொண்டு விட்டு விடுவார்களாம். இதற்கு முன்னால் சிக்கன் குனியா வந்து பொழுதும் இப்படி செய்தார்களாம். இப்போது கொரோனமாவுக்கு(பெயரை கவனியுங்கள்) இந்த பூசை நடந்திருக்கிறது.   


கொரோனாவால் வியாபாரம் படுத்து விட்டது, வியாபாரிகளுக்கு நஷ்டம் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். டாபர் கம்பெனி மட்டும் இதற்கு விதிவிலக்கு. கடந்த இரண்டு மாதங்களில் இதன் தயாரிப்பான தேன், மற்றும் ஸ்யவனபிராஷ் லேகியம் நிறைய விற்றிருப்பதால் டாபர் கம்பெனி லாபம் ஈட்டியிருக்கிறதாம்.  பலருக்கு துன்பம், சிலருக்கு இன்பம். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
சில கோவிட்-19 ஜோக்குகள்:

முதலாமவர்: என்னது லேப்டாப் சர்வீஸ் பண்ண போனவனை குவாரண்டைன்னுக்கு அனுப்பி விட்டார்களா?

இரண்டாமவர்:ஆமாம், எங்கே போற என்று கேட்ட போலீசிடம், வைரஸ் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான், முழுமையாக கேட்காமல் குவாரன்டைனுக்கு அனுப்பி விட்டார்கள். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
மணப்பெண்ணின் அப்பா: என்ன ஐயரே, தாலிக் கயிறா? தாம்புக் கயிறா?  இவ்வளவு நீளமா வாங்கியிருக்கீங்க?

ஐயர்: நாத்தனார் தாலி முடியும் பொழுது சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் பண்ண வேண்டாமா? அதுக்குத்தான் 

வாய் விட்டு சிரியுங்கள் நோய் விட்டுப் போகட்டும். 


* நன்றி Times of India




41 comments:

  1. நகைச்சுவைத் துணுக்குகள் ஒருபுறம் இருந்தாலும் -

    பதிவில் சொல்லப்பட்டிருக்கும்
    விஷயங்கள் சிந்திக்க வைப்பவை...

    நலம் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நலமா? உடல் நலம் தேறி விட்டீர்களா?

      Delete
    2. தங்கள் அன்பினுக்கு நன்றி..

      ஜூரமும் அதன் கஷ்டங்களும் நீங்கியிருக்கின்றன... ஆனாலும் அதன் தொடர்பான சில விளைவுகள் மட்டுமே இப்போது...

      கைபேசியில் அதிகமாக தட்டச்சு செய்ய இயலவில்லை.. நாளை தனிப்பதிவில் கொஞ்சம் விவரமாகத் தருகிறேன்...

      நன்றியும் வணக்கமும்....

      Delete
  2. ஆக
    சிக்கன்குனியேஸ்வரி மலையேறினாற் போல்
    கொரோனாத்மிகாவும் சொல்லாமல் கொள்ளாமல் போய்ச் சேர வேண்டும்...

    கொடுத்து அறியாதானைப் பாரி.. என்றல்லவா பழக்கம்...

    அப்படியே இதுவும் ஆகட்டும்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. எல்லாமே வாட்சப்பில் படித்த மாதிரியே இருக்கு. (கொரானாமாதாவைத் தவிர).

    கொரோனாவால், பொதுவாக நம் மனநிலையில் மாற்றம் இருக்கும் என நினைக்கிறேன். மாஸ்க் அணியாமல் பக்கத்தில் வந்தாலோ, இல்லை லேசாக செருமினாலோ, அல்லது மேலே பட்டுவிட்டாலோ கொஞ்சம் அசூயையாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. //எல்லாமே வாட்சப்பில் படித்த மாதிரியே இருக்கு//என்னடா இது பதிவுக்கு வந்த சோதனை? எல்லாம் என் கற்பனையில் உதித்தவை. அப்படி வாட்ஸாப்பில் வந்திருந்தால் குறிப்பிட்டிருப்பேன். நன்றி..

      Delete
  4. //போகி அன்று கொரோனாவை கொளுத்தி விட்டு, புத்தாண்டை புது மலர்ச்சியோடு வரவேற்கலாம். // போகிக்கு மறுநாள் பொங்கல் இல்லையோ? அல்லது நீங்களும் தைப்புத்தாண்டு என்னும் நபரா?

    ReplyDelete
    Replies
    1. //நீங்களும் தைப்புத்தாண்டு என்னும் நபரா?// நிச்சயமாக இல்லை. ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு பிறந்து விட்டாலும், போகியன்று அதை முழுமையாக துரத்தலாம் என்னும் பொருளில் கூறினேன்.

      Delete
    2. நானும் இது குறித்துக் கேட்க வந்தேன்!

      Delete
  5. கொரோனாம்மா ஊரை விட்டு அல்ல உலகை விட்டே போகட்டும். தினம் தினம் பிரார்த்தனைகள் தான். அநேகமா இந்த வருஷம் நவராத்திரிக்கு எல்லோருமே மாஸ்க், சானிடைசர்னு வெற்றிலை, பாக்கில் வைச்சுக் கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தினசரி பிரார்த்தனை அதுதான். நவராத்திரிக்கு நீங்கள் சொன்னபடி செய்வார்கள் என்றே தோன்றுகிறது. நன்றி அக்கா.

      Delete
    2. லேடீஸ் மாஸ்க், வரும் லேடீஸ்களுக்கு, துணைக்கு வரும் ஜென்ட்ஸ்க்கு சுண்டல் என்று ஆகிவிடுமோ?

      Delete
    3. எப்படியெல்லாம் சந்தேகம் வருகிறது?

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு நன்றாக உள்ளது. தங்கள் எழுதியது போல், கிருஷ்ணரும் கைகளை சானிடைசர் கொண்டு துடைத்து விட்டுக் கொண்டுதான் பட்சணங்களை எடுத்துக் கொள்வது போல் கற்பனை செய்தாலும், மக்கள் கழியில் மாட்டிக்கொண்டு நவராத்திரி கிப்டை எடுத்துச் செல்வது போல் நினைத்தாலும். சிரிப்பாகத்தான் வருகிறது. நீங்கள் சொல்வது போல் வாய் விட்டு சிரித்தால் கொரோனா ஒருநாள் ஓடித்தான் போகும்.

    வட கர்நாடகாவில் நோய்களுக்கு பூஜை செய்வது நல்லதுதான் அப்படியாவது இந்த நோய் (கொரோனாமா) ஒரு முடிவுக்கு வரட்டும்.

    ஜோக்குகள் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. ரசித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றி கமலா.

    ReplyDelete
  8. நீங்கள் சொன்னமாதிரி நடந்தால் கூட போதும்...!

    நகைச்சுவைகள் அருமை...

    ReplyDelete
  9. கொரோனாம்மாவை வழியனுப்புவோம்.
    ஜோக்ஸ் சிரிப்பை தந்தது.

    ReplyDelete
  10. சுவாரஸ்யமான கற்பனைகள்.  உண்மையில் எப்போதடா இந்த சனியன் நம்மை விட்டுப் போகும் என்கிற ஏக்கம் வாட்டுகிறது.  இயல்பு வாழ்க்கை இயல்பு வாழ்க்கை என்பார்களே...    அதுவே மறந்து விடும் போல இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம் என்றுதான் நினைக்கிறேன். 

      Delete
  11. நவராத்திரிக்குச் சென்று விட்டீர்கள்.  அதற்கு முன்னால் வவி வருமே...   அதுவும் சிந்தனையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நவராத்திரி அன்று வரும் விருந்தினர்களில் யாரேனும் ஓரிருவர் இருமினாலும் (அது அந்த வீட்டில் வரும் எண்ணெய், கார கமரலினாலும் இருக்கலாம்), மற்றவர்கள், எதிரியைப் போல் பார்க்கப்போகிறார்கள், 'அவர்களை ஏன் அழைத்தீர்கள்' என்று கடிந்துகொள்ளப்போகிறார்கள்....ஹா ஹா

      Delete
    2. லட்சுமி ராவே மா இண்டிக்கி என்று வரலட்சுமியை மட்டும் வரவேற்று விட்டு பேசாமல் இருக்க வேண்டியதுதான். விநாயக சதுர்த்தியையும் விட்டு விட்டேன் ஏனென்றால் அவையெல்லாம் நாம் மட்டும் நம் வீட்டில் கொண்டாடும் பண்டிகைகள். 

      Delete
  12. நல்ல கற்பனை. இன்னும் எத்தனை நாட்கள் இந்தக் கொரோனாவுடன் போராட வேண்டியிருக்குமோ?

    வைரஸ் நகைச்சுவை - :) பேசவே விடுவதில்லை. உடனே க்வாரண்டைன் தான்!

    ReplyDelete
  13. ஆஹா நாமும் கொரோனாவைக் கொளுத்திடுவோம்.. ஆனா கையில அகப்படுகுதில்லையே... அந்தக் கெட்ட கிருமி மட்டும், நுளம்பைப்போல நம் கண்ணுக்குத் தெரியுமாயின் கொழுத்திட மாட்டோமா என்ன?:) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா, இறை சக்திதான் கொரோனாவை எரிக்க வேண்டும்.  

      Delete
  14. நல்ல கற்பனை நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள். நகைச்சுவைத் துணுக்குகள் அருமை. நகைச்சுவை என்பது அத்தனை எளிதாக எல்லோருக்கும் வராது. பாராட்டுகள்.

    விரைவில் கோவிட் 19 லிருந்து உலகம் விடுபட வேண்டும்.


    துளசிதரன்

    ReplyDelete
  15. பானுக்கா ஹா ஹா ஹா ஜோக்ஸ் செம...

    அப்புறம் பதிவிலும் ஹா ஹா ஹா இப்படியும் ந்டக்கலாம். சிலதை கற்பனை பண்ணிப் பார்த்துச் சிரித்துவிட்டேன்.

    ஏற்கனவே சென்னையில் என் உறவினர் சிலர் டைம் கொடுத்து ஒவ்வொரு டைமிற்கும் இத்தனை பேர் தான் ஒவ்வொரு நாளும் எந்தக் குடும்பம் என்பதெல்லாம் டிசைட் செய்துதான் கூப்பிடுவாங்க. சப்போச் நமக்கு அவர்கள் சொன்ன டைமுக்குப் போக முடியலைனா நாம் அவர்களைக் கூப்பிட்டு அழைத்து மீண்டும் டைம் ஃபிக்ஸ் செய்துதான் போகனூம்.!!!!!!!!!!!!!!

    இப்போதே காலேஜில் ஒரு பெண் ப்ரொஃபஸர் தன் ட்ரெஸ்கு மேச்சிங்காகத்தான் மாஸ்க் போட்டுக் கொள்கிறாராம்!!!!!!!!!!!!!!!! அதே போல களவ்!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்கள் நெருங்கிய உறவில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி, அவர் வெளியில் எங்கும் செல்வதில்லை, இருந்தாலும், தனக்கு  கருப்பு  கலர் மாஸ்க் வேண்டாம், வெள்ளை நிற மாஸ்க்தான் வேண்டும் என்றாராம். வேடிக்கை மனிதர்கள்தான். 

      Delete
  16. அக்கா நாம் செய்யும் குனுக்கு சில சமயம் தொற்று போல கொண்டை, எல்லாம் வைத்துக் கொண்டு பொரியுமே அப்புறம் பூரி.....அது போல நவராத்திரியில் குனுக்கும் செய்யலாம்!!! ஆனால் அதைப் பார்த்து யாரும் பயந்துடக் கூடாது!!! ஹிஹிஹிஹி

    இன்ஃபேக்ட் இடையில் வீட்டில் லாக்டவுன் சமயத்தில் பட்டூரே செய்தேன். அதில் பபிள் பபிள் ஆக பொள்ளிக் கொண்டு கொஞ்சம் பொரிந்து நல்ல கோல்டன் கலரில் வரும் இல்லையா...அது பார்க்க படத்தில் காட்டும் தொற்று போல இருந்தது !!!!!!!! ஹா ஹா ஹா ஹா ...படம் எடுத்தும் வைத்திருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  17. எனக்கு குனுக்கு மிகவும் பிடிக்கும், அதைப் போய் கொரோனா வைரஸோடு ஒப்பிட்டு அருவருப்பு உண்டாக்கி விடாதீர்கள். ஹாஹா! 

    ReplyDelete
  18. பண்டிகைகளுக்காக ஒதுங்கி வழிவிடவா போகிறது கொரோனா? அதற்காக நம்மால் பக்ஷணம் சாப்பிடாமலும் இருக்க முடியாது!

    ReplyDelete
    Replies
    1. அதுதானே? சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன, மாவரைக்கும் மிஷின் திறந்திருக்கிறது. அப்புறம் பட்சணங்களுக்கு என்ன குறை? வருகைக்கு நன்றி. 

      Delete
    2. வீட்டில் மாவு இடித்துப் பண்ணி இருக்கேன். பின்னர் கையால் சுற்றும் கிரைண்டரில் (காபிக்கொட்டை மிஷின் மாதிரிக் கொஞ்சம் பெரிசாக இருக்கும்) மாவு அரைத்துப் பண்ணி இருக்கேன். அதன் பின்னர் வெகு காலம் வரை மிக்சி தான். இப்போத்தான் 2,3 வருஷங்களாக மிக்சியில் மாவு அரைப்பதில்லை./திரிப்பதில்லை. மிஷின் மாவு!

      Delete
  19. அன்பு பானுமா,
    மிக அருமையாகக் கொரோனாவைக் கையாண்டிருக்கிறீர்கள்.
    நவராத்திரி நகைச்சுவை பலே ஜோர்.
    எதுவும் நடக்கலாம். கொலுவுக்குள் இந்தத் தொற்று போகட்டும்.

    இங்கே எல்லாவற்றையும் மீறி அராஜகம் செய்த காவல்துறையை எதிர்த்து

    போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி சானல்கள் தொற்று பற்றிய
    புலம்பல்களை ஓரம் கட்டிவிட்டு. சென்சேஷனல் நியூஸைத் துரத்திப் போகின்றன.

    நல்ல காலம் பிறக்க இறைவன் ஒருவனே வழி.

    ReplyDelete
    Replies
    1. செய்தி ஊடகங்களுக்கு சென்சேஷன்தான் முக்கியம். வருகைக்கு நன்றி. 

      Delete
  20. சிறப்பான பதிவு
    சிந்திப்போம்

    ReplyDelete